இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்பணி. வேத போதக சகாய செல்வராஜ் (கப்புச்சின் )
Burkina Faso, West Africa.
vedasahayam1982@gmail.com

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (A)

தாகமாய் இருக்கிறேன்...

விடுதலைப்பயணம் 17:3-7
உரேமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42

இறை இயேசுவில் பிரியமான சகோதர சகோதரிகளே!
நான் தாகமாய் இருக்கிறேன்! எனது தாகத்தை போக்குவீர்களா?

கத்தோலிக்க மறைக்கல்வியில் இருந்து ஒரு கேள்வி.ஆறுஇலட்சணங்கள் எத்தனை உள்ளன? அதைச் சொல்லவும்? இப்படித்தான் ஒரு முறை எனது மறைக்கல்வி ஆசிரியர் நான் சிறுபிள்ளையாக இருந்தபோது ஆறுஇலட்சணங்கள் சொல்லச் சொன்னார். உடனே நான் ‘கடவுள் தாகமாய் இருக்கிறார்’ என்றேன். மீண்டும் என்னிடம் கேட்டார் நானும் அதே பதிலை கூறினேன். அப்போது அவர் கூறினார் கடவுள் தாகமாய் இல்லை மாறாக தாமாய் இருக்கிறார் என்றார். ஆம் அன்புக்குரியவர்களே! இன்று இந்த இயேசுகிறிஸ்து தாகமாய் இருப்பதைத்தான் நற்செய்தியிலே வாசிக்க கேட்டோம். முதல் வாசகத்திலும் கூட இஸ்ராயேல் மக்கள் தாகமாய் இருக்கின்றனர். ஏன் இன்றைய சூழலில் கடவுள் படைத்த அனைத்து படைப்புகளுமே தாகமாய் இருப்பதை நாம் கண்கூடாக காண்கிறோம். எங்கு பார்;த்தாலும் தண்ணீர் பிரட்சணை. ஏரி> குளங்கள்> அணைக்கட்டுகள் அனைத்தும் பாலைவனமாகும் சூழல்> குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காதால் மக்கள் காலி குடங்களை எடுத்துக்கொண்டு ஆங்காங்கே மறியல் போரட்டம்> விலங்குகளுக்கு தண்ணீர் இல்லாமல் காடுகளை விட்டு மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு வந்து போகும் சூழல்> மரம்> செடி> கொடிகள் காய்ந்து கருகிநிற்கும் நிலை இப்படியாக எங்கு பார்த்தாலும் தண்ணீருக்கான தாகத்தை நாம் கண்கூடாக பார்த்தும்> அனுபவித்தும் வருகிறோம். இத்தருணத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்முடைய தாகத்தை போக்க வருகிறார். தாகம் உள்ளவர்கள் ஆண்டவரிடம் வந்து தாகத்தை தணித்துக்கொள்வோமா!

ஒரு முறை ஒரு மனிதர் தமக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பாலைவனத்திலே நெடும் பயணம் மேற்க்கொண்டார். இரண்டாவது நாளின் பயனத்திலே அவர் எடுத்துச்சென்ற தண்ணீரானது தீர்ந்து விட்டது. தண்ணீர் தாகம் வாட்டுகிறது. அத்தோடு வெயிலின் கொடுமையும் அதிகமாக இருக்கிறது. பாலைவனத்திலே அந்த மணலின் சூடு அதிகமாக இருக்கிறது. நடக்கமுடியாமல் பாதியிலே இறந்து விடக்கூடிய ஒரு சூழல். அப்போது தூரத்திலே பார்க்கிறான் ஓர் குடிசையென்று தெரிகிறது. எப்படியாவது அந்த இடத்தை அடைந்து விட்டால் தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையிலே சிரமம் பாராது நடக்க ஆரம்பிக்கிறான். குடிசை அருகில் வந்த போது ஓர் அடிகுழாய்யானது அங்கு இருக்கிறது. மிகுந்த ஆசையோடு குழாய் அருகே வருகிறான். ஆனால் அந்த குழாயானது மிகவும் பழமையாகவும், துருபிடித்தும் இருக்கிறது. அருகிலே ஒரு பாட்டில் நிறைய தண்ணீர் இருக்கிறது. அதிலே ஒரு வசனம் எழுதி இருக்கிறது. “இந்த பாட்டிலில் உள்ள தண்ணீரை எடுத்து அடிகுழாயில் உற்றி அதை அடித்தால் தண்ணீர் வரும் போதுமான அளவு நீ குடிக்கலாம். மேலும் மீண்டும் இந்த பாட்டிலை நீரால் நிரப்பி வைக்கவும்” என எழுதப்பட்டு இருக்கிறது. அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, காரணம் அவனுக்கு உயிர் போகக்கூடிய அளவிற்கு தண்ணீர் தாகம், பாலைவனத்தில் இருப்பதோ ஓரே ஒரு அடிகுழாய்> அதுவும் துருப்பிடித்து இருக்கிறது. இருக்கின்ற தண்ணீரை அந்த குழாயில் ஊற்றினால் தண்ணீர் வரவில்லையென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும்.

இப்போது நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?
01. தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்வீர்களா?
02. அங்கு எழுதியுள்ளது போல அந்த தண்ணீரை குழாயிலே ஊற்றுவீர்களா?
அந்த மனிதன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து அந்த தண்ணீரை குழாயில் ஊற்றி அடிக்கிறான், தண்ணீர் வருகிறது. புதிய நீரை பருகுகிறான் தனது தாகத்தை போக்கிக் கொள்கிறான். அத்தோடு மீண்டும் அந்த பாட்டிலில் தண்ணீர் நிரப்பி விட்டு தனது பயணத்தை தொடர்கிறான். அந்த வசனத்தை ஏற்று நடந்ததால் அவனுக்கு மூன்று நன்மைகள் கிடைக்கின்றன.
01. புதிய தண்ணீரை பருகுகிறான்.
02. தனக்கு போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கிறான்> மேலும் தனது எதிர்கால பயணத்திற்கு என தண்ணீரை நிரப்பிக்கொள்கிறான்.
03 . மீண்டும் அந்த இடத்திற்கு வருவோருக்கு பயன்படும் என்று அந்த பாட்டிலில் தண்ணீரை நிரப்புகிறான்.
(ஆனால் அதே வேளையில் அவன் அந்த தண்ணீரைக் குடித்து இருந்தால் அது பழைய தண்ணீர்> தொற்று நோய் ஏற்படலாம்> வேறுயாரவது அந்த வழியில் பணம் செய்தால் தண்ணீர் இல்லாமல் சாகக் கூடும்)
அந்த மனிதன் செய்தது போல நமதாண்டவாரும் தன்னுடைய தாகத்தை தீர்ப்பதற்காக வந்தவரல்லா? மாறாக உலகில் உள்ள அனைத்து மக்களின் தாகத்தையும் போக்க வந்தவர். இன்று நாம் அனைவரும் பலவிதமான தாகத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். ஆக நம்முடைய தாகங்;கள் எது என்று தெரிந்தால் அதற்கு ஏற்ற நீரை நாம் பருகலாம்.

மனிதனுடைய தாகங்கள் எத்தனை வகைப்படும்?
மனிதன் பலவிதமான தாகங்களிலே சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறான். அதிலே மூன்று விதமான தாகத்தை பற்றி மட்டும் சிந்திப்போம்.

01. உடல் தாகம்:
கடவுளின் படைப்புகள் அனைத்தும் அனுபவிக்கும் தாகம். இது உடல் சார்ந்தது. மேலும் உயிர் சார்ந்தது. மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்று இந்த நீர் தாகம் தான். முதல் வாசகத்திலே அந்த இஸ்ராயேல் மக்கள் அனுபவித்த தாகமும் இதுதான். இன்று நாம் அனைவரும் அனுபவித்து வரும் தாகமும் இது தான். இதற்கு; தண்ணீர் தான் இந்த தாகத்தை போக்கும் நல் மருந்து.

02. அறிவுத் (ஞானத்) தாகம்:
பழைய ஏற்ப்பாட்டில் ஞானம் தண்ணீராக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. சீராக் புத்தகம் 24:21-ல் “என்னை உண்பவர்கள் மேலும் பசிகொள்வார்கள். என்னை குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்”. அதனால் தான் அன்று முதல் இன்று வரை பல மனிதர்கள் இந்த ஞானம் என்ற தாகத்தை தேடி அலைவதைப் பார்க்கலாம். உதாரணமாக சாலமோன் அரசர் பொன்னையோ> பொருளையோ> பதவியையோ> பட்டத்தையோ> தேடவில்லை மாறாக ஞானத்தை தேடி அழைந்தார். அதுமட்டும் போதும் என்று சொல்லி கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார். இன்றும் சாதுக்கள்> ஞானிகள்> சன்னியாசிகள் அனைவரும் இதைத்தேடி அலைகின்றனர். இன்றும் ஞானம் உள்ள மனிதர்களை நமது சமுதாயம் போற்றி வணங்குகிறது. இந்த ஞானத் தாகத்தை எப்படி தீர்ப்பது. கடவுள் தான் இந்த ஞானத்தின் ஊற்று. நீதிமொழி 2:6-ல் “ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே. அறிவிற்கும்> விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே”. ஆக> ஞானத்தாகத்தை தீர்க்க வேண்டுமா? கடவுளை நாடுவோம் அவர் மட்டும் தான் ஞானத்தாகத்தை போக்க முடியும்.

03. கடவுள் மீது உள்ள தாகம்.
தாவீது அரசர் கடவுள் மீது கொண்டுள்ள தாகத்தை தி.பா 64-ல் விளக்குகிறார். “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகிறேன். என் உயிர் உன்மீது தாகம் கொண்டுள்ளது. நீறின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகிறது”. மேலும் ஏசாயா 55:1-ல் “தாகமாய் இருப்பவர்களே நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்” என்று சொல்லி தான் படைத்த அனைத்து படைப்புகளையும் அழைத்து அவர்களின் தாகத்தை போக்குகிறார்.

இன்றைய முதல் வாசத்திலே அந்த இஸ்ராயேல் மக்களுக்கு எவ்வளவு நல்ல காரியங்களை கடவுள் செய்தாலும் அவர்களின் எண்ணமெல்லாம் சுயநலம் சார்ந்தாகவே இருக்கிறது. உதாரணமாக இந்த இஸ்ராயேல் மக்களுக்கு எகிப்து நாட்டிலிருந்து அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார்> செங்கடல் நடுவே நடப்பதற்கு பாதை அமைத்து வழிநடத்துகிறார்> தங்களுடைய எதிரிகளை முற்றிலுமாக செங்கடலிலே அழித்தொழிக்கிறார். பாலை வனத்திலே கசப்பான தண்ணீரை சுவையான நீராக மாற்றுகிறார்(வி.ப.15:22). பசியோடு இருந்த நேரத்தில் மன்னாவையும்> வாய்க்கு ருசியாக காடையையும் கொடுத்து பசியைப் போக்குகிறார். இவ்வளவு நல்ல கரியங்களை கடவுள் அவர்களோடு இருந்து செய்து வந்தாலும் கடவுளின் பிரசன்னத்தை அவர்களால் உணரமுடியவில்லை. நிச்சயம் கடவுள் நம்மை காப்பார் என்ற நம்பிக்கை அவர்களிடத்திலே இல்லை. எனவே தான் இன்றைய வாசகத்திலே மோசேவைப் பார்த்து “நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும்> எங்கள் பிள்ளைகளையும்> கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?”. ஆம் அன்புக்குரியவர்களே! கடவுள் எங்கும் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால் நமக்கு ஏதாவது பிரட்சனை வரும் போது அவருடைய பிரசனத்தை நம்மால் உணரமுடிகிறதா? சிந்திப்போமா? இங்கு இந்த இஸ்ராயேல் மக்கள் தாகமாய் இருக்கின்றனர். அவர்களுடைய தாகமானது சுயநலம் சார்ந்ததாகவும்> உடல் சார்ந்த தாகமாகவும் இருக்கிறது. தான்> எனது பிள்ளை> எனது கால்நடை என்று சுயநல வட்டத்தில் இருக்கிறது. உடல் தாகம் தீர்ந்தாலே போதும் என்ற மனநிலையிலே தங்கள் வாழ்க்கையை பயணிக்கின்றனர்.

(முதல் பெண் அப்போஸ்தலர்> அல்லது திருத்தூதர் யார்?
சமாரியப் பெண்தான் முதல் பெண் திருத்தூதர். திருத்தூதர்களுக்கு இயேசு கொடுத்த கட்டளை என்ன? “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்”
மாற்கு16:15. இந்த சமாரியப்பெண் தனது ஊருக்குள் சென்று இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கிறார். அந்த கிராமத்து மக்களும் “இந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வ+ரில் உள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்” யோவான் 4:39. ஆக இவர்தான் முதல் பெண் திருத்தூதராவார்).

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்திலே இயேசு மேலே சென்ன மூன்று விதமான தாகங்களை கண்டறிந்து அவர்களின் தாகத்தை பேக்குகிறார். இந்த வாசகத்திலே பல மனிதர்கள் தகமாய் இருப்பதை பார்க்க முடிகிறது. சமாரியப்பெண் தாகத்தோடு தண்ணீர் எடுக்க வருகிறார்> அந்த கிராம மக்களும் தாகத்தில் இருக்கின்றனர்> இந்த மனிதர்களைப் பார்த்து இயேசுவும் தாகத்தோடே இருக்கிறார்.

சமாரியர்களின் தாகம்:
கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்ட உயர்ந்த இஸ்ராயேல் குலமானது கி.மு 722-க்கு பின் சமாரியர் என்ற தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். அசிரிய அரசன் திக்லக் பிலேசர் காலத்தில் இஸ்ராயேல் மக்களும்> அசீரிய மக்களும் பெண் கொடுத்தும்> பெண் எடுத்தும் வந்தனர். இப்படி கலப்பினத்தில் பிறந்தவர்கள் தான் சமாரியர்கள் என அழைக்கப்பட்டனர். கலப்பினமில்லாத யூதர்கள் இந்த கலப்பின மக்களோடு உறவுகள் வைத்துக் கொள்வது கிடையாது. இதனால் தான் இயேசுவிடம் சமாரியப் பெண் “நீ யூதர்> நான் சமாரியன் என்னிடம் எப்படி குடிக்க தண்ணீர் கேட்பது எப்படி என்று” கேட்கிறார்.; இது ஒரு வரலாற்று அடிமை நிகழ்வு. இந்த சமாரியர்களுக்கு எப்படியாவது இந்த அடிமைத்தனத்தில் இருந்து வெளிவந்து நாங்களும் கடவுளின் பிரதிநிதிகள்> கடவுளாhல் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற தாகமானது சமாரியர் அனைவரிடமும் வெளிப்பட்டது. இவர்களின் தாகத்தை போக்கி வரலாற்றை மீண்டும் இணைக்க கடவுள் இவர்களை தேடி வருகிறார்.

சமாரியப்பெண்ணின் தாகம்:
இந்த உலகம் மடமை என கருதுபவற்றை கடவுள் தேர்ந்துகொள்கிறார். இந்த வார்த்தைக்கு உதாரணமாக கடவுள் இந்த சமாரியப்பெண்ணை தேர்ந்து கொள்கிறார். இங்கு இந்த சமாரியப்பெண் 5 கணவர்களை வைத்திருந்தவர்> ஆறாவதாக வேறொரு ஆண்ணை கணவராக வைத்திருக்கிறார். இப்படி தன்னுடைய தாறுமாறான வாழ்க்கையினால் மக்களால் வஞ்சிக்ப்பட்டு வாழ்ந்து வந்தவர் இந்த சமாரியப்பெண். இப்படிப்பட்ட இந்த சமாரியப்பெண்னை சமாரிய மக்கள் அனைவரின் பிரதிநிதியாக கடவுள் தேர்ந்து கொள்கிறார். இந்த சமாரியப்பெண் தன்னுடைய உடல் சார்ந்த தாகத்தை தீர்ப்பதற்கு நண்பகலில் வருகிறார். நண்பகல் நேரமானது அதிகமான தாகத்தை தரும் நேரம். இந்த தாகம் நிறைந்த தருணத்தில் வழக்கமாக மனித மூளையான எதையும் சிந்திக்காது. ஆனால் இங்கு இயேசுவும்> சமாரியப்பெண்ணும் சிந்தித்து நல்ல முடிகளை எடுக்கின்றனர்.

உடல் தாகத்தை போக்குவதற்காக அப்பெண் வருகிறார். ஆனால் இயேசுவோ உடல் தாகத்தை போக்கும் தண்ணீரை விட உள்ளத்தாகத்தை போக்கும் தண்ணீரே மிகச்சிறந்தது என அப்பெண்ணுக்கு கூறுகிறார். ‘இந்த தண்ணீரை குடிப்பவருக்கு மீண்டும் தாகம் எடுக்கும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரை குடிப்பவருக்கு தாகமே எடுக்காது. நான் கொடுக்கும் தண்ணீர் அதைக்குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்’ என்கிறார். அப்பெண்ணும் ஆசையோடு ‘எனக்கும் அந்த தண்ணீரை கொடும்’எனக் கேட்கிறார். எப்போது அந்த பெண் ஆசையோடு இயேசுவிடம் உரையாட ஆரம்பித்தாரோ அப்போதே அவருடைய உடல் தாகமானது நீங்கிவிட்டது. இப்போது இயேசு அந்த பெண்ணின் உள்ள தாகத்தை தீர்த்து வைக்க முற்படுகிறார்.

அதாவது அந்த பெண்ணிண்னுடைய குடும்ப வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் யாருக்குமே தெரியாது என நினைத்து வாழ்ந்து வந்தவர். ஜந்து கணவன்களை அந்த பெண் மணம் முடித்தாலும் இப்போது இருப்பவர் தன்னுடைய கணவர் இல்லை என்பது அந்த பெண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என நினைத்துக் கொண்டு ஊதாரித்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாhள். இப்படிப்பட்ட சூழலில் தான் மக்களால் புறக்கணிக்கப்பட்டு> ஊராராள் ஓதுக்கப்பட்டு மிகவும் வேதனையில் வாழ்ந்து வருகிறார். எனவேதான்> மக்கள் வழக்கமாக காலை அல்லது மாலையில் தான் தண்ணீர் எடுக்க வருவர் ஆனால் இந்த பெண்ணோ நண்பகலில் வருகிறார். காரணம் யாரும் தன்னை பார்த்து விடக்கூடாது என நினைத்து ஆள்நடமாட்டம் இல்லாத நண்பகலில் தண்ணீர் எடுக்க வருகிறார். இப்படியாக ஒரு இருள் நிறைந்த வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். அக அந்த பெண்ணின் உள்ளத்திலே தான் செய்வது தவறு என தெரிந்தாலும் அதிலிருந்து எப்படி வெளிவருவது எனத்தெரியாமல் ஆன்மீக தாகத்திலே தவித்துக் கொண்டிருக்கிறாள்.

இ;ந்த தருணத்தில் தான் இயேசு அப்பெண்ணின் உள்ளத் தாகத்தை தீர்த்து வைக்க அவரோடு உரையாடுகிறார். அந்த பெண்ணும் இயேசுவிடம் “கிறிஸ்து எனும் மெசியா வருவார். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என சொல்ல இயேசு அவரிடம் “உம்மோடு பேசும் நானே அவர்” என்று சொல்ல உடனடியாக அந்த பெண் முழுமையாக இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு விசுவாச நாயகியாக மாறுகிறார். எனவே தண்ணீர் எடுக்க தண்ணீர் குடத்துடன் வந்தவர் தண்ணீரை தனது உள்ளத்தில் நிரப்பிக்கொண்டு> இதுவரை மக்கள் கூட்டத்தோடு சேராத அந்த பெண் தன்னுடைய ஊருக்குள் விரைந்து சென்று வரவிருந்த மெசியா> நாம் காத்திருந்த மெசியா வந்துவிட்டார் என அறிகையிட்டு நீங்களும் வந்து பாருங்கள் என்ற அழைப்பையும் விடுக்கிறாள்.

ஊர் மக்களின் தாகம்:
இந்த சமாரிய ஊர் மக்கள் அனைவருமே மெசியா எப்போது வருவார்> அவர் மட்டும்; தான் எது உண்மை> எது பொய்மை என்று எங்களுக்கு வெளிப்படுத்த முடியும். இவர் வந்தால் தான்; நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதை இந்த உலகம் அறிந்து கொள்ளும். எனவே மெசியாவை நிச்சயம் பார்க்க வேண்டும் என்ற தாகத்திலே இருக்கின்றனார். இத்தருணத்தில் இதுவரை இந்த சமாரியப் பெண்ணை இந்த ஊர் மக்கள் ஏளனமாகவும்> பாவியாகவும் பார்த்தவர்களுக்கு இந்த பெண் சொல்லிய விசுவாச வார்த்தையானது இவர்களுக்கு புதிதாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. எனவே அந்த சாதாரண பெண்ணின் வார்த்தையை நம்பி அந்த ஊர்மக்கள் முழுவதும் இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்றனர்.

இயேசுவில் பிரியமானவர்களே வழக்கமாக பெண்களின் வார்த்தையை அன்றும் சரி> இன்றும் சரி சமுதாயம் ஏற்பது கிடையாது. அதுவும் பாவவாழ்க்கை> அல்லது தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்து வருபவரின் வார்த்தையை யாhருடம்; பொருட்படுத்துவதே கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் அந்த சமாரியப்பெண் இயேசுவிடம் தான் பெற்ற அனுபவத்தை எந்த அளவிற்கு இந்த மக்களுக்கு விளக்கியிருந்தால் அந்த மக்கள் அனைவரும் நம்பிக்கையோடு இயேசுவை பார்க்க வந்திருப்பர். இயேசுவை பார்த்த பிறகு அவர்களின் நெடுநாள் தாகம் தீருகிறது. எனவே> அந்த மக்கள் இயேசுவை தங்களது ஊரில் தங்களோடு தங்குவதற்கு கேட்கின்றனர். இயேசுவும் அவர்களோடு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அவர்களின் ஆன்மீக தாகத்தை முழுமையாக போக்குகிறார்.

இப்படியாக மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல கடவுளுடைய வார்த்தையினால் உயிர் வாhழ்வர் என்ற இறைவாக்கிற்கேற்ப்ப முதலில் அவர்களோடு உரையாடி அவர்களின் உடல் தாகத்தை போக்குகிறார் இரண்டாவதாக ஞானத்தாகம்> அறிவுத்தாகத்தை போக்குகிறார் அந்த மக்களே “நாங்களே அவரது பேச்சைக் கேட்டோம்”> என்று அறிவுத்தாகத்தின் நிறைவை வெளிப்படுத்துகின்றனர். மூன்றாவதாக கடவுள் மீது கொண்டுள்ள தாகத்தை இவர்களோடு தங்கிய இந்த இயேசுதான் உலகின் உண்மையான மீட்பர் என கடவுளை அறிந்துகொண்டு தகத்தோடு இருந்த மக்கள் அனைவரும் இவரே உண்மையான மெசியா என்று சான்று பகர்கின்றனர். எனவே இயேசுவில் பிரியமானவர்களே! தாகத்தோடு இருந்த மக்களின் தாகத்தை தீர்த்த இயேசு இன்று நம்மை பார்த்து கேட்கிறார். நானும் தாகமாய் இருக்கிறேன் என்று. இங்கு வந்திருக்ககூடிய எத்தனை பேர்; இந்த இயேசுவின் தாகத்தை தீர்த்து வைக்க தயாராக இருக்கின்றீர்கள்?

எதுவெல்லாம் இயேசுவின் தாகம்?
01. நாம் பாவ வாழ்க்கை வாழும்போது இயேசு தாகமாய் இருக்கிறார்.
உதராணமாக: இந்த சமாரிய மக்கள் பாவிகளாக இருந்த போது அவர்களின் தாகத்தை போக்க எனக்கும் குடிக்க தண்ணீர் கொடும் எனக்கேட்டு தன்னுடைய தாகத்தை வெளிப்படுத்துகிறார். இன்று ஒவ்வொரு முறை நாம் பாவம் செய்யும் போது இயேசு தாகமாக இருக்கிறார்.

02. ஏழைகளுக்கு உதவாத போது இயேசு தாகமாய் இருக்கிறார்.
மத்தேயு நற்செய்தி 25:35-45 வசனங்களில் மூன்று முறை தன்னுடைய தாகத்தை வெளிப்படுத்துகிறார். “நான் தாகமாய் இருந்தேன் என் தாகத்தை தணிக்கவில்லை” என்றும் சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு உதவி செய்யாத போது தாகமாய் இருக்கிறேன் என தன்னுடைய தாகத்தை வெளிப்படுத்துகிறார். அதேவேளையிலே சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு உதவிசெய்த போது எனது தாகத்தை தணித்தீர்கள் என பாரட்டுகிறார்> இயேசுவின் தாகத்தை தீர்த்தவர்களுக்கு தகுந்த சன்மானத்தையும் கொடுக்கிறார்.

இயேசு என்ன சொல்லி மரித்தார் யாருக்காவது தெரியுமா?
இயேசு மரிக்கும் போது கூட “தாகமாய் இருக்கிறது” யோவான்19:28. என்று சொல்லித்தான் தனது உயிரை விடுகிறார். இயேசுவில் பிரியமானவர்களே வழக்கமாக நம்முடைய உலகில் ஒருவர் ஏதாவது பேசிக்கொண்டிருக்போதே உயிர்பிரிந்தது விட்டது என்று சொன்னால் நாம் என்ன சொல்வோம். இறந்தவரது எண்ணத்தை அந்த குடும்ப உறுப்பினர்கள் நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் அவருடைய ஆன்மா சாந்தி அடையாது என்பார்கள் அப்படித்தான? அப்படியென்றால் இயேசு இறக்கும் போது என்ன சொல்லி இறந்தார்? தாகமாய் இருக்கிறது என்று சொல்லித்தான் தனது உயிரை விடுகிறார். எனவே இன்றும் இயேசு தாகமாக இருக்கிறார்.

யார் அவரது ஆன்மாவை சாந்தி அடையச் செய்வது? இயேசுவின் தாகத்தை தீர்ப்பது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமையாகும். குறிப்பாக இந்த தவக்காலத்திலே முதலில் நம்முடைய தாகங்களை நாம் இணம் கண்டுகொள்வோம், இரண்டாவதாக கடவுளுடைய தாகத்தை போக்க தீர்க்கமான முடிவுகளை எடுப்போம். சமாரியர்களின் தாகத்தை போக்கிய கடவுள் நம்முடைய தாகத்தை போக்க நமக்கு உதவிபுரிவாராக! ஆமென்.

நான் தாகமாய் இருக்கிறேன்! எனது தாகத்தை போக்குவீர்களா?