இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு

குகையில் ஓதுங்காதே… வெளியே வா…!

1அர19:9 11-13; உரோ9:1-5; மத் 14:22-33



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நாம் இறைபிரசன்னத்தில் மீண்டும் ஒரு புதிய வாரத்தை புதிய பயணத்தை துவங்க ஒன்றாகவந்துள்ளோம். நம்முடைய சமூக - குடும்ப சமாதான மற்றும் சந்தோச வாழ்வு இறைவழிபாடுகளில் நம் ஈடுபாட்டை பங்கேற்பை பொறுத்துஅமைகிறது. இந்த பங்கேற்பிற்கு நம் இறையனுபவம் அத்தியாவசமானது. இறைவன் அனைத்து அருள்அடையாளங்களிலும் சமூகஒன்றிப்பிலும் அவரை வெளிப்படுத்துகிறார் இறைவன் வெளிப்பாடு தொடர்பிரசன்னமாக எத்தருணமும் நிகழ்கிறது. நம்முடைய எதிர்பார்ப்புகள் மற்றும் பல்வேறு முன்சார்பு எண்ணங்கள் இவ்வெளிப்hட்டடினை இறைபிரசன்னத்தை காணதடுக்கிறது. செபத்தின் முழுமை மற்றும் மையம் நற்கருணைஆகும். இன்றைய நற்கருணைவிருந்து சதாராணவகையில் அனுதின எதார்த்தங்களில் வெளிப்படுத்தும் இறைவனை பற்றிக்கொள்ள அழைத்துச்செல்லட்டும்.

பயமும் பீதியும் எப்பொழுது உன்னைப்பற்றிகொள்கிறது? அத்தருணங்களில் உன் சிந்தனையும் செயலும் என்னவாகயிருக்கும் என்றகேள்விக்கு பின்வரும் பதில்கள் வந்தன.
இடி மின்னலுடன் அதிக மழைபெய்யும்பொழுது என்னை பயமும் பீதியும் பற்றிக்கொள்ளும் அப்பொழுது நான் வீட்டைவிட்டே வரமாட்டேன் எனஜெசி கூறினார். செவிலியர் பணிசெய்யும் மேரி என்பவர் என்பொறுப்பிள்ள நோயாளி மருந்துகளை மறுக்கும்பொழுது அல்லது நம்பிக்கைஇழக்கும்பொழுது என்னை பயமும் பீதியும் தொற்றிக்கொள்ளும் அபபொழுது நான் கம்யூட்டரில் குகூலில் ஏதையாவது ஆராய்ச்சிசெய்ய துவங்கிவிடுவேன் என்றார். என்னுடைய நோயைப்பற்றி பிறர்கேட்கும்பொழுது என்னை பயமும் பீதியும் ஆட்கொள்ளும் உடனே நான் தனியாக நேரம்பார்க்காமல் அதிகதூரம் நடப்பேன் என்றார் ஜான். அருள் என்ற சிறுபையன் சொன்னான் அவனுக்கு பீதிஏற்படும் பொழுது வீடியோ கேம் விளையாடுவேன் என்றான். அரசியல்வாதி சொன்னது கூட்டதிலே பேசதயாரித்து வந்த காகிதம் காணமாற்போகி என்னபேசவேண்டுமென்பது தெரியவில்லையெனில் பயத்தோடு பீதியோடு மக்கள் கைதட்டும்வரை பேசுவேன் என்றார். நாம் ஒவ்வொருவரும் தேடிக்கொள்ளும் குகைகள் பலஉண்டு.

இந்தகுகைகளில் நாம் தற்கால தஞ்சம் மற்றும் அடைக்கலம் புகுவது அந்த பயம் பீதியிலிருந்து நம்மைதப்பித்துக்கொள்வதற்காக. இதுஒரு தொடர் பழக்கமாகயிருந்துவிட்டால் நம்மை சோதனைசெய்துபார்க்கவேண்டும். உடல்நலக்குறைபாடு - உணர்வுசம்பந்தப்பட்ட மனஅழுத்தங்கள் - உறவின் பிரச்சினைகள் - பொருளாதாரபோராட்டங்கள் நம்முடைய பயங்களுக்கும் நம் குகை தஞ்சங்களுக்கும் காரணமாக அமையலாம். குகையிலிருந்து நாம்வெளியேவராமல் அற்புதவிதமாக மிக புதுமையானவகையில் இறைவன்அனைத்து சக்திகளையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம். இத்தகயை வெற்று எதிர்பார்ப்புகளால் குகையைச்சுற்றி இருளை ஏற்படுத்திவாழ்கிறோம்.இன்றைய இறைவார்த்தைகள் வெளியே வா எதார்த்த அனுபவங்களில் என்னை கண்டுபற்றிக்கொள் என இறைவனின் அழைப்பை உணரஅழைக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தின் நாயகர் எலியா இறைவாக்கினர் ஆவார். கி.மு 922-ல் சாலமோன் அரசரின் மறைவிற்குபிறகு இஸ்ராயேல் மக்கள் வடநாட்டு இஸ்ராயேல் என யூதாவைவிட்டு பிரிந்து எருசலேம் ஆலயத்தைமறுத்து – மதபழக்கங்களை புறக்கணித்து – குருக்களின் பணியை வேண்டாம் என பிரிந்த அரசாக வாழ்ந்தனர். சமாரியாவை தலைநகராககொண்ட அவர்கள் ஆகாப்அரசனின் பாதையில் பால் சிலைவழிபாடுகளில் ஈடுபடதுவங்கினர். ஆகாப் புறச்சமய ஈசபெல் என்பவரை மணக்க அவளோ 500 புதிய குருக்களை அவர்களுடைய சிலைதெய்வங்களுக்கு பலிசெலுத்த ஏற்படுத்தினாள். இவ்வரலாற்று தருணத்தில்தான் எலியா இறைவாக்கினர் நம்முடைய இறைவார்த்தைபகுதிக்கு முன்புள்ள 18ம் அதிகாரத்தில் பிரிந்துசென்ற மக்களை யாவேஇறைவனிடம் திரும்பவாருங்கள் அவரே உண்மையான கடவுள் எனஅழைக்கிறார். பின்பு ஈசபெலின் சவாலை ஏற்று கார்மேல் மலையில் ஏற்பட்ட பலப்பரீட்சையில் யாவேஇறைவனே உண்மைபலியை ஏற்றுக்கொண்ட உண்மைஇறைவன் என நிரூபிக்க ஈசபெல் கோபத்தோடு ஏற்படுத்திய 500 குருக்களையும் கொல்லஉத்தரவிட்டு இவைகளுக்குகாரணமான எலியாவையும் கொல்ல ஆணைபிறப்பிக்க அதற்காக பயந்து பீதியடைந்து நாற்பது நாள் நடந்து ஓரேப்மலையில் பயந்துஒளிந்து தஞ்சம் புகுந்த நிகழ்வே நம்இறைவார்த்தைபகுதி ஆகும்.

எலியா மனஅழுத்தத்தோடு - கலக்கத்தோடு – ஏமாற்றத்தோடு – கைவிடப்பட்ட தனிமைஉணர்வோடு – உயிர்பயத்தோடு – பீதிநிரம்பியநிலையில் இறைவா இதற்காகவா என்னைஅழைத்தாய்? மக்களை உம்மிடம் திரும்பிவரத்தானே சவால் விடுத்தேன். பொய்வழிபாட்டைதானே எதிர்த்தேன் ஏன் இந்த கொலைதாக்குதல் நீர் எங்கே? என்ற பல்வேறு கேள்விகளோடு நிரம்பிய பயத்தோடு இருண்டகுகையில் இறைவன் அற்புதவிதமாக சக்திஅனைத்தையும்சேர்த்து எதிரிகளை வீழ்த்துவார் என எண்ணிணார் எலியா. பயங்கர பேரிரைச்சலான காற்றுஅடித்தது இதில் அவர்களை இறைவன் அழப்பார் என எண்ணிணார். அனைத்தும் ஓய்ந்தது ஒன்றும் நடக்கவில்லை. அடுத்து பெரிய நிலநடுக்கமும் தொடர்ந்து நெருப்பும் தோன்றியது. இது எதிர்ப்புகளை எதிர்ப்போரை முழுங்கிவிடும் என்ற எதிர்பாhப்பும் தரைமட்டமாயின. இறுதியாக வீசும் மெல்லியகாற்று ஓசையில் இறைவன் தோன்றி மறைத்துகொண்டார். எலியா எளிய எதார்த்த நிகழ்வுகளில் இறைவனை தேட பயக்குகையிலிருந்து வெளியே வந்துஇறைவனைப்பற்றிகொள்ள விருப்பம்கொண்டார்.

நற்செய்தியில் நம் நாயகர் பேதுரு எலியாவைப்போன்று அதிசய மிகஅற்பதவகையில் சக்தியுள்ளவராக தோன்றுவார். கொந்தளிக்கும் கடல்துயரங்களிலிருந்து விடுவிப்பார் எனஎதிர்பார்த்தார். இயேசு கையை நீட்டி பற்றிக்கொள் பீதியிலிருந்து துணிவைப்பெற்றுக்கொள் என அழைக்கிறார். மத்தேயு அந்நிகழ்வை செய்தியை எதிர்ப்பை அனுபவித்து மதகலாபனையில் பலர்கொல்லப்பட மற்றவர்கள் பீதியுடன்யிருக்க இந்நற்செய்தியை இறைஇயேசுவின் உடனிருப்பை உறுதிசெய்கிறார். பீதியை அகற்றி விசுவாச துணிவைபற்றிகொள்ளுங்கள் என்கிறார்.

எலியா மற்றும் பேதுரு இருவரையும் பயமும் பீதியும் தொற்றிகொண்டது. இருவரிடையே எதிர்பார்ப்பு இயற்கைக்கு அப்பாற்றபட்ட எதிர்பார்ப்பு. இருவரும் இருளில் இருக்கிறார்கள். எலியா குகையில் இருளில் ஓளிந்திருக்கிறார். அதிகாலையில் மெல்லியகாற்று ஓசைக்கு வெளியேவா என்அழைக்கப்படுகிறார். பேதுரு மற்ற திருத்தூதர்களுடன் இரவுமுழுவதும் செலவழிக்க பயமும் பீதியும் இருளில் தொற்றிக்கொள்ள அதிகாலையின் இயேசு நடந்து படகில்ஏறி துணிவோடிரு என்றுவெளிப்படுத்துகிறார்.

பயமும் பீதியும் நம்மை இருளில் குகையில் இருத்திவிடுகின்றன. இது தொடர்ந்து நம்மைப்பற்றிய தாழ்வுமனப்பான்மையில் தள்ளுகிறது. மேலும் நம்மை வலுவின்மையுள்ளவர்களாகசெய்து இறுதியில் நான் எதற்கும் பயனற்றவள் பயனற்றவள் என்ற மனஅழுத்திற்கு தள்ளிவிடும். குகையிலிருந்து வெளியேவருவோம் துணிவோடு செயல்படுவோம்.

எப்பொழுதெல்லாம் நான் பீதிஅடைகின்றேன்?
மனஅழுத்ததின்பொழுத நான் எங்கே செல்கின்றேன்?
எந்தகைய இருளில் என்னை இணைத்துக்கொள்கின்றேன்?
நான் பயந்து ஓளியும் குகை எது?
நான் தற்காலிக தஞ்சம்தேடும் குகையிலிருந்து வெளியேவர தயாரா?
எங்கும் எப்படியும் பிரசன்னமாகயிருக்கும் இறைவனின் துணிவைபற்றிகொள்ள தயாரா?
சுவிட்ஸ்சாலாந்து உளவியலார் காரல்யூங் தன்னுடைய அலுவலக அறை கதவில் பலர்படிக்க இந்தவார்த்தைகளை வடித்துவைத்திருந்தார். “இறைவன் என்றும் பிரசன்னமாகயிருக்கிறார்” உன் அழைப்பை எதிர்பார்ப்பதுகிடையாது”.

ஜெர்மனில் பணயக்கைதிகளாக அடிமைகளாக கொடூரமாக நடத்ப்பட்டு பலியாக்கப்பட வரலாற்றுசோகத்திற்கு மத்தியில் எவ்வாறு இவர்களை அங்கு அந்தஇருட்டு அறையில் பயத்தில் பீதியில் வாழவைத்தது என்று ஆராய்ந்தபொழுது அதிகமாக குழந்தைகள் சிறார்கள் இருந்த பணயக்கைதி அடிமைகளுக்கான சிறையில் பின்வரும் வார்த்தைகள் அவர்களால் எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது இதுதான் அவர்களை துணிவோடுவாழ்வைத்தது. “கதிரன் உதயமாகி பிரகாசிக்கவில்லை என்றாலும் நான் கதிரவனை நம்புகிறேன். நான் அன்பை உணரவில்லை என்றாலும் அன்பு உண்டு தேவை என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன். இறைவன் பேசாமல் அமைதியாகயிருந்தாலும் இறைவன் இருக்கிறார் என்பதை நம்புகிறேன்” என்பதே ஆகும். துணிவோடு அவரைப்பற்றிகொள்ள நம்குகைகளிலிருந்துவெளியே வருவோம்-ஆமென்.