இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பாஸ்கா காலம் –இயேசுவின் விண்ணேற்பு விழா–

செல்லுங்கள்…. சொல்லுங்கள்… செய்யுங்கள்……!.

தி.ப1:1-11 எபே1:17-23 மாற்16:15-20



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
இறைஇயேசுவின் விண்ணேற்பு திருவிழா வாழ்த்துக்கள்
இது திருச்பை உதயமானதின் நினைவு திருநாளாகும்
மறைபரப்பு நற்செய்தி அறிவிப்பின் திருவிழாவுமாகும்
விண்ணக தேவன் நம் மண்ணக முயற்சிக்கு உடன்வரட்டும்

எங்கோ சென்ற இறைவனவர் இங்கே எப்படி இருப்பார்?
எப்படியோ மறைந்தவர் எப்பொழுதும் எவ்வாறு தோன்றுவார்?
என்தந்தையிடம் செல்கிறேன் என்றவர் எங்ஙனம் நம்மிடம் பேசுவார்?
விண்ணக வலப்பக்க அரியணை மண்ணகதுக்கு என்ன பயன?
வானதூதர்களோடு உயர்த்தப்பட்டவர் உண்மையில் எங்கே?
விடைதருவார் என்று நினைத்திருந்த சீடர்கள் வெறுமையானதேன்?

விண்ணேற்பு திருவிழாவின் பாடம் மறைந்த மாயமான இயேசு அல்ல
வான்சென்ற இறைஇயேசுவின் வாழ்வு முடிவுறவில்லை
வானகம் வேறுபாதையல்ல புரிந்துகொள்வேண்டிய புதிய தொடர் பாதை
தநதையிடமிருந்து வந்தவர் அவரோடு மீண்டும் இணைகிறார்
தன்வலப்பக்க இடம் அங்கிருந்து காட்டும் அதிகார வழிகாட்டுதலே
தலைநிமிர்த்து பார்க்கவேண்டாம் திசையெங்கும் செல்லுங்கள் என்கிறார்

விண்ணேற்பு திருநாள் ஒரு வேடிக்கையான வாடிக்கையான விழா அல்ல
விடாது அவரது பணியை தொடர கொடுக்கும் அழைப்பு விழாவாகும்
விரைந்து செல்லுங்கள்…சொல்லுங்கள்….செய்யுங்கள்…அன்பு ஆணையிடுகிறார்
உயிர்த்த இயேசுவாய் 40நாட்கள் பலமாயிருக்கு பாடம் புகட்டுகிறார்
உன்னத ஆவியார் உங்களில் இறங்கி உற்றதுணையாயிருப்பார் எனவும்
உயிருள்ள இறைவனாய் உடன்வழிநடப்பேன் என உறுதியளிக்கிறார்

செல்லுங்கள் என்பது…. எருசலேம் அனுபவம் செதுக்கப்படட்டும்
சமாரியா யூதேயாமெங்கும் உங்கள் பாதங்கள் சென்றடையட்டும்
வேறுபாதை தெரியவில்லை விண்ணகம் புரியவில்லை
சரித்திர ஜரோப்பிய ஆசிய ஆப்பிரிக்க நாடுகளையும்
சாதனைகளை கடந்த இயேசுவின் நற்செய்தி சென்றடையட்டும்
சங்கடங்களுக்கு மத்தியில் உங்கள் இறைப்பணி தொடரட்டும் என்பதாகும்

சொல்லுங்கள் என்பது……. இறைவார்த்தையை எடுத்துரைப்பதாகும்
சொற்கள் விளக்கஇயலா உயிர்ப்பு அனுபவத்தை ஒன்றித்துணர்ந்து
நன்மையின் வார்த்தைகளாய் நேர்மறை வாக்கியங்களாய்
நம்மபிக்யைின் செய்தியாகிய நற்செய்தியை எடுத்துரைப்பதாகும் ஆழாமான அழுத்தமான அர்த்தங்கள் நிரம்பிய விவிலிய அழைத்தல்களை
அனவைருக்கும் ஆறுதலாய் எடுத்துச்செபமாக்குவதாகும்

செய்யுங்கள் என்பது…. அன்பு மொழியால் அணுகுவதையும்
செயலாக்கம் பெற்று அனைவரையும் மையமாக்குதையும்
எதிர்மறை எதிர்ப்புகளை எதிர்வரும் தீமைகளை அழிப்பதையும்
நலமின்றி துணையின்றி தனித்து நம்பிக்கையின்றி இருப்போரை
நான் உன்னோடு என அருகிருந்து ஆன்மிக சக்தியாக கவனிப்பதையும்
உயிருள்ள இயேசுவின் ஆற்றில் நிறை அணுகுமுறைகளாகும்

விண்ணேற்பு திருவிழா தரும் அழைப்பு என்ன?
நான் எங்கே இறைஇயேசுவை எடுத்துரைக்க எங்கே செல்ல வேண்டும்?
என் இறைவார்த்தை பகிர்வாக நான் என்ன சொல்லவேண்டும்?
என் ஈடுபாட்டிற்கு வெளிப்பாடாக நான் என்ன செய்ய வேண்டும்?
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் இணைக்கும் அனுபவமாக
ஆம் என்ற என் அழைத்தல் பதில் செயலாக்கம் பெறட்டும்-ஆமென்