இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி.இயேசு கருணாநிதி
Archbishop’s House, K. Pudur, Madurai 625 007, India
Email: yesu@live.in

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கிறிஸ்து பிறப்பு திருப்பலி

பேரொளி

எசாயா 52:7-10
தீத்து 2:11-14
லூக்கா 2:1-14

முதல் வாசகம் எசாயா 9:2-7

1. இலக்கிய பண்பு
எபிரேய இலக்கியத்தில், குறிப்பாக செய்யுளில், அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு இலக்கியப் பண்பின் பெயர் ‘இருசொல் இயைபணி’ அல்லது ‘இணைவுநிலை’ (...). அதாவது, முதல் வரியில் சொல்லப்படும் கருத்தே இரண்டாம் வரியிலும் வேறு வார்த்தைகளில் சொல்லப்படுவது. இன்றைய முதல் வாசகத்தில் நான்கு இடங்களில் இது பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

- காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல்சூழ் நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)
- அவர்கள் பலுகிப் பெருகச் செய்தீர். அவர்கள் மகிழ்ச்சியை பெருகச் செய்தீர். (இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)
- நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். தடியைத் தகர்த்துப் போட்டீர். கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். (இந்த மூன்று வாக்கியங்களின் பொருள் ஒன்றே)
- ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளது. ஓர் ஆண்மகவு நமக்கு தரப்பட்டுள்ளது. ((இந்த இரண்டு வாக்கியங்களின் பொருள் ஒன்றே)

2. உருவகங்கள்
மெசியாவின் வருகை தரும் மகிழ்ச்சிக்கு இரண்டு உருவகங்களைத் தருகின்றார் எசாயா: (அ) அறுவடை நாள், (ஆ) போரில் வெற்றி பெறும் நாள்.
(அ) அறுவடை நாளில் எதற்கு நிறைவு கிடைக்கிறது? உண்பதற்கான உணவு கிடைத்துவிடுகிறது.
(ஆ) போரின் வெற்றி நாளில் கிடைப்பது என்ன? பாதுகாப்பு. அதாவது, எதிரிகளின் அழிவு.
ஆக, உண்பதற்கு உணவும், இருக்குமிடத்தில் பாதுகாப்பும் இருந்தால் மகிழ்ச்சி நிறைவடையும். இல்லையா? நம் வாழ்க்கைக்கு இந்த இரண்டுதாம் அவசியம். நாம் வைத்திருக்கும் மற்ற அனைத்தும் வெறும் ‘தேவைகளே.’ மேலும், மகிழ்ச்சி என்ற உணர்வை இரண்டு உவமைகள் வழியாகவும் சொல்கிறார் எசாயா:
(அ) அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல.
(ஆ) கொள்ளைப் பொருளை பங்கிடும்போது இருப்பது போல. (கொள்ளைப் பொருள் இங்கே திருடிய பொருட்களை குறிப்பது அல்ல. மாறாக, எதிரிகள் அழிந்தால் வெற்றி பெற்ற வீரர்கள் அந்த எதிரி நாட்டின் ஆலயம், அரண்மனை, வீடுகளில் உள்ள அனைத்து நபர்களையும், பொருட்களையும் உரிமையாக்கிக் கொள்வது. இது போர் மரபும் கூட. இந்த அடிப்படையில்தான், பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்கின்ற கடவுள் அவர்களை தன் உரிமைப் பொருளாக்கிக் கொள்கின்றார்). (நம் உழைப்பு இல்லாத ஒரு பொருளை நாம் பெறுவதால் வரும் இன்பத்தை எசாயா இங்கே குறிப்பிடவில்லை!)

3. மகிழ்ச்சிக்கான மூன்று காரணங்கள்
அ. அடிமைத்தனம் ஒழிந்தது. அடிமைத்தனத்தின் அடையாளமாக இருக்கும் நுகம், தடி, கொடுங்கோல் ஒடிக்கப்படுவது மட்டுமல்லாமல், போர் வீரனின் ஆடைகள், காலணிகள் அனைத்தும் நெருப்பிட்டு அழிக்கப்படுகின்றன. அதாவது, ஒரு பொருளை முழுமையாக அழிக்க வேண்டுமானால் அதில் நெருப்பிடுதல் வேண்டும். நெருப்பிலடப்பட்ட பொருள் அதன் இயல்பை மீண்டும் பெறுவது சாத்தியமல்ல. (இந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவ மரபில் இறந்தோரை நெருப்பில் இடுவது அல்லது இறந்தோர் மேல் நெருப்பிடுவது தவறு என்று கருதப்பட்டது!) அடிமைத்தனத்தின் தடயமே இல்லாமல் ஆக்கிவிடுகிறது மெசியாவின் வருகை.

ஆ. குழந்தை பிறந்துள்ளது. குழந்தை புதிய நம்பிக்கையின் அடையாளம். இந்த குழந்தை ஒருவேளை உடனே வரவிருக்கும் அரசரைக் குறித்தாலும், இந்த குழந்தையைப் பற்றி முன்னுரைத்த அமைதியை எந்த அரசராலும் தரமுடியவில்லை. ஆக, இந்த குழந்தை வரவிருக்கும் மெசியாவைத்தான் குறிக்க முடியும். இந்த குழந்தைக்கு நான்கு பெயர்கள் தரப்பட்டிருக்கின்றன. அதாவது, அரசர்கள் தலைப்புகள் இட்டு அழைக்கப்படுவது மரபு
- இராஜாதி ராஜ, இராஜ குலோத்துங்க, இராஜ குலதிலக என்பதுபோல. மேலும், ‘எதிரிகளை நீ புறமுதுகிட்டு ஓடச் செய்ததால் இன்றுமுதல் நீ ...’ என்று அரசனுக்கு பட்டங்கள் கொடுப்பதும் வழக்கம். இங்கே குழந்தைக்கு நான்கு பட்டங்கள் சூட்டி மகிழ்கின்றார் எசாயா:
- வியத்தகு ஆலோசகர். அதாவது, எங்கே போக வேண்டும் என்ற வழியைக் காட்டுபவர்.
- வலிமைமிகு இறைவன். இங்கே இறைவன் என்பதற்கு ‘எலோகிம்’ அல்லது ‘யாவே’ பயன்படுத்தப்படவில்லை. ‘ஏல்’ என்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஏல்’ என்றால் ‘பெருமான்’ அல்லது ‘பெருமகனார்’ என மொழிபெயர்க்கலாம். இங்கே இந்த குழந்தையை எசாயா கடவுளாக்கவில்லை. மிக நேர்த்தியாக வார்த்தையை கையாளுகின்றார்.
- என்றுமுள தந்தை. ஒரு குழந்தை எப்படி தந்தையாகும்? இது ஒரு வித்தியாசமான தலைப்பு. ஒரு குடும்பத்தின் தந்தை தன் குடும்பத்திற்கு தரும் உணவையும், பாதுகாப்பையும் இது குறிக்கிறது.
- அமைதியின் அரசர். அடிமைத்தனம் மற்றும் போர் நீக்கி அமைதி தருகிறார்.

இ. நீதியும், நேர்மையும் அவருடைய ஆட்சியின் அடையாளங்கள். இதுதான் காரிருளில் வாழ்ந்த மக்கள் காணும் பேரொளி. அநீதியும், பொய்மையும் இருளின் காரணிகள். இவற்றிற்கு மாற்றான நீதியும், நேர்மையும் ஒளியின் காரணிகள். இவ்வாறாக, மெசியாவின் வருகை குறித்தும், அந்த வருகை கொணரும் மகிழ்ச்சி குறித்தும் முன்னுரைக்கிறார் எசாயா.

4. வாழ்வியல் சவால்கள்

அ. மகிழ்ச்சி என்பது ஒரு கொடை என இங்கே சித்தரிக்கப்படுகிறது. யாருடைய கொடை? மெசியாவின் கொடை. அப்படியென்றால் மகிழ்ச்சி நமக்கு வெளியே இருக்கிறது என்று சொல்லலாமா? இல்லை. மகிழ்ச்சி நம் உள்ளே தான் இருக்கிறது. அதை நாம் கண்டடைவதற்கான உதவி வெளியிலிருந்து வருகின்றது.
ஆ. என் பழக்கங்களுக்கு நான் தீயிடுகிறேனா? அதாவது, அடிமைத்தனமும் வேண்டும், மகிழ்ச்சியும் வேண்டும் என்பது மெசியாவின் வருகையில் சாத்தியமல்ல. நாம் ஏதாவது ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும். மகிழ்ச்சியை தெரிவு செய்கிறோம் என்றால், அடிமைத்தனம் தீயிடப்பட வேண்டும். அதாவது நாம் விடமுடியாத கெட்ட பழக்கங்களை சில ஆண்டுகள் நாம் பிடித்திருக்கிறோம். பின் அவைகள் நம்மை பிடித்துக்கொள்ள தொடங்குகின்றன. புதுவருடத்தை எதிர்நோக்கியிருக்கும் நாம் விடமுடியாமல் பிடித்துக்கொண்டிருக்கும் பழக்கங்கள் எவை?
இ. இன்று நான் குடிலில் படுத்திருக்கும் பாலன் இயேசுவைப் பார்க்கும்போது என் மனதில் தோன்றும் பட்டம் என்ன? அவரை நான் என்ன பெயர் கொண்டு அழைப்பேன்? அவர் என் ஆலோசகரா, இறைவனா, தந்தையா, அரசரா?

இரண்டாம் வாசகம் தீத்து 2:11-14
திமோத்தேயுவைப் போலவே பவுலின் நெஞ்சுக்கு நெருக்கமானவர் தீத்து. தீத்து தன் திருஅவைக்கு சொல்ல வேண்டிய ‘மறைக்கல்வி’ (...) என்ன என்பதை பவுலே எழுதிக்கொடுக்கிறார். ‘கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது’ என்று தொடங்கி ‘கடவுளின் மாட்சி வெளிப்படப்போகிறது’ என நிறைவு செய்கின்றார். ‘வெளிப்படுத்துதல்’ என்பது கீழைத்திருச்சபையில் மிக முக்கியமான வார்த்தை. அதாவது, லாஜிக் ரொம்ப சிம்ப்பிள். கடவுளை நாமாகவே கண்டுகொள்ள அல்லது அறிந்துகொள்ள முடியாது. அவராகத்தான் தன்னை வெளிப்படுத்த வேண்டும். இந்த வெளிப்படுத்துதல் இயேசுவில் இரண்டுமுறை நிகழ்கிறது: (அ) அவரது பிறப்பில்.
(ஆ) அவரது உயிர்ப்பில். இந்த இரண்டு வெளிப்படுத்துதல்களுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன என்றும் தொடர்ந்து எழுதுகின்றார்:
அ. பிறப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் இம்மை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, கட்டுப்பாட்டுடனும், நேர்மையுடனும், இறைப்பற்றுடனும் வாழ இவ்வருள் பயிற்சி அளிக்கிறது.
ஆ. உயிர்ப்பு என்னும் வெளிப்படுத்துதல் நம் மறுமை வாழ்வுக்கு பயன்தருகிறது. அதாவது, மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருக்க அது கற்றுத்தருகிறது. இயேசு பிறப்பிற்கும், உயிர்ப்பிற்கும் நடுவே செய்தது என்ன? “அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள மக்களாக நம்மையே தூய்மைப்படுத்தினார்.” இதுதான், இயேசுவின் இவ்வுலக வாழ்வின் நோக்கமாக இருந்தது. ‘நெறிகேடு’ என்பதற்கான கிரேக்க வார்த்தை ‘அனோமியா’ (அதாவது, சட்டம் எதுவும் இல்லாமல், ஏனோ, தானோவென்று வாழ்வது) மொத்தத்தில், இயேசுவின் பிறப்பு ஒரு வெளிப்படுத்துதல். அந்த வெளிப்படுத்துலுக்கு நோக்கம் இருந்தது. அது வெறும் வரலாற்று விபத்தாக நடந்தது அல்ல. ஆக, அந்த நோக்கம் நம் ஒவ்வொருவரிலும் நிறைவேறினால்தான் நாம் இயேசுவின் வெளிப்படுத்துதலை நம் வாழ்வில் கண்டுணர முடியும்.

நற்செய்தி வாசகம் லூக்கா 2:1-14
1. பாட அமைப்பு இந்த திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை இரண்டு உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
அ. இயேசுவின் பிறப்பு (2:1-7)
ஆ. வானதூதர்கள் இடையர்க்கு அறிவித்தலும், அவர்களின் பாடலும் (2:8-14)

2. இது வரலாற்று நிகழ்வா?
இயேசுவின் பிறப்பை பற்றி எழுதும் மத்தேயு மற்றும் லூக்கா ஒருவர் மற்றவரிடமிருந்து அதிகம் முரண்படுகின்றனர். மாற்கு இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி ஒன்றும் பதிவு செய்யவில்லை. யோவானும் வெறும் உருவகங்களில் பேசி முடித்துவிடுகின்றார். லூக்கா பற்றிய ஒரு நாவலில் அவர் மரியாளை சந்தித்ததுபோல குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவலை வெறும் நாவலாக மட்டும்தான் பார்க்க வேண்டும். ஏனெனில், அந்த நாவல் உண்மையாக இருந்தால், லூக்கா மரியாளைப் பார்த்திருந்தால், அதை பதிவு செய்துவிட்டு, தான் பார்த்த நட்சத்திரம் பற்றி ஒன்றும் பதிவு செய்யாமல் விட்டது ஏன்? ஆக, இந்த நற்செய்தி பதிவு லூக்கா நற்செய்தியாளர் தன் இறையியலுக்காக உருவாக்கியதாகவே இருக்க வேண்டும். ஆனால், இயேசுவை வெறும் புராதணக் கதையாக யாரும் நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், அவரின் பிறப்பில் கடவுள் மனுக்குலத்தின் வரலாற்றுக்குள் நுழைகிறார் என்றும் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆகையால்தான், அகுஸ்து சீசரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை பின்புலமாக எடுத்துக்கொள்கிறார். ஆனால் இந்தக் கணக்கெடுப்பு வரலாற்றில் நிகழவில்லை என்றே வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மேலும், கணக்கெடுப்பின் போது மக்கள் எங்கே வாழ்கிறார்களோ, அங்கே வந்துதான் ஆட்சியாளர்கள் அல்லது அதிகாரிகள் கணக்கெடுப்பர். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், அவர்களின் உடைமைகள் மற்றும் வீட்டை எப்படி தூக்கிக் கொண்டு போக முடியும். ஆக, மெசியா தாவீதின் மரபில்தான் பிறக்க வேண்டும் என்று அறிந்திருக்கின்ற லூக்கா, வளனாரையும், மரியாளையும் பெத்லகேமுக்கு கூட்டி வருகின்றார். மேலும், பிறக்கின்ற குழந்தை வானதூதர்கள் வழியாக இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது, ‘சோத்தேர்’ (மீட்பர்), ‘கிறிஸ்தோஸ்’ (மெசியா அல்லது அருள்பொழிவு பெற்றவர்), ‘கிரியோஸ்’ (ஆண்டவர்) என்ற மூன்று தலைப்புகளை லூக்கா பயன்படுத்துகிறார். ஆனால், மரியாவுக்கு கபிரியேல் சொன்ன பெயர் ‘இயேசு’. மேலும், இயேசு என்பதுதான் வரலாற்றுப் பெயர். மற்றவை இறையியல் தலைப்புகளே. ஆக, லூக்காவின் இந்த பிறப்பு நிகழ்வு பதிவு வரலாற்று நிகழ்வு என்று சொல்வதைவிட, இறையியல் நிகழ்வு என்றே சொல்லாம். அடுத்த கேள்வி வரும் இங்கே. அது வரலாற்று நிகழ்வு இல்லையென்றால் அதை ஏன் நாம் சீரியசாக எடுக்க வேண்டும்? ரொம்ப சிம்ப்பிளான பதில். என் அம்மாவும், உங்கள் அம்மாவும் வரலாற்று நிகழ்வுகள். ஆனால், என் அம்மாவின் அன்பும், உங்கள் அம்மாவின் அன்பும் வரலாற்று நிகழ்வுகளா? அவற்றை ஆய்வுக்கூடத்தில் ஆராய முடியுமா? அவற்றை கண்ணால் பார்க்க முடியுமா? சில நேரங்களில் கண்ணுக்குப் புலப்படாதவையே கண்ணுக்குப் புலப்படுபவைகளைவிட உண்மையானவையாக இருக்கின்றன.

3. வார்த்தைகளும், வாழ்வியல் சவால்களும்
அ. ‘விடுதியில் அவர்களுக்கு இடமில்லை.’ விவிலியத்தில் மிக சோகமான வார்த்தைகள் இவைதாம். உலகத்தையே படைத்த கடவுளுக்கு சத்திரத்தில் இடமில்லை. அங்கே யாருக்கு இடமிருந்தது? சீசரின் ஆட்களுக்கும், அதிகாரிகளுக்கும், படைவீரர்களுக்கும், உண்டு களித்தவர்களுக்கும். ஆனால் இந்த ஏழைத் தம்பதியினருக்கும், அவர்களின் குழந்தைக்கும் இடமில்லை. ‘இடமில்லை’ என்று மனுக்குலம் சொல்லிவிட்டால், கடவுள் திரும்பிவிடுவாரா என்ன? பின் கதவின் வழியே வரலாற்றுக்குள் நுழைந்துவிடுகிறார் கடவுள். மேலும், இயேசு இறுதியாக தன் சீடர்களிடம் சொல்வது என்ன? நான் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப் போகிறேன். நாம் அவருக்கு இடமில்லை என்று சொன்னாலும், அவர் நமக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறார். கிறிஸ்து பிறப்பு வைக்கும் முதல் சவால் இதுதான்: ‘இடம்.’ பிறப்பிலிருந்து இறப்பு வரை நாம் இடத்தை வைத்தே அறியப்படுகிறோம். ஆகையால்தான் நம் பிறந்த மண்ணை நமக்கு விட மனமில்லை. புதிய இடம் எவ்வளவு வசதிகளைத் தந்தாலும் மனம் அதில் லயிப்பதில்லை. நாம் எங்கே இருந்தாலும் எனக்கென்ற இடம் இதுதான் என்று நம்மையே வரையறுத்துக்கொள்கிறோம். அந்த இடத்திற்குள் அடுத்தவர் அத்துமீறினால் நமக்கு பிடிப்பதில்லை. இன்று நாம் பயன்படுத்தும் மொபைலில் கூட எல்லாருக்கும் இடம் கொடுப்பதில்லையே. ஒரு சிலருக்கு மட்டும் ‘ஃபேவரிட்ஸில்’ இடம் கொடுக்கிறோம். சில எண்களை ‘ப்ளாக்ட் நம்பர்ஸ்’ என்ற இடத்தில் வைக்கிறோம். நம் ஃபேஸ்புக் பக்கத்தில் எல்லாருக்கும் இடம் கொடுக்கிறோமா? நம் வாட்ஸ்ஆப் க்ரூப்பில்? இல்லை. எல்லாருக்கும் நாம் ஒரே இடத்தைக் கொடுப்பதில்லை. கொடுக்கவும் கூடாது. இன்று நம் இதயம் ஒரு சத்திரம் போலத்தான் இருக்கின்றது. ‘யாரோ வருவார், யாரோ போவார், வருவதும், போவதும் தெரியாது’ என்றும், ‘ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்’ என்றும், எண்ணங்களும், ஆட்களும், ஆசைகளும் வந்து போகின்றன. இன்று அங்கே இயேசுவுக்கு இடம் இருக்கிறதா?

ஆ. ‘துணிகள்.’ 2:7 மற்றும் 2:12 என இரண்டு இடங்களில் இயேசு துணியில் சுற்றப்பட்டிருப்பதை எழுதுகிறார் லூக்கா. படைப்பின் தொடக்கத்தில் ஆதாமும், ஏவாளும் படைக்கப்பட்டபோது ஆடையின்றி இருந்தனர். பாவம் வந்தவுடன் ஆடையும் வந்தது. ஆடை பாவத்திற்கு அடையாளமாக நாம் இன்றும் சுமக்கின்றோம். பாவத்தின் அடையாளமான ஆடையை, மற்றொரு ஆடையாலேதான் எடுக்கப்பட முடியும் என்பதற்காக லூக்கா ஆடைக்கு அழுத்தம் கொடுக்கிறார். மேலும், கல்வாரியில் ஆடை அகற்றப்பட்டு இயேசு நிற்பார். அதை இங்கேயே முரண்படுத்திக் காட்டுகிறார் லூக்கா. இன்று நாம் அணியும் ஆடையும் அடையாளமே - நாம் செய்யும் வேலை, நாம் எடுத்திருக்கும் அழைப்பு நிலை, நம் விருப்பு-வெறுப்பு, வாழ்க்கை நிகழ்வு எல்லாவற்றையும் இந்த ஆடைதான் பிரதிபலிக்கிறது.

இ. ‘இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.’ விழிப்பாயிருப்பவர்களுக்கு மட்டுமே இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார். அந்த குளிர் இரவில் ஊரே தூங்கிக்கொண்டிருந்தபோது, இடையர்கள் காவல் காக்கின்றனர். இங்கே ஒரு முரணையும் காண வேண்டும். இயேசுவின் காலத்தில் இடையர்கள் ஏமாற்றுபவர்கள் எனவும், திருடர்கள் எனவும், அடுத்தவரின் மேய்ச்சலில் ஆடுகளை விட்டு வேடிக்கை பார்க்கும் முரடர்கள் என்றும் கருதப ; ப ட ; டனர் . அப ; ப டி ப ; ப ட ; ட ஒரு அடித்தட ; டு மக்கள் குலத்தை, தங்கள் வேலையில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார்கள் என்று மிக நேர்முகமாக பதிவு செய்கின்றார் லூக்கா. இன்று நாம் அடுத்தவரைப் பார்க்கும் பார்வை எப்படி இருக்கிறது?

ஈ. ‘செய்தி அறிவிக்கப்பட்ட இடம்.’ இயேசுவின் பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்ட இடமும் கேட்பாரற்ற இடம்தான். வானதூதர்கள் சீசரின் அரண்மனையிலோ, அல்லது சத்திரத்திலோ பிறப்பு செய்தியை அறிவித்திருக்கலாமே? ஏன் அப்படி செய்யவில்லை. அதற்கான பதிலை வானதூதர்களே தருகின்றனர்: ‘உங்களுக்காக பிறந்திருக்கிறார்!’ ஆக, இயேசு எனக்காக பிறந்திருக்கிறார் என்று நான் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவரின் பிறப்பு எனக்கு அர்த்தமுள்ளாகும். அவர் எனக்கு மெசியாக மாறுவார். ஆக, இயேசு என்பவர் ஒரு இறையியல் கோட்பாடு அல்ல. நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து ஓர் இறையியல் கட்டுரையை எழுதி, ‘இதுதான் இயேசு’ என்று எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது சால்பன்று. இயேசு எல்லா வரையறைகளையும், கட்டுரைகளையும் தாண்டி நிற்பவர்.

உ. ‘பாடல்.’ லூக்கா நற்செய்தியின் முதல் பிரிவுகளை வாசிக்கும்போதெல்லாம், பழைய திரைப்படம் பார்த்தது போல இருக்கும். அதாவது, எதற்கெடுத்தாலும் பாடலாக இருக்கும்: சக்கரியா பாடுவார். மரியா பாடுவார். வானதூதர்கள் பாடுவார்கள். பின் சிமியோன் பாடுவார். ‘உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சியும், உலகில் உகந்தோருக்கு அமைதியும்’ (2:13-14) என்று வானதூதர்கள் பாடுவதை, அப்படியே மாற்றி மக்கள் வாயில் போடுகின்றார் லூக்கா. இயேசு வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேம் நுழையும்போது, அவர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து, “விண்ணகத்தில் அமைதியும் மாட்சியும் உண்டாகுக!” என்று குரல் எழுப்புகின்றனர். ஆக, இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அமைதி கிடைப்பதில்லை. அது கடவுளிடம் திரும்பிவிடுகிறது. ஆக, இறைவனின் வெளிப்படுத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே மகிழ்ந்து பாட முடியும். அந்த பாடல் அவர்களுக்கு மட்டுமே பொருள்தரும்.

ஊ. ‘அச்சம் போக்கும் நம்பிக்கை.’ வானதூதர்களின் திடீர் பிரசன்னத்தால் அச்சம் கொண்டவர்களுக்கு, ‘அஞ்சாதீர்கள்’ என்று சொன்ன தூதர் குழு, ‘மகிழ்ச்சியூட்டும் செய்தியை’ அறிவிக்கின்றது.மேலும், இந்த மகிழ்ச்சி எல்லாருக்கும் உரித்தானது.

எ. இறுதியாக, கிறிஸ்து பிறப்பு இந்த ஆண்டு என்னில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டுவருகிறதா? புது ஆடை, திருப்பலி, கேக், கேரல்ஸ், வாழ்த்து என இந்த ஆண்டும் முடியப் போகிறதா? இன்று நாமே பேசிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக நம் வீட்டில் அல்லது ஆலயத்தில் குடிலில் வைத்திருக்கும் அந்த பாலன் இயேசு என்ன பேசுகிறார் என்பதைக் கேட்க முயற்சிப்போம். வெளியே மகிழ்ச்சி, உள்ளே அழுகை என்றோ, உதட்டில் சிரிப்பு, உள்ளத்தில் காயம் என்றோ இந்த வருடம் கழிந்துவிட வேண்டாம்.

அடுத்தவர் நமக்கு இடம் தரவில்லையென்றாலும், நம்மால் வாழ முடியும், மகிழ்ச்சி தர முடியும் எனச் சொல்லிவிட்டார் இயேசு.

கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்களும்! மகிழ்ச்சியும்!



25 டிசம்பர் 2016 கிறிஸ்து பிறப்பு பெருவிழா - பகல் திருப்பலி

கடவுள் மனுக்குலத்தோடு எடுத்த செல்ஃபி
கடவுள் யார்?
செல்ஃபி என்றால் என்ன?
மனுக்குலம் என்றால் யார்?
இயேசுவின் பிறப்பு முக்கியத்துவம் பெறுவது ஏன்?

1. கண்களால் பார்ப்பதை விடுத்து மனத்தால் பார்ப்பது
2. முன்புறத்தோடு பின்புறத்தையும் பார்ப்பது
3. பொருள்களைப் பார்க்காமல் மனிதர்களைப் பார்ப்பது
4. நீங்கள்தான் உங்கள் மகிழ்ச்சியின் பொறுப்பாளர்
5. இன்னும் கொஞ்சம் சேர்ந்து நடங்கள்


மற்றொன்று... அயர்லாந்து நாட்டில் ஒரு டிசம்பர் மாதம் . குளிர்காலம் . மாலை நேரத் தேநீரைக் குடித்துக்கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி. திடீரென அழைப்பு மணி ஒலிக்கிறது. யார் வந்திருப்பார்கள்? என்று கதவின் துவாரம் வழியே பார்க்கின்றார். வாசலில் ஒரு சிறுவனும், சிறுமியும் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தாலே ‘ஏழைச் சிறுவர்கள்’ என்று சொல்லிவிடலாம். ஏனோ, தானோவென்ற ஆடை, அழுக்குப்படிந்த முகம், சிக்கு விழுந்த தலை. ‘என்ன வேண்டும்?’ - ‘உங்கள் வீட்டில் பழைய நியூஸ்பேப்பர் இருந்தால் கொடுப்பீர்களா?’ - ‘ஏன்?’ ‘ரொம்ப பனி பெய்கிறது. குளிர் அதிகமாக இருக்கிறது. இந்தப் பனியில் நடப்பதற்காக பழைய செய்தித்தாள்களை நாங்கள் எங்கள் பாதங்களில் கட்டிக்கொள்வோம். எங்கள் ஆடைகளுக்குள்ளும் வைத்து குளிர்போக்கிக்கொள்வோம்’. அந்தப் பெண்மணி குனிந்து அவர்களின் பாதங்களைப் பார்க்கின்றாள். அவர்கள் பாதங்களில் கட்டியிருந்த பழைய செய்தித்தாள்கள் பனியில் நனைந்து கிழிந்துகொண்டிருந்தன. விரைவாக அவர்களை வீட்டிற்குள் அழைக்கின்றாள் அவர்களை சோஃ பாவில் அமரச் செய்துவிட்டு அவர்களுக்கு தேநீர் கொண்டு வருகின்றாள். தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்தவுடன் சிறுவன், ‘அம்மா, நீங்கள் பணக்காரரா?’ என்று கேட்கின்றான். அந்தப் பெண்மணி, ‘எப்படிக் கேட்கிறாய்?’ என, சிறுவன் சொல்கிறான், ‘பணக்காரர்கள் வீட்டில்தான் கப்பும், சாசரும் மேட்ச்சாக இருக்கும்’ என்கிறான். அப்போதுதான் அந்தப் பெண்மணிக்குத் தோன்றுகிறது: ‘மற்றவரிடம் இல்லாத பல தன்னிடம் இருக்கிறது. அதை நான் உணராமல் அன்றாடம் என் குறைகளையே நினைத்து புலம்புகிறேனே’ என்று. தன் வீட்டில் இருந்த குழந்தைகளின் பழைய காலணிகளை அவர்களுக்குக் கொடுத்து, ஆடைகளும் கொடுத்து அனுப்புகின்றாள். கதவை அடைத்து விட்டு உள்ளே வந்து அவர்கள் விட்டுச் சென்ற தேநீர்க் கோப்பையை எடுத்துப் பார்க்கின்றாள். ஆம். அது மேட்ச்சாக இருந்தது. சோஃபாவின் அருகில் அந்தச் சிறுவர்களின் காலடித்தடங்கள் பழைய நியூஸ்பேப்பரின் ஈரத்தோடு ஒட்டியிருக்கின்றன. அதைத் துடைக்காமல் அப்படியே விடுகின்றாள்.

இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பெத்லகேம் மாடடைக்குடிலில், ஒரு குளிர் இரவில் தன் பிஞ்சுப் பாதங்களைப் பதித்த பாலஸ்தீனத்தைக் குழந்தையும் நமக்கு இதைத்தான் நினைவுபடுத்துகின்றது: ‘நாமெல்லாம் செல்வந்தர்கள் ’. ‘அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்’ (2கொரி 8:9). இறைவனின் பாதப்பதிவுகள் மனுக்குலத்திற்குச் சொந்தமான நாள் இந்நாள். காலங்களையெல்லாம் கடந்த கடவுள் மனித நேரத்திற்குள் நுழைந்த இரவு இந்த இரவு. பெயர்களையெல்லாம் கடந்த இறைவன் இம்மானுவேல், இயேசு என்று பெயர் பெற்ற நாள் இந்த நாள். இந்தப் பாதச்சுவடுகள் நம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் பதிய வேண்டும் என்று குடில் ஜோடித்து அழகு பார்க்கின்றோம். அவரது பிறப்பை அடையாளம் காட்டிய நட்சத்திரம் நமக்கும் நல்வழி காட்ட வேண்டும் என ஒளியால் அலங்கரித்துள்ளோம். கீழ்த்திசை உதித்த ஆதவனாய், பாவம் போக்க மனுவுரு எடுத்த நம் மன்னவனின் ஒளி அகஇருள் போக்கி நிறைஒளி தர வேண்டிநிற்கின்றோம். ‘வார்த்தை மனிதரானார். நம் நடுவே தன் காலடிகளைப் பதித்தார்’ (யோவா 1:18).

‘நற்செய்தி அறிவிப்பவரின் பாதங்கள் எத்துணை அழகானவை’ (எசா 52:7) என்று எசாயா முன்னுரைத்தது இன்று நிறைவேறுகின்றது. இந்த நற்செய்தி அறிவிப்பவர் இயேசுவே. அவர் கொண்டு வந்த நற்செய்தி அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நம்பிக்கை. ‘நீர் வானங்களைப் பிளந்து இறங்கி வரமாட்டீரா?’ (எசா 63:1) என்று வேட்கை கொண்ட எசாயா இஸ்ராயேல் மக்களின் எதிர்பார்ப்பை எடுத்துரைக்கின்றார். இயேசுவின் பிறப்பு மட்டுமல்ல, அவரது பணிவாழ்வும் கூட அவர் இம்மண்ணுலகில் காலூன்றி நின்றதை நமக்குக் காட்டுகின்றது. பாவியான ஒரு பெண் அவரது காலடிகளில் கண்ணீர் வடிக்கின்றார் (லூக் 7:38). மீன்பாட்டைக் கண்டவுடன் சீடர்கள் இயேசுவின் காலடிகளில் விழுகின்றனர் (மாற் 5:22). திருமுழுக்கு யோவான் இயேசுவின் காலடிகளைத் தொடக் கூடத் தகுதியில்லை எனத் தம் வெறுமையை ஏற்றுக்கொள்கின்றார். தொழுகைக்கூடத் தலைவர் யாயீர் காலடிகளில் பணிகின்றார் (மாற் 5:33). சக்கரியாவும் தனது பாடலில் ‘நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும், இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது’ (லூக் 1:79) என்று பாடுகின்றார். தன் இறுதி இராவுணவில் தம் சீடர்களின் காலடிகளைக் கழுவியதோடு மட்டுமல்லாமல் அதையே அவர்களும் செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகின்றார் (யோவா 13:14). இயேசுவின் காலடிகளைப் பற்றி விவிலியம் பேசும் இடத்திலெல்லாம், மனுக்குலத்தில் அவர் வேரூன்றி நின்றதுதான் வெளிப்படுகின்றது.

கிறிஸ்து மனுக்குலத்தில் காலூன்றிய இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:
1. உடனிருப்பு. இறைவன் மனுக்குலத்தோடு உடனிருக்க இறங்கி வருகின்றார். பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து இறைவன் உடனிருக்கும் இறைவனாகவே மக்கள் நடுவே திகழ்கின்றார். இறைவன் நம்மோடு உடனிருக்கிறாரெனில், நாம் ஒருவர் மற்றவரோடு உடனிருக்கின்றோமா? நம் உடனிருப்பு மற்றவரின் பிரசன்னத்திற்கு அழகு சேர்க்கின்றதா? அல்லதா அழித்து விடுகின்றதா?

2. வாழ்வில் வேரூன்றல். இன்றைய பல தீமைகளில் மிகக் கொடுமையானது ‘நம்பிக்கையிழப்பது.’ தோல்வியைவிட, தோல்வியைக் குறித்த பயம்தான் நம்மை அதிகமாக பயமுறுத்துகின்றது. கடவுள் மனிதவுரு ஏற்றார். மனிதம் மேன்மையானது. மனிதம் சார்ந்த அனைத்தும் வாழ்வு தருவது. ஆகையால், எதையும் துணிச்சலோடு எதிர்கொள்தல் அவசியம். நம் இறைவன் நாம் அழிவுற நினைக்கும் இறைவனல்லர். நம் வாழ்வு ஒரு கொடை. அந்தக் கொடையைப் பெறுதலே பெரிய பாக்கியம். அதில் மகிழ்வோம்.

3. பிரிவினைகள் அழிந்தன. இறைவன் - மனிதன், ஆண் - பெண், வளமை – வறுமை, நிறைவு – குறைவு என்று மனிதர் வைத்திருந்த அனைத்துப் பிரிவினைகளும் இயேசுவின் பிறப்பில் அழிந்தன. வலுவற்றதை வல்லமை தழுவிக் கொண்டதால் அனைத்துமே வல்லமை பெற்றது. நம் நடுவில் அவர் காலடிகளைப் பதித்தார். விண்ணகத்தில் நாம் கால்பதிப்பதும் அரிதன்று. பிரபல தமிழ் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், ‘துறவியும் மீனும்’ என்ற ஐந்து நிமிட ஜென் குறும்படத்தைப் பற்றித் தன் வலைப்பக்கத்தில் எழுதுகின்றார்: ‘புத்த மடாலயம் ஒன்றில் ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. ஒருநாள் ஒரு புத்த பிக்கு அதில் அழகாக நீந்திக் கொண்டிருக்கும் ஒரு மீனைப் பார்க்கிறான். உடனே அதைப் பிடிக்க வேண்டும் என நினைத்து ஒரு தூண்டில் எடுத்து வந்து மீன்மேல் வீசுகிறான். மீன் தப்பி ஓடுகிறது. பின் வலையை விரிக்கிறான். வலையிலும் அது விழவில்லை. இரவெல்லாம் அவனுக்குத் தூக்கமேயில்லை. அந்த மீனை எப்படிப் பிடிப்பது என சிந்தித்துக் கொண்டே இருக்கிறான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம் அதைப்பற்றியே பேசுகிறான். மீன் பிடிப்பது எப்படி? என்று புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான். ஆனால் அவனால் மீனைப் பிடிக்கவே முடியவில்லை. அம்பு விட்டு;ப் பார்க்கிறான். உள்ளே இறங்கி அதை விரட்டிப் பிடிக்கப் பார்க்கிறான். முடியவேயில்லை. இறுதியாக, மீனைப் பிடிக்க நினைப்பது முட்டாள்தனம், அதன் போக்கில் நாமும் கலந்துவிட வேண்டும், அதுவே மீனைப் புரிந்துகொள்ளும் வழி என நினைத்து மீனோடு நீந்துகிறான். அவனும் மீனும் நெருக்கமாகி விடுகிறார்கள். மீன் அவனோடு சேர்ந்து நீந்துகிறது. துள்ளுகிறது. இருவரும் ஒன்றாக முடிவற்ற புள்ளியை நோக்கி மகிழ்ச்சியாக வானில் தாவி மறைகிறார்கள்’.

இறைமை மனிதத்தோடும், மனிதம் இறைமையோடு கைகோர்த்துக்கொண்ட ஒரு அற்புத நிகழ்வே கிறிஸ்துமஸ். முதல் கிறிஸ்துமஸ்! காலண்டரில் குறிக்கப்படவில்லை. பலூன்கள் ஊதப்படவில்லை. நட்சத்திரங்கள் கட்டப்படவில்லை. வானவேடிக்கை இல்லை. விடுமுறை இல்லை. வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படவில்லை. கேக்குகள் இல்லை. கேரல்ஸ் இல்லை. ஸ்வீட்ஸ் இல்லை. யாருமே எதிர்பார்க்கவில்லை. ‘பழைய ஏற்பாட்டின் எல்லாப் பக்கங்களிலும் அவர் நிழல் தெரிந்தது. யாரும் அவர் வருவதைக் கண்டுகொள்ளவேயில்லை. யாரும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதத்தில் இறைமை மனிதத்தைத் தழுவிக் கொண்டது. மரியாள், வானதூதர், பெத்லகேம், அகஸ்டஸ் சீசரின் கணக்கெடுப்பு, ஏரோதின் பொறாமை, ‘இடம் இல்லை’ என்று சத்திரத்தில் தொங்கிய ‘போர்டு’, வானதூதர்கள், இடையர்கள், கீழ்த்திசை ஞானியர், நட்சத்திரம், ஒட்டகம், மாடு, கழுதை, குகை என எண்ணற்றவைகளை நாம் கேட்டுவிட்டோம். இவைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்குமுன் இவை என்னவென்று நமக்குத் தெரியும். இன்று நாம் எவ்வளவு கேட்டாலும் நாம் கேட்பது போலக் கேட்கின்றோம். ‘அதிகமாகக் கேட்டல்’ அலுப்புத் தட்டுகிறது.

‘துணிகளில் குழந்தையைச் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்.’ (லூக் 2:12) இந்த வார்த்தைகளை மட்டும் இன்று சிந்திப்போம். 1) துணிகளில் சுற்றி, 2) தீவனத் தொட்டியில், 3) கிடத்தியிருப்பது என்ற இந்த மூன்று அடையாளங்களும் நமக்குச் சொல்வது இதுதான்: கண்ணால் காண முடியாத இறைவன் கண்ணால் காணும், நாவால் ருசிக்கும், கையால் தொடும், மூக்கால் நுகரும், காதால் கேட்கும் வகையில் கைக்கெட்டும் துரரத்தில் கால் பதிக்கின்றார் கடவுள்.