இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தூய ஆவி பெருவிழா

பகுதிநேர கிறிஸ்தவர்களா! ....... முழுநேர கிறிஸ்தவர்களா!

தி.ப2:1-11
1கொரி12:3-7, 12-13
யோவா20:19-23



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சிறார்களே இளையஉள்ளங்களே சகோதர சகோதிரியரே நாம் என்றும் விசுவாசத்தின் மக்கள் - அன்பின் மக்கள் மற்றும் அமைதியின் மக்கள் என்பதை நினைவுகூர்ந்து கொண்டாட இன்றைய தூய ஆவியின் பெருவிழா நமக்கு அழைப்புவிடுக்கிறது. என்றும் இந்த உணர்வோடு நாம் செயல்பட்டு வாழும்பொழுது என்றும் திருச்சபையில் பிரசன்னமாகி செயலாற்றும் தூயஆவியானவர் நம்மிலுமிருக்க நாம் அவரால் செயலாக்கப்படுகிறோம் என்பது உறுதியான உண்மையாகும். இந்த உறுதிபாட்டை இன்றைய திருவிழா திருவிருந்தில் நாம் புதுப்பித்துக்கொள்வோம்.

சிறுவன் ஒருவன் கோயில் வளாகத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அதைக்கண்ட பங்குபணியாளர் அவனை அவரருகில் அழைத்து சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு கோயிலுள்ளே செல்ல அழைத்தார். அவனோ சைக்கிளை வெளியே வைத்தால் யாரவாது எடுத்துசென்றுவிடுவார்கள் என காரணம்சொல்லி உள்ளேவர தவிர்த்தான். பங்குபணியாளரோ தூய ஆவியானவர் உன்சைக்கிளை பார்த்துகொள்வார் நீ உள்ளே வா என அழைத்துசென்று சிலுவைஅடையாளம் வரைய கற்றுக்கொடுத்தார் பின் அவனை செய்யசொன்னார் அவனோ தந்தை மகன் பெயராலே –ஆமென் என்றான். பங்கு பணியாளர் ஏன்தூய ஆவியைவிட்டுவிட்டாய் என வினவ சிறுவனோ உடனடியாக சொன்னான். அவர்தான் வெளியே என் சைக்கிளை பார்த்துக்கொள்கிறாரே நான் ஏன் அவரைஅழைக்கவேண்டும் என்றான். தூய ஆவி எங்கும் எப்பொழுதும் திருச்சபையில் உலகில் பிரசன்னமாகயிருக்கிறார். எவ்வாறு ஏன் எப்பொழுதும் பிரசன்னமாகி செயலாற்றுகிறார்? நம்முடைய விசுவாசத்தை நாம் எப்பொழுது வெளிப்படுத்துகிறோம்? நம்முடைய கிறிஸ்தவ அழைப்பை நாம் எப்பொழுது கொண்டாடுகிறோம்? நாம் இறைபிரசன்னத்தை எப்பொழுது நாடி செல்கிறோம்? ஞாயிறு திருப்பலியில் மட்டுமா! அருட்சாதனங்களை பெற்றுக்பொள்ளும்பொழுது மட்டுமா! கிறிஸ்துமஸ் - உயிர்ப்பு மற்றும் பங்குதிருவிழா தருணங்களில் மட்டுமா! அல்லது அன்றாடம் அனுதினவாழ்வில் நாம் வெளிப்படுத்தி வாழ்கிறோமா!.

பெந்தகோஸ்தே தூயஆவியின் விழாவுக்கு தயாரிப்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த வார புதன்கிழமை பொதுசந்திப்பின்பொழுது சொன்னது: பகுதிநேர கிறிஸ்தவர்களாக குறிப்பிட்ட தருணங்களில் மட்டும் செயல்படவேண்டாம் மாறாக முழுநேர கிறிஸ்தவர்களாக அனைத்துதருணங்களிலும் கிறிஸ்தவஅழைப்பை வாழ்ந்துவெளிப்படுத்தவேண்டும் எனஅழைப்புவிடுத்து முழுநேரகிறிஸ்தவர்களாக செயல்படும்பொழுது என்றும் எப்பொழுதும் பிரசன்னமாகிசெயலாற்றும் தூயஆவி உங்களிலிருந்து செயலாற்றி உங்களை இயக்குகிறார் மாறாக பகுதிநேர கிறிஸ்தவர்களாக வாழும்பொழுது நாம் கடமைக்காக செயல்படுகிறோம் தூய ஆவியை நம்மில்செயல்பட நாம்விரும்பவில்லை என்றார்.

இன்றைய திருப்பலி இறைவார்த்கைள் எப்பொழுதும் பிரசன்னமாகயிருக்கும் தூயஆவியின் பெந்தகோஸ்தே திருவிழா மீட்பின்வரலாற்றில் எவ்வாறு கொண்டாடபட்டது பின் இயேசுவின் விண்ணேற்புக்குபின் திருத்தூதர்களின் வழியாக எவ்வாறு புதுஅர்த்தம் பெற்று புதுவடிவம் பெற்றது என்பதையும் எடுத்துச்சொல்கின்றன. பெந்தகோஸ்தே என்றால் ஜம்பது எனபொருளாகும். இதுஜம்பதாவது நாளைநினைவுகூர்ந்துகொண்டாடப்பட்டது. துவக்கத்தில் பாஸ்கா திருவிழாவிற்கு பின்வரும் ஜம்பதாம்நாளில் அறுவடையின் நன்றியின் நாளாக பெந்தகோஸ்தே எனஅழைக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. இதுகோதுமையின் நாள் எனவும் அழைக்கப்ட்டது. எருசலேமில் அனைவரும் கூடி புதிய அறுவடையின் பலன்களை காணிக்கைசெலுத்தி இறைவன்உடனிருப்புக்காக நன்றிசெலுத்தினர். இதன்தொடர்ச்சியாக இது புதுஅர்த்தம்பெற்று நோவா வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்ட ஜம்பதாவது நாளை இதேநாளில் பெந்தகோஸ்தே எனகொண்டாடினர். சிறிது காலம் கடந்து மற்றொரு அர்த்தம் கொடுக்கப்பட்டது. இஸ்ராயேல் மக்களின் எகிப்திய அடிமைத்தன விடுதலைக்குபிறகு ஜம்பதாவது நாளில் தாங்கள் காணாது பின்பற்றிய கடவுள் கட்டளைகளில் மோசேவெளியாக வெளிப்டுத்தியதை பெந்தகோஸ்தே அல்லது உடன்படிக்கையின் விழாஎன கொண்டாடினர். இதுவரை யூத இஸ்ராயேல் மக்கள் தங்கள் அனுபவம் தங்களோடு கட்டளைகளில் பேசும் இறைவன் எனகொண்டாடி வெளிப்படுத்தினர். ஆனால் பலமுறை கட்டளைகளிலிருந்து தவறி போலிகடவுள்கள் பக்கம் சென்றனர். திருத்தூதர்கள் உயிர்த்தஇயேசுவின் அனுபவம்பெற்றபொழுது விண்ணகம்செல்வதற்குமுன் இயேசு நான் தந்தையிடம் செல்கிறேன் தூயஆவியாம் துணையாளர் உங்களோடு என்றும் எப்பொழுதும் இருப்பார் தூயஆவியின் பிரசன்னமே என்பிரசன்னம் இறைதந்தையின் பிரசன்னம் என்பதை ஜம்பதாவது நாளில் அனுபவித்து கொண்டாடியதையே இன்று நாம் கொண்டாடுகிறோம் இது அனைத்து மக்களையும் உள்ளடக்கியதிருவிழாவாகும். தந்தையின் வலப்பக்கம் அமர்ந்திருக்கிறார் என்ற நம் விசுவாசவெளிப்பாடு எருசலேம் - பாலஸ்தீன மற்றும் கலிலேயா பகுதிகளில் மட்டும் பிரசன்னமாகயிருந்தஇயேசு விண்ணிலிருந்து உலகனைத்து விசுவாசமக்களுக்கு தூய ஆவியின்வழியாக பிரசன்னமாகயிருக்கிறார். தூயஆவியின் பிரசன்னம் - இறைதந்தையின் இறைமகன் இயேசுவின் பிரசன்னமே ஆகும் என்பதைநமக்கு தெளிவுபடுத்துகின்றன. திருப்பலியில் அர்ச்சிப்பு செபத்தின்பொழுது பின்வரும் வார்த்தைகளில் தூயஆவி அப்ப இரச காணிக்கைகளை இயேசுவின் திருஉடலாக திருஇரத்தமாக மாற்றுவாராக எனசெபிக்கும்பொழுது தூய ஆவியின் பிரசன்னமே இயேசுவின் பிரசன்னத்தை நம் மத்தியில் கொண்டுவருகிறது என்பது தெளிவாகிறது.

பார்க்க இயலாத தூய ஆவியானவரை நாம் அனுபவத்தினால் உணரமுடியும் விவிலியத்தில் பேரிரைச்சலான காற்று - மூச்சு மற்றும் நெருப்புபிழம்பு இவைகள் தூய ஆவியின் பிரசன்ன வெளிப்பாட்டு அடையாளங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. இவைமூன்றும் பழைய ஏற்பாட்டு புத்தங்களில் இறைபிரசன்னமாக இறைவனி;ன் அபரிதசக்தியாக இஸ்ராயேல் மக்கள் மேலும்தலைவர்கள் இறைவாக்கினர்கள் அனுபவித்ததை நாம் அறிவோம். ஆக தூயஆவியின் பிரசன்னம் அபரிதசக்திநிரம்பிய இறைவனின் பிரசன்னமே ஆகும். மேலும் கூடியிருந்த அனைத்துநாட்டினரும் அவரவர்கள் மொழியில் கேட்டது பெந்தகோஸ்தே ஜம்பதாம் நாள் திருவிழாவிற்காக எருசலேம் வந்திருந்த அனைத்து தரப்பு மக்களுக்கும் தூயஆவியின் இறைவன் சொந்தமாவார் ஒருகுறிப்பிட்ட இனத்திற்குமட்டுமல்ல என்ற பாடமாகும்.

கடந்த வாரம் உலக கத்தோலிக்க திருச்சபையின் இந்த ஆண்டு கணக்கெடுப்பு திருத்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுவாக 1.9 சதவீதம் இறைமக்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் பொதுநிலையினரின் நிரந்தர திருத்தொண்டர்களின் எண்ணிக்கை அதிகஅளவில் உயர்ந்திருக்கிறது. ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் குருக்கள் துறவியர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. என்றும் எங்கும் விசுவாசிகளின் கூட்டத்தில் பிரசன்னமாகியிருக்கும் தூயஆவியால் நாமும் இயக்கப்படுவோம் என்றும் முழுநேர கிறிஸ்தவர்களாக செயல்படுவோம். திருச்சபை என்றும் உயிரோட்டமுள்ள இளமையான – துடிப்பான – முன்னேற்றமான திருச்சபையாக செயல்படும் காரணம் பிரசனன்மாகி செயலாக்குவது தூய ஆவியானவரே-ஆமென்.