இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பாஸ்கா காலம் - உயிர்ப்பின் 3ம் ஞாயிறு

ஞாயிறு ஒன்றிப்பு…….. மேலறை அனுபவமாகட்டும்…..!

தி.ப3:13-15 17-19 1யோவா2:1-5 லூக்24:35-48



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே
இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே……
இன்றைய நம் ஒன்றுகூடுதல் ஒன்றித்த உணர்வையும்
இணையற்ற நற்கருணை பங்கேற்பு சகோதர சமத்துவத்தையும்
இனிய சமூகஆர்வத்தையும என்றும் நம்மத்தியில் இருத்தி
உயிர்ப்பின் மக்களாய் சாட்சியவாழ்வுக்கு இட்டுச்செல்லட்டும்

நாம் வெறும் அமைதிமிகு ஞாயிறு கிறிஸ்தவ சமூகமல்ல
நம் குரல்கள் ஒன்றாக வீதிகளை நோக்கி வரவேண்டும்
நாடெங்கும் போரட்டம் நடத்தி புரட்சி சமூகமென நம்மை
நிமிர்ந்த நடையுடன் நேர்மை அணுகுமுறையில் வெளிபடுத்தவேண்டும்

கடந்தவாரத்தில் ஆக்ராவின் புனித மரியன்னை ஆலய வளாகத்தில்
அலங்கோலமும் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட மரியன்னையின் உருவம்
நம் ஞாயிறு நற்கருணை பங்கேற்புக்கு ஒரு சவாலாக அமைகிறது
நமது ஒற்றுமைக்கு சமத்துவ விசுவாச பயணத்திற்கு இதுவொரு கேள்விகுறியுமாகும்.

இன்றைய இறைவார்த்தைகள் நம் விசுவாசம் ஞாயிறு கிழமையிலல்ல
நம் கிறிஸ்தவ அடையாளம் ஞாயிறு கடமை நிறைவேற்றுதலிலல்ல-மாறாக
முதல் நற்கருணையின் மேலறை அனுபவத்தை மீண்டும் வாழ்வதிலேயே
நம் ஞாயிறு சமூக இணைந்த நற்கருணை கொண்டாட்டம் வெளிக்கொணர்கிறது.

நம்மை சுற்றிக்கொள்ளும் பயம் ஏமாற்றம் சோகம் போன்ற உணர்வுகள்
நம் அன்பு திருத்தூதர்கள் மனதிலும் எண்ணத்திலும் நிரம்பியிருந்தது
சிலுவையில் கொல்லப்பட்ட இயேசுவின் முகமட்டுமே ஆழமாக அவர்களிலிருந்தது
செத்துப்போன வெறுமையான வாழ்வை இருட்டான அறையிலே கண்டனர்

மரியமகதலா மற்ற பின்பற்றிய பெண்கள் பேதுரு கண்ட உயிர்த்த இயேசு
சீமோன் மற்றும் எருசலேம் மறுத்து எம்மாவு சென்ற சீடர் அனுபவதித்த உயிருள்ள இயேசு
தோமையாரின் சநதேக தெளிவுதர தொன்றிய உயிர்த்த இயேசு
ஒரு காட்சியாக கனவாக ஒரு பிரம்மையாகவே பேசப்பட்டது

கனவல்ல நான் காட்சிதரும் பிரம்மையல்ல நான் செத்துமுடிந்துபோனவனல்ல
நிஜமான உயிருள்ள உடன்இருக்கும் உறவு எதுவும் நிறுத்த முடிக்கமுடியாது
பயம் நீங்க என்னை தொட்டு உணருங்கள் உங்கள் மனம் அமைதி காணட்டும்
தன் உண்மை பிரசன்னத்தை இயேசு உறுதிப்படுத்தி தெளிவுபடுத்தி வெளிப்படுத்துகிறார்

. மேலறை சமூக ஒன்றிப்பு எந்நாளும் உயிர்த்த உயிருள்ள இயேசுவை
அவர்களில் இருக்கவிரும்பி இயேசு துவங்கிய முதல் நற்கருணை பகிர்வு கொண்டாட்டம்
இதோ இருவருகைகளில் அமைகிறது. ஒன்று: இறைவார்த்தை போதிப்பு
மற்றும் அப்பம் உடைத்து பகிர்ந்ததே நம் நற்கருணைபகிர்வு கொண்டாட்டம்

எருசலேமில் பரிச்சயமானது மீன் அப்பம் இணைந்த எளிய உணவு
எங்கு பயணித்தாலும் எடுத்துச்சென்று குழுவாக உணவருந்துவது பழக்கமாகும் எளியோரின் இவ்வன்றாட பழக்கத்தையே உயிர்த்தஇயேசு எடுத்துக்கொண்டு
எந்நாளும் உங்களோடுயிருக்கும் உயிர்ப்பின்சக்திநானே நினைவுகூருங்கள் இதையே என்கிறார்

இயேசுவின் போதனை மீட்பின்வரலாற்றின் முழுமையும் நிறைவும் அவரே
புதிய உடன்படிக்கையும் வாக்குறுதிகளின் செயலாக்கம் அவரே என்பதையும்
மீன் அப்ப பகிர்வு ஒரே பீடத்திலிருந்து ஒரே இயேசுவுடன் நம்ஒன்றிப்பு
மீண்டும் மீண்டும் அது கொண்டாடப்படவேண்டும் நிஜமாக்கப்படவேண்டுமெனபதேயாகும்

முதல் கிறிஸ்தவ சமூகத்தை வளர்த்தது ஒரே அப்பத்தின் பகிர்வும் இறைஒன்றிப்புமே
எத்தகைய துன்புறுத்தலும் மேலறை அனுபவம் தாக்கி தாங்கி பிடித்து பலம் தந்தது
நம் ஞாயிறு மேலறை அனுபவம் ஒரே கிண்ணதின் பகிர்வு ஒரே பீடத்தின் பங்கேற்பு
நம்மை என்றும் உயிர்ப்பின் மக்களாக உயிருள்ள கிறிஸ்தவ சமூகமாக வாழவைக்கட்டும்.