இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுகாலத்தின் பதினைந்தாம் ஞாயிறு

என் மனம்…..முட்புதரா! பாறையா! பாழானபாதையா!

எசா:55-10-11 உரோ8:18-23 மத்13:1-23



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதிரியரே மற்றும் இளையோரே அனைவரையும் வணக்கங்களுடன் இன்றைய ஞாயிறு திருவிருந்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். இப்புதிய வாரத்தை நமக்கு தந்திருக்கும் இறைவனுக்கும் இவ்வாரத்தில் அவர் நமக்கு தரவிருக்கும் அனைத்து ஆசீருக்காகவும் முழுமனதோடு போற்றுவோம் புகழுவோம் நன்றிகூறுவோம். இன்றைய ஒன்றிப்பு நமக்கு பரந்த மனங்களை திறந்த மனத்தோடு நற்செய்திகளை அடையாளம் கண்டு ஏற்றுக்கொள்ளும் மனங்களாக வாழ்ந்து சாட்சிபகர அருள்வேண்டி இறைப்பலியில் இணைவோம்.

வறட்சி மற்றும் போதுமான மழையின்மையினால் வருமானத்திற்கு பெற்ற கடனால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையின்மையினால் எண்ணற்ற விவசாயிகள் இறந்திருக்கின்றனர். வெறுப்போடு தங்கள் உயிரை முடித்துகொண்டது அனைவருக்கும் அறிந்ததே. இவைகளுக்கு காரணம்: விவசாயிகள் புரிந்துகொள்ளபடவில்லையா? இறைவன் அமைதியாகயிருந்து போதுமான மழைதராமல் ஏமாற்றி விட்டாரா? நம் அரசாங்கம் கொடுக்கவேண்டிய கடனை மற்றும் வறட்சி நிவாரணத்தை மான்யத்தை அரசு தர தவறிவிட்டதா? சோனரா64 மற்றும்; ஜ.ஆர்8 என்ற இருவகை தானியங்களின் பலனை அறிஞர்கள் உணர்த்தியபிறகே 1960களில் நிலத்தை திறந்த மனதோடு அணுகி பஞ்சத்தில் போராடி வெளியே வர முடிந்தது.

இவைகள் ஒருபக்கம் கண்டுகொள்ள அரசின் காரணமாகயிருந்தாலும் இறைவன் அமைதியாகயில்லை பேசிக்கொண்டேதான் இருக்கிறார். அவர் வார்த்தை என்றும் உயிருள்ளது ஆற்றல் மிக்கது. நம் மனங்கள்தான் வார்த்தையை பெற்றுக்ககொள்ள மறுத்து போயிருக்கின்றது. எவ்வாறு நிலம் விதையை ஏற்றுக்கொள்வது முக்கியமோ அதுபோல விதையாகிய இறைவார்த்தையை எவ்வாறு நம் நிலங்களாகிய மனங்கள் ஏற்றுக்கொள்கின்றன சந்திக்கின்றன என்பதை சிந்திக்க நம்மை இன்றைய இறைவார்த்தைகள் நம்மை அழைக்கின்றன. என் மனம் எந்ந பாதை? எந்த நிலம்?

பலதரப்பட்ட மக்கள் இயேசுவை அணுகிவர படகில் செபிக்கசெல்லும் தன்னை அவர்களே தேடிவரும்பொழுது அவர்களின் மனங்களை சோதித்து அறிந்து மாற்றிக்கொள்ள அழைக்கின்றார் இயேசு. மற்றும் இயேசுவின் சீடர்கள் பரிசேய தலைமைக்குரு குழுக்கள் எதிர்த்து அவரின் நற்செய்தியை மறுத்தபோது அவர் தொழுகைகூடத்தில் மறுக்கப்பட்டபொழுது எவ்வாறு இவரின் இறை செய்தி எடுபடும் என்று குழம்பியிருந்ததருணத்தில் இயேசு இவ்வாறு கூறுகிறார்.

கவலைவேண்டாம் என்வார்த்தை என்றும் இருக்கும் அதுவிதையை போன்றது என்கிறார். அங்கிருக்கும் பாலஸ்தீன விவசாய அனுபவத்தை அன்றாட உழைப்பை உதாரணமாக உவமையாக எடுத்துச்சொல்கிறார். விதையில் என்றும் உயிர் சக்தி பலன் இருக்கிறது ஆனால் அந்த சக்தியான விதையை ஏற்றுக்கொள்ளாத நிலங்களை பல மனங்களுக்கு ஒப்பிடுகிறார். நாமெல்லாம் நிலங்களை உழுதுவிட்டுதான் பின் விதைப்போம் பாலஸ்தீன மக்கள் உழுவதற்கு முன் விதைப்பார்கள். என அவர் பின்வரும் மனங்களாக பார்க்கிறார்.

அலட்சிய வழியோர மனம்: கண்டும் காணாது எதுவும் நல்லது நடக்காது என முடிவுசெய்த மனம். ஏனோதானோ என்ற பத்தோடு ஒன்றாக நாமும் வாழ்வோம் என்ற அலட்சிய மனம். இங்கு அக்கறையில்லா கவனம்இல்லா மருத்துபோன மனத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் பறவைகளுக்கு இறையாகிவிடுகிறது அதாவது இறைவார்த்தைக்கு அவரின் மருத்த மனநிலைகள் தயாராகஇல்லை.

மறுக்கின்ற கடின கல்லான பாறைமனம்: பல்வேறு ஏமாற்றங்களை தோல்விகளை சந்தித்து கடினமாகிப்போன பாறையான மனம் என்னசெய்யும்? எதுவும் என் ஏமாற்றத்தை மாற்றமுடியாது என் வாழ்வுக்கு எதுவும் பதில்தர உதவ முடியாது என் அறிவை திறமையை பயன்படுத்தி நான் என்னை கவனித்துக்கொள்கின்றேன் என்ற கடின கல்லான மனம் இறைவனின் குரலை வார்த்தையை மறுக்கின்ற நிலம்.

கறையாகிப்போன முட்புதர் மனம்: இன்றைய ஊடகங்களின் விமர்சனங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அடிமையாகி கறையாகிப்போன மனம் முட்புதர் மனம். விளமபரங்கள் அறிமுகத்தை கண்டு மயங்கி தினமும் புதிய கம்பெனிகளின் சிம் வாங்கினால் ஒருவரின் வாழ்வு எவ்வாறு இருக்கும். பலபேரின் சொல் சுற்றியிருப்போரின் ஊடகங்களின் கவர்ச்சி அழைப்பு இவைகளையே ஏற்று கறையாகிப்போன முள்ளான மனம் தூரத்திலிருந்து கவர்ச்சியாக இருந்தாலும் அருகே சென்றால் குத்துகின்ற மனம்

வெளிப்டையான ஏற்றுக்கொள்ளும் நிலமான மனம்: யார் எது சொல்லியிருந்தாலும் நம்மை சுற்றி பல விளம்பர விமர்சன அழைப்புகள் இருந்தாலும் என் மனம் வெளிப்படையானது பரந்தது என்ற மனம் இறைநற்செய்தியை ஏற்று பலன் பெறுகின்ற மற்றவர்களுக்கும் பலன்கொடுக்கின்ற மனங்களே ஆகும் என்கிறார்.

இன்றைய முதல் வாசகம் நம்மனங்கள் தான் ஆராயப்படவேண்டும் காரணம் இஸ்ராயேல் மக்களின் மனமும் இவ்வாறு ஏற்றுக்கொள்ள தயங்கி பாறையாக முடபுதராக பாதையோராமான மனங்களாகயிருந்தன. பாபிலோனிய அடிமைத்தனத்திலிருநு;து விடுவிக்கபட்டவுடன் எருசலேம் செல்லவிரும்பாது இறைவன் எங்களோடு பேசவில்லை அமைதியில் எங்கள் கண்ணீரை கேட்கவோ ஆதரவு தரவோகிடையாது. இத்தகைய மனங்களுக்கு அவர் எந்நாளும் பேசிக்கொண்டேயிருக்கிறார் அது பனித்துளிபோன்ற மழைத்துளி போன்றது அதிலே சக்தி உயிர் எந்நாளும் இருக்கும் இது உருவாக்கும் சக்திபெற்றது.அதன் பலனை செய்யாமல் திரும்பாது. உலகை உருவாக்கியது இறைவார்த்தை மீட்பை பெற்றுதந்தது இறைவார்த்தை என்ற உயிருள்ள விதையை ஏற்றுக்கொள்ளும் மனங்களாக அணுக காண விதைக்கப்பட அழைக்கின்றார் ஏசாய இறைவாக்கினர்.

நம்மனங்கள் எவ்வாறு இருக்கின்றன, அணுகுகின்றன? சிறையில் ஆயுள் கைதியான பலர் விவிலியத்தை படிக்கத்தொடங்கி தங்களின் பாறையான முட்புதர்போன்ற மனங்களை நல்ல நிலம்போன்ற மனங்களாக மாற்றி படித்து உள்வாங்கி பலன்பெற்றதுண்டு.

நம் மனம் உயிருள்ள இறைவார்த்தை ஏற்று பிறருக்கும் உயிரோட்டம் கொடுக்கும் நற்செய்திகளாவோம்-ஆமென்.