இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு-

மனிதரை பிடிக்க…….!!!

யோனா3:1-5 10 1கொரி7:29-31 மாற்1:14-20



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே புதிய வாரத்தின் முதல்நாளிலே இன்றைய திருவழிபாடட்டிற்கு உங்களை வரவேற்கின்றேன். ஒவ்வொருமுறை இறைபிரசன்னத்திலே நாம் ஒன்றாக கூடும்பொழுது நாம் ஒருகுறிப்பிட்ட பணிக்காக நோக்கத்திற்காக அழைக்கப்படுகிறோம் என்று நினைவுபடுத்தப்படுகின்றோம். திருமுழுக்கின்வழியாக நாம் பெற்ற அழைப்பிற்காகவும் குடும்பவாழ்வில் நம்அழைப்பையும் உணர்ந்து நன்றிகூறுவோம். இந்நாளில் பணியாளர்களாக துறவிகளாக இளம் உள்ளங்கள் அழைப்பை ஏற்க பெற்றோர் துணையிருக்க மன்றாடுவோம்.

அர்ப்பணவாழ்வின் சிறப்பு ஆண்டில் அழைத்தல் வாழ்வில் பல போராட்டங்களில் இருப்பவர்களை இறைபிரசன்னத்தில் நினைவுகூர்ந்து இத்தருணங்கள் அவர்களின் புதிய திருப்பங்களுக்கும் புதுப்பித்தலுக்கும் ஒரு மைல்கல்லாக அமைந்து பணிவாழ்வை மீண்டும் அவர்கள் தொடர துணையாயிருக்க செபிப்போம்.

இன்று இறைமகன் கிறிஸ்து நம்மை தேடிவந்து இன்றைய சமூகத்தில் பன்னிரென்டுபேரை தெரிந்தெடுத்தால் அறிவியல் விஞ்ஞான உலகில் யாரை அவர் தெரிந்தெடுக்கலாம்? மருத்துவரையா? விஞ்ஞானியையா? ஆசீரியரையா? தொழில்நுட்ப பொறியாளரையா? சமூகதொடர்பு துறையிலிருப்போரையா? தொழில்அதிபரையா? விளையாட்டுவீரரையா? அரசியல்வாதியையா? என்றால் இல்லை மீண்டும் அல்லது என்றும் இயேசு வந்துதெரிந்தெடுக்கவிரும்பினால் மீன்பிடிப்பவரையே தன்பணிக்காக இறையரசுப்பணிக்காக திருத்தூதர்களாக அழைப்பார். ஏன் அவர்களையே அழைப்பார்? இதுமட்டும் தான் அவர்களின் வாழ்வாதாரம். அவர்களின் அன்றாட உழைப்பு பிழைப்பு எனலாம் கடலை அவர்கள் முழுவதும் அறிந்தவர்கள். கடல் தண்ணீரின் அபாயத்தை உணர்ந்தவர்கள். கடலின் ஆழம் வேகம் அபாயத்தை கணிக்க சொல்லக்கூடியவர்கள். கடினஉழைப்பாளிகள் ஒவ்வொருமுறை கடலுக்குள் பணிக்காக செல்லும்பொழுது தங்கள் நம்பிக்கை முழுவதும் இறைவனிடத்தில் அர்பணித்தே செல்வார்கள்.

இலங்கைக்கும் மற்றும் இந்திய எல்லைக்கும் இடைப்பட்ட இராமேஸ்வரம் தீவில் ஒருபங்கில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது மீன்பிடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டு வாழும் அம்மக்களின் விசுவாசத்தை நம்பிக்கையை எளியமனத்தை கண்டு அனுபவித்தேன். அவர்கள் கடலுக்குள் செல்ல பின்வரும் காலங்களை பின்பற்றினார்கள். காலை 2மணிக்கு செல்பவர்கள் காலை 10மணிக்கு திரும்பவருவார்கள். மதியம் 3மணிக்கு கடலுக்குள் செல்பவர்கள் இரவு 10மணிக்கு திரும்புவார்கள். சிலதருணங்களில் அதிக மீன்பாடு கிடைக்கும் பலதருணங்களில் ஒன்றும் கிடைக்காது. ஆனால் அதிக மணிநேரங்கள் விடாது மீன்பாடுக்காக தொடர்ந்து முயற்சிசெய்வார்கள். இது வாழ்வின் ஒரு அபாயத்தை எதிர்கொள்ளும் துணிச்சலைக்குறிக்கிறது;. இவர்கள் விசுவாசத்தின் மக்கள் எளிமையான மக்கள் அதேசமயம் சக்தி வல்லமையான உறுதியான மக்கள். எனலாம். ஆண்கள் அதிகாலையில் மீன்பாட்டிற்கு சென்றபிறகு வீட்டுப்பெண்கள் ஆலயத்திற்கு வந்து இறைத்திருப்பலியில் கணவன்மார்கள் பாதுகாப்போடு திரும்பிவர அர்பணித்து செபிக்க ஒன்றுசேர்வார்கள். மறுபடியும் கணவன்மார்களை மகன்களை வரவேற்க கடலோரம் காத்திருப்பார்கள். கடலின் ஆழத்தைபோன்றது அவர்களின் விசுவாசம் மற்றும் கடலின் பரந்த நீரோட்டத்தைபோன்றது அவர்களின் நம்பிக்கை எனலாம்.

இன்’றைய நற்செய்தியில் இயேசு வேலைசெய்துகொண்டிருக்கும்பொழுது அவர்களை அழைப்பதை நாம் காண்கின்றோம். இயேசு ஒன்றும்செய்யாமல் வெறுமையாக உட்கார்ந்து கொண்டிருப்போரை அழைக்கவில்லை மாறாக செயல்பாடுகளில் ஈடுபாடுயிருப்போரையே அழைக்கிறார். மற்றும் அவரின் அழைப்பு ஒரு கட்டாய அழைப்பு ஒரு கட்டளை அழைப்பு எனலாம். “ என் பின்னே வாருங்கள்” என்பது ஒரு உரிமையான கட்டளை அழைப்பு எனலாம் வருவீர்களா? ஆர்வம் இருக்கிறதா? என்ற கேள்விகளை கேட்காமல் உடனே என்பின்னே வாருங்கள் தொடருங்கள் என் தெரிந்தெடுத்து அழைக்கிறார்.

அந்திரேயா திருமுழுக்கு யோவானின் சீடராகயிருந்து மற்றவர்களை திருமுமுக்கு பெற்று சீடர்களாக மாற அழைத்துவந்தார் என நாம் அறிவோம். அவ்வளவு வேகத்தோடு செயல்பட்டஅவர். இங்கு மாற்கு நற்செய்தியாளர் திருமுழுக்குயோவான் கைதுசெய்யப்பட்டபின் இயேசுவின் கலிலேயா வருகையை மற்றும் திருத்தூதர்களை அழைப்பதை குறிப்பிடுவது. நீங்கள் யாருமில்லை கைவிடப்பட்டவர்கள் என நினைக்கவேண்டாம். யோவானின் பணியை முழுமையாக்குவோம் எனபின்னே தொடருங்கள் இறையரசு கனவுக்காக நீங்கள் எனக்குதேவை என்பணிக்கு நீங்கள் உடன் உழைப்’பாளி என அழைக்கின்றார்.

அன்றைய கண்ணோட்டத்தின்படி நிலஉரிமையாளர்கள் முதல்நிலையிலும் கடலைநம்பிவாழ்வோர் அடுத்து அல்லது இறுதிநிலையிலும் இருந்ததாக பார்க்கப்பட்டார்கள் கணிக்கப்பட்டார்கள். இறைமகன் இயேசு அவர்கள் முக்கியமானவர்கள் இறைவன்பார்வையில் முதன்மையானவர்கள் என வெளிப்படுத்துகிறார். திருச்சபை மட்டுமே கடந்து 2015வருடங்களாக தொடர்ந்து முன்னேற்றத்தோடு வளர்ச்சியோடு செயல்பட்டுகொண்டிருக்கும் ஒரு அமைப்பு வாழ்வுமுறை எனலாம். பலமுறைகள் குழுக்கள் மதங்கள் பல்வேறு கோட்பாடுகளோடு நிலைத்திருக்கவில்லை. இது ஆன்மிக மற்றும் அரசியல் அமைப்புகளுக்கும் பொருந்தும் திருச்சபை இறைவன் ஆற்றலினால் இந்த பன்னிரெண்டு எளிய பலவீனமான உறுதியான உள்ளங்களினால் உலகம் முழுவதும் இயேசுவின் உடலாக பரந்திருக்கிறது எனலாம்.

நாம் ஏன் இறைவன் அழைப்பை ஏற்ற மறுக்கின்றோம்? அவர்களிடம் இருந்த எந்த தன்மை நம்மிடம் இல்லை என நினைக்கின்றோம்? நாம் மீன்களைப் பிடிப்பவர்களாக என்ற அழைப்பை ஏற்க தயக்கம் மறுப்பது பல்வேறு காரணங்கள் இருந்தாலும் விட்டுவிட விரும்பாத நிலையே ஒரு முக்கிய காரணமாக நாம் காண்கின்றோம். மீன்களை மனிதரை பிடிப்பவராக என்பது அனைத்து மீன்களையும் ஒருங்கே சேர்த்து அதிலிருந்து பல்வேறு வகைகளை சிறிய பெரிய மீன்களைப் பிரித்தெடுப்பது வலைகளிலிருந்து தனித்தெடுப்பது இவற்றிற்கு மிகப்பொறுமையும் விடா தொடர் முயற்சியும் அவர்களிடமிருந்தது. இயேசு அவர்களைப்பார்த்து பின் தொடருங்கள் என அழைத்தப்பொழுது என் மக்களை இறைவனின் பிள்ளைகளாக சகோதர சகோதரிகளாக இறைதிருவிருந்திற்கு நீங்கள் மீன்களை ஒன்றுசேர்ப்பதுபோல ஒன்றிணைத்து சேர்த்தலே உங்கள் அழைப்பாகும் என வெளிப்படுத்துகிறார். ஒன்று சேர்த்தலே விசுவாசப்பயணத்தின் பயிற்சியின் முதல்படி ஆகும். பழமையான வரலாற்று பழக்கவழக்கங்களில் மீன் பிடித்தல் என்பது ஒரு ஒன்றுசேர்ப்பது கற்பிப்பது என்பதற்கு ஒரு அடையாள மொழியாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வலைகளை படகுகளை தந்தையை விட்டுவிட்டு என்பது அவர்கள் தங்கள் இறுதி துன்ப சாட்சிய மரணத்தையோ மற்றஎதையும் நினைத்துபார்க்காமல் உடனடியாக இயேசுவின் கட்டளையை உணர்ந்து பழைய முன்னைய வாழ்வை நிலையை விட்டுவிட்டு முழுமனதுடன் செயல்பட பின்தொடர வந்ததை குறிக்கிறது. நாம் ஏதை விட்டுவிட தியாகம் செய்ய தயங்குகிறோம்?

இன்றைய முதல்வாசகத்தில் யோனா தன் முன்சார்பு எண்ணத்தை விட்டுவிட மறுக்கிறார். யூதமக்களோடு இணைந்துகொண்டு நினிவே மக்களை புறஇனத்துமக்கள் என எதிரியாக கணிக்கிறார். மற்றும் குறைமனிதமாக விலங்குளாக அம்மக்கள் பார்க்கப்பட்டனர். எனவே யூதமக்களோடு இணைந்து யோனா சிலைவழிபாடுகளில் ஈடுபட்டிருந்த அம்மக்களை தண்டிப்பார் என நம்பி எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் மனம்மாறியது தன் முன்சார்பு எண்ணத்தை விட்டுவிட்டு அம்மக்களை ஒன்று சேர்க்கவிடுத்த அழைப்பு என உணர்கிறார்.

மீட்பின் வரலாற்றில் அழைக்கப்பட்டவர்கள் ஏதோ ஒன்றை விட்டுவிட்டு இழந்து தியாகம் செய்து தங்களை அழைப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். நாம் ஒரு ஆசீரியராக இருக்கலாம் மருத்துவராக பொறியாளர்களாக இருக்கலாம். வக்கீலாக பேராசிரியராக தொழிலாளியாக அன்றாட உழைப்பாளியாக இருக்கலாம். நாம் இருக்கின்ற நிலையில் செய்கின்ற பணியில் வேலையில் நம்முன்பாக நம் அருகில் நம் மத்தியில் சிதறியிருக்கும் பிரிந்திருக்கும் உடைந்திருக்கும் மறுக்கப்பட்டிருக்கும் காயப்பட்டிருக்கும் உள்ளங்களை ஒன்றுசேர்க்க இறைவனின் பிள்ளைகளாக இணைக்க அழைக்கப்படுகிறோம். இத்தகைய அழைப்பை ஏற்க நாம் முன்சார்பு எண்ணங்களை தடையானநிலைகளை விட்டுவிட தியாகம் செய்ய தயாரா?

லோரேட்டோ கன்னியர்களில் ஒருவராக ஆசிரியராக பணயாற்றிய சகோதரி தெரேஸா தன் பணியை மடத்தை விட்டுவிட்டு புதிய அழைப்பை ஏற்று அன்னை தெரெஸாவாக உடைந்நத காயப்பட்ட முகங்களை ஒன்றுசேர்த்தார்.

ஒரு மருத்துவராக லூர்து அன்னையின் குணம்பெற்றோரின் நிலையை உறுதிப்படுத்தும் பணியாற்றிய பேதுரு அருப்பே தன்மருத்துவ பணியைவிட்டுவிட்டு வலுவிலந்த ஏழையான எளிய உள்ளங்களுக்கு மத்தியில் தன் அழைப்பை ஏற்று இயேசுசபை துறவியாகி சபைத்தலைவராகி ஒரு புதிய திருப்பத்தை பணியில் அவர்களிடம் ஏற்படுத்தினார்.

அழைப்பை ஏற்போம்……மீன்களை பிடிப்போம்…….சிதறியவர்களை ஒன்றுசேர்ப்போம் இறைவனின் பாசபிள்ளைகளாக…ஆமென்.