இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு

இறையரசின் கூரைகள்: களைகளும்… கோதுமையும்!
தீமைகள்: மாறும்… ஒருநாள் நன்மைகளாக அல்லது மடியும்!

சா.ஞா 12:13 16-19; உரோ8:26-27; மத் 13:24-43



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சசோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே உங்கள் அனைவரையும் புதிய ஞாயிறு திருவழிபாட்டிற்கு அழைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மேதை ஆல்பர்ட் ஸ்விட்சர் சொன்னது: “ உன்னிடமிருந்து ஞாயிறு பறிக்கப்படாதவாறு பார்த்துக்கொள் ஏனெனில் ஞாயிறு இல்லாத உன் ஆன்மா ஆதரவற்ற அனாதை ஆகிவிடும்”. இக்கூற்று முற்றிலும் உண்மையே. நம் ஞாயிறு ஒன்றிப்பு மற்றும் நற்கருணை கொண்டாட்டம் நமக்கு ஒரே சகோதர சமூகத்தை சார்ந்தவர்கள் என்ற பாச உணர்வையும் எண்ணற்ற மகிழ்ச்சியையும் பெற்றுத்தருகிறது. இன்றைய நம் பங்கேற்பும் பகிர்வும் நம் சமூகத்திற்கு நம் குடும்பங்களுக்கு மற்றும் தேவையிலிருக்கும் உறவுகளுக்கு அமைதியை – ஆனந்த மகிழ்ச்சியை-மாறாவிசுவாசத்தை பற்றிக்கொள்ள வரம் தரட்டும்.

மனிதம் உருவாக்கிய கருவியே மலேசிய விமானத்தை கீழே தள்ளியது ஏன் இத்தீயச்செயல்… ஏன் நாடுகளுக்கிடையே முடிவில்லா எதிர்ப்பு கசப்பு உணர்வு…இந்நாட்களில் காசா(ஜா)வில் காணும் கொடூரகொலைகள். ஏன் இந்தபோர் என்ற தீமைகள்…. தொடரும் பலாத்காரச்செயல்கள்..பெங்களுரில் கற்றுக்கொடுக்கவேண்டிய ஆசான்களின் கீழ்த்தரச்செயல்..6வயது சிறுமிக்கு ஏற்பட்டகொடுமை….ஏன் இத்தீயவர்கள்…. கடந்த வாரத்தில் பெங்களுரில் 17வயது துறவறசபை நவசந்நியாச புதுமுகநிலை சகோதரியை மயக்கப்படுத்தி கற்பழித்த மூன்றுபேரின் தீமைநிறைஎண்ணங்களும் செயல்களும் ஏன் அச்சகோதிரியை பலியாக்கியது……ஏன் இத்தீய கொடுர எண்ணம்…..? இறைவன் எங்கே போனார்? ஏங்கே மறைந்துவிட்டார்? ஏன் அவரின் மௌனம்? அவர் படைத்த இவ்வுலகில் ஏன் தீமைகள் களைகளா விட்டுவைக்கிறார்? இறைவன் பிரிக்கின்ற துண்டிக்கின்ற இறைவன் அல்ல மாறாக வாய்ப்பும் சலுகையும் தருகின்ற இறைவன் மாறுவதற்கு அனைத்தும் ஒருநாள் நன்மைகளாகவேண்டும் என்ற எண்ணத்தோடு நன்மைகளுக்கு மத்தியில் தீமைகளை விரும்பவில்லை மாறாக அனுமதிக்கிறார்.

ஆனால் நாமோ தீமைகள் பிடுங்கி எறியப்படவேண்டும் தீமைகள் நன்மைகள் மத்தியிலிருந்து பிரிக்கப்படவேண்டும என்பதே நம் குரலும் ஆதங்கமுமாகயிருக்கும். தீமைகளை அதிமாக்குகிறோம் கொடூரமாக்குகிறோம் நாம் பிரிக்கும்பொழுது துண்டிக்கும்பொழுது தனித்துப்பார்க்கும்பொழுது அதிக பாதிப்பையே விளைவிக்கிறோம். ஆனால் நன்மைகளுக்கு மத்தியில் தீமைகளும் வாழும்பொழுது அவைகளும் ஒருநாள் நன்மைகளாக மாறவாய்ப்பு உண்டு அல்லது மடியவும் நேரமுண்டு.

இன்றைய நற்செய்தியாளர் மத்தேயு தன்அனுபவத்தை மறைமுகசெய்தியாக இயேசுவின் போதனைகளோடு உட்புகுத்தி உவமைகளாக எடுத்துரைக்கிறார். உவமைகள் செய்தியை படங்களாக நம்கண்முன் கொணர்ந்து எளிதாக விரைவாக தெளிவாக நாம் புரிந்துகொள்ள இயேசுவால் அன்றாட அனுபங்களோடு எடுத்துச்சொல்லப்பட்டவையே ஆகும். நமக்கு இன்று தரப்பட்டுள்ள மூன்று உவமைகளிலிருந்து கோதுமையும் களைகளும் என்ற உவமையை நமக்கு செய்தியாக எடுத்து சிந்திப்போம். ஏன் களைகளை தனித்தோ-பிரித்தோ-பிடுங்கியோ எறியவேண்டாம் என்கிறார்? ஏன்இணைந்து வளரவிடுங்கள் என்கிறார்?

இயேசுவாழ்ந்த சமூகத்து பரிசேயர்கள் - சதுசேயர்கள் - குருக்கள் மற்றும் ஆளும் அதிகாரத்தார் மக்களை குறிப்பாக வரிவசூலிப்போரை – சமாரியோரை – பாவிகளை – நோயினால் பாதிக்கப்பட்டோரை தீட்டுபட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்று தனித்து பிரித்துவைத்திருந்தனர். இயேசுஇப்பழக்த்திலிருந்து முற்றிலும்மாறி வரிவசூலிப்போருடன் - சமாரியோருடன்-நோயுற்றோர் மற்றும் பாவிகளுடன் நடமாடி போதித்து அவர்களோடு இணைந்து உணவருந்தியது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதஅணுகுமுறைசெயலாகவும் இருக்க இயேசுவோ தன்னைத்தொடர்ந்துப்பின்பற்றி அவரின் திருத்தூதர்களாக ஆசைப்பட்ட எண்ணற்றறோருக்கு பாடமாக இவ்வுவமையை கூறி நான் வாய்ப்பு தருகின்ற இறைவன் மாறுவதற்கு முதிர்ச்சிஅடைவதற்கு நேரம் தருகின்ற இறைவன் எனச்சொல்லவிரும்பி களைகளை விட்டுவிடுங்கள் வளரவிடுங்கள் இப்பொறுமையான தீர்ப்பிடா செயல் தீமைகளை நன்மைகளாகமாறச்செய்யும் அல்லது தன்னையே மடியச்செய்யும் என்கிறார். எங்கும் எதிலும் தீமைகள் இருக்கிறது. சமூகத்தில் - அரசியலில் - குடும்ப நட்பு உலகில் மேலும் நம் ஒவ்வொருவர் எண்ணத்தில் பழக்கவழக்கத்தில் தீமைகள் அடங்கியிருக்கிறது. நாம் எவ்வாறு அணுகுகிறோம்? தீங்கு விளைவிக்கும் பிள்ளையை தனித்து துண்டித்து வைக்கிறோமா? இத்தீயச்சூழல் வேண்டமாம் என நாம் விலகிஓடுகிறோமா? நாம் ஓடினால் அவைகள் நம்மேயே துரத்திவரும் எனவே உடன்செல்வோம் உடன் வளர்வோம் நம் இணைந்துசெல்லும் அணுகுமுறை ஒருநாள் நன்மையாக மாறவோ அல்லது தீமையில் மடிவையேஏற்படுத்தும்.

இயேசுஉடன் இணைந்திருந்த வரிவசூலிப்போர்(சக்கேயு-மத்தேயு) மரிய மதலேனாள் - சமாரியப்பெண் - விபச்சாரத்தில் பிடிப்பெட்டபெண் - மற்றும் பாவநிலையிருந்த பல்வேறு மனித உள்ளங்கள் அவர்களின் தீமைச்செயல்களிலிருந்து முற்றிலும் மாற வாய்ப்பு நேரம் தந்து உடன்இருந்தார். யூதாசுக்கும் வாய்ப்புதரப்பட்டது ஆனால் மாறமறுத்து மடிந்தான். வாய்ப்புகள் நேரங்கள் நன்மையை நோக்கி மாற்றத்திற்கு அழைத்துவரலாம் இல்லையெனில் மடியவே நேரிடும்.

சாலமோனின் ஞானநூலாசிரியர் எகிப்திய அலெக்சாண்டிரியா நகரில் சிதறியிருந்த இஸ்ராயேல் மக்களுக்கு நினைவுறுத்துகிறார் இறைவன் வாய்ப்பு தருகின்றவர் மாறுவதற்கு நன்மைகளாக உயர்வதற்கு என்று. அந்நகரில் கிரேக்கபுதிய தத்துவ சிந்தனைகள் ஹெலனிசபோதனைகள் வளமையை முன்னேற்றத்தை மையமாக்கி மிருகங்கள்உட்பட பலதெய்வங்களை வழிபடஅழைத்தது. இதன் மத்தியில் குழம்பியிருந்த மக்களுக்கு நிமிர்ந்து நில்லுங்கள் பல்வேறு தீமைகளுக்கு மத்தியில் நன்மைகளாக்கிய யாவேஇறைவன் உங்கள் மத்தியிலே. இணைந்திருங்கள் அவர்களோடு உங்கள் அணுகுமுறை சவாலாக மாறச்செய்யும் இல்லையேல் மடியச்செய்யும் என்கிறார்.

திருத்தூதர் பவுல் தன் 2nகொரி12:10 “ நான் வலுவற்றிருக்கும்பொழுது வல்லமைப்பெறறவனாய் இருக்கிறேன்” சொல்வதன்வழியாக தன் சொந்தஇன யூதர்களின் எதிர்ப்புகளோடு வாழ்ந்து வல்லமையை தக்கவைத்துக்கொண்டார் என்பதை நமக்கு பாடமாகவெளிப்படுத்துகிறார். எருசலேம் தொடங்கி உரோமைமுதல் மற்றும் பல்வேறு தீமைகளை சந்தித்து இன்று இரத்தம் சிந்தும் எண்ணற்றோரின் வல்லமை திருச்சபையை எந்நாளும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது. பல்வேறு தப்பறைகள்-தவறான போதiகைள – உவகப்போர்கள் - சிலுவைப்போர்கள் - மாக்சிசபுகுத்தல்க்ள மற்றும் இன்றைய அழிவுச்செயல்கள் அனைத்திற்க மத்தியில் திருச்சபைத்தோட்டம் நிமிர்ந்து நிற்கிறது.

1770-ல் இத்தாலியில் ஒரு ஆலயத்தில் பலிபீடச்சிறார்களாக குருவானர் வலதுபுறம்யார்நிற்கவேண்டும் என்பதற்காக தலையில் அடித்து இரத்தம் வருமளவுக்கு சண்டையிட அங்குள்ள பங்குபெரியோர்களால் இத்தீயவர்களை வெளியே அனுப்பிவிடும் என்றார்கள் பங்கு குருவாக அவர்களிருவரை சேர்ந்து அணுக நம்பமுடியாவாறு எதிர்கால திருத்தந்தையத்களான திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ-1823 மற்றும் திருத்தந்தை ஏழாம்புத்திநாதர்-1829 ஆவார்கள். நான் பயிற்சிபொறுப்பிலிருக்கும்பொழுது சணிடையிடும் சகோதரர்களை ஒன்றாக ஒரே இடத்தில் உட்கார ஒரே பணியை செயல்பட சொன்னதன் வழியாக தீமையான எதிரி எண்ணம் முற்றிலும் மாறியது அல்லது மடிந்துபோனது எனது என் அனுபவம் எனச்சொல்வேன்.

பேராயர் புல்டன் சின் ஒருமுறை தன் ரேடியோ உரையின் பொழுது சொன்னது “பொறுப்பில் இருந்த கிறிஸ்துவ அதிகாரிகள் அன்று சகிப்புதன்மையுடன் மாற வாய்ப்புகள் தந்திருந்தால் ஹிட்லரும் முசோலினியும் பள்ளியிலிருந்து தீயப்பிள்ளைகள் எனவெளியே தள்ளப்பபட்டிருக்கமாட்டார்கள். ஸ்டாலின் குருத்துவப்பயிற்சியிலிருந்து களையென்று பிடுங்கிஎறியப்பட்டிருக்கமாட்டார். உலகின் வரலாறும் நிச்சயம் அதிக நன்மையோடு இருந்திருக்கும்.

நம்கேள்வி: ஏன் தீமை என்பதல்ல….எப்படி நான் தீமையோடு இணைந்து வாழ்வது நம் அணுகுமுறை: தீயவர்கள் என பரித்துவிடாமல்…உடன் வாழும் சகோதரர்கள் என்பதாகட்டும் நம் சிந்தனை : மாற்றம் நிகழும் மாறுவது சாத்தியம் என்பதாக அமையட்டும் இறையரசின் கூரைகள் நாமாகிய நன்மை தீமைகளே-ஆமென்.