இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தூய ஆவியாரின் பெருவிழா

உயிர் மூச்சே……. உன்னத ஆவியார்……!.

தி.ப2:1-11 1கொரி12:3-7 12-23 யோவா20:19-23



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே அனைவருக்கும் தூய ஆவியாரின் திருவிழா வாழ்த்துக்களை சமர்பித்து கொள்கிறேன். திருச்சபைக்கு பிறந்தநாள் இன்று நம்விசுவாசத்திற்கு பிறந்தநாள் இன்று. நம்மை நம் சமூகத்தை திருச்சபையை என்றும் இயக்குகின்ற நன்மையின் பாதையில் இயங்கவைக்கின்றவர் தூய ஆவியானவரே. திருமுழுக்கிலும் உறுதிப்பூசுதல் வழியாக பெற்றுக்கொண்ட அவரின் அருளை ஆசீரை பலன்களை புதுப்பித்துகொள்வோம் புதியதாக்கிகொள்வோம். திருப்பலியில் இணையும் நாம் உலகளாவிய திருச்சபையில் ஒன்றிக்கிறோம் இத்தகைய பிணைப்பு இன்றைய திருவிழாவில் நம் அழைப்பை நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தட்டும்.

அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் வாக்காளரின் ஒட்டு உயிர் பின்பு ஊழலே உயிர்….
ஆன்மிகவாதிகளுக்கு விளம்பரபடுத்தும் பக்தர்களே உயிர்….
நடிப்பு துறையிலிருப்பவர்களுக்கு கால்ஷீடே உயிர்…
பெரியவர்களுக்கு நாட்டு நடப்பை விமர்சிப்பதே உயிர்…
வீடோடிருக்கும் பலருக்கும் தொடரும் என்று முடியா சீரியல்களே உயிர்…. இளையோருக்கு இணையதளங்களும் அலைபேசிகளுமே உயிர்….
சிறார்களுக்கு வீடியோ விளையாட்டுகளே உயிர்……
நீண்ட நாள் சிகிச்சையிலிருப்போருக்கு உயிரைக்காப்பாற்றிய மருத்துவரே உயிர்….
. சிலருக்கு இசையும் பாடல்களும் உயிர்……பலருக்கு புரணிபேசுவதே உயிர்……
நம்மில் அல்ல நமக்கு வெளியே உயிராக நம்மை வாழவைக்கும் உயிராக நாம் பலபொருள்களை நிகழ்வுகளை நபர்களை நாம் காண்கிறோம் நம்பி கடைபிடிக்கின்றோம். இவைகள் நிலையில்லாதவைகள் மாறக்கூடியவைகள் மடியக்கூடியவைகள். நம்மை வாழவைக்கும் உயிர் நம்முள் உள்ள நம்மூச்சே என்று உணரமறந்துபோகிறோம். இந்த உயிர்மூச்சாக நம்மை என்றும் இயக்கி வாழவைப்பவர் உன்னத ஆவியாரே. இந்த ஒருவிழிப்புணர்வுக்கு இன்றை இறைவார்த்தைகளும் திருவிழாவும் நமக்கு அழைப்புவிடுக்கின்றன.

தூய ஆவியாரின் பிரசன்னத்தை வெளிப்படையாக பழைய ஏற்பாட்டில் 7முறையும் புதிய ஏற்பாட்டில் 67தடவையும் குறிப்பிடப்பட்டடிருக்கின்றன. தொ.நூ 1:2 நீர்திரளின்மேல கடவுளின் ஆவி அசைவாடிக்கொண்டிருந்தது”. எனவிவிலிய தொடக்கத்திலிருந்தே ஆவியாரின் பிரசன்னைத்தை நாம் காண்கிறோம். இத்திருவிழா பெந்தகோஸ்தே என்று துவக்கத்திலிருந்தே அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. பெந்தகோஸ்தே என்பதற்கு ஜம்பது என்று அர்த்தமாகும். இது இயேசுவின் உயிர்ப்பலிருந்து பெந்தகோஸ்தே நாளுக்குவரையுள்ள 50நாட்களை குறிக்கும் வகையில் அழைக்பட்டது. இந்நாட்களில் விண்ணேற்புவரை இயேசு தன் திருத்தூதர்களுக்கு தோன்றியபொழுது படிப்பினையையும் இறைரசுவழிநடக்க குறிப்புகளையும் கற்பித்தார். பழைய ஏற்பாட்டிலும் பெந்தகோஸ்தே என்ற அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. அவர்கள் சிறப்பாக கொண்டாடிய முக்கிய மூன்று திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். பாஸ்காவும் கூடாரத்திருவிழாவும் மற்றவைகள் ஆகும். இம்மூன்று திருநாட்களில் எருசலேமிலிருந்து இருபது மைல்களுக்குள் வசிக்கின்ற அனைத்து யூதஆண்மகனும் சட்டபூர்வமாக எருசலேமுக்கு சென்றாகவேண்டும். பழைய ஏற்பாட்டு பெந்தகோஸ்தே நினைவுதிருவிழாவிற்கும் புதியஏற்பாட்டு திருவிழாவிற்கும் என்ன தொடர்பு:

பழைய ஏற்பாட்டில் பெந்தகோஸ்தே:
 மோசேவழியாக யாவே இறைவன் தன்மக்களோடு ஏற்படுத்திய உடன்படிக்கையின் நினைவு
 மோசேக்கும் இறைவனுக்கும் இடையே சந்திப்பின் நாட்கள் ஜம்பது ஆகும்.
 பத்துகட்டளைகள் அடங்கிய பலகைகளை தந்ததே இறைவனின் முதல் வெளிப்பாடுஆகும்.
 புதிய வாழ்வை வெளிப்படுத்தும் இரண்டாம் அறுவடையின் நினைவுநாளாகும்
.  அடிமைதனத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட விடுதலையின் மக்கள் என்ற அனுபவத்தின் நினைவும் உடன்படிக்கையின் கொண்டாட்டமுமாகும்.
புதிய ஏற்பாட்டில் பெந்தகோஸ்தே:
• இயேசுவின் உயிர்ப்பிற்குபிறகு கிறிஸ்தவ சமூகத்தின் 50நாட்களிள் எதிர்பார்ப்பு காத்திருத்தலே.
• இயேசு விண்ணேற்குபுக்கு முன் பலமுறை தோன்றி சீடர்களை தயாரித்தார்.
• மரியன்னை – திருத்தூதர்களோடு 120 பேர் கூடியிருந்தனர்.
• மேலறையில் ஒரு மனத்தோடு ஒரே இதய உணர்வோடு ஒன்றித்து செபத்திலிருந்தனர்
. • பயந்து கோழையாயிருந்த திருத்தூதர்கள் தைரியத்தோடு வேகத்தோடு உயிர்த்தஇயேவை எடுத்து முழங்கினர்.
• இந்தநாள் திருச்சபை பிறப்பெடுத்து உதயமாகிய நாளாகும்.
விவிலியத்தில் நெருப்பு – பேரிரைச்சலான காற்று – புறா மற்றும் பெருமூச்சாக தூய ஆவியானவர் வெளிப்படத்தபடுகிறார். எபிரேய மொழியில் ரூவா என்பதே மூச்சு அல்லது சுவாசக்காற்று ஆகும். இதையே கிரேக்கமொழியில் நூமா அருகிலிலிருந்து வழிகாட்டும் துணையாளர் என்பதாகும். மனிதவாழ்வுக்கு சுவாசிக்கும் மூச்சு மிக மிக அத்திவாசமானதாகும்
மூச்சே உயிர்வாழ்வு ஆகும் மூச்சுநின்றுவிட்டால் சுவாசம் இல்லைஎன்றால் பிணம் மனிதவாழ்வின் முடிவு என்று உறுதியாகிறது. இயேசுவின் திருத்தூதர்கள் பயத்தில் கவலையில் சோகத்தில் செத்தமனங்களாகயிருந்தபொழுது இந்நாளிலே தூயஆவியானவரின் பெருமூச்சினால் நிரப்பபட்டு உயிரோட்டம்பெற்று புது உயிர்களாக தைரியத்தோடு.உலகமெங்கும் சென்று போதிக்கதுவங்குகின்றனர். தொ.நூ2:7 “அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.” இந்த இறைசுவாசத்தினால் உயிருள்ள மனிதமாக இறைச்சாயலை தாங்கி உலகத்தில் இறைத்திட்டத்தின் உ;டன் உழைப்பாளர்கள் என்ற பொறுப்புள்ளவர்களாகிறோம். செபிக்ககூட உயிர்மூச்சாக செயல்படுபவர் ஆவியானவரே என்பதை உரோ8:26 “தூய ஆவியார் நம்வலுவற்ற நிலையில் நமக்குதுணைநிற்கிறார். ஏனெனில் எதற்காக எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது தூயஆவியார் தாமே சொல்வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார்.”

நாம் விசுவாசஅறிக்கையில் உயிர் அல்லது வாழ்வளிப்பவராகிய தூய ஆவியை நம்புகிறோம் என்று வெளிப்படுத்துகிறோம். இது நீண்டகாலம் வாழ்க எனபிறரை வாழ்த்துவது போல் எந்நாளும் இயங்கிவரும் பயணம் செய்யும் ஆவியானவர் நம்மையும் உயிருளுள்வர்களாக உயிரோட்டமுள்ளவர்களாக இயக்குகிறார் என நாம் உணரவேண்டும். ஆயிரக்கணக்கில் எருசலேம் திருவிழாவுக்குசெல்பவர்கள் திருத்தூதர்கள் பேதுருவின் உரையை 16மொழிகளில் கேட்டது தூயஆவியாரின் செயலாகும். அங்கு பதினாறு மொழிபேசும் நாடுகளிலிருந்து சமூகத்திலிருந்து கூடியிருந்த மக்கள் அவர்கள் மொழியில் கேட்டது அவர்கள் தூயஆவியை ஏற்றுக்கொண்டதன் அடையாளமும் ஒரே திருச்சபையின் ஒரே விசுவாசப்பிள்ளைகள் என்பதன் அடையாளமுமாகும்.

ஆசீர்பெற்ற பேராயர் ஆஸ்கர் ரோமேரோ தன்வார்த்தைகளில் “பெந்தகோஸ்தே என்ற நினைவு கொண்டாட்டம் ஒருநாள் திருநாள் அல்ல மாறாக இது அனுதின கொண்டாட்டமாகும். காரணம் மூச்சு சுவாசமில்லா வாழ்வு இல்லை. அதுபோல தூய ஆவியாரில்லா திருச்சபை காய்ந்துகிடக்கும் செத்துப்போன எலும்புகள் நிரம்பிய நிலத்துக்குச்சமம்” என்கிறார்.

புனித பீட்டர் தமியான் சொன்னது “எவ்வாறு உடலுக்கு உயிரான ஆன்மா திகழ்வதுபோல ஆன்மாவுக்கு உயிராகயிருப்பது தூய ஆவியாரே.” திருமுழுக்கில உறுதிப்பூசுதலில் குருத்துவத்தில் பெற்ற தூய ஆவியானர் நம்மூச்சு நம் சுவாசம் அவரே உயிர் அவரே வாழ்வு நம்மை இயக்கும் உயிர்மூச்சு என என்றும் உணர்ந்து அவர்வழிநடப்போம்-ஆமென்.