இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

அழைப்பு: ஒர் ஆழமான ஆம்...அன்றாட ஆம்...!!!

எசாயா 6: 1-8, 1
கொரி 15: 1-11
லூக்கா5: 1-11



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர, சகோதிரியரே

கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதரஇ சகோதிரியரே ஒவ்வொரு நற்கருணை பங்கேற்பு பகிர்வும் மற்றும் கொண்டாட்டமும் நம்மில் இருக்கும் இறைஅழைப்பை புதுப்பித்து நமக்கு ஞாபகப்படுத்தி நம்மை உறுதிப்படுகின்ற தருணங்கள் ஆகும். இயேசுவின் சீடர்களாக – அவர் நற்செய்தியின் பணியாளர்களாக – அவர் உயிர்ப்புக்கு சாட்சிகளாக நம்மை அன்றாடம் அழைக்கின்றார். இன்று நாம் பாடும் அல்லேலூயா கீதத்தில் நம்மை ஈடுபடுத்தி இந்த அன்றாட அழைப்புக்காக இணைந்து முழங்குவோம் இந்த நன்றி மகிழ்ச்சி உற்சாக முழக்கம் நம்மை அடுத்த நாற்பது நாட்களுக்கு தயார்படுத்தட்டும்.

அழைப்புக்கும் பிழைப்புக்கும் என்ன வித்தியாசம் எனக்கேட்டபொழுது சேவியர் சொன்ன பதில் நீர் பறவையில் குருவானவர் பணிசெய்வதை ஒர் அழைப்பாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடல் திரைப்படத்தில் குருவானவர் பணியை ஒர் பிழைப்பாக தொடக்கத்தில் காண்பித்திருக்கிறார்கள். ஆக இது ஒரு குழப்பத்தையே உருவாக்குகிறது என்றான்.

ஆம் அழைப்பும் பிழைப்பும் ஒரு பணியை பொறுப்பை அணுகுகின்ற முறையிலேதான் அமைகின்றது. ஒரு டிரைவராகயிருக்கலாம் - ஒரு ஆசீரியாராக இருக்கலாம் - ஒரு அன்றாட தொழிலாளியாகயிருக்கலாம் - கட்டட நிபுணராகவோ அல்லது தொழிலாளியாகவோயிருக்கலாம். அனைத்தும் தன் சுயநலத்துகாக மட்டும் தன் குடும்பத்துக்காக மட்டும் செய்தால் அது ஒரு வெறும் பிழைப்பு ஆகும் தன் பிழைப்புகாக செயல்படுவது. ஆனால் இவைகளை மகிழ்ச்சியாக பிறரோடு இணைந்து இறைவனின் கொடை மற்றும் இறைவனின் மகிமைக்காக எனசெயல்படும்பொழுது அது நமக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு என நாம் சாட்சிபகர்கின்றோம். பிழைப்பு நாம் தேடிபோவது. அழைப்பு நம்மை தேடிவருவது ஆகும்.

இயேசு ஏன் அன்று மதப்படிப்பிணைகள் தெரிந்த சதுசேயர்களையோ – சட்டம் படித்த நிபுணர்களையோ – பொதுவாழ்வில் செல்வம் நிரம்பியவர்களையோ அவரின் பணிக்காக உலகுக்காக தெரிந்தெடுக்கவில்லை. கடல் வாழ்வை மட்டுமே அறிந்த அவர்களை ஏன் தன் சீடர்களாக திருத்தூதர்களாக தெரிந்தெடுத்தார்? இயேசுவுக்கு மட்டுமே தெரியும் உண்மையான காரணம் ஆனால் அவர் தன் திருத்தூதர்களோடு பயணித்து போதித்து செயலாற்றியதிலிருந்து நமக்கு புலனாவது அழைப்புக்கு ஆழமான மற்றும் அன்றாட ஆம் தேவை என்று.

கெனசேரத்து ஏரிபகுதி மற்றும் திபேரியா கடற்பகுதி என அழைக்கப்படுவதே கலிலேயா கடலாகும். இதைச்சுற்றியிருந்த பத்து நகரப்பகுதிகளுக்கு இது ஒரு ஆசிராக கொடையாக அமைந்திருந்தது. தண்ணீர்வளமும் மேலும் அதிகமான மீன்பாடுகளுக்கு இது பெயர்போனதாக அமைந்திருந்தது. இயேசுவின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கு கலிலேயா கடற்பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகஅமைந்திருக்கின்றது. இரவுவேளையில் தான் மீன்பிடிக்கச் செல்வார்கள் - விடியும் வரை போராடுவார்கள். கடலின் ஆழம் அவர்களுக்கு தெரியும் கடலின் கடுமையான காற்றில் தீடீர் புயல் காற்றில் போராடவும் தயங்கமாட்டார்கள் கடல் அவர்களி;ன் இல்லம் எனலாம். இரவெல்லாம் முயற்சித்தோம் ஒன்றுமில்லையே எங்களுக்கு தெரியாத எனநினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இயேசு:ஆழமான இடத்தில் வலையை போடுங்கள் என்கிறார். உங்களின் ஆழமான அர்ப்பணம் என்பணிக்கு தேவை என உறுதிப்படுத்துகிறார். இது என்ன நேர்ந்தாலும் இறைவனையும் அவர் நாமத்தையும் நம்புவதே என்பதாகும். ஆம் எங்கள் விசுவாசம் நம்பிக்கை அர்ப்பணம் கடலின் ஆழம்போன்றதே என செயல்பட இறைவன் கொடையாக அள்ளிக் கொடுக்கின்றார் அபரிவிதமாக மீன்பாட்டைகொடுக்கின்றார். ஆழமான ஆம் அர்ப்பணம் நிரம்பிய ஆசீரைபெற்றுதரும். இரவு சோர்வைகடந்து ஆம் என்பதே அன்றாட ஆம் எந்நிலையிலும் எந்த தருணத்திலும் அவரின் பணிக்கு ஆம் என்றுசொல்லி செயல்படவேண்டும்.

நம்முடைய ஆம் ஆழமானதா! அன்றாடம் உணரக்கூடியதா! முதல் வாசகத்தில் எசயாயின் அழைப்பை இறைவன் ஞாபகப்படுத்தி புதுப்பித்து உறுதிப்படுத்துகிறார். கி.மு 8ம் நூற்றாண்டில் இஸ்ராயேல் அரசு மற்றும் யூதேயா அரசு என பிரிந்து அதன் அரசர்கள் தங்கள் பிழைப்புக்காக அந்நிய கடவுள்களை உருவாக்கி இறைவனின் இஸ்ராயேல் மக்களை அதனை வழிபட கட்டாயப்படுத்தினர் இறைவாக்கினர்களை சித்தரவதை செய்து அவமானப்படுத்தினர். இத்தகைய சூழ்நிலையில் இறைவாக்கினர்களாக அழைத்து அனுப்பபட்டவர்கள் அரசனுக்கு சவால்விடுத்து இறைவனின் மக்களை அந்நிய கடவுளிடமிருந்து விடுவித்து யாவே இறைவனைநோக்கி அழைத்துவந்தவர்கள் ஆவார். ஏசாகயாவும் அரசர்களால் துன்புறுத்தப்பட்டு இறைவனிடம் கேள்விஎழுப்புகிறார். யாவே இறைவன் இத்தருணத்தில் அவரின் அழைப்பை உறுதிப்படுத்துகிறார். ஆழமானதாக அமையட்டும் என்கிறார்.

அருட் பணியாளர்களோ துறவியர்களோ மட்டும் அழைக்கப்படவில்லை ஒரே திருச்சபையின் ஒரே உடலாக பல்வேறு உறுப்பினர்களாக நாமும் இறைவனின் ஒரே பிள்ளைகளாக நம் திருமுழுக்கு வழியாக அழைக்கப்பட்டுள்ளோம். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு ஒருசிறப்பு அழைப்பு உண்டு. அது தாயாக தந்தையாக பெற்றோர்களாகவோ – அலுவலகத்திலோ – தனியார் நிறுவனத்திலோ - ஆலய மற்றும் வழிபாட்டு அல்லது குழுக்களின் பொறுப்புகளிலோ நாம் செயலாற்றுவது இறைவன் நம்மை தேடி நமக்கு தந்த அழைப்பே ஆகும்... ஒவ்வொரு நாளும் ஆம் என சொல்லுவதும். ஆழமாக ஈடுபடுவேன் என நிரூபிப்பதும் நமது சவாலாகும்.

வேளாங்கண்ணி பேராலய பொன்விழா தருணத்தில் அங்கு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் வெள்ளிவிழா வருட நினைவு பேரவையில் இன்றைய சூழ்நிலையில் நம்பணி என்பதையே சிந்தித்து திட்டமிடுதல் நடக்கின்றது. மும்மை கர்தினால் கிராசியஸ் அவர்கள் பணியே திருச்சபையின் அடிப்படை என எடுத்துரைத்திருக்கிறார் அவரே புதிய தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாம் அiனைவரும் சொல்லும் ஆம் ஆழமானதாக அமைந்து இறையரசை திருச்சபையை உயர்த்தட்டும்.

பொறுமைக்கு ஆம் எனச்சொல்லுவோம் மன்னிப்புக்கு ஆம் எனச்சொல்லுவோம் சகிப்புக்கு ஆம் எனச்சொல்லுவோம் சமாதானத்துக்கு – ஒற்றுமைக்கு – மகிழ்ச்சிக்கு – மனிதநேயத்துகு;கு ஆம் எனச்சொல்லுவோம்.

நற்கருணை பணியாளராக செயல்பட - இறைவார்த்தையை கற்று எடுத்துரைக்க – பங்கு குழுக்களில் ஈடுபட்டு செயல்பட ஆழமான ஆம் எனச்சொல்லி செயல்படுவோம் - ஆமென்.