இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








தவக்காலத்தின் முதலாம் ஞாயிறு

நான் பயணித்த….. பயணிக்கும்… பாலைவனம்?

வி.ப9:8-15 1பேதுரு3:18-22 மாற்1:12-15



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தவக்காலத்தின் வாழ்த்துக்களோடு இன்றைய திருப்பலியில் ஒன்றாக இணைய அழைக்கின்றேன். நமக்கு அருளப்பட்டிருக்கும் தவக்காலம் நம் வாழ்வை அலசி ஆய்வு செய்து புதுப்பித்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகும். தவ – செப – தர்ம முயற்சிகள் மற்றும் சிலுவை மலைஅனுபம் பாலைவன அனுபவம் வெள்ளப்பெருக்கு என நமக்கு தரப்படும் இறைவார்த்தைகள் நம்மை ஆட்கொள்ளவேண்டும். இது ஒரு ஆன்மிக பயணம் இந்த நாற்பது நாட்கள் பயணம் வருடத்தின் மற்ற அனைத்து நாட்களுக்கும் உறுதுணையாக அமையவேண்டும். இன்றைய திருப்பலியில் நம் பங்கேற்பு நம் பாலைவன பயணங்களை பக்குவடுத்தட்டும்.

அனைத்தும் இருந்தும் எல்லாவற்றையும் இழந்து இந்த பாலைவனத்தில் நிற்கின்றேனே…
பத்து வருடங்களாக யாரும் வேண்டாம் என்ற சுயநலத்தோடு பாலைவனமாக்கி விட்டேன்..
சொத்து தகராறினால் பெற்றோர்களை புறக்கணித்து பாலைவன மனதாகிப்போனேனே…
என் ஆற்றலை சந்தேகித்து இறைவனைவிட்டு விலகி பாலைவனத்தில் திரிந்தேனே…..
வளர முன்னேற நன்மையின்பாதையை ஒதுக்கி அழிவின் பாலைவனபாதையில் இருந்தேனே…

பாலைவனப்பாதையில் நாம் நன்மையை தீமையை தெரிந்தெடுக்க வாய்ப்பு கொடுக்கப்படுகின்றது. நாம் நமக்கேற்றவாறு காரணங்களை உருவாக்கி இங்கேயே இருந்துவிடவிரும்புவது அழிவின் பாதையாகும் மாறாக தொடர்வது முன்னேறிசெல்வது நன்மையின்செயலாகும். பாலைவனம் நம் சந்திக்கின்ற தவிர்க்க இயலா வாழ்வுபயணத்தின் ஒரு பகுதி ஆகும். இன்றைய இறைவார்த்தைகள் நம்முடைய பாலைவன அணுகுமுறையை பக்குவபடுத்த துணையாயிருக்கட்டும்

. அனைத்து மூன்று ஒத்தமைவு நற்செய்திகள் இயேசுவின் பாலைவன அனுபவத்தை குறிப்பிடுன்றன. மாற்குவை தவிர்த்து மற்ற இருவர் அங்கு அவர் சந்தித்து வெற்றிகொண்ட மூன்று சோதனை போரட்டங்களை நம்முன்வைக்கின்றனர். இன்றை நம் நற்செய்தியாளர் இயேசுவின் பாலைவனப்போரட்டத்தை பின்வருமாறு எடுத்துரைக்கிறார். மக்களுடைய மெசியாப்பற்றிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தன் அதிகாரத்தை இறைசக்தியை தன் சுயபாதுகாப்பிற்காக பயன்படுத்தாமல் பாடுகள் இறப்பை இறைதந்தையின் திட்டத்திற்கு இணைந்து தொடர்ந்து பயணம் செய்கிறார். இது ஒரு ஆழமான போராட்டம் ஒரு துன்பப்படும் பணியாளராக நான் தொடர்வேன் என இந்த நாற்பது நாட்கள் மட்டுமல்ல மறாக சிலுவைவரை தொடர்ந்தது. இயேசுவின் நிலைப்பாட்டில் தடுமாற்றங்களை கடந்த ஒரு உறுதி தெரிகின்றது.

பாவைனப்பயணம் என்பது ஒரு போரட்டம் தடுமாற்றம் சோதனைக்கு உட்படும் தருணம் ஆகும். வெற்றிடமாக வறண்ட இடமாக தோற்றமளிக்கும் பாலைவனம் அதில் தவிக்கின்ற நம் வெறுமை மற்றும் வறட்சியான உணர்வுகளை வெளிப்படுகின்றது. இத்தருணத்தில் நாம் எதை தெரிந்தெடுக்கின்றோம் நம்முன்னுரிமை இதே இடத்தில் பாலைவனத்தில் இருந்துவிடுவதா அல்லது இப்போரட்டத்தைவிட என் இறைவன் என் ஆன்மிகம் எனக்குரிய அருள் ஆசீர் பெரியது என தொடர்ந்து நடப்பதா என ஆய்வுசெய்ய அழைக்கப்படுகின்றோம்.

இங்கு நம் மனதிற்குவரக்கூடிய பொதுவானகேள்வி இயேசுக்கு ஏன் அந்த பாலைவனப்போரட்டம்? அவர் ஏன் அந்த சோதனுக்குள்ளாகவேண்டும்? இது அனைவரும் பொதுவாக கேட்ககூடிய கேள்விகள் எனலாம். அனைத்து காலக்கட்டங்களிலும் இத்தகைய கேள்விகள் பேசப்படுகின்றன என்பதை பின்வரும் திருச்சபையின் தந்தையினர் பின்வரும் பதில்கள் நமக்கு சான்றாகிறது. 1) சாத்தானை விட நாம் சக்திநிரம்பியவர்கள்.2) இறைவன் கொடுத்துள்ள கொடைகளோடு தற்பெருமையடையாமலிருப்பது 3) இறைவனிடம் சரணடைந்து சாத்தானை புறக்கணித்தோம் என்பதை வெளிக்கொணர 4) சோதனைகளும் பாலைவன நாட்களும் நம்மை பலப்படுத்தி பக்குவபடுத்துகின்றன 5) இச்சிறப்பு தருணங்களில் இறைவனின் அபரிவிதமான அருளை உணரவேண்டும்.

“சோதனையில் விடவிழாதேயும் தீமையிலிருந்து எங்களை மீட்டருளும்” என்று நாம் பலமுறை செபிக்கும் செபம் நம்மில் பலன்தர நாம் பாலைவன அனுபத்திலிருந்து வெளியே பயணிக்கவேண்டும். சாத்தான் என்பது எபிரேய மொழியில் எதிராளி – எதிரி – போட்டிபோடும் பகையாளி எனப்படும். பேய் என கிரேக்க மொழியில் பழிபேசுபவர் – இறைவனுக்கு எதிராக மக்களை தாக்குபவர். திசைதிருப்புவர் இறைவனிடமிருந்து அவர்கள் கவனத்தை மாற்றுபவர் என பயன்படுத்தப்பட்டது. இயேசுவின் பணிசமயங்களில் இவைகள் தீய ஆவியாக அசுத்த ஆவி பேசப்பட்டது. அசுத்த ஆவியினால் பாதிக்கப்பட்டவர்கள் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டார்கள்.

1சாமு29:4 பிலிஸ்தையன் தாவீதை சாத்தானக எதிராளியாகப்பார்த்தான். 2சாமு19:23 தாவீது அவருடைய எதிராளியாக அபிசாயுவைப்பார்த்தான்.1அரச5:4 சாலோமோன் தனக்கு எதிராளி யாருமில்லை என்பதற்காக இறைவனைப்போற்றுகின்றார். யோபு1:6-7 2:2 சக்கரி3:2 இறைவனுக்கு எதிராக மக்கள்மத்தியில் செயல்படும் சாத்தானாக பார்க்கின்றோம். லூக்10:1-19 தீய ஆவியுக்கு சவாலாயிருக்கவேண்டும் 1பேது5:8 9 விழுங்க காத்திருக்கும் சாத்தான் யாக்4:7 அலகையை எதிர்த்து நிற்கவேண்டும். லூக்22:3 யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். இவ்வாறு சாத்தான் அலகை தீமையின் உருவமாக எதிர்ப்பின் முகமாக இறைவனுக்கு எதிரியாக காணப்பட்டது.

பாலைவன வெற்றிடத்து வெறுமையுணர்விலே பசியிலே வெறுப்பிலே வறட்சியிலே சாத்தான் தீய சக்தி ஆதிக்கம் செலுத்தி நம்மை மட்டுமல்ல வரலாற்றில் பலரின் போரட்டத்தில் பாலைவனத்தில் தொந்தரவுசெய்தது. வி.ப24:18 பல சந்தேகங்களுடன் மக்களின் கேள்விகளுடன் நாற்பது நாட்கள் பாலைவனஅனுபவமாக மலைமீது இறைஅனுபவத்தை நாடியது. 16:35 நாற்பது வருடங்கள் இஸ்ராயேல் பாலைவன வறண்ட பசியான வெறுத்த அனுபவத்தில் போராடி பயணத்தை தொடர்ந்தது. 1அரச19:8 தனியாக நாற்பது நாட்கள் கனத்த இதயத்துடன் குழம்பிய மனத்துடன் பாலைவன போரட்டத்தில் பயணத்தை தொடர்ந்தது.

இயேசுவின் நாற்பது நாட்கள் பணிதுவக்க சிந்தனை போராட்ட பாலைவன அனுபவத்தில் நமக்குச்சொல்லப்படுவது காட்டுவிலங்குகள் முரண்பட்ட எதிரி சிந்தனைகளாக காண்பிக்கப்படுகிறது அங்கு வானதூதர் உடனிருந்தார் என்பதும் சொல்லப்படுகிறது. எனது பாலைவன அனுபவ போராட்டங்கள் என்ன? என்னை சுற்றிவரும் காட்டுவிலங்குகள் என்ன? வானதூதர்களை நான் தெரிந்தெடுக்கின்றேனா? அல்லது காட்டுவிலங்குகளால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றேனா? வானதூதர் பெரிதாக தெரியட்டும். காட்டுவிலங்குகள் சிறிதாக தெரியட்டும். நான்காம் நூற்றாண்டிலேயே வனத்து தந்தையர்கள் என அழைக்கப்பட்டவர்கள் உலகபோராட்டத்தை வெற்றிக்கொள்ள காட்டுவிலங்குகளை கடந்து வானதூதர்களால் பயணம் செய்தனர் பாலைவனத்தில். நாம் கோபம் பழிவாங்குதல் வன்மைத்தனம் போன்ன காட்டுவிலங்குகளை நம் நாட்டுக்குள் தெரிந்தெடுத்து பாலைவனமாக்கியிருக்கிறோம் வானதூதரின் அருகை நம் தொடர் பயணத்துக்கு துணையிருந்து எந்த ஒரு பாலைவனத்தையும் கடக்க உடன்வரட்டும் –ஆமென்.