இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு

கெத்தாக…..நிமிர்ந்த மதிற்சுவராவோம்!...........

ஏசா2:1-6 தீத்து2:11-14 லூக்2:1-14



கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதிரியரே மற்றும் இளையோரே அனைவரையும் வணக்கங்களுடன் இன்றைய ஞாயிறு திருவிருந்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். ஒவ்வொரு வாரமும் நம்மை ஒன்றிணைத்து அழைக்கும் இறையேசுவின் நற்கருணை திருவிருந்தில் துவங்கும் இப்புதிய வாரத்தை அர்ப்பணிப்போம். வருகின்ற நாட்களில் நம் எண்ணங்கள் – திட்டங்கள் – பயணங்கள் -எதிர்நோக்குகள் - பிள்ளைகளின் படிப்பு தேர்வுகள் -உடல் நலசிகிச்சைகள் ஆகிய அனைத்தையும் திருப்பீடத்தில் அப்ப ரசத்தோடு கையளித்து இவைகளனைத்தும் மாறும் அவருடலோடு ஒன்றாகி நமக்கு வரமாகி வழிநடத்த முழுமையாக பங்கெடுத்து உறவை கொண்டாடுவோம்.

எப்படிடா நாலுமுறை பிரின்சிகிட்டே திட்டுவாங்கியும் ஒன்னுமே நடக்காதமாறி ஜாலியாயிருக்கேன்னு காலேஜ்படிக்கும் அருணிடம் அவன் தங்கை கேட்டபொழுது அருண் சொன்ன பதில் பொங்கலுக்கு வந்த கெத்து படுத்திருக்கலாம் ஆனால் நாங்க எப்பொழுதும் கெத்தா நிமிர்ந்து நிற்போமில்ல என்பதே.

இந்தியன் கிரிக்கெட்ல யார் கெத்தான ப்ளேயேர் என்ற கேள்விக்கு வாலிபன் சொன்னபதில் இப்ப இருக்கிறவங்க யாருமில்ல ஆறுதலுக்கு கடைசி ஒன்டேவை ஜெயிச்சிருக்கலாம் ஆனால் என்றைக்கும் சுவர்மாறி பிட்சில நிற்க ராகுல் டிராவிட்தான் கெத்தான ப்ளேயர் என்றான்.

கெத்து என்று வாய்சொல் வார்த்தை எந்த ஒரு இடுக்கலான போரட்டமான தருணத்திலும் கீழேவிழாமல் சோர்ந்து துவண்டுவிடாமல் நிமிர்ந்து நிற்பதை குறிக்கிறது. அதாவது எந்தவிதமாமான சோதனைகள் எதிர்ப்புகள் தாக்கினாலும் உயர்ந்து நிற்கும் சுவர்போன்று எதுவும் பாதையை முயற்சியை நிறுத்தமுடியாது பாதிக்காது என்பதே அதன் அடையாளச்சொல் எனலாம்.

ராகுல் டிராவிடைகூட கெத்தான சுவர் போன்ற ப்ளேயர் என்று சொல்ல காரணம் ஒருமுறை உலககோப்பையின்பொழுது நீங்கள் எந்த மனநிலையோடு பேட்செய்ய நுழைவீர்கள் என்ற கேள்விக்கு சொன்னபதில் எவ்வளவு அதிகமாக நான் பிட்சில தங்கமுடியுமோ அவ்வளவு அதிகமாக இருக்கணும் என்பேதே எனவே தான் சுவர் என்று அவருக்குபெயர் வந்தது.

சுவர் – மதிற்சுவர் எந்தஒரு வீட்டை – நிறுவனத்தை கட்ட துவங்கும்பொழுது அடிக்கல்லோடு மதிற்சுவரைதான் நாம் கவனித்துசெய்கின்றோம்.புதிய மனைகள்வாங்கிவைக்கும்பொழுது மதிற்சுவர் எல்லைதான் ஒருபாதுகாப்பை தருகிறது. சென்னை வெள்ளத்தில் எவ்வளவு பாதுகாப்பில்லா தற்காலிக போலியான மதிற்சுவர்கள் பலஉயிர்களை பலிவாங்கின வெள்ளத்தை காக்கமுடியாமற்போயிற்று. பழையகோட்டைகளிள் முக்கிய உறுதியானதாக விளங்குவது உயரமான பலமான உறுதுதியான மதிற்சுவர்களே ஆகும். எதிரி உள்ளே நுழையாதவாறு எதிரியின் தாக்குதல் துளைக்காதவாறு கட்டப்பட்டிருக்கும். அவ்வாறு சுவர் துளைக்கப்பட்டால் தோல்வியைநோக்கி எதிரியின் கையில் நாடே விழுகின்ற நிலைஆகும். உலகெங்கும் சிறைச்சாலைகளில் காண்பது உறுதியான உயர்வான மதிற்சுவர்களே ஆகும். குற்றவாளிகளை பல்வேறு தீமைகள் மற்றும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும் மேலும் அவர்கள் வெளியே தப்பிபோகாதவாறு பாதுகாப்பிற்காகவும் போடபட்டிருக்கும்.

இன்றைய முதல் வாசகம் இத்தகைய சுவரை நம்முன் வைக்கிறது. வீழ்ந்திருக்கின்ற சாய்ந்திருக்கின்ற எருசலேம் சுவரைகட்டி எழுப்புவோம் நம் இறைவனும் நம் வாழ்வும் அச்சுவர்போல் உயர்ந்ததாக உறுதியானதாக இனிஇருக்கும் என அம்மக்களுக்கு அழைப்பு விடப்படுவதை நாம் காண்கின்றோம். பாபிலோனை பாரசீக அரசன் சைரஸ் கைப்பற்றுகின்றான். கைப்பற்றியகையோடு பாபிலோனியருக்கு 70 ஆண்டுகள் எருசலேமை பறிகொடுத்து அடிமையாகயிருந்த இஸ்ராயேல் மக்களை விடுதலை செய்து செல்லுங்கள் உங்கள் எருசலேமுக்கு என்றபொழுது மக்களோ விழுந்திருக்கின்ற அழிந்திருக்கின்ற எங்கள் எருசலேமை காண எங்களுக்கு சக்திகிடையாது எங்களை பாதுகாத்த எருசலேம் மதிலே சிதைந்து நொறுங்கிபோயிற்று விடுதலை வீண் எங்குபோவோம் என்ற தருணத்தில் தான் மீண்டும் கட்டி எழுப்புங்கள் என அழைப்புவிடப்படுகின்றது.

ஆலயமின்றி குருக்களின்றி அரசுகளின்றி சட்டங்களின்றி இல்லாமை தங்களை சுற்றியிருப்பதை கண்டு தடுமாறி தயங்கிய மக்களுக்கு குருவாகிய எஸ்ரா மற்றும் பாரசீகரால் நியமிக்கப்பெற்ற ஆளுநராகிய நெகெமியா இருவரும் மக்களை அவர்கள் மனங்களை எண்ணங்களை ஆலயத்தை நகரை கட்டிஎழுப்புமுன் உருவாக்க இறைவனே நம்மதிற்சுவர் நிமிர்ந்துபார்ப்போம் செயல்படுவோம் என அழைக்கின்றனர். எஸ்ரா இறைஆற்றலின் அடையாளமாகிய தண்ணீர் அருகே அனைவரும் சமம் என உணர்த்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரைம் நாள்முழுவதும் இறைவார்த்தைகளை படித்து அதன் விளக்கங்களுக்கு செவிமடுக்க அழைக்கின்றார். தோரா இறைவனின் உடன்படிக்கை மற்றும் அவர் கொடுத்த வாழ்வின் கட்டளை படிப்பினைகளை நினைவுபடுத்தி புதுப்பிக்கின்றது. அவர்கள் அழுது புலம்பும்பொழுது மீண்டும் கட்டுவோம் எருசலேமை மதிற்சுவர்களை காரணம் நமக்கு விடுதலை அளித்து நம்முன் பிரசன்னமாயிருப்பவர் உயர்ந்த மதிற்சுவர் இறைவனே என உறுதியளிக்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு நான் பாதுகாப்பை – விடுதலையை – இரக்கத்தை தரும் சுவராக இணைந்திருப்பேன் எனஅறிவிப்பதை நாம் காண்கின்றோம். மக்கள் நாடுகடத்தபட்டபொழுது எருசலேம் இடிபாடுகளுக்குள்ளானபொழுது தொழுகைக்கூடமே மக்களை ஒன்றுசேர்த்தது இறைவனை இறைவார்த்தையில் அனுபவிக்கும் இடமாக கருதப்பட்டது. சிநகாக் என்றால் இணைகின்றஇடம் என்பதுபொருள். இயேசு தன்பணியை துவங்குவதற்கு முன்பாக எங்கு வளர்க்கப்பட்டாரோ எந்த தொழுகைகூடத்தில் பெற்றோரால் பலமுறை அழைத்துவரப்பட்டாரோ அங்கே தான் இறைத்தந்தையோடு இணைந்திருப்பதை தன்பிரசன்னம் அந்ததொரு இணைப்பை மதிற்சுவர்போன்ற பாதுகாப்புள்ள மீட்பை பலவைககளில் தரும் என முழக்கமிடுகிறார். ஆனால் மக்கள் அம்மதிற்சுவரை பற்ற தயாராகயில்லை. இணைய மறுக்கின்றனர். லூக்கா தன்உடனிருந்த அனுபவத்தை அழகாக நம்முன்வைக்கிறார். தெயோபிலுவே என்ற சமூகத்திற்கு இதைஉணர்த்தி இயேசுவின் மதிற்சுவர்க்குள் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள அழைப்பு விடுகிறார்.

ஜீலி என்ற இளம்பெண் பாகிஸ்தானில் தன்மதத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதற்கு எச்சரிக்கை அச்சுறுத்தல் விடப்பட்டு அவள் உறுதியாகயிருந்ததால் முகத்தில் கழுத்தில் ஆசிட் வீசப்பட்டு எந்த ஒரு மருத்துவமனையும் சிகிச்சைதர மறுக்கின்றது காரணம் அவர்கள் தாக்கப்படுவார்கள் என்பதால். முதலுதவியோடு ஆயரின் பரிந்துரையில் வேறுநாடுசென்று சிகிச்சை உதவிபெற்று பலஆண்டுகள் கழித்து விசுவாசபயிற்சிபணிக்கு தன்னை அர்பணித்துக்கொண்ட அவள் பகிர்ந்துகொண்டது. என்முகம் உருவம் வாழ்வு சிதைக்கப்பட்டது உருக்குலைந்தது மரணப்பயம் உதவியின்றி கைவிட்டபொழுது என்னைகவ்வியது. ஆனால் நான் விரும்பி பற்றிகொண்ட் இயேசுவும் அரவணைத்த விசுவாசமும் எனக்கு எதையும் எதிர்கொண்டு நிமிர்ந்துநிற்கும் மதிற்சுவராகஎன்முன் என்னை சுற்றி என் அருகாமையில் இருந்தன என பகிர்ந்து வெளிப்படுத்தினாள்.

என் வாழ்வில் எங்கே நான் விழுந்து சிதைந்து இடிந்து நிலைமாறி எருசலேம் போல் இஸ்ராயேல் மக்கள் போல் இருக்கின்றேன்? படிப்பிலா! உழைப்பிலா! பொருளாதாரத்திலா! உறவிலா! விசுவாசத்திலா! ஈடுபாடின்மையிலா!

இயேசுவும் என்விசுவாசமும் மதிற்சுவராக என்முன் என்னைச்சுற்றியிருக்க நான் எழுவேன் நிமிர்ந்துபார்ப்பேன்….. விழுந்திருக்கும் பலருக்கு இரக்கத்தின் ஆண்டில் இரக்கமிகு இறைவனின் சுவராவேன் எனமுயற்சிப்போம் காயப்பட்டிருக்கும் பலரை உயர்த்த முயற்சிப்போம் ஜீபிலி ஆண்டை தொடர்ந்து கொண்டாடுவோம்-ஆமென்.