மெட்யுகோரியோவில்(Medjugorje) மரியன்னையின் தரிசனங்கள்


பொஸ்னியா-கேர்சேகோவினா(Bosnia-Herzegovina) என்னும் நாட்டில் மெட்யுகோரியோ(Medjugorje) என்னும் இடத்தில் அன்னை மரியாள் 25-06-1981இல் 7 இளையோருக்கு முதலாவது தடவையாக காட்சி அளித்தாள். திருச்சபை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு இக்காட்சிகள் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன். ஒவ்வொரு மாதமும் புனித கன்னி மரியாள் இங்கு காட்சி அளித்து கொண்டு இருக்கிறாள். இறைமகன் இயேசு ஒவ்வொரு முறையும் தமது செய்தியை முழு உலகத்துக்கும் தமது அன்னை வழியாக வழங்கி வருகிறார். இச் செய்தியின் தமிழ் வடிவம் இங்கு உடனுக்குடன் தரவேற்றம் செய்யப்படும்.

2017-06-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! வேறு இடங்களில் நான் உங்களிடம் வந்தது போன்று, இங்கும் நான் உங்களை செபிக்குமாறு அழைக்கிறேன். எனது மகனை அறியாதவர்களுக்கும், இறைவனின் அன்பைத் தெரிந்து கொள்ளாதவர்களுக்கும், பாவங்களுக்கு எதிராகவும் செபியுங்கள். அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்காக - எவரை எனது மகன் அழைத்துள்ளாரோ அவர்களுக்காகவும், இதன்மூலம் உங்களுக்கு அன்பும், ஆவியின் சக்தியும் கிடைக்க செபியுங்கள். எனது மகனிடம் செபியுங்கள், அவரின் அருகில் அனுபவிக்கும் அன்பு, உங்களுக்கு சக்தியைத் தருவதுடன், அன்புச் செயல்களுக்கு உங்களை ஆயத்தமாக்கி, அவற்றை அவரது பெயரில் செயற்படத் தூண்டட்டும். எனது பிள்ளைகளே, ஆயத்தமாகுங்கள்! இந்த வேளையே ஒரு திருப்புமுனையாகும்! ஆகவே விசுவாசத்தையும் நம்பிக்கையையும் புதுப்பிக்குமாறு நான் உங்களை அழைக்கிறேன். நீங்கள் செல்ல வேண்டிய வழியை நான் உங்களுக்குக் காண்பிப்பேன், அவை விவிலிய வார்த்தைகளாகும். எனது அன்புத் தூதர்களே இந்த உலகிற்கு எனது மகன் மூலம், இறைத்தந்தையிடம் வானகத்தை நோக்கி உயர்த்தப்பட்ட உங்களின் கரங்கள் தேவைப்படுகின்றது. அதிகம் பணிவும் இதயத் தூய்மையும் தேவைப்படுகின்றது. எனது மகனில் நம்பிக்கை கொள்வீகளானால், நீங்கள் எப்பொழுதும் சிறப்புடன் இருப்பீர்கள். எனது தாய்மை இதயம் உங்களிடம் விரும்புகிறது, எனது அன்பின் தூதர்களே, உலகிற்கு ஒரு சிறு விளக்காக இருங்கள், எங்கு இருள் உள்ளதோ அங்கு நீங்கள் பிரகாசிப்பீர்களாக, உங்கள் செபம் மற்றும் அன்பின் மூலம் ஆன்மாவைக் காத்துக் கொள்ளும் உண்மையின் வழியைக் காட்டுங்கள். நான் உங்களுடன் உள்ளேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
2017-05-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எல்லாம் வல்லவர், நான் உங்களை மீண்டும் புதிதாக மனம்திரும்ப அழைக்க அனுமதித்துள்ளார். எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் இதயத்தை நீங்கள் அனைவரும் எதற்காக அழைக்கப்பட்டுள்ளீர்களோ, அந்த இரக்கத்திற்காகத் திறவுங்கள். அமைதியில்லாத உலகில் சமாதானத்திற்கும் அன்புக்கும் சாட்சிகளாக இருங்கள். இவ்வுலகில் உங்கள் வாழ்வு நிலையற்றது. செபியுங்கள், நீங்கள் செபிப்பதன் ஊடாக வானகத்தையும் அதன் பரிசுத்த நிலையையும் உணரமுடியும், அத்துடன் உங்கள் இதயம் அனைத்தையும் வித்தியாசமானவைகளாகக் கண்டுகொள்ளும். நீங்கள் தனியாக இல்லை, நான் உங்களுடன் இருப்பதுடன் உங்களுக்காக எனது மகன் இயேசுவின் முன்பாக வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எனது அழைப்பைக் கேட்டுக்கொள்வதற்காக நன்றி கூறுகிறேன்“
2017-05-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களை செபிக்க அழைக்கிறேன், என்னிடம் கேட்பதற்காக அல்ல, மாறாக தியாகச் செயல்கள் புரிவதற்காக - உங்களைத் தியாகம் செய்வதற்காக அழைக்கிறேன். உண்மையையும் இரக்கமுள்ள அன்பையும் வெளிப்படுத்த நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் இதயத்தில் விசுவாசம் தொடர்ந்தும் குறைந்து செல்லாமல் இருக்க, நான் எனது மகனிடம் செபிக்கிறேன். இறைத் தூயஆவியால் உங்களுக்கு உதவிபுரியுமாறு அவரை வேண்டுவதுடன், நானும் அன்னையாகிய எனது ஆசீரால் உங்களுக்கு உதவிபுரிவேன். எனது பிள்ளைகளே, நீங்கள் மேலும் திறம்பட வேண்டும். எவரெவர், தூய்மையானவர்களாக, தாழ்மையானவர்களாக மற்றும் அன்பால் நிறைந்துள்ளார்களோ அவர்கள் மட்டுமே உலகைச் சுவீகரித்துக் கொள்கின்றனர் - அவர்கள் தம்மையும் உலகையும் காத்துக்கொள்கின்றனர். எனது பிள்ளைகளே, எனது மகனே உலகின் இதயமாக உள்ளார். அவரை அன்புசெய்வதுடன் அவரிடம் மன்றாடுங்கள் ஆனால் எப்பொழுதும் புதிய பிரச்சினைகளைக் கூறாதீர்கள். ஆகவே, எனது அன்பின் தூதர்களே, உங்கள் நன்நடத்தை, உங்கள் செபம் மற்றும் இரக்க அன்பு மூலமாக மனிதர்களின் இதயத்தில் விசுவாசத்தை பெருகச் செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கின்றேன், நான் உங்களுக்கு உதவுவேன். உங்கள் மேய்ப்பர்களுக்கு மேலும் ஒளி கிடைக்கச் செபியுங்கள், இதன் மூலம் அவர்கள் இருட்டில் வாழுபவர்களுக்கு ஒளிபரவச் செய்வார்களாக. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.„
2017-04-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தொலைவில் இருக்கும் அனைவருக்கும் எனது வருகை அன்பும் செபமும் கொண்ட சாட்சியமாக இருக்கட்டும். உங்கள் சாட்சியம் மற்றும் உதாரணமான வாழ்க்கையினால் இறைவனுக்கும் அவரது இரக்கத்திற்கும் தொலைவாக இருப்பவர்களின் இதயங்களை அவருக்கு அண்மையாகக் கொண்டுவரலாம். நான் உங்களுடன் இருப்பதுடன், நீங்கள் ஒவ்வொருவரும் அன்புடனும் இரக்கத்துடனும் இருக்க மன்றாடிக்கொள்கிறேன், இதன்மூலம் நீங்கள் எனது மாசற்ற இதயத்திற்குத் தொலைவில் உள்ள அனைவருக்கும் சாட்சிகளாகவும் அவர்களை உற்சாகப்படுத்துபவர்களாகவும் இருங்கள். எனது அழைப்பிற்கு செவிசாய்ப்பதற்காக நன்றி கூறுகின்றேன்.“
2017-04-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! எனது அன்பான தூதர்களே, எனது மகனின் அன்பை இதுவரை அறிந்திராத அனைவருக்கும் அதைப் பரவச்செய்வது உங்களிலேயே தங்கியுள்ளது. உலகிற்கு சிறு வெளிச்சமாக உள்ள உங்களுக்கு, தெளிவாக முழுப் பிரகாசத்துடன் அன்னையாகிய எனது அன்புடன் கற்பிக்கிறேன். செபம் உங்களுக்கு உதவும், செபம் உங்களைப் பாதுகாக்கும், செபம் உலகைப் பாதுகாக்கும். ஆகவே, எனது பிள்ளைகளே, வார்த்தைகளுடன், உணர்வுடன், இரக்கமுள்ள இதய அன்புடன் செபியுங்கள். எனது மகன் உங்களுக்குப் பாதையைக் காட்டியுள்ளார். அவர், மாமிசமாகியவர், என்னிடமிருந்தே முதல் கிண்ணமாகினார், அவர் உங்களுக்கு தன்னைப் பலியாக்கியதன் மூலமாக, எவ்வாறு மற்றவர்களை அன்புசெய்ய வேண்டும் எனக் காட்டியுள்ளார். ஆகவே, எனது பிள்ளைகளே, உண்மையை உரைப்பதற்கு நீங்கள் பயப்படாதீர்கள். உங்களையும் உலகையும் மாற்றுவதற்கு பயப்படாதீர்கள். எனது மகன் எவ்வாறு அன்புடனும் செயல் வடிவிலும் காட்டியுள்ளாரோ அதுபோன்றே நீங்களும் செய்யுங்கள். நான் அன்னையாக என்றும் உங்களுடன் இருப்பேன். நான் எனது மகனிடம் உங்களுக்கு உதவுமாறு அன்புடன் இரந்து மன்றாடிக்கொள்வேன். அன்பே நிலையானது. இவ்வாறான அன்பையே நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன் - அதாவது தூய அன்பை. எனது தூதர்களே, இதை நீங்கள் அடையாளம் கண்டு, அதைப் பரப்புவது உங்களிலேயே தங்கியுள்ளது. உங்கள் மேய்ப்பர்கள் எனது மகனின் அன்புக்கு சாட்சிகளாகத் திகழ நீங்கள் உணர்வுடன் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
2017-03-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! இந்த மன்னிப்பின் காலத்தில் உங்கள் இதயத்தை இறைவனை நோக்கித் திறக்குமாறு நான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன், இதன்மூலம் நீங்கள் செபத்தின் ஊடாக, மன்னிப்புப் பெற்று தூயவர்களாகப் புதுவாழ்வை ஆரம்பிக்க முடிவுசெய்யுங்கள். இந்த வசந்த காலத்தில் உங்கள் எண்ணங்கள் மற்றும் இதயத்தை புதிய வாழ்விற்கு மாற்றிக்கொள்ள முனையுங்கள். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, நீங்கள் ஒருமித்து இறைவனுக்கும் அவரது இறை படிப்பினைகளுக்கும் ஆம் என்று கூறுவீர்களானால், நான் உங்களுக்கு உதவுவதற்காக உங்களுடன் இருப்பேன். நீங்கள் தனியாக இல்லை, நான் மன்னிப்பின் மூலமாக, உன்னதமானவர் என்னிடம், உங்களுக்கும் உங்கள் தலைமுறைக்கும் வழங்கியவைகளை உங்களுக்கு வழங்குவேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக நன்றி கூறுகிறேன்.„
2017-03-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தாயின் அன்புடன் நான் உங்களுக்கு மேலும் அன்பாக உதவ வருகிறேன், இதன் அர்த்தம் மேலும் நம்பிக்கை கொள்வதாகும். நான் உங்களுக்கு உதவுவதற்காக, எனது மகனின் வார்த்தைகளை அன்புடன் வாழ்வதற்காக வருகின்றேன், இதன்மூலம் உலகம் மாற்றமடையட்டும். ஆகவே, எனது அன்பின் திருத்தூதர்களே, என்னைச் சுற்றியுள்ள உங்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன். உங்கள் இதயத்தால் என்னைப் பாருங்கள், உங்கள் அன்னையிடம் பேசுவது போன்று உங்கள் வேதனைகளை, துன்பங்களை, மகிழ்ச்சிகளை என்னிடம் கூறுங்கள். எனது மகனிடம் நான் உங்களுக்காக வேண்டிக்கொள்ள என்னைத் தேடுங்கள். எனது மகன் இரக்கமுள்ள இதயமுள்ளவர், நீதியானவர். நீங்களும் அவ்வாறே இருக்க வேண்டுமென அன்னையாம் எனது இதயமும் விரும்புகிறது. ஆகவே எனது பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், இதயத்தால் செபியுங்கள், அன்புடன் செபியுங்கள், நற்செயல்களால் செபியுங்கள். அனைவரும் எனது மகனை அறிந்து கொள்வதற்காகச் செபியுங்கள், இதனால் உலகம் மாற்றம் பெறட்டும், இதனால் உலகம் பாதுகாக்கப்படட்டும். எனது மகனின் அன்பு வார்த்தைகளுடன் வாழுங்கள். தீர்ப்பிடாதீர்கள், மாறாக ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள், இதன்மூலம் எனது இதயம் வெற்றி பெறும். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“.
2017-02-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை விசுவாசத்தில் ஆழமாக வாழ்வதற்கும் அதில் உறுதியாக இருப்பதற்கும் மன்றாட அழைக்கிறேன். இதன் மூலமாக காற்றோ அல்லது புயலோ உங்களை அசைக்காதிருக்கட்டும். உங்கள் விசுவாசத்தின் வேர்கள் செபங்களாகவும் நித்திய வாழ்வில் நம்பிக்கை கொண்டதாகவும் இருக்கட்டும். இப்போதிருந்தே, எனது அன்பான பிள்ளைகளே, இந்த இரக்கத்தின் காலத்திற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள், இதன் வழியாகவே இறைவன் உங்களுக்கு இரக்கத்தை அருளுவார், நீங்கள் பற்றற்று வாழ்வதன் ஊடாகவும் மனம்திரும்புவதனாலும் தெளிவான விசுவாசமும் நம்பிக்கையும் உள்ள மனிதர்களாக இருந்து கொள்ளுங்கள். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி.“
2017-02-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நீங்கள் யாரென்றால், ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வை எனது மகனுக்காக ஒப்புக்கொடுப்பதற்கு முயல்பவர்கள், நீங்கள் யாரென்றால் அவரில் வாழ எத்தனிப்பவர்கள், நீங்கள் யாரென்றால் செபிப்பவர்கள் மற்றும் துன்பப்படுபவர்கள் - நீங்களே சமாதானமற்ற இவ்வுலகிற்கு நம்பிக்கை தருபவர்கள். நீங்களே எனது மகனின் ஒளிக் கதிர்கள் - வாழும் நற்செய்திகள், மற்றும் நீங்களே எனது அன்பிற்குரிய அன்பான தூதர்கள். எனது மகன் உங்களுடன் உள்ளார். எவர் அவரை நினைக்கின்றார்களோ, எவர் அவரிடம் செபிக்கின்றார்களோ அவர்களுடன் அவர் இருக்கிறார். அத்துடன் அவர் தன்னை அறியாதவர்களும் மனம்திரும்பப் பொறுமையுடன் காத்திருக்கின்றார். ஆகவே, நீங்கள், எனது அன்பான தூதர்களே இதயத்தால் செபிப்பதுடன் செயல்கள் மூலமாக எனது மகனின் அன்பை வெளிப்படுத்துங்கள். இதுவே உங்களுக்கு ஒரேயொரு நம்பிக்கையாகவும் அத்துடன் இதுவே உங்கள் நித்திய வாழ்விற்கு ஒரேயொரு வழியாகவும் அமையும். தாயாக நான், இங்கே உங்களோடு உள்ளேன். உங்களால் என்னிடம் வேண்டப்பட்ட செபங்கள்; அனைத்தும் எனக்கான மிகவும் அழகுள்ள அன்பின் றோசாக்கள். எங்கு றோசாவின் நறுமணத்தை உணர்கின்றேனோ அங்கு என்னால் இருக்க முடியாது. ஆனால் நம்பிக்கை உள்ளது. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“
2017-01-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை சமாதானத்திற்காக செபிக்க அழைக்கிறேன், மனிதரின் இதயத்தினுள் சமாதானம், குடும்பங்களில் சமாதானம் மற்றும் உலகில் சமாதானத்திற்காக செபிப்போம். சாத்தான் பலமாக இருப்பதுடன் உங்கள் அனைவரையும் இறைவனுக்கு எதிராகத் திருப்பவும், மனிதாபிமானவைகள், இதயத்தில் இறைவனுக்கு சார்ந்த அனைத்து உணர்வுகளை மழுங்கடிக்கவும் இறைவன் சார்ந்த அனைத்தையும் இல்லாதொழிக்க விரும்புகிறான். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, உலகம் தரும் பொருட்சாதனங்கள், அழகுச் சாதனங்கள் மற்றும் சுயநல விருப்புகளுக்கு எதிராக செபிப்பதுடன் போராடுங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, தூயவர்களாக இருப்பதற்கு முடிவு செய்யுங்கள், நான் எனது மகன் இயேசுவிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுவேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக.„
02.01.2017 அன்று மரியன்னை மரிஜானாவுக்கு வழங்கிய செய்தி

அன்பார்ந்த பிள்ளைகளே, எனது மகன் இந்த உலகில் இருந்த போது, உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் அன்பாகவும் ஒளியாகவும் இருந்தார். என் அன்பார்ந்த அப்போஸ்தலர்களே, அவரது ஒளியைப் பின் பெற்றுங்கள். இது இலகுவானது அல்ல. நீங்கள் தாழ்ச்சி உள்ளவர்களாக இருக்க வேண்டும். இயேசுவின் அன்பினாலும் உங்கள் விசுவாசத்தினாலும் நீங்கள் உங்களை மற்றவர்களிலும் பார்க்க தாழ்த்த வேண்டும். விசுவாசம் இன்றி எவரும் தெய்வீக அனுபவங்களை பெறமுடியாது. நான் உங்களோடு இருக்கின்றேன், நான் என்னை இந்த தரிசனத்தின் மூலமும் இவ் வார்த்தைகளின் மூலமும் வெளிப்படுத்துகின்றேன். நீங்கள் எனது தாய்க்குரிய அன்புக்கு சாட்சிகளாக இருக்க வேண்டுமென விரும்புகின்றேன். என் அன்பார்ந்த பிள்ளைகளே, தேவையற்ற கேள்விகளை கேட்டு உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். அவற்றிக்கு நீங்கள் ஒருபோதும் விடைகாண மாட்டீர்கள். இவ்வுலக வாழ்க்கைப்பயணம் முடிவடைகின்ற போது, பரலோக தந்தை அவற்றுக்கு முடிவு தருவார். எப்போதும் கடவுள் எல்லாவற்றையும் அறிவார் என்பதையும் அவர் எல்லாவற்றையும் பார்க்கின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். என் அன்பார்ந்த மகன் வாழ்வை வழங்குகின்றார், இருளை அகற்றுகின்றார் எனது தாய்க்குரிய அன்பு என்னை உங்களிடம் கொண்டு வருகின்றது, இது வார்த்தைகளால் வெளிக்காட்ட முடியா ஆனால் உண்மையான் அன்பு. நான் எனது தாய்க்குரிய அன்பை உள்ளுணர்வுடன் வெளிப்படுத்துகின்றேன். நான் உங்களிடம் செப ரோஜாக்களை உங்கள் அன்பிற்கு அடையாளமாக கேட்கின்றேன். நான் இந்த செபங்களை உங்களுக்காக பிறந்த எனது மகனிடம் ஒப்படைப்பேன். அவர் உங்களைப் காண்பார் உங்கள் செபங்களைக் கேட்பார். நாங்கள் எப்போதும் உங்களுக்கு அருகில் இருக்கின்றோம். இந்த எமது அன்பு தான், உங்களை அழைத்து, மாற்றி, ஒன்றாக்கி, ஊக்குவித்து நிறைவடையச் செய்கின்றது. ஆகவே என் அப்போஸ்தலர்களே, ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்யுங்கள். எல்லாவற்றிக்கும் மேலாக எனது மகனை அன்பு செய்யுங்கள். இதுவே மீட்பிற்கும் முடிவில்லா வாழ்வுக்கும் ஒரே வழி. இதுவே எனது அன்பார்ந்த செபமும், என் உள்ளத்தை நிரப்பும் வாசனை மிகுந்த ரோஜாவும் ஆகும். செபியுங்கள், உங்கள் மேய்ப்பர்கள் எனது மகனின் ஒளியினால் பெலமடையவும் செபியுங்கள், நன்றி
25-12-2016 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

என் அன்பார்ந்த பிள்ளைகளே, மிகுந்த மகிழ்ச்சியோடு எனது மகனை சுமந்தபடி அவரது சமாதானத்தை உங்களுக்கு தருவதற்காக வருகின்றேன். உங்களுடைய இருதயத்தை அவரது சமாதானத்திற்க்காக திறவுங்கள். மிகுந்த மகிழ்ச்சியோடு நீங்கள் அதைப்பெற்றுக் கொள்வீர்கள். உங்களிலும் உங்கள் குடும்பங்களிலும் சமாதானத்தை தருவதற்காக விண்ணகம் விளைகின்றது. உங்களின் செபத்தினால் இந்த சமாதானத்தை பெற்று கொள்வீர்கள். உங்களுடைய நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என, எனது மகனுடன் உங்களை அசீர்வதிக்கின்றேன். உங்களுடைய உள்ளம் தளராத உள்ளத்தோடு எப்போதும் பரலோகத்தை நோக்கி இருப்பதாக. அப்போது கடவுளின் திட்டம் நிறைவேறும். எனது அழைப்பிற்கு செவிசாய்த்தமைக்கு நன்றி.
2016-12-02 அன்று அன்னை மரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது பிள்ளைகள் நடந்து கொள்ளும் விதத்தை நான் பார்க்கும்போது, எனது தாய்மைக்குரிய இதயம் அழுகின்றது. பாவங்கள் அதிகரிக்கின்றன, தூய்மையான ஆன்மா எப்பொழுதும் முக்கியமானது என்பதுடன் எனது மகனை பலர் மறந்து விடுகின்றனர், பலவேளைகளில் அவரை மதிப்பது குறைவடைகின்றது, எனது பிள்ளைகள் தண்டிக்கப்படுகின்றனர். ஆகவே நீங்கள், எனது பிள்ளைகளே, எனது அன்பின் சீடர்களே, எனது மகனின் பெயரால் இதயத்தாலும் ஆன்மாவாலும் அழைக்கிறேன். அவரே ஒளியின் வார்த்தைகளாக உங்களுக்கு இருப்பார். அவர் உங்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவார், அவர் உங்களுடன் அப்பத்தைப் பிட்பதுடன் அதை அன்பு வார்த்தைகளாக வழங்குவார், இதன்மூலம் நீங்கள் அதை இரக்கமுள்ள இதயச் செயல்களாக மாற்றுவதுடன் உண்மைக்கு சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். ஆகவே, எனது அன்பான பிள்ளைகளே, பயம் கொள்ளாதீர்கள். உங்களில் எனது மகன் இருப்பதற்கு அனுமதியுங்கள். அவர் உங்களின் காயங்களைப் பராமரிப்பதுடன் இழந்துபோன ஆன்மாவை மீட்டெடுக்க உதவுவார். ஆகவே, எனது பிள்ளைகளே, செபமாலை செபிப்பதற்கு திரும்பி வாருங்கள். அவரிடம் நல்ல உணர்வுகளுடன், இரக்கமுள்ள இதயத்துடன் செபியுங்கள். வார்த்தைகளால் செபிப்பதோடு மட்டும் நின்றுவிடாது, இரக்கச் செயல்களாலும் காட்டுங்கள். அன்புடன் அனைத்து மனிதர்களுக்காகவும் செபியுங்கள். எனது மகன் அன்பைக் காணிக்கையாக்குபவர்களின் வேண்டுகோள்களைக் கேட்டுக்கொள்வார். ஆகவே, அவருடன் வாழுங்கள், அன்பாக இருப்பது மற்றும் பலமும் நம்பிக்கையும் கொள்வது, நித்திய வாழ்விற்கு இட்டுச்செல்லும். இறைவனின் அன்பின் மூலம் நான் உங்களுடன் இருப்பதுடன் தாய்மையின் அன்பில் வழிநடத்துவேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.“
2016-11-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களை, மீளவும் செபிப்பதற்கு வருமாறு அழைக்கிறேன். இந்த இரக்கத்தின் காலத்தில் இறைவன் உங்களை தூயவர்களாக மற்றும் மிகச் சாதாரணமான வாழ்க்கையை வாழ என் மூலமாக அழைக்கிறார், இதன்மூலம் நீங்கள் சிறு விடயங்களிலும் இறைவனின் படைப்பை அறிந்து கொள்வதுடன், அவரை அன்பு செய்து அவர் தந்துள்ள அனைத்திற்காகவும் அவருக்கு நன்றி கூறுங்கள். அன்பான பிள்ளைகளே, உங்கள் வாழ்வு மற்றவர்களுக்கு அன்பைக் கொடுப்பதாக அமையட்டும், அதற்காக இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார், நீங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருப்பதுடன் இறைவனின் அன்பை விரும்பாதவர்களாக வாழாதீர்கள். நான் உங்களுடன் இருப்பதுடன் உங்கள் அனைவருக்காகவும் எனது மகனிடம் மன்றாடிக்கொள்வேன். நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு நன்றி!"
2016-11-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! உங்களிடம் வருவதும் என்னை உங்களுக்கு வெளிப்படுத்துவதும் எனது தாயன்புமிகு இதயத்திற்கு பெரு மகிழ்வைத் தருகின்றது. இது உங்களுக்கும் இங்கு வருகைதரும் ஏனையவர்களுக்குமான எனது மகனின் ஒரு பரிசாகும். தாயாக உங்களை அழைக்கிறேன், அனைத்திலும் பார்க்க எனது மகனை அன்பு செய்யுங்கள். அவரை முழு இதயத்தாலும் அன்பு செய்வதற்கு, நீங்கள் அவரை நன்கு அறிந்திருக்க வேண்டும். செபிக்கும்போது நீங்கள் அவரை அறிந்து கொள்வீர்கள். இதயத்தாலும் உணர்வாலும் செபியுங்கள். செபம் என்பதன் அர்த்தம், அவரது அன்பையும் அவரது அர்ப்பணிப்பையும் நினைவுகூர்வதாகும். செபம் என்பதன் அர்த்தம் அன்பு செய்தல், கொடுத்தல், துன்பப்படல் மற்றும் அதில் ஈடுபடல் என்பதாகும். எனது பிள்ளைகளே, உங்களை செபத்தினதும் அன்பினதும் தூதர்களாகுமாறு அழைக்கிறேன். எனது பிள்ளைகளே, இது விழிப்பாக இருக்கும் காலம். இவ் விழிப்பான வேளையில் அன்பிலும் நம்பிக்கையிலும் செபிக்குமாறு உங்களை அழைக்கிறேன், எனது மகன் உங்கள் இதயத்தைப் பார்க்கும்போது, அவர் உங்களிடம் நிபந்தனையற்ற நம்பிக்கையையும் அன்பையும் காண வேண்டுமென தாயான எனது இதயம் விரும்புகிறது. எனது தூதர்களின் ஒன்றுசேர்ந்த அன்பு வாழ்வழிக்கும், வெற்றிகொள்ளும் அத்துடன் சாத்தானை விரட்டிவிடும். எனது பிள்ளைகளே, நானே இறைமனிதனைப் பெற்றெடுத்த பாத்திரம், நானே இறைவனுக்கு வழிகாட்டி. ஆகவே எனது தூதர்களே நீங்கள் எனது மகனின் உண்மையான தூய அன்புள்ள பாத்திரங்களாக இருக்க உங்களை அழைக்கிறேன், இறைவனின் அன்பை இதுவரை அறியாதவர்களுக்கு, அதை உணராதவர்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் வாழ உங்களை அழைக்கிறேன். எனது பிள்ளைகளே நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்,.“ இறையன்னையின் காட்சி மறைவுற்ற வேளையில், மிர்ஜான ஒரு இரசப் பாத்திரத்தைக் கண்டார்.
2016-10-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை அழைக்கிறேன்: சமாதானத்திற்காக செபியுங்கள்! சுயநலப்போக்கை விட்டுவிடுவதுடன் நான் உங்களுக்கு விடுக்கும் வேண்டுதல்களை செவிமடுங்கள். அது இல்லாமல் நீங்கள் உங்கள் வாழ்வை மாற்றியமைக்க முடியாது. செபத்தை விரும்பவதன் மூலம் உங்களுக்கு அமைதி கிடைக்கும், அமைதியில் வாழும்போது உங்கள் தேவைகள் பற்றி அறிந்து கொள்வீர்கள், அதற்கு சாட்சியம் வழங்குவீர்கள். தற்போது இறைவன் தொலைவில் இருப்பதாக எண்ணும் நீங்கள் அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆகவே, எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபியுங்கள், செபியுங்கள், செபியுங்கள் அத்துடன் இறைவன் உங்கள் இதயத்தின் உள்வர அனுமதியுங்கள். நோன்பிருத்தலுக்கு மற்றும் ஒப்பரவாகுதலுக்கு திரும்பி வாருங்கள், இதன்மூலம் நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்காக!“
2016-10-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! தூய ஆவியானவர் வானகத் தந்தையின் சித்தப்படி என்னை இயேசுவின் தாயாகச் செய்தார், இதன்மூலம் நான் உங்களுக்கும் தாயானேன். ஆகவேதான் நான் உங்களின் வேண்டுதல்களைக் கேட்பதற்காக அன்னையாகிய எனது கரங்களை அகல விரிக்கிறேன், இதன்மூலம் நான் உங்களுக்கு எனது இதயத்தைத் தருவதுடன் என்னோடு இருக்குமாறும், எனது மகனின் சிலுவையில் நம்பிக்கை வைக்கவும் உங்களை அழைக்கிறேன். இருப்பினும் எனது பல பிள்ளைகள் எனது மகனின் அன்பை இன்னும் அறியாதிருக்கின்றனர், பலர் அவரைக் கண்டறிய விருப்பமில்லாது உள்ளனர். ஓ, எனது பிள்ளைகளே, எத்தனை செயல்களை செய்து அல்லது கண்டு நம்பிக்கை கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, நீங்கள், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, எனது தூதர்களே, உங்கள் இதய அமைதியுடன், எனது மகனின் குரலைக் கேளுங்கள், இதன்மூலம் உங்கள் இதயம் அவரது இல்லமாகட்டும், இதன்மூலம் அது தாகமில்லாது கவலையில்லாது இருக்கட்டும், எனது மகனின் ஒளியால் பிரகாசிக்கட்டும். விசுவாசத்திற்கு ஊடாக நம்பிக்கையைத் தேடுங்கள், ஏனென்றால் விசுவாசமே உயிரின் ஊற்றாக உள்ளது. மீண்டும் உங்களை நான் அழைக்கிறேன்: செபியுங்கள், செபியுங்கள், நீங்கள் விசுவாசத்தில் உற்சாகமாகவும், ஆன்மீகத்தில் அமைதியுடனும் ஒளி பரப்பியும் வாழுங்கள். எனது பிள்ளைகளே! அனைத்தையும் ஒன்றாக விளங்கிக்கொள்ள முயலாதீர்கள், ஏனென்றால் நானும் அனைத்தையும் விளங்காதவள், ஆனால் நான் அன்பு செய்ததுடன் எனது மகன் உரைத்த இறை வார்த்தையின்படி வாழ்ந்தவள், அவரே, முதலாவது ஒளியும் மாட்சிமையும் ஆனவர். தூதர்களான எனது பிள்ளைகளே, செபிக்கும், காணிக்கையைச் செலுத்தும் நீங்கள் உண்மையைப் பரப்புங்கள், எனது மகனின் வார்த்தையான இறைச் செய்தியைப் பரப்புங்கள், ஏனென்றால் நீங்களே உயிர்வாழும் இறைவார்த்தையாக உள்ளீர்கள், நீங்களே எனது மகனின் ஒளியைப் பிரகாசிப்பவர்களாக உள்ளீர்கள். உங்களை உற்சாகப்படுத்தவும் கண்காணித்துக் கொள்ளவும் எனது மகனும் நானும் உங்கள் பக்கத்தில் இருக்கிறோம். எனது பிள்ளைகளே, எப்பொழுதும் எனது மகன் கரங்களால் ஆசீர் பெற்ற உங்கள் மேய்ப்பர்களுக்காக செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“
2016-09-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்று நான் உங்களை செபிப்பதற்கு அழைக்கிறேன். செபங்கள் உங்களுக்கு வாழ்வை வழங்கட்டும். இதன்மூலமாக மட்டுமே உங்கள் இதயத்தில் அமைதியும் மகிழ்வும் நிரம்பும். இறைவன் உங்கள் அருகில் இருப்பதுடன் உங்கள் இதயத்தில் அவரை உங்கள் நண்பனாக உணர்ந்து கொள்ளுங்கள். நன்கு பழகிய ஒருவருடன் கதைப்பதுபோல் நீங்கள் அவருடன் கதைப்பதுடன், அதற்கு நீங்கள் சாட்சியம் வழங்க வேண்டிய தேவையும் உள்ளது, ஏனென்றால் எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இயேசு உங்கள் இதயத்தில் இருப்பதுடன் நீங்கள் அவருடன் ஒன்றித்துள்ளீர்கள். நான் உங்களுடன் என்றும் இருப்பதுடன் தாய்ப் பாசத்துடன் உங்கள் அனைவரையும் அன்பு செய்கின்றேன். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“
2016-09-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! எனது மகனின் விருப்பத்திற்கும் அன்னையான எனது அன்பிற்குமாக நான் உங்களிடம் வருகின்றேன், எனது பிள்ளைகளே, அனைத்திற்கும் மேலாக, எனது மகனின் அன்பை இதுவரை கண்டறியாதவர்களுக்காக வருகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கும், என்னைக் கூவி அழைப்பவர்களுக்குமாகவே உங்களிடம் வருகின்றேன். நான் உங்களுக்கு அன்னையாகிய எனது அன்பையும் எனது மகனின் ஆசீரையும் எடுத்து வருகின்றேன். உங்களுக்கு தூய மற்றும் திறந்த இதயம் உள்ளதா? நான் வந்திருக்கும்போது எனது கொடைகளையும் அடையாளங்களையும் காண்கின்றீர்களா? எனது பிள்ளைகளே, உங்கள் பாவ வாழ்வை விடுத்து எனது முன்மாதிரிகை உங்களை வழிநடத்தட்டும். எனது வாழ்வு வேதனை, இரகசியம் மற்றும் வானகத்தந்தையில் அளவில்லா விசுவாசமும் நம்பிக்கையும் கொண்டதாய் இருந்தது. வேதனை, மகிழ்ச்சி, அன்பு அனைத்தும் தற்செயலாக ஏற்பட்டவை அல்ல. அவை எனது மகன் உங்களுக்குக் காட்டிய இரக்கத்தால் நித்திய வாழ்விற்கு இட்டுச்செல்பவை. எனது மகன் உங்களிடமிருந்து அன்பு மற்றும் அவரில் செபிப்பதை எதிர்பார்க்கின்றார். அன்னையாக நான் உங்களுக்குக் கற்பிப்பது: அவரை அன்பு செய்வது மற்றும் அவரிடம் அமைதியாகச் செபிப்பது என்பதன் அர்த்தம், உதடுகளை அசைத்துக் கொள்வது மட்டுமல்லாது அமைதியாக உங்கள் ஆன்மாவால் செபிப்பதாகும். இதுவே எனது மகனுக்காக நீங்கள் செய்யும் சிறிய மற்றும் அழகான செயலாகும். எனது பிள்ளைகளே, எனது மகன் உங்களிடம் எதிர்பார்த்திருக்கிறார். செபியுங்கள், இதன் மூலம் நீங்கள் அவரது முகத்தைக் காணுங்கள், இதனால் உங்களுக்கு வெளிப்படுத்தல் நிகழ முடியும். எனது பிள்ளைகளே, நான் உங்களுக்கு ஒரேயொரு உண்மையை வெளிப்படுத்துகிறேன். செபியுங்கள், இதன்மூலம் நீங்கள் இதை விளங்கிக்கொள்ள முடியும், இதன்மூலம் நீங்கள் அன்பை மற்றும் நம்பிக்கையை பரப்ப முடியும், இதன்மூலம் நீங்கள் எனது அன்பின் சீடர்களாக முடியும். எனது அன்னைக்குரிய இதயம் விசேடமாக உங்கள் மேய்ப்பர்களை அன்பு செய்கின்றது. அவர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களுக்காகச் செபியுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“
2016-08-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! இன்றும் நான் உங்களுடன் வானகத் தந்தையின் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இதயத்தின் கதவுகளைத் திறவுங்கள், இதன்மூலம் உங்கள் இதயத்தில் இறைவனால் மட்டும் தரக்கூடிய நம்பிக்கை, சமாதானம் மற்றும் அன்பு வளர்ச்சிபெறும். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, நீங்கள் அதிகளவில் இவ்வுலகுடனும் அதன் மாயைப் பொருட்களிலும் கட்டுண்டுள்ளீர்கள், ஆகவேதான் சாத்தான் வீசும் கடல் காற்றைப்போல உங்களை அலைக்கழிக்கிறான். ஆகவே நீங்கள் உங்கள் வாழ்வை இதயத்தின் செபங்களுடன் இணைத்து எனது மகன் இயேசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படையுங்கள், அதன்மூலம் நீங்கள் அவரிலும் ஏனையவர்களிலும் மகிழ்வடைவதுடன் உங்கள் வாழ்வை இதற்கு உதாரணமாக்குங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பபைப் பின்பற்றுவதற்கு“
2016-08-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

„அன்பான பிள்ளைகளே! நான் உங்களிடம், உங்களிடையே வருகை தந்துள்ளேன், இதன்மூலம் நான் உங்கள் நலனுக்காக அவரிடம் வேண்டிக் கொள்வேன். எனக்குத் தெரியும் உங்களில் ஒவ்வொருவருக்கும் கவலைகள் உண்டு, சோதனைகள் உண்டு, ஆகவே தாயாக உங்களை அழைக்கிறேன், எனது மகனின் திருவிருந்துக்கு வாருங்கள். அவர் உங்களுக்காக அப்பத்தைப் பிட்பார், அவராகவே உங்களுக்கு அதைத் தருவார், அவர் உங்களுக்கு நம்பிக்கையைத் தருவார். அவர் உங்களிடம் மேலும் விசுவாசத்தை, நம்பிக்கையை மற்றும் உற்சாகத்தைத் தேடுகின்றார். அவர்- சுயநலம், தீர்ப்பிடுவது மற்றும் மனித பலவீனங்களுக்கு எதிரான உங்களது உள்ளார்ந்த எதிர்ப்பை எதிர்பார்க்கின்றார். ஆகவே தாயாக உங்களுக்குக் கூறுகின்றேன்: செபியுங்கள், இதனால் செபங்கள் உங்களுக்கு உள்ளார்ந்த எதிர்ப்பைக் காட்டுவதற்கான பலத்தைத் தரும். எனது மகன் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி என்னைப் பலர் விரும்புவார்கள் மற்றும் தாய் என்று அழைப்பார்கள் எனக் கூறிவந்தார். நான், இங்கு உங்கள் மத்தியில் அன்பை உணர்கின்றேன். நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். இந்த அன்பின் பிரகாரம் நான் எனது மகனிடம் வேண்டிக் கொள்கின்றேன், உங்களில் எவரும், எனது அன்பார்ந்த பிள்ளைகளே, வீடு திரும்பும்போது, இங்கு வருகை தந்த மாதிரியே செல்லமாட்டீர்கள். நீங்கள் மிக அதிக நம்பிக்கை, இரக்கம் மற்றும் அன்பை எடுத்துச் செல்வதுடன், நீங்கள் எனது அன்பின் தூதர்களாக இருந்து கொள்ளுங்கள், இதை உங்கள் வாழ்வில் சாட்சியமாக்கும்போது, வானகத் தந்தை சாவின் அல்லாது வாழ்வின் ஊற்று என்பதை அறிந்து கொள்வீர்கள். அன்பான பிள்ளைகளே, மீண்டும் உங்களிடம் தாயாகத் தயவாகக் கேட்டுக்கொள்வது, எனது மகனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக அவர்களது ஆசீர்வதிக்கப்பட்ட கரங்களுக்காக, உங்கள் மேய்ப்பர்களுக்காக, செபியுங்கள், அவர்கள் எனது மகன் குறித்து எவ்வளவு இயலுமோ அவ்வளவு அன்புடன் அறிவிக்கின்றனர் இதன்மூலமே மனம்திரும்புதல் ஏற்படுகின்றது. நான் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன்“
2016-07-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

“அன்பான பிள்ளைகளே! நீங்கள் தவறிச்செல்வதை நான் பார்ப்பதுடன், உங்கள் இதயத்தில் செபமோ அல்லது மகிழ்வோ தெரியவில்லை. எனது அன்பார்ந்த பிள்ளைகளே, செபத்திற்குத் திரும்புவதுடன் மனிதருக்கு அல்லாது இறைவனுக்கு முதலிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு எடுத்து வரும் நம்பிக்கையை இழக்காதிருங்கள். எனது அன்பார்ந்த பிள்ளைகளே, இந்த வேளையில் நீங்கள் ஒவ்வொரு நாளும் இதயத்தில் அமைதியுடன் இறைவனை மென்மேலும் தேடிக்கொள்ளுங்கள், செபியுங்கள், செபியுங்கள், செபம் உங்களுக்கு மகிழ்வைத் தரும்வரை செபியுங்கள். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!“
2016-07-02 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

"அன்பான பிள்ளைகளே! நான் உண்மையாக உங்கள் மத்தியில் வந்துள்ளது உங்களை மகிழ்விக்கும் ஏனென்றால் இது எனது மகனின் மிகுந்த அன்பால் நிகழவது. அவர் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார், இதன்மூலம் நான் உங்களுக்கு அன்னையின் அன்புடன் பாதுகாப்பு வழங்குகிறேன், இதன்மூலம் நீங்கள் வேதனை மற்றும் மகிழ்வு, துன்பம் மற்றும் அன்பு போன்றவற்றை விளங்கிக்கொண்டு உங்கள் ஆன்மாவில் அவற்றை மிக ஆழமாகப் பதித்துக்கொள்வதுடன், நான் உங்களை மீண்டும் புதிதாக அழைக்கும்போதெல்லாம், இயேசுவின் இதயம், அதாவது நம்பிக்கையின் இதயத்தைப் போற்றிப்புகழ வேண்டும். எனது மகன், முடிவில்லா வாழ்வுடையவர் நாளுக்கு நாள் உங்களிடம் திரும்புகிறார். அவர் உங்களிடம் திரும்பி வருகிறார், அவர் உங்களைவிட்டு ஒருபோதும் விலகமாட்டார். எனது பிள்ளைகளே உங்களில் ஒருவர், அவரிடம் திரும்பி வரும்போது அன்னையாகிய எனது இதயம் மகிழ்வால் துள்ளுகின்றது. ஆகவே, எனது பிள்ளைகளே, எனது மகனிடம் திரும்பி வாருங்கள். எனது மகனிடம் வரும் வழி கடினமானது, முழுமையாக வேதனை தருவது, ஆனால் இறுதியில் எப்பொழுதும் வெளிச்சமானது. நான் உங்கள் வேதனைகள் மற்றும் துன்பங்களை அறிவேன் அத்துடன் அன்னையின் அன்புடன உங்கள் கண்ணீரைத் துடைக்கிறேன். நீங்கள் எனது மகனில் நம்பிக்கை கொள்ளுங்கள், ஏனென்றால் அவர் நீங்கள் ஒருமுறையாவது ஒரு விடயத்திற்காகத் தேடாத போதும் உங்களுக்காக அதைச் செய்வார். நீங்கள், எனது அன்பான பிள்ளைகளே, உங்கள் ஆன்மாவை மட்டும் பராமரியுங்கள், ஏனென்றால் அது ஒன்றுதான் உங்களுக்கு உலகில் சொந்தமானது. நீங்கள் அதை அசுத்தமாகவோ அல்லது பரிசுத்தமாகவோ வானகத் தந்தையிடம் எடுத்து வரலாம். கவனத்திற் கொள்ளுங்கள், எனது மகனின் அன்பில் நம்பிக்கை கொள்பவர்களுக்கு எப்பொழுதும் வெகுமதி கிட்டும். நான் உங்களைத் தயவாகக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், விசேடமாக அவரில் அன்பு செலுத்தி அவரது மந்தைகளை மேய்ப்பவர்களுக்காக செபித்துக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்"
2016-06-25 அன்று அன்னைமரியாளினால் வழங்கப்பட்ட செய்தி

அன்பான பிள்ளைகளே! நான் உங்களுடன் இருப்பதற்காக என்னுடன் சேர்ந்து இறைவனுக்கு நன்றிகூறுங்கள். செபியுங்கள், எனது அன்பான பிள்ளைகளே, கடவுளின் கட்டளைகளின்படி வாழுங்கள், அதன்மூலம் பூமியில் உங்களுக்கு நலம் கிடைக்கட்டும். இன்று, இந்த இரக்கத்தின் நாளில், நான் உங்களுக்கு அன்னையின் சமாதான ஆசீரையும் எனது அன்பையும் வழங்குகின்றேன். நான் எனது மகனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்வதுடன், தொடர்ந்து செபித்துக் கொள்ளுங்கள், இதன்மூலம் நான் உங்களுடன் சேர்ந்து எனது திட்டங்களை செயற்படுத்த முடியும். நன்றி, நீங்கள் எனது அழைப்பைப் பின்பற்றுவதற்கு!