இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு-

சிதறி…… சிதைந்திருப்போருக்கு….. நிஜமாவோம்:!!!

எரே23:1-6 எபே2:13-18 மாற்6:30-34



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவரையும் இன்றைய திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். பல்வேறு வகைகளைில் சிதைந்து பல தருணங்களில் சிதறியிருக்கும் நம் அனைவருக்கும் உயர்வையும் புதுஉருவாக்கத்தையும் தருவதே நம் நற்கருணை ஒன்றிப்பு கொண்டாட்டமாகும். நம்முடைய பல்வேறு தலைமைப்பொறுப்புகள் வழியாக பிறரின் உயர்வுக்கு அழைக்கப்படுகிறோம் என்ற தலைமைப்பண்பின் மதிப்பு நம்மில் நிலவட்டும். அனைவரும் ஆச்சரியத்து அதிசயப்படும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் சென்ற நாடுகளிலெல்லாம் சமூகத்தில் சிதறி மற்றும் சிதறிய மக்களை நேரடியாக நெருங்கி நேரம் தந்து தன் சொல்லால் செயலால் உயர்த்துகிறார். உ;ண்மையின் பாதையில் அவர்வழி தொடர வரம் கேட்போம்

. ஆசீர் பெற்ற அன்னை தெரேசா அவர்கள் தன் அனுபவத்தில் ஒன்றாக பகிர்ந்துகொள்ளும்பொழுது தான் சிறப்பு வசதிகளடன் அருமையாக இயங்கும் உடல்நலம் குன்றி மற்றும் முதியவயதில் தங்கியிருக்கும் ஒரு மருத்துவ சிகிச்சை வசதியோடு அமைந்துள்ள இல்லத்தை சந்திக்கசென்றபொழுது அங்குள்ள அனைவர் முகத்திலும் சிரிப்பும் புன்முறுவலும் இன்றியிருப்பதைகண்டு ஆச்சரியப்பட்டு தான் அவர்களை தொட்டு அவர்கள் முகத்தை கண்டு புன்புறுமவல் செய்தவுடன் அவர்களிளிலும் மகிழ்ச்சி தோன்றியது. இருந்தாலும் பலருடைய கண்கள் பார்வை கதலைநோக்கியவண்ணமாகவே இருந்தது. ஏன் இவ்வாறு அவர்கள் செயல்பட காரணம் என்று அங்கு அவர்களை கண்காணித்து உதவிசெய்வோரை கேட்டபொழுது இங்கு வெறும் பிறந்தாள் மற்றும் சிறப்புநாளுக்குமட்டும் சிலர் வந்து சந்திப்பதுஉண்டு இனிப்புகள் கொடுப்பது உண்டு மற்றநாட்களெல்லாம் தங்களை சந்திக்க யாராவது வரமாட்டார்களா என ஆயனில்லா ஆடுகளைப்போல இவர்கள் சிதைந்திருக்கின்றார்கள் என் ஆசீர்பெற்ற அன்னைதெரேசா அவர்கள் இவர்களுக்கு இத்தருணத்தில் அனைத்து கவனிப்பும் வசதிவாய்ப்பும் இருந்தும் இவர்களின் பெரிய ஏக்கம் தேவை சந்திப்பும் உடனிருப்புமே என எடுத்துரைத்தார்கள்.

நம்மத்தியில் ஆயனில்லா ஆடுகளாயிருப்பதை நாம் எங்கே காணுகிறோம்?......
மக்களின் பங்கேற்பு பங்கு வழிபாட்டு செயல்பாட்டுகளில் குறைந்திருக்கும்பொழுது……
பிள்ளைகளின் வெற்றியில் சாதனையில் பெற்றோர் பங்கெடுக்காதபொழுது……..
பாதைமாறி பலரின் பேச்சுக்கு பலியாகியிருக்கும் பொழுது………
சிறிய வயதில் படிப்பின்றி பாசமின்றி வீதிகளில் கையெந்தியிருக்கும் பொழுது……
முடிவுகள் எடுக்க தைரியமும் திடமும் தரவேண்டியெ துணையில்லாத பொழுது…..
ஆயினில்லா ஆடுகளாக சிதைந்து சிதறியிருக்கின்ற மக்களாக உள்ளங்களாக மனித காயங்களாக இவர்கள் தோன்றுகிறார்கள். இதற்கு காரணம் குடும்பமாகயிருந்தாலும் திருச்சபையாகயிருப்பினும் சமூகமாகயிருப்பினும் பலகுழுக்களாகயிருப்பினும் பொறுப்புகளிலிருப்போர் மக்களை உடைந்த உருக்குலைந்த உதாசீனமாக காயப்பட்ட தன்பொறுப்புள்ள மக்களை உள்ளங்களளை சந்திக்க எதிர்கொள்ள உடன்இருக்க நேரம்கொடுக்க முக்கியமெனகருதாது மற்றவைகளை தன் சுயநலவிருப்பங்களை தேவைகளை முதலாக முக்கியமாக மையமாகவைப்பதாலேயே. மாற்றவேண்டும் பிறரை தன்பொறுப்பிள்ள மந்தையை மக்கள் ஏக்கங்களை முதலில் முக்கிய மையபணியாக கருதவேண்டும். இன்றைய இறைவார்த்தைகள் இத்தகைய சவால்களையே நம்முன்வைக்கின்றன. பொறுப்புள்ள தலைமைப்பண்பை ஆயனுக்குள்ள பரிவிரக்க மனநிலையோடு செயல்பட நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தை புரிந்துகொள்ள அதன் வரலாற்று பிண்ணணியை புரிந்துகொள்வோம். இது அரசுகள் ஆட்சியாளார்கள்- பொய் குருக்கள் - பொய் இறைவாக்கினர்கள் மற்றும் மக்கள் பல்வேறு வகைகளில் வெவ்வேறு இடங்கள் என சிதறியிருப்பதை நாம் காண்கிறோம். சிதைந்திருப்பது என்ன? சீனாய் மலையில் உதயமான வாக்குறுதி உடன்படிக்கை உடைக்கப்பட்டு சிதைந்துகாணப்பட்டது….யாவே இறைவனின் ஆழமான அன்பு மறக்கப்பட்டு சிதைந்து மக்களின் வாழ்வு சிதைந்திருப்பதாக தோற்றமளித்தது…யார் எவ்வாறு சிதறியிருந்தார்கள்? இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் முறையான வழிகாட்டுதல் இன்றி சிதறியிருந்தார்கள். சவுல் – தாவீது – சாலமோனை அரசர்களை தொடர்ந்து வந்தவர்கள் உண்மையான ஆயனாக செயல்படவில்லை. இவர்களின் சுயநலஆட்சி வடக்கு மற்றும் தெற்கு அரசுகள் எனப்பெரிய வரலாற்றுபிரிவினைக்கு காரணமாகியது.

இவ்விரு அரசுகளும் இஸ்ராயேல் மற்றும் யூதா என மக்களை தங்கள்பக்கம் திசைதிருப்ப பொய் ஆலய குருக்களை மற்றும் பொய்இறைவாக்கினர்களை தங்களுக்குள்ளே ஏற்படுத்தி கொண்டனர். இத்தருணத்தில் இறைஇயேசுவின் பிறப்புக்கு 600 ஆண்டுகளுக்குமுன்பாக அனுப்பட்ட இறைவாக்கினர் ஏரேமியா சவால்விட்டு அரசர்களை கேள்விகேட்கின்றார் மக்கள் சார்பாக. அன்றைய தெற்கு யூதா அரசர்கள் யெகோஆகாசு – யெகோயாக்கிம் மற்றும் யெகோயாக்கின் ஆண்டன் பாதையில் தவறியிருந்தவர்கள் அவர்களின் சுயநல வசதிக்காக மக்களை அடிமைப்படுத்தி பிரிவினையைஏற்படுத்தியிருந்தனர். ஏரேமியாவின் எச்சரிக்கையை மதிக்காமல் உதறிதள்ளுகின்றனர். இது மக்கள் மத்தியில் பொருளாதார அரசியல் சமூக மற்றும் ஆன்மிக பாதிப்புகளை உருவாக்கின. இதன்தொடர்ச்சியாக பாபிலோனின் நெபுகத்நேசர் யூதாவைகைப்பற்றி செடக்கியாவை அரசராக நியமிக்கின்றார். காலப்போக்கில் 21வயதில் பதவிஏற்ற செடக்கியா எகிப்திய அரசுகளிடம் பாபிலோனிய அரசுகளைவீழ்த்தி .இஸ்ராயேலை எருசலேமை முழுமையாக கைப்பற்ற எகிப்து அரசுகளிடம் கைக்கோர்த்து உதவிகேட்டபொழுது இறைவாக்கினர் ஏரேமியாவின் கடுமையான எச்சரிககையை நெபுகத்நேசரிடம் சரணடையசொன்ன அறிவுரையை மதிக்கவில்லை. பாபிலோனிய அரசன் செடக்கியாவை சிறைபிடித்து எருசலேமைகைப்பற்றி மக்கள் தொடர்ந்து சிதறி சிதைந்துயிருந்த தருணத்தில்தான் உடைந்நிருக்கும் உங்களை உயர்த்த் நிமிர்த்த உங்களோடுயிருந்து பயணம்செய்ய சிறந்த உண்மையான ஆயன்தோன்றுவார் எந்நிலையிலும் உங்களை கலங்கவிடமாட்டார் என்ற எதிர்காலத்தை முன்வைத்து நம்பிக்கைஊட்டுகின்றார்

. மாற்கு நற்செய்தியாளர் உரோமைஅரசுகளின் பல்வேறு கொடுமை மற்றும் துன்புறுத்தல்களுக்குட்பட்ட சமயத்தில் இந்த இறைஇயேசுவின் செய்தியை திருத்தூதர்களுக்கும் தொடக்க கிறிஸ்தவ சமூகத்தின்முன் வைக்கின்றார். பணிமுடித்து பல்வேறுபட்ட அனுபவங்களோடு திரும்பிய தன்திருத்தூதர்களுக்கு நேரம்கொடுத்து உடனிருந்து எல்லாமுமாகிறார். ஆயனாக அவர்களின் புதிய தெம்பு உற்சாகம் திடன்பெறகாரணமாகிறார். குழம்பியிருந்த மக்களை புதிய இஸ்ராயேலுக்கு நற்செய்தியாளர் ஒப்பிடுகிறார் துன்புறுத்தல்கள் குழப்பங்கள் வேதனைகள் பயமுறுத்தும் அரசுகளுக்குமத்தியில் நான் ஆயனான உடனிருக்கின்றேன’ உங்களை உயர்த்துவேன் தவிக்கவேண்டாம் திடம்பெறுங்கள் என்ற இயேசுவின்பற்றை நற்செய்தியளார் எடுத்துரைக்கிறார். ஆக அன்பின் அரவணைப்புக்காக ஆறுதலுக்காக உடனிருப்புக்குகாக தவித்த திருத்தூதர்கள் மற்றும் மக்களுக்கு உண்மையான ஆயனின் கவனிப்பு உறுதியளிக்கப்படுகிறது.

உடைந்திருக்கின்ற – நோயிலிருக்கின்ற – தனித்திருக்கின்ற – பரிதவிக்கின்றவர்ளுக்கு உடனிருக்கும் ஆயனாகயிருக்க நமக்கு இன்று அழைப்புவிடப்படுகின்றது.

யாருக்கு என்உடனிருப்புதேவை?
என் பரிவிரக்க பிரசன்னம் யாருக்கு எங்கே தேவை?
என் உற்சாகம் தரும் பிரசன்னம் யாருக்கு தேவை?
என் குடும்பத்தில் காணாமற்போயிருக்கும் மகன் மகளுக்கு நான் ஆயனானா தயாரா?
என் இறைசமூகத்தில் மறக்கப்பட்டிருக்கும் சகோதர உள்ளத்திற்கு நான் ஆயனாக தயாரா?
நான் பணிபுரியும் இடத்தில் அன்பு மறுக்கப்பட்டு தனித்திருக்கும் உள்ளத்திற்கு நான் ஆயனாக தயாரா?
வருகின்ற வாரம் ஜீலை22லிருந்து ஆகஸ்டு 02வரை அறிவுசவாலான சிறப்பு பிள்ளைகளுக்கு சிறப்பு ஒலிம்பிக்போட்டியானது அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. 177 நாடுகளிலிருந்து 7000 பிள்ளைகள் பங்கெடுத்து கலந்துகொள்ளஉள்ளனர்; இந்தியாவின் 331 பிள்ளைகளில் தமிழகத்திலிருந்து 12பேர் ஆவர்.; அவர்களுக்கு பயிற்சியளிக்கும் உள்ளங்களை சந்தித்து மற்றும் 12பேரை சந்தித்து பேசியதில் விண்ணரசி என்றபெண்பிள்ளை சொன்னது நான் பலபள்ளிகளை மாற்றிகொண்டேயிருந்தேன் எனக்குள்ளிருக்கும் தருதியை உணரச்செய்யாததற்காக ஆனால் என்று இங்கு சேர்ந்தேனோ அன்றிலிருந்து ஒரு நல்ல ஆயானாக உடனிருந்து நேரம்கொடுத்து எனக்குள் ஒருதகுதியை உருவாக்கி இன்று பெரியஅளவில் போட்டியிட எனக்கு உறுதி மற்றும் திடம் தந்திருக்கிறார்கள் அவர்கள் வழிகாட்டிகள் வழிநடத்துபவர்கள் அக்கறையுள்ள ஆயன்கள் என்றார்.

நல்ல உடனிருந்து உற்சாகம் தரும் ஆயனாக நான்செயல்பட தயரா? இறைச்சாயல் என்ற தகுதியை தர தயாரா?-ஆமென்.