இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுகாலத்தின் பதினாறாம் ஞாயிறு

என் அணுகுமுறை: கடினமானதா! கனிவானதா!.......

ஞான.நூ12:13 16-19 உரோ8:26-27 மத்13:24-43



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதிரியரே மற்றும் இளையோரே அனைவரையும் வணக்கங்களுடன் இன்றைய ஞாயிறு திருவிருந்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். கடந்த வாரத்தில் நம் சந்தித்த நல்ல உள்ளங்களுக்காகவும் நாம் பெற்ற பலனுள்ள அனுபவங்களுக்காகவும் நன்றி கூறுவோம். பலவகை அரசியல் நிலைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தொழில்கள் தொழிலாளிகள் கல்வி நிறுவனங்கள் மாணவ உள்ளங்கள் அனைவரையும் இறைபீடத்தில் அர்ப்பணிப்போம். நிலைமைகள் மாறும் இறைவன் மாற்றித்தருவார் நாம் கனிவோடு அணுகும்போது என்றுணர்ந்து திருப்பலியில் இணைவோம்.

வகுப்பில பேசினா உங்க டீச்சர் என்ன பண்ணுவாங்க? என்ற கேள்விக்கு பையன் சொன்னான் பின்னால போய் உட்காருனு சொல்வாங்கன்னான். அங்கபோயும் பேசிச்சிரிச்சிட்டிருந்தா ன்ன செய்வாங்க என மாணவன் தொடர்ந்தான் பெஞ்ல ஏறிநில்லுன்னுவாங்க. பெஞ்சுமேலயிருந்து சைகையிலே கிண்டல் பண்ணா என்றவுடன் அப்புறம் கிளாஸ்க்கு வெளியே அதைத்தொடர்ந்து ஸ்கூலுக்கு வெளியே என்றான் ஏண்டா உங்க டீச்சர் உன்னை திருந்துன்னு கனிவா சொல்லமாட்டாங்களா என்றவுடன் பையன் சொன்னான் எப்ப அவங்க நல்லது செய்தார்கள் செய்ய விட்டார்கள் என்று.

உங்க பையனை தயவுசெய்து கூப்பிட்டு போயிடுங்க…ஏனெனில் அவன் மற்றவர்களையும் குட்டிச்சுவரா மாற்றிடுவான். என்ற கடினமான ஆசிரியரின் புகாரை கேட்டிருக்கிறோம்..வாஸ்து சரியில்லன்னு வாசல்படியை மாற்றுவோம். ராசி சரியில்லை என்று வீட்டை மாற்றுவோம். தண்ணீர் சரியில்லை என்று ஏரியாவையே மாற்றுவோம். தீமையை விலக்க நாம் கடினமான அணுகுமுறையோடு தீமையை வளர்க்கிறோமே தவிர விலகிவரவில்லை. இருக்கின்ற இடத்தில் நல்லது செய்யும் போது தீமை மறைந்துவிடும். நல்ல பழத்தை அழுகும் பழங்களிலிருந்து பிரிக்கனும். கெட்டுப்போன மீன் கறியிலிருந்து நல்ல மீன்களை பிரித்தெடுக்கவேண்டும். ஆனால் மனிதம் வேறு. மாறக்கூடிய மனதை வாய்ப்பை நேரத்தை இறைவன் கொடுத்தருக்கிறார். நாம் கடினமனதோடு பிடுங்கிவிட பிரித்துவிட விரும்புகிறமோ ? அல்லது கனிவான அணுகுமுறையில் பொறுமையோடு நன்மையை நாடுகிறோமா?

இன்றைய முதல் வாசகத்தில் யாவே இறைவன் கடினமனதோடு அல்ல கனிவான அணுகுமுறையால் திரும்ப வாருங்கள் என் அழைக்கின்றார். ஞானநூலின் ஆசீரியர் அலெக்சாந்தியாவில் உ;ள எகிப்பதிலுள்லோருக்கு எழுதுகிறார். கிரேக்க மொழியில் கனிவோடு அணுகுகிறார். சட்டங்களை பின்பற்றி மக்கள் யூதமதக்கோட்பாடுகளிலிருந்து விலகி அப்பொழுதைய கிரேக்க ஹெலனீச தத்துவ கொள்கைகளால் கலாச்சாரங்களால் கவரப்பட்டு பொய் கடவுள்களை தேடிக்கொண்ட தருணத்தில் உங்கள் யாவே இறைவனின் ஆற்றலே சக்தியே பலமே கனிவோடு அணுகுவது உங்களில் நன்மையையே நாடும் அவரிடம் திரும்பி வாருங்கள் என அழைக்கின்றார்.

நற்செய்தியில் இறையரசைபற்றிய இறையரசின் மக்களை பற்றிய ஏழு உவமைகளுள் போன்ற வாரத்தின் தொடர்ச்சியாக இன்று மூன்று உவமைகள் கூறியிருப்பின் ஒன்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். ஏன் மத்தேயு நற்செய்தியாளர் இயேசு களைகளை பிடுங்கவேண்டாம் தொந்தரவு செய்யவேண்டாம் பறிக்கவேண்டாம் பிரிக்கவேண்டாம் என்று சொல்வதாக எடுத்துரைக்கிறார். பரிசேயர்கள் தலைமை குருக்கள் மதத்தலைவர்கள் இவர்களால் சமூகத்திலிருந்து தீமைகள் தீட்டு என வெட்டிவிடப்பட்டு தனித்துவிடப்பட்ட சமாரியர் – வரிதண்டுவோர் இவர்களிடம் இயேசு ஒன்றாகஇணைவதை பாவியோடு உண்பதை கண்டு இயேசு அப்பொழுது தீமையை அனுப்பினாரா தீமையை விரும்புகிறாரா? என்பதற்கு மத்தேயு நற்செய்தியாளர் எங்கள் இறைமகன் தீமையை ஒருகாலும் விரும்பவில்லை நன்மைகளுக்கு மத்தியில் தீமையை கடின மனத்தோடு தீர்ப்பிடாமல் அனுமதிக்கிறார் கனிவான பொறுமையான அணுகுமுறையோடு நன்மைளோடு இணைந்த தீமைகள் மாறும் இல்லையென்றால் அதுவாக மடிந்துவிடும் நன்மையை நோக்கியே உன் எண்ணம் அணுகுமுறை இருக்கட்டும் என்கிறார்.

சண்டைபோடும் இந்த இரண்டுபேரையும் கோயிலைவிட்டு வெளியே அனுப்புங்க வெளியே தூக்கி எறிங்க என்று எல்லோரும் கத்தினார்கள். இது 1770-ல் இத்தாலியிலுள்ள ஒரு ஆலயத்தில் நற்கருணை ஆராதனைக்காக தயாரிப்பாக எல்லோரும் காத்திருக்க வாசல்ல பவனியிலே இருந்த டெல்லா கங்கா மற்றும் பிரான்சஸ்கோ என்ற இரண்டு பீடச்சிறுவர்களுக்கு சண்டை யார் பீடத்தில் குருவானவர் பக்கம் இருக்க என்பதில் . சண்டை மும்முரமாகி கையில இருந்த கேண்டில் தாங்கும் கருவியால் பிரான்சஸ்கோ மற்றவனை தாக்கி தலையில் இரத்தம் கொட்ட அப்பொழுது சொன்னதே அவர்களை தூக்கி எறியுங்கள் என்பதே. மக்கள் வெளியே அனுப்பினாலும் ஒரு குருவானவரின் இயேசுவின் கனிவான அணுகுமுறையினால் அவர் அவர்களில் நல்லதையே பார்த்ததினால் 1825-ல் பிரான்சஸ்குவே பன்னிரெண்டாம் லியோ என்ற திருத்தந்தையாகவும் இவர் மறைவுக்குப்பின் டெல்லா கங்கா எட்டாம் பத்திநாதராகவும் திருச்சபையை வழிநடத்தினார்கள்.

உரோமை7:19….இறைவார்த்தைகள் பவுல் எவ்வாறு நன்மையை செய்ய விரும்பியும் தீமை சுற்றி வளைக்கிறது என்று பகிர்கிறார். உரோமை12:21 இதில் தனது அனுபவ வரிகளாக தீமைகள் வெல்வது நன்மைத்தனமே என வெளிப்படுத்துகிறார். யூதாசை அனுமதித்தார் தீய எண்ணம் உள்ளவன் என தெரிந்தும் காரணம் மற்றவர்களோடு சேர்ந்து மாறுவான் என்றே. மாறாதவன் மடிவான் அதுவே அடையாளம் தெரியமால் தீமை அழியும் என்பது முற்றிலும் உண்மையே. தீமைகளுக்கு மத்தியிலே வாழந்ததாலும் கடைசி நன்மைத்தனமான என்னை நினைவுகூறும் என்ற நல்ல கள்வனின் மாற்றம் விண்ணவாழ்வை தந்தது.

திருவிழா வருகிறது. அதுசரியில்லை இதுசரியில்லை என்ற களைகள் பக்கம் நம் கடின மனதை திருப்பாமல் நான் என்ன நன்மைத்தனத்தை செய்யலாம் என் அணுகுமுறையை எப்படி கனிவான அணுகுமுறையாக மாற்றலாம் என சிந்தித்து பற்றிக்கொள்வோம்-ஆமென்.