இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பன்னிரெண்டாம் ஞாயிறு

ஆடும் அலைகளிலே……  அமைதியகம் !!!

யோபு38:1 8-11 2கொரி5:14-17 மாற்4:35-41



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவரையும் இன்றைய திருப்பலி கொண்டாட்டத்திற்கு அன்போடு வரவேற்கின்றேன். தந்தையர்கள் தினத்தை நினைவுகூறும் இந்நாளிலே நம்மை வழிநடத்தும் நம் தந்தைமார்களை நன்றியோடு நினைத்து நற்கருணைபீடத்தில் அர்பணித்து செபிப்போம். குடும்பங்கள் ஒன்றுசேர்வதே நற்கருணை கொண்டாட்டம். நாம் பகிர்ந்துகொள்ளும் நற்கருணை இயேசு நம்மை சுற்றியுள்ள பல்வேறு அலைகளிலிருந்து நம்மை வழிநடத்தி நம்மை ஒன்றாக இணைத்து வைக்கிறார். தந்தைமார்கள் அன்பின்றி தவித்து திசைமாறியிருக்கும் அனைவரும் விண்ணகதந்தையின் செபத்தில் இறைதந்தையின் கரம்பற்றும் உணர்வை நிறைவாக பெற்று மகிழ்ந்திருப்பார்களாக.

நூடில்ஸ் தடை விளம்பரயுக்தியின் தற்காலிக அலை – கிரிக்கெட் அமைப்பு தலைமை போட்டி தோன்றி மறையும் அலை – அரசியல் கட்சிகளின் வாதங்கள் நேரத்தை கடத்தும் அலைகள் – திரையுலகில் விமர்சனங்கள் கவாச்சி அலைகள் –விலைவாசி ஏற்ற இறக்கங்கள் திசைமாற்றும் அலைகள். மேற்சொன்ன அலைகள் எதுவும் நிரந்தரமல்ல எதுவும் புதியவையல்ல ஒன்றும் மாறக்கூடியவை அல்ல. சில காலங்கள் சில வாரங்கள் ஆடி ஓயக்கூடியவைகளே இவைகள். நம் வாழ்வில் தொடாந்து ஆடும் உடல்நோய் – பொருளாதர குறைபாடு – உறவுகளில் விரிசல் – நிறைவான வேலையின்மை – பிள்ளைகளின் வளர்ச்சியில் வேதனை போன்ற தொடர்ந்து ஆடும் அலைகளிலே கதறாமால் புலம்பாமல் அமைதியகத்தை நாம் அனுபவிக்க காணமுடியும் அதையே இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துச்சொல்கின்றன

மாற்கு நற்செய்தியாளர் உரோமை அரசு வளர்ந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ சமூகத்தை துன்புறுத்திக்கொண்டிருக்கும் தருணத்தில் தன்நற்செய்தியின் பொதுவானபகுதிகளை செய்திகளாக தருகிறார். தங்கள் வாழ்வை கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தியாகபலியாக்கி சாட்சிபகர்ந்து கொண்டிருக்க மறுபுறம் இந்த அலைகழிக்கும் புயலானது பல கிறிஸ்தவ சமூகத்திடையே திருமுழுக்கு சகோதரம் விசுவாசம் போன்றவைபற்றிய சந்தேகங்களை எழுப்பி பலவேறு தயக்கங்களை அவர்கள் மத்தியில் உருவாக்கியது . இத்தருணத்தில் மாற்கு நற்செய்தியாளர் இத்தருணத்தை புயலால் சீடர்கள் அலைகழிக்கப்பட்ட நிசழ்வுக்கு ஒப்பிடுகிறார். இந்நேரத்தில் தான் இருபெரும் தூண்களான பேதுரு மற்றும் பவுல் கொல்லப்பட்டிருக்கவேண்டும். இது அவர்களில் எவ்வளவு தாக்கத்தை பாதிப்பை ஏற்படுத்தியருக்கவேண்டும் என நாம் புரிந்துகொள்ளலாம்.

ஒத்தமைவு நற்செய்திகளில் இந்நிகழ்வு குறிப்பிடப்பட்டிருப்பதால் எவ்வாறு அவர்களின் போராட்ட அலைகளில் இந்நிகழ்வைப்பற்றி வாய்மொழியாக தொடர்ந்துபேசி தங்களை உற்சாசப்படுத்தி திடப்படுத்தியிருக்கவேண்டும். கலிலேயா கடற்பகுதி கடல்மட்டத்திலிருந்து 600அடி ஆழமானது 13மைல்கள் நீளமானது இதன் பூகோள வடிவமைப்பு சுற்றுப்புறம் எத்தகைய கொடிய புயலை காற்றை எழுப்பக்கூடும் என யுகிக்க சொல்ல முடியாது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சிகளில் முன்தயாரிப்பு இருந்தும் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன.. அன்.று ஒன்றிமில்லா காலத்தில் அவர்களின் உணர்வுகளை நாம் புரிந்துகொள்ளலாம். கடலை முற்றும் அறிந்த மீன்பிடிக்கும் சீடர்கள் அலறிஅடித்து கதறுகின்றார்கள் நாங்கள் மடிகிறோம் அழிந்துபோகிறோம் மறைந்துபோகிறோம் என. நாமும் இச்சீடர்களிலே நம் மத்தயில் ஆடும் அலைகளிலே போரட்டங்களிலே மடிந்து செத்துபோகின்றேனே எனகதறுகின்றோம் கூக்குரலிடுகின்றோம்.

என் நோயில் வேதனையில் நாம் மடிகின்றேன்……..
என் கடன் தொல்லையில் நான் சாகின்றேன்…..
சந்திக்கும் தோல்விகளில் நான் செத்து போகின்றேன்….
புரிந்துகொள்ளா உறவுகளில் நான் மறுத்துபோகின்றேன்…..
மதிப்பில்லா பிள்ளைகளிலிடமிருந்து நான் மறைந்துபோகின்றேன்….
ஏமாற்றிய நட்புகளினால் நான் ஒடிந்துபோகின்றேன்…….
விசுவாசகுறைபாட்டினால் நான் தனிமையாகிப்போனேன்…….
இதுபோன்ற நம்பிக்கிகையில்லா முடிவுகளை நாமே எடுத்துக்கொண்டு வெளிச்சமில்லா பாதை என்பாதை என முற்றுப்புள்ளிவைக்கின்றோம். முடிந்துவிட்டது சாகப்போகிறோம் என நம்மைப்போன்று திருத்தூதர்கள் இயேசுவைநோக்கி உறக்கம் தேவையா எப்படி உறங்க முடிகிறது எனச்சொல்ல காரணம்… அவர்கள் அவரிடம் இருந்த அந்த அமைதியை சக்தியை உணராததால் உடன் இருந்த இயேசு தங்களை அலைகழித்த புயல் காற்றைவிட சிறியவர் குறைவானவர் சக்திகுறைந்தவர் என எண்ணியதாலாயிருக்கலாம்.

எந்த ஒரு தீய சக்தியும் திருச்சபையை தாக்க தகர்க்க காயப்படுத்தமுடியாது காரணம் உயிர்த்த இயுசுவின் நிரந்தர பிரசன்னம் மேலும் அவர்தரும் தூய ஆவியாரின் உற்சாக இயங்கி இயக்கும் சக்தியே ஆகும். இயேசு அனைத்திலும் எதற்கும் மேலாக எதற்கும்முன்பாக பெரியவர் உயர்ந்தவர் ஆடும் அலைகள் சிறியவை தோன்றிமறைபவை.

திருச்சபை வரலாற்றில் அன்று மறைவல்லுநர்கள் இன்றைய தலைவர்கள் ஏற்பட்ட எதிர்ப்புகள் போர்கள் துயரங்கள் அவமானங்கள் இன்றைய சீரழிவு பாதிப்புகள் என்ற ஆடும் அலைகளுக்கு மத்தியில் செல்லும் படகே திருச்சபை இது அமைதியை சக்தியை உண்மையை உறவை நிலைநாட்டும் படகு என்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் மனிதகுலத்தில் கொடிய துன்பநிலையிலிருப்போருக்கு நற்செய்தியாய் இருப்பவரே யோபு துன்பத்தின் அனைத்து நிலைகளை சந்தித்த யோபு நமக்கு பாடமாகிறார். ஏன் அவரும் புலம்புகிறார். யாவே இறைவன் கடலை உருவாக்கியவன் நானே கடல் அலைகளை அமைதிப்படுத்த எனக்குதெரியாதா மேலும் என் திட்டங்களை மானிடர்களால் புரிந்துகொள்ள இயலாது எனஎடுத்துச்சொல்கிறார்.

நம் வாழ்வில் நம்மைசுற்றி ஆடும் அலைகள் நம்மை அலைகழிக்கும் தருணங்களைப்பார்த்து உனக்கு முன்பாக என்இயேசு பெரியவர் உயர்ந்தவர் சக்தியானவர். நீ ஒரு துளிபோன்று எனச்சொல்வோம். நம்படகில் இயேசுவை என்றும் இருத்திக்கொள்வோம் அமைதியை தக்கவைப்போம்.

இயேசுசபையின் தலைமைப்பொறுப்பிலிருந்த அருட்தந்தை பேதுரு அருப்பே தன் மேசையின் ஒருபுறம் நிலாவிலிருந்து பூமியின் தோற்றத்தின் படமான நேயில் ஆம்ஸ்டிராங் கொடுத்ததை வைத்திருந்தார். சிலர் தந்தை பேதுரு அருப்பேவிடம் உங்களுக்கு பலமுடிவுகளை எடுக்கவேண்டிய தருணங்களில் போராட்டங்கள் எதிர்ப்புகள் தளர்ச்சிகள் தோல்விகள் வந்திருக்கும் அத்தகைய அலைகளிலிருந்து எவ்வாற மீண்டுவந்தீர்கள் எனக்கேட்க. தந்தை பேதுருவோ ஆம் அதுபோன்ற பல நேரங்களை சந்திக்கின்றபொழுது இதோ இந்த படத்தை உற்றுநோக்குவேன் பூமியே இவ்வளவு சிறிதாக தோன்ற என் துயரம் ஒன்றுமில்லை வெறும் ஜீ ஜீபி என்றார். இதுவே அமைதியகமாக என்இடத்தை மாற்றுகிறது. இயேசு இல்லா படகு என் வாழ்வுபயணத்தில் கிடையாது-ஆமென்.

.