இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு

ஒருநாள் மகிழ்ச்சியா…… வாழ்நாள் மகிழ்ச்சியா !

1அர 3:5இ 7-12; உரோ8:28-30; மத் 13:44-52



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சசோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே இறைபீடத்தைநோக்கி நம்மை ஒரே சமூகமாக அழைத்த இறைவனுக்கு நன்றிசெலுத்துவோம். கடந்தவாரத்தில் உலகின் பலஇடங்களில் நடந்தேறிய விமான விபரிதங்களுக்கு பலியான உள்ளங்களை அவர்களின் குடும்ப உறவுகளை அப்ப ரசத்தோடு இணைத்து காணிக்கையாக்குவோம். நம் மண்ணக உணர்வுகளை இறைபிரசன்னம் உறுதிபடுத்தி தொடர்ந்துவழிநடத்தட்டும். நம்மிடம் உள்ள மிகவும் வல்லமையான ஆயுதம் செபம்ஆகும். மிகவும் உயரிய வகையான செபம் நற்கருணையே எனவே உலகில் நம்மைசுற்றி இருக்கும் அனைத்து வன்முறை எண்ணங்கள் அவற்றைசெயலாக்கும் நபர்கள் அவர்களை உற்சாகபடுத்தும் பொறுப்பிலிருக்கும் தலைவர்கள் இவர்களின் மனது இறைவனின் ஞானத்தை கேட்கும் உள்ளமாக மாற நம் வேண்டுதல் அமையட்டும்.

உனக்கு 10கோடி குழுக்கலில் அதிசயவிதமாக கிடைத்தால் நீ என்னசெய்வாய்?
உனக்கு ஒரு வெளிநாடு சென்றுவர இலவசஅழைப்புகிடைத்தால் எந்த நாட்டை தேர்வுசெய்வாய்?
உனக்கு திருத்தந்தை பிரான்சிஸின் நேரடி தனிப்பட்டநேர்காணல் வாய்ப்புகிடைத்தால் நீ அவரிடம் என்னபேசுவாய்?
ஒரே ஒருநாள் மந்திரசக்தி உனக்கு கொடுக்கப்பெற்றால் மந்திரசக்தியைப்பயன்படுத்தி நீ என்ன செய்வாய்?
உனக்கு ஒருவாரம் நாட்டின் முதல்அமைச்சராக செயலாற்ற வாய்ப்பு கொடுத்தால் உன் திட்டங்கள் செயல்பாடுகள் என்னவாக அமையவும்.
நம்மனதில் நம்முடைய தேவையின் எண்ணிக்கை ஒவ்வொருநாளும் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறது. இத்தேவைகளை மட்டுமே மையமாககொண்டு நம்வாழ்க்கை அமைந்திருந்தால் இவைகள் வெறும் தற்காலிக ஒருநாள் மகிழச்சியை நமக்குதரும் மாறாக வாழ்நாள்முழுவதும் நம்மிடம் தங்கவேண்டிய அவ்வாழ்நாள் மகிழ்ச்சியை தேடிப்பெற்றுக்கொள்ள இன்றைய இறைவார்த்தைகள் நமக்குதந்து அழைப்புவிடுக்கின்றன.

இன்றைய முதல்வாசகத்தின் நாயகன் சாலமோன் அரசர் தந்தை தாவீதிற்குப்பிறகு கி.மு 970ல் தன்சிறுவயதில் பதவிக்குவந்தவர். 38வருடங்களாக அரசஆட்சியில் ஈடுபட்டடிருந்தார். அன்றை இஸ்ராயேலின் மக்களதொகை 800000. சாலமோனின் துவக்கநிகழ்வுகள் அனைவருடைய மனதை அவர்பால் ஈர்த்தது. எருசலேம் தேவாலயம் கட்டிமுடிக்கப்பட்டது – தனக்கு மாளிகை அமைத்துக்கொண்டார் - மற்ற அருகாமைநாடுகளோடு சுமூக உறவைஏற்படுத்தி வணிகபமுயற்சிகளை துவக்கினார். ஷிபா நாட்டு அரசிவந்து சாலமோனை சந்தித்துசென்றார். இவரின் இந்தசிறப்புமிகுசெயல்பாடுகளுக்கு காரணம் அவர்பெற்றுக்கொண்ட வரமேஆகும் அது ஞானம் நிறைந்த உள்ளமே ஆகும். எபிரேய மொழியில் ஞானம் நிறைந்த உள்ளம் என்பது புரிந்துகொள்ளும் மனது மற்றும் இதையே செவிகொடுக்கும் உள்ளம் எனபுரிந்துகொள்ளப்பட்டது. இது என்சொந்த தனிப்பட்டதேவைகளுக்கு மட்டுமே என்மனதை செலுத்தாமல் இறைவனுக்கு என்னைச்சுற்றிவாழும் சகோதரங்களுக்கு செவிகொடுக்கும் உள்ளமாக இருக்கவேண்டும் இதுவே வாழ்நாள் மகிழ்ச்சியைப்பெற்றுதரும் காரணம் இது இறைவன் விருப்பத்தை வாழ்வது. நமது வாழ்க்கை வாகனத்தில் இறைஇயேசுவே நிரந்தர டிரைவர் ஆவாh.; சாலமோன் இறைஞானமான செவிகொடுக்கும் உள்ளத்தை விரும்பிகேட்டு பெற்றுக்கொண்டதால் மகிழ்ச்சியின் நாயகனானார். பல்வேறு பொறுப்புகளில் தலைவர்களாக பொறுப்புள்ள பெற்றோர்களாக நாம் நம் தேவைகளை மற்றும் குடும்பத்தின் தேவைகளை முன்வைக்கிறோமா அல்லது பிறரின் தேவைகளை இறைவன்நமக்கு ஏற்பாடுசெய்துள்ள இறைவிருப்பத்தை முதலாக மையமாக வைக்கிறோமா? நம்மகிழ்ச்சியே இதை நிர்ணயிக்கும். நம்மிலிருப்பது ஒருநாள் மகிழ்ச்சியா….அல்லது வாழ்நாள் மகிழ்ச்சியா?

ஒருநாள் மகிழ்ச்சிக்கும் வாழ்நாள் மகிழ்ச்சிக்கும் உள்ள உறவை இன்றைய நற்செய்தி நமக்கு தெளிவாக்குகிறது. ஒருநாள் மகிழ்ச்சி நம் அன்றாட ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வது அது தோன்றி மறையும் புகையை போன்றது தோன்றி மறையும் போதையைபோன்றது. மாறாக வாழ்நாள் மகிழ்ச்சி ஒரு புதையலை – முத்தை – வலையைப்போன்றது. இவைமூன்றும் உயர்ந்தது மதிப்பில் மதிப்பீட்டில் சிறந்தது. இவைகளை பெற நம்மை இழக்கவேண்டும்.

புதையல்: பல்வேறு தருணங்களில் பகைவர்களால் தாக்கப்பட்டபொழுது மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்களின் மதிப்புமிக்க பொருள்களை நிலத்திற்கு அடியில் புதைத்துசெல்வது வழக்கமாகயிருந்தது. தாக்குதல் போர்முடிந்தபிறகு அனைவரும் திரும்பிவருவதில்லை பலர் தங்கள் வாழ்வை இழந்திருக்கலாம் அல்லது நாடுகடத்தப்படடிருக்கலாம். இப்படிப்பட்ட மாற்றான் நிலத்தில் பணிசெய்யும் ஒருவர் அங்கு கிடைத்த புதையலை தனக்குஉரிமையாக்கிக்கொள்ள அந்தநிலத்தையே வாங்கவேண்டும் அதற்காக தன் அனைத்து சொத்துகளை விற்றுஇழப்பதுகடினமானது ஆனால் தேவையானது. வாழ்நாள் மகிழ்ச்சியும் தன்னையே இழந்து பெற்றுக்கொள்ளும் புதையலே ஆகும்.
முத்து: பலவருடங்களாக தேடும் வணிகன் அதைக்கண்டெடுக்கும்பொழுது அதைப்பெற எதையும் இழப்பதும் வாழ்நாள் மகிழ்ச்சிக்கு ஒப்பாகும்.
வலை: கிடைக்பெற்ற அனைத்து மீன்களை ஒன்றுசேர்க்கும் வலையானது இந்த வாழ்நாள் மகிழ்ச்சி என்னைசார்ந்தது அல்ல மாறாக பிறரை சகோதர சமூகத்தை உள்ளடக்கியது. இறையரசு அனைவரையும் உள்ளடக்கியது எனவே வாழ்நாள் மகிழ்ச்சி இறையரசின் மகிழ்ச்சியே. ஆன்மிக இருட்டு: நம் மகிழ்ச்சியை தெரிந்துகொள்ள நம் ஆன்மிகம் நமக்கு துணையாயிருக்கும். நமது ஆன்மிக முயற்சிகள் பங்கேற்புகள் நமக்கு ஆன்மிகவெளிச்சத்தை தருகின்றனவா அல்லது நமது ஆன்மிகம் வெறுப்பான – கசப்பான – கோபமான – ஏமாற்றமான – வெறுமையான உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்தினால் இது நாம் ஏற்படுத்திக்கொண்ட ஆன்மிக இருட்டு நிலை ஒருநாள் மகிழ்ச்சியில் வாழும் நிலை ஆகும் மாறாக நம்பிக்கை – பகிர்வு – பொறுமை – ஏற்றுக்கொள்ளும் தன்மை உணர்வுகள் நாம் ஆன்மிக வெளிச்ச நிலையில் வாழ்நாள் மகிழ்ச்சியை தெரிந்துகொண்டோம் எனலாம்.

தினமும் காலைதிருப்பலிக்கு வருபவர்கள் வயதானவர்கள் ஓய்வுபெற்றவர்கள் கடமைக்காக அல்லது நேரம் இருப்பதால் வருகிறார்கள் என்ற கருத்து சொல்லப்பட்டபொழுது தினமும் காலை திருப்லிக்கு வருபவர்கள் பத்துபேரை கண்டு பேட்டிகாண்போம் எனக்கேள்விகளோடு சிலபங்கு ஆலயங்களை தெரிந்தெடுத்து நிகழ்த்தினோம். 10 ல் 7பேர் சொன்னது நாங்கள் அனுதினம் வேலைக்குச்செல்கின்றோம். எங்களின் நாள் இறைபிரசன்னத்தில் துவங்கும்பொழுது அது அந்த நாளுக்கு முத்தாய்பாக அமைகிறது காரணம் அவர் தான் எங்களை எங்களை இயக்குகிறார் எங்களின் பணியை இந்த நாளை இயக்குகின்றார் அவர்பாதத்தில் நாளைதுவங்கினால் கவலைகள்கூட மறைந்து வாழ்நாள் மகிழ்ச்சியாக மாறும் என்றார்கள். நேரம் இல்லை எனபதை நிறுத்திவிட்டு ஞானம்நிறைந்த உள்ளம் பெற அவரை ஒவ்வொருநாளின் முதலாக மையமாக வைப்போம் வாழ்நாள்மகிழ்ச்சி நம்மில் தங்கட்டும் ஆன்மிக இருட்;டு நம்மை நெருங்காதிருக்கட்டும்-ஆமென்.