இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தவக்காலம் வாரம் 3

சொந்தமாக்குவோம்... இறைவனின் செய்கைகளை...!!!

வி.ப3:1-8, 13-15
1கொரி 10:1-6, 10-12
லூக் 13:1-9



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே உலக மற்றும் திருச்சபை வரலாற்றில் புதிய மாற்றமிகு நிகழ்வின் தருணத்தில் நாம் சாட்சிபகர்ந்துகொண்டிருக்கிறோம் .சமூகமாகவோ அல்லது குடும்பமாகவோ நம் எண்ணங்களும் செபங்களும் இறைவனை நோக்கி அமைத்து அவரே தூய ஆவியின் உடனிருப்பை கூடியிருக்கும் கர்தினால்மார்களுக்கு மத்தியில் அமைத்து பேதுருவின் புதிய வாரிசை புதிய திருத்தந்தையை தொடரும் பயணிக்கும் திருச்சபைக்கு தந்தருள்வாராக.

தவக்காலத்தின் முதல் ஞாயிறில் இறைவனின் நினைவுகளை நம்மில் பதிவு செய்ய அழைக்கப்பட்டோம் - கடந்தவாரம் இறைவனின் பயணங்களை பின்தொடர உணர்த்தப்பட்டோம். இச்சிறப்பு தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருவழிபாட்டில் இறைவனின் செய்கைகளை நமதாக்கிகொள்ள நம் சொந்தமாக்கிகொள்ள நமக்கு சவால்விடப்படுகிறது. முழுமனதோடு இணைவோம்.

இறைவனின் சிறப்பான செயல் எது? படைப்புகள் அனைத்தையும் சொல்லால் உருவாக்கிய இறைவாக்கிய இறைவன் மனிதத்தை செய்கையோடு தன்மூச்சாக தன்அன்பாக தன் சாயலாக உருவாக்கியதே இறைவனின் சிறப்பான செயல் என பதில் சொல்லப்பட்டது.
இறைவனின் எதிர்பாராத செயல் எது? செயலால் உயிரோட்டம் கொடுத்த இறைவன் அந்த மனிதத்தில் ஆசை உணர்வுகளையும் அதைநிறைவேற்றிக்கொள்ள சுதந்திர எண்ணங்களையும் கொடுத்ததே எதிர்பாராதது காரணம் அதுவே வீழ்ச்சிக்கு பாவச்செயல்களுக்கு காரணமாகிறது. இந்த பதில்களை தொடர்ந்து. மேலும் பல்வேறு கேள்விகள் இறைவனின் செயல்களைநோக்கி வெளிப்படுத்தப்பட்டது.
சுனாமியினால் அப்பாவி மக்கள் கோரமாக பலியாகியபொழுது பலர் அனைத்தையும் இழந்து பரிதவித்தபொழுது இறைவன் ஏன் அமைதியாகயிருந்தார்? அவர் செயல்பாடு எங்கே? வளர்ந்து உயர்ந்து வாழவேண்டிய இளம்பெண்கள் பலியாக்கப்படும்பொழுது அயோக்கியர்களின் ஆசிட் தாக்குதலினால் வாழ்வை இழக்கும்பொழுது இறைவன் ஏன் தடுத்து செயல்படவில்லை? பல்வேறு நகரங்கள் நடுத்தட்டு மக்கள் தீவிரவாததாக்குதல்களுக்கு இரையாகும்பொழுது இறைவன் எங்கே காணாமற்போனார்? அங்கே அவர் ஏன் செயல்படவில்லை? எய்டஸ் மற்றும் கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய்கள் மனிதத்தை அச்சுறுத்த இறைவன் எங்கே செயல்படாமல் போனார்? நன்மைகளை செயல்படுத்தும் இறைவன் தீமைகளையும் செயல்படுத்துகிறாரா? அல்லது தீமைகள் அவரின் செயல்பாடுகளை கடந்தவையா?

நம் இறைவனின் செய்கைகள் தொடாந்துயிருக்கும் இறைவனின் செயல்பாடுகள் நன்மைகளையே நம்மில் ஏற்படுத்துகின்றன. அவரின் செயல்பாடுகளை நமதாக்க நாம் ஓத்துழைக்க மறுக்கும்பொழுது தீமையின் சக்திகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. இன்றைய முதல் வாசகத்தில் மோசேயின் முதல் சக்திவாய்ந்த இறைஅனுபவத்தை நாம் கேட்கின்றோம். இறைவனின் செய்கைகள் தெளிவாகதெரிகின்றன. செயல்படும் இறைவனாக மோசேயிக்கு தன்னை வெளிக்காட்டுகிறார். எரியும் முட்புதர் அங்குசெயல்பாட்டிற்கு அடையாளம் காய்ந்த மடிந்த செத்துபோன முட்புதர் அல்ல எனவே இறைவன் செயல்படுபவர்.

ஏன் மக்களின் துன்பத்தை நான் கண்களால் கண்டேன். அவர்கள் குரலை கேட்டேன். அவர்களின் துயரங்களை நான் அறிவேன். அவர்களை அடிமைநிலையிலிருந்து விடுவிக்க முழுமையின் நாட்டிற்கு நடத்திச்செல்ல நான் எனக்காக செயல்பட உன்னை அழைக்கின்றேன் என்பது. விடுவிக்கவிரும்புவது – நடத்திச்செல்வது செயல்படும் விடுதலையின் இறைவனை நமக்கு எடுத்துரைக்கிறது.

நான் அபிராமின் கடவுள் - ஈசாக்கின் கடவுள் - யாக்கோபின் கடவுள் எனச்சொல்லுவதன் வழியாக இறைவன் தொடக்கத்தில் பிரசன்னமாகயிருந்து இப்பொழுதும் பிரசன்னமாகயிருந்து மேலும் எதிர்காலத்தில் என்றும் பிரசன்னமாயிருந்து செயல்படும் கடவுள் என்பதை நிரூபிக்கிறார்.

மோசேயின் கேள்விக்கு இறைவன் "நாமே இருக்கிறவர்" என்றபதில் நாமே செயல்படுபவர் என்றென்றும் நிறுத்தாமல் செயல்பட்டுக்கொண்டேயிருப்பவர் என்பதே ஆகும்.
ஆக செயல்படும் இறைவன் இறைவனி;ன பல்வேறு செய்கைகள் அவரிலே தன்னிச்கையாக இயற்கையாக உறையும் இருக்கும் ஒன்றாகும். இதுவே அவரின் விருப்பமும் குறிக்கோளும் ஆகும். மீட்பின் வரலாற்றில் அழைத்த மக்களை காப்பாற்றும் மற்றும் விடுவிக்கும் இறைவனின் செயல்கள் இதையே குறித்துகாட்டுகின்றன.

லூக்கா நற்செய்தியாளர் இயேசுவின் இரண்டு உதாரண படிப்பினைகளை நம்முன் இன்றைய நற்செய்தியில் வைக்கிறார். முதலாவது பிலாத்து எருசலேம் ஆலயத்து காணிக்கை மற்றும் வருமானத்தை எருசலேம் நகர வசதிக்காக பயன்படுத்தியபொழுது அதற்கு மறுப்பு எதிர்ப்பு தெரிவித்த கலிலேயர்கள் பலரைகொன்று சமாரியர்களோடு அவர்களையும் எருசலேமில் பலிசெலுத்த வழிபட தடைவிதித்தான். இத்தருணத்தில் சீலோம் கோபுரத்தில் பணியாற்றிய பன்னிரெண்டு கலிலேயர்கள் தவறிவிழுந்து இறக்கின்றனர். இதை மக்கள் இறைவனின் தண்டனை எனச்கூற இத்தருணத்தில் இயேசு பிலாத்துவினுடைய கருத்துகளை ஏற்று அல்ல என் அழைப்பை இறைத்தந்தையின் கருத்துகளை ஏற்று செயல்படுங்கள் என அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இரண்டாவது அத்திமரம் கனிகொடுக்கும் வரை வாய்ப்புகொடுக்க காலம்சிறிது தாழ்த்தலாம் ஆனால் கனி பலன் கொடுக்கவேண்டும். செயல்படவேண்டும் இல்லையென்றால் அழிந்துபோகும் எனக்கூறுவதன் வழியாக செயல்படமறுக்கும் வாழ்வு செத்துபோனதற்கு சமம் என சவால் விடுகிறார். தோட்டம் - மரம் மற்றும் சூழ்நிலை இறைவனின் செயல்கள். இவ்வாறு செயல்படுகின்ற இறைவன் அவரின் செயல்பாடுகளை நமதாக்க ஒத்துழைக்க அழைக்கின்றார். எப்பொழுதும் செயல்படுகின்ற இறைவனுக்கு அவர் செயல்பாடுகளுக்கு நம்மை ஈடுபடுத்திக்கொள்வது ஒத்துழைப்பதே கனிதருவதாகும்.

ஓய்வுபெற்ற திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தன்னுடைய இறுதி பொதுசந்திப்பு உரையின்பொழுது சொன்னது திருச்சபை ஒரு உயிருள்ள வாழும் உடல். இது அன்று புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த சமூகத்தில் உறுதியாகிறது. வாழும் திருச்சபை என்றும்; பிரசன்னமாகயிருக்கும் இறைவனின் மனிதஅவதாரத்திற்கு சான்று ஆகும் என்றார். அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் நான் இறைவனின் கரங்களில் உள்ள ஒரு பென்சில் இறைவனே செயல்பட்டு அதன்மூலம் அன்பு கடிதத்தை எழுதுகிறார் என்றார்

படைப்பில் செயலாற்றிய இறைவன் - இஸ்ராயேல் மக்களை விடுவிப்பதில் செயலாற்றிய இறைவன் - உடன்படிக்கைசெய்து செயல்பட்ட இறைவன். போதித்து குணப்படுத்தி செயல்பட்ட இயேசு வரலாற்றில் - திருச்சபையில் நம்மில் என்றும் இன்றும் செயல்படுகிறார். செயல்படும் இறைவனின் செய்கைகளை நமதாக்குவோம் நம்சொந்தமாக்குவோம்-ஆமென். -ஆமென்.