இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பெரிய வெள்ளி – புனித வாரம்

அனைத்தையும் தாங்குவதே…… அன்பு!



பாடலாசியர் சிலுவையை அன்பின் கவிதையாக பார்க்கிறார்……
தச்சு தொழிலாளி இரு பெரிய மரக்கட்டைகளாக பார்க்கிறார்….
யூதர் சிலுவையை அவமானத் தண்டடையாக பார்க்கிறார்…
ஒவ்வொரு புனிதரும் வேதச்சாட்சியும் சிலுவையை பார்த்தது
அன்போடு எதையும் தாங்கும் சக்தியாக……

இதற்குமேல தாங்கும் சக்தியில்லை……
என்நோயை…வலியை…ஏமாற்றத்தை
இதுக்குமேல நம்மாள தாங்கமுடியாது….
என் வேலையை…..பொறுமையை…..காத்திருத்தலை..
என்க்கு இனிமேல ஒத்துவராது பிரிந்துவிடுவது மேல்……
என் மனைவியிடமிருந்து….என் பெற்றோர்களிமிருந்து..
தாங்கமுடியாது என்பது என் பதிலா அல்லது முடியாது
தாங்க விரும்பவில்லையா….தாங்க மனதில்லையா?

உனக்காக நான்..நீங்கள் எனது மக்கள் என்று
தெரிந்தெடுத்து வழிநடத்தி விடுதலைபெற்ற மக்கள்
மாறினர் மனம் வாழ்வு முறையற்றுபோனது
அழிவுகளை சந்தித்தனர் அடையாளம் இழந்தனர்
. அவமதிப்புகுள்ளான ஆலயமும் அழகு இழந்தது
எருசலேம் எதிரி கோட்டையானது

துன்பம் துயரம் தோல்வி தடுமாற்றங்கள்
வலிகள் வியாதிகள் பிரிவுகள் இிழப்புகளை
தாங்க இயலாது தவித்தது மனிதம்
அன்பு சட்டத்துக்குள் அடைக்கப்பட்டது
மதம் பதவியிலிருப்போருக்கு விலைபேசப்பட்டது
தாங்கும் சக்தியாக தாங்குவதே முழு அன்புஎன
சிலுவையில் காவியமானார் இயேசு
சிலுவை அவரை தாங்கவில்லை அவர் சிலுவையைதாங்கினார்.
பழிச்சொல்லை…..குற்றச்சாட்டை அவமானத்தை….ஏமாற்றத்தை
காட்டிகொடுக்கப்பட்டதை…..மறுக்கப்பட்டதை
தாங்கினார் தன் மனதால் அன்பால் உடலால் உள்ளத்தால்

மூன்று ஆணிகளால் பதமாக்கப்பட்டதை மூன்று மணிநேரமாய்
முழுஉலகம் மறந்ததை தேடிவந்த மனிதம் மறுத்ததை
தாங்கினார் தாங்குதே அன்பு என்பதை செயலாக்கினார்.

நாம் தாங்க தயாரா…….அன்பினால் தாங்குவோம்….அன்போடு தாங்குவோம்
நம் போராட்டங்களை…நம் வலிகளை….நம் நோய்களை….
நம் எதிர்ப்புகளை….நமது ஏமாற்றங்களை….நமது சவால்களை…
தாங்குவோம்….தாங்கும் சக்தி சிலுவையிலும் சிலுவை நாயகனிலும்
என்றும் பெற்றுக்கொள்வோம்…..
அன்பு எதையும் தாங்கும்………