இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








புதுவருட திருவிருந்து கொண்டாட்டம்-

புதிய பூமியில்….புனித அன்னை வழியிலே!

எண்:;6:22-27, கலா4:4-7, லூக்2:16-21.



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே குழுமி குடும்பங்களாக சகோதரங்களாக வந்திருக்கும் அனைவருக்கும் உதித்திருக்கும் புத்தாண்டின் மனம் நிரம்பிய இனிய புதுவருட வாழ்த்துக்கள் .2017-ல்உங்கள் கனவுகள் – விருப்பங்கள் – எண்ணங்கள்- முயற்சிகள் ஆகிய அனைத்தையும் இறைவன் ஆசீர் அளித்து அவருக்குரிய தருணங்களில் நிறைவுறச்செய்வாராக. துவங்கியிருக்கும் புதிய வருடத்தையும் அவரில் அவர்ப்பணிப்போம்.

ஏமாத்திட்டாங்க ஏமாத்திட்டாங்க ஜய்யய்யோ ஏமாத்திட்டாங்கன்னு ஒருத்தன் இன்று மாலையிலிருந்து புலம்பிட்டிருந்தான். பத்திரிகைகாரங்க தொலைக்காட்சி ரிப்போர்ட்டர்ஸ் அவரை அணுகி ஏன் இந்த ஆதங்கம் புலம்பல் கதறல் யார் உங்களை ஏமாத்திட்டாங்க? என்ற கேள்விக்கு அவர் சொன்னது:

பணமில்லா புதிய உலகம் என்று நான் சம்பாதித்த பணத்தை நான் தொடமுடியாது ஒரு சின்ன கார்ட்ல காண்பிச்சு அரசு ஏமாத்துத்து…

ஒமியோபதிலே நோய் பூரணமாய் குணமாகும் புதிய வாழ்வு என்று நாட்டு வைத்தியர் ஏமாத்துறார்.

எளிதான பயணம் விரைவான பயணம் சொகுசான பயணம் குறைவான கட்டணத்தில புதிய அனுபவம்னு விமானத்தை காட்றானுங்க ஆனால் எத்தனை ப்ளைட்டு காணாமப்போயிடுச்சுன்னு மறைச்சுறான்கா விஞ்ஞானம் ஏமாத்துத்து

வெள்ளம் வரும் காப்பாத்துவோம் இந்தமுறை காப்பாற்றிக்கொள்வோம்னு போட் பொருள் உணவு வசதி ஆள் பாதுகாப்பு முதல்உதவி வசதி ஏற்பாடு என்று தயாராக வருமா வராதான்னு பாத்துக்கிட்டு இருந்தா

வர்தான்னு பேய்காற்றா வந்து வேரோடு பல ஆண்டு பயன்தந்த நிழல் தந்த வரலாற்றை எடுத்துட்டு போயிடுச்சே இயற்கையே ஏமாத்திடுச்சு தேவன் கொடுப்பார் தேவன் அள்ளிகொடுப்பார் புதிய பாதையை கொடுப்பார்ன்னு சொல்லாறாங்க ஆனால் எப்பொழுது எந்தவருடம்னு சொல்லாமலேயே ஆன்மிகவாதிகள் ஏமாத்துறாங்க.

ஆக புதிய பாதை புதிய பூமி புதிய வாழ்வு கிடையாது எல்லாம் பழசு கண்ணா பழசு 2016-ல் ஒரு எண்ணுமாறி 2017-ஆகும் ஆனால் ஒன்னும் மாறாது ஹாப்பி நியூஇயர் கிடையாது நம்மை ஆட்டிபடைக்கும் மற்றொரு வருடம் தான் 2017 என்றார்.

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே நம்மிடமும் இதே மனநிலையும் எண்ணமும் ஒடலாம். உண்மைதான்

சிரியாவில் தொடர்ந்து கிறிஸ்தவ தடயம் அழிக்கப்படுகின்றது அருட்தந்தை டாம் அவர்களின்நிலை யாருக்கும் தெரியவில்லை. காணாமற்போன விமானங்களும்உண்டு கடலில் விழுந்த விமானங்களும் உண்டு விபத்துக்குள்ளாகி உறவுகளை பலியாக்கிய பயணங்களும் உண்டு. நம்ம சென்னையிலிருந்து அந்தமானுக்கு சென்ற விமானத்தின் மாயம் மறைவு இன்னும் புதிரே. சுவாதி-ராம்குமார் மற்றும் விஷ்ணுபிரியாவினால் வாழ்ந்தது உயர்ந்தது ஊடகங்களே நவீன மருத்துவம் கைதேர்ந்த நீதிபதிகள் இருந்தும் இளைய உள்ளங்கள் பலியாக்கப்படுகின்றார்களே புதுவாழ்வு புதுபாதை அவர்களுக்கு இல்லையா?

பிரிமுள்ளவர்களே புதியபூமி கனவல்ல கற்பனை அல்ல நிஜம் உண்மை. பாவங்கள்-தீமைகள்-கொடிய நோய்கள் மனிதத்தின் உடன் பயணாளி அன்று இருந்தது இன்று இருக்கிறது என்றும் இருக்கும் காரணம் மனித ஆராய்ச்சியின் ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் ஒரு அழிவு உண்டு நம்மை காப்பற்ற பாதுகாக்க கொடுக்கப்படும் ஒவ்வொரு மருந்திலும் ஒரு சைடுஎப்பைட்-பக்கவிளைவு(அழிவு) உண்டு. மனிதம் குறையுள்ளது தெய்வம் நிறைவே உருவானது.

தீமைகள்-பாவங்கள்-துன்பநோய்கள் மனிதத்தை அழிக்கவில்லை 2017வரை அழைத்துவந்திருக்கின்றது. வர்தா புயல் பேய்காற்று பல நிழல்தரும் 25வருட மரத்தை எடுத்துக்கொண்டது வீழ்த்திவிட்டது ஆனால் நம் அந்தோணியார் ஆலயம் நம் இல்லங்கள் நம் வாழ்வு நம் காமராஜபுரம் நிமிர்ந்துநிற்கிறது வீழ்த்தப்படவில்லை இறைவன் வீழ்த்தபடவிடவில்லை. விழுந்தவைகளை வீழ்த்தப்பட்டவைகளை பார்க்காமல் நிமிர்ந்துநிற்பவைகளில் புதிய எண்ணங்களால் புதிய பூமியை காண இன்றைய இறைவார்த்தைகளால் அழைக்கப்படுகிறோம்.

எந்த ஒரு இழப்பு அழிவுகளுக்கு மத்தியிலும் உன்னை நிமிர்த்தக்கூடியது இறைவனின் ஆசீர்மட்டுமே என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துச்சொல்லி நினைவுபடுத்துகிறது. அழைத்த நான் என் உரிமைப்பிள்ளைகளாக உங்களை தெரிந்தெடுத்தநான் உங்களோடு இருந்து ஆசீர் தருவேன் என்றவரை இஸ்ராயேல் மக்கள் உடன்படிக்கை பேழையில் உடன் இருக்கும் பிரசன்னமாக எடுத்துச்சென்றனர்.

ஆசீர் அவர்கள் வாழ்வின் ஆணிவேராய் அமைந்தது-புதிய ஆரம்பங்ளுக்கு அவர்களை வழிநடத்தியது . இன்றை வாசகவரிகள் மற்றொருபுதிய அத்தியாயத்தை சொல்கிறது. எகிப்தை அதன் அடிமைவாழ்விலிருந்து கானான்நோக்கிய உரிமைவாழ்வின் பயணத்தில் பாதிவழியில் மோசே அவரின் எல்லையை உணர்ந்து தொடர்ந்து யாவேயின் ஆசீரோடு நிமிர்ந்து நடக்க லேவிய பலிசெலுத்தி ஆசீர்பெற்றுதரும் குருகுலத்திலிருந்து ஆரோனை நியமிக்கின்றார். இரவில் நீங்கள் உடன்படிக்கைபேழையை தனித்து வைக்கும் கூடாரத்தில் மட்டுமல்ல அவர் ஆசீர் உங்கள் அருகாமையில் உள்ளது. இதோ ஆரோன் அபிராகாமின்-யாக்கோபின்-ஈசாக்கின் ஆசீரையும் பணியையும் பெற்று உங்களுக்கு என்றும் உங்கள் வாழ்வை நிமிரச்செய்து புதிய பூமியாக்குவாராக.

நீ இந்த ஆசீரை அவர்கள் மீது கரம்விரித்து கொடுக்க இறைவன் முகத்தின்வெளிச்சம்பு இருளை நீக்கி அருளையும்-அவர்முகத்தின் பிரசன்னம் போராட்டத்தில் அமைதியையும் என்றும் தீகைளில் பாதுகாப்பையும் தருவதாக என்ற செய்தி இன்றும் நாம்பெறும் முதல் ஆசீர் புதிய ஆசீராக புதிய பூமியின் ஆசீராக நமக்கு அமைவதாக. பெரியவர்களிடம் இதே உணர்வோடு ஆசீர் பெறுவோம்.

இந்த ஆசீருக்கு உயரிய முறையான எடுத்துக்காட்டு மரியாள். நற்செய்தியில் மரியா அனைத்தையும் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தாள் என படித்து அறிகின்றோம். சோதனைகள்-எதிர்ப்புகள்-மறுப்புகள்-வியப்புகள் அனைத்தையும் நம்அன்னை மறவாமல் எதுவும் தன்னை கீழே வீழத்தாவண்ணம் நிமிர்ந்துநிற்கின்றால் இறைஆசீரோடு புதிய பூமியின் பலவித புதிய ஆரம்பங்களுக்கு அடிக்கல் ஆகின்றார். ஆம் உம்விருப்பம் என்பது உலக மீட்பின் மீட்பரின் துவக்கம்.- எலிசபெத்தை காணச்சென்று நீயும் உன் உதரமும் அந்த சிசுவும் ஆசீர் பெற்றதே என்ற ஆசீரின் உறுதியும் புதிய ஆரம்பமே. சத்திரத்தில் இடமில்லா நடுத்தெருவில் சரித்திரத்தில் இடம்பெறுவது ஒரு ஆசீரும் துவக்கமுமே. பாலனை ஏரோதுவிடமிருந்து பாதுகாக்க எகிப்தை நோக்கிய பயணம்-பின் திரும்பவருதல் என்பதெல்லாம் புது ஆரம்பங்கள் புதிய பூமியின் பயணத்திலே கல்வாரிவரை நிமிர்ந்து நின்று பயணம் செய்யவைத்தது எலிசபெத்மாளின் வார்த்தைகளான இறைவனின் தாய் என்னிடம் வர என்பது இறைமீட்பரை தாங்கியவள்

ஆசீரான அருளான அவர் தங்க புனித அன்னை உடன்படிக்கையின் முழுமையை மீட்பரின் முழுஆசீரை சுமந்தவள். இறைவனே என் எண்ணமாகி வாழ்ந்ததாள் அவர் உயர்த்தப்படுகின்றார் இறையவின் அன்னையாக . அர்ச்சிஷ்டமரியே இறைவனின் தாயே என்ற பயன்பாடு இயேசுவின் தெய்வீக மனித தன்மையை ஏற்றுக்கொள்ளமறுத்த தருணத்திலே கி.பி 431-451-ல் சால்சடேன் எபேசு சங்கங்களில் அதிகாரபூர்வமாக கோட்பாடாக அறிவிக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் முதல் நூற்றாண்டில் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அழிவுகளுக்கு மத்தியில் புதிய பூமிகளை காண அவர்களை நிமிர்ந்து நிற்கவைத்தது ஒன்று நற்கருணையில் ஒன்றிப்பு மற்றொன்று அன்னை மரியாளின் உருவப்படமிருந்த பீடம்.

17வயதில் நோபல்பரிசு வென்ற ஒரே மாணவி முதல் இளம் மாணவி மலாலா யூசாபி. அவர்பரிசு பெற்று பேசும்பெழுது சொன்னது “ என் சிறகுகளை வெட்டிவிடாமல் உரிமையோடு பறக்க தைரியத்தை பொருளாதார சக்தியைப்பெற்றுதந்த என்பெற்றோருக்கு என்மனதார நன்றிகள். பெண் அடிமையல்ல என உலகிலுள்ள அனைத்துப்பெண்பிள்ளைகளின் படிப்புக்கும் தொடர்ந்து குரல் தரும் மலாலா நம் புதிய பூமியின் புதிய அத்தியாயமே.

கடந்த வருடத்தில் தமிழகத்தை நிமிரச்செய்தவர் 21வயதான மாரியப்பன் தங்கவேலு. ரியோ சிறப்பு ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் போலந்து மற்றும் சீன போட்டியாளர்களை கடந்து தங்கம்வென்றார். 4வயதில் பள்ளிசெல்லும் பாதையில் பேருந்து விபத்தில் தன் ஒருகால் முழங்காலை வரை பலியானபோதும் தன்தந்தை உதறிசென்றபொழுதும் 100ரூபாய் அன்றாட வருமானத்தில் தன்னோடு நான்கு பிள்ளைகளை தாய் தாங்கியபொழுதும் புதியபூமியை கண்டார் நிமிர்ந்துநின்றதால் ஆசீரை கண்டதால். பி.பி.ஏ முடித்து தொடர்பயிற்சியால் உலகஅளவில் தன்னைஅல்ல தமிழகத்தை அல்ல விழுந்திருக்கும் ஒவ்வொருவரையும் நிமிர்த்துவைத்திருக்கிறர் மாரியப்பன் தங்கவேலு.

முடியாதன்னு சொல்லாதிங்க. புதிய ஜியோசிம்முக்கு ஆமாம் சொல்றிங்க…புதிய ஆடையை தேடி தேடி வாங்கிறிங்க…. புதிய நவீன ஸ்டைல ப்பாளோபண்ண விரும்பிறிங்க வாட்ஸ்அப் ட்விட்டர் பேஜ்புக்குன்னு புதுசா பிக்அப்பண்றிங்க..நீங்க விரும்புற நடிகரின் புதிய படத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறிங்க உங்ககிட்ட உங்களை சுத்தி புதியதை ஏன் மறைக்கிறிங்க..

திருவெளிப்பாடு அதிகாரங்கள்-பிரிவுகள் 21-22 சொல்லும் பதிய விண்ணகம் புதிய மண்ணகம் புதிய பூமியை ஆசீரின் பூமியை நிமிர்ந்து பார்க்க விடுக்கப்படும் அழைப்பே ஆகும். உரோமை பேரரசன் தொமீசியன் கிறிஸ்தவர்களை அழிக்க கொடிய துன்பங்களுக்குள்ளாகியபொழுது தீமை பாவம் நோய்கள் இருக்கும் ஆனால் ஆசீரை நிமிர்ந்து கண்டுபெற்றுகொள்பவர்கள் புதியபூமியை இங்கே உருவாக்குவார்கள் என்கிறார்.

நான் தேடிக்கொள்வது எது இருளா…வெளிச்சமா? மணலா…பாறையா? பிரிவா…பாலமா? பாவமா…பகிர்வா? சண்டைகளா…சகோதரமா? தாக்கமா….ஆக்கமா? புதிய ஆசீர்-புதிய 2017-புதிய எண்ணத்தை உயர்வான பார்வையை தரட்டும். புனித அன்னையை நாடுவோம் இப்புதிய பூமியிலே.

கெப்ளர் என்ற விண்கலம் கதிரவனுக்கு அருகாமையில் இங்கிருந்து (60லட்சம்கோடி மைல் 1ஒளிஆண்டு) 1200ஒளிஆண்டு தொலைவில் மனிதம் வாழசாத்தியமாகும் ஒருபூமி புதியபூமி இருப்பதாக படம் அனுப்பியுள்ளது. அங்கும் பாவம்-தீமை நோய்கள் இருக்கும். ஆக நாம் இருக்கும் இடத்திலே நம் புதிய எண்ணம்…புதிய ஆசீரை காணசெய்து..நம்மை நிமிரவைத்து புதிய பூமியில் புனித அன்னை பாதையில் நடக்கச்செய்யட்டும்-ஆமென்..