இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு

செம்மறி அவரை: நோக்குவோம்…… தொடர்வோம்….!!!

1சாமு3:3-10 19 1கொரி6:13-15 17-20 யோவா1:35-42



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே திருவழிபாட்டு ஆண்டின் பொதுக்காலத்திற்கு உங்களை வரவேற்று முழுபயனும் பலனும் பெற வாழ்த்துகிறேன். இன்றைய நாட்களில் தொடர்ந்து நடைபெறுகின்ற வன்முறை சம்பவங்கள் தீவிரவாத தாக்குதல்களுக்கு பல உயிர்கள் ஒன்றுமறியா சிறு பிள்ளைகள் பலியாக்கப்படுகின்றனர். இவர்களின் பெற்றோர் குடும்பத்தினரின் சோகத்தின் பிரிவின் வலியும் துயரமும் என்றும் குணப்படுத்தஇயலாததாக அமைந்துவிடுகின்றன. மதத்தின் அதிகாரத்தின் போட்டியாக நிகழும் இவ்வன்முறைகளை நற்கருணைியல் பலியாகும் செம்மறியாம் இயேசுவின் உடைபடும் உடலும் சிந்தப்படும் இரத்தமும் உலகையும் அழிவுப்பாதையில் செல்வோரையும் சுத்தப்படுத்த முறைப்படுத்த முழுமையாக ஈடுபட்டு செபிப்போம். செம்மறி அவரையே நோக்குவோம் அவரையே பின் தொடர்ந்து நடப்போம்.

ஏன் ஞாயிறு திருப்பலிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்ற கேள்விக்கு கிடைத்தபதில் மக்கள் எதிர்பார்ப்புகள் இங்கு தரப்படாததால் அவர்கள் பல்வேறு செபஅமைப்புகளுக்கு எங்கு அவர்களுக்கு பதில் கிடைக்கின்றதோ அங்கே தான் அவர்கள் நாட்டமும் அவர்களின் ஞாயிறு பங்கேற்பும் அமைகிறது என்பதே ஆகும். தொடர்ந்து இங்கே ஞாயிறு திருப்பலிகளில் அவர்களுக்கு கிடைக்கப்பெறாதது என்ன? பல்வேறு இடங்களில் அவர்களுக்கு கிடைக்ப்பெறுவது என்ன? என்ற தொடர்கேள்விகளுக்கு பின்வரும் பதில்கள் தரப்பட்டன.

யாருக்கும் அறியப்படாத புதிய பாடல்கள் பாடப்படுகின்றன!
அங்கே அனைவரும் கைதட்டி பாட அழைக்கப்படுகின்றனர்.!
ஒரே செபங்கள் அடங்கிய திருப்பலியாக அமைகின்றன
ஒவ்வொருமுறையும் புதிய செய்திகள் தரப்படுகின்றன
இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை
மறையுரைகள் அறிவுரைகளாக புகுத்தப்படுகின்றன
நற்கருணைக்கு அதிகநேரம் எடுக்கப்படுகின்றது
நாம் விரும்பியதை செய்ய சுதந்திரம் கொடுக்கப்படுவதுகிடையாது
குருவானவர் மட்டும் முக்கியமானவராக கருதப்படுகிறார்.
இத்தகைய பதில்களை விமர்சனங்களை தருபவர்கள் அவர்களை மையமாக கொண்ட தாங்கள் விரும்பியதை நிறைவேற்ற தங்களுக்கு விருப்பமானதை போதிக்க தாங்கள் விரும்புவதை கேட்க ஒரு செபக்குழுவை அமைத்துகொள்வது தன்னை சுயநலத்தை தன்விருப்பத்தை தனிமனிதத்தை மையப்படுத்திய அமைப்புஆகும். இது போதகர் ஜேம்ஸ் செபக்குழு நற்செய்திவழங்கும் சாம்சன் செபக்குழு என அவர்களுடைய தனிப்பட்ட செல்வாக்கை முன்னேற்ற நடைபெறுவதே இத்தகைய செபகுழுக்கள். நற்கருணை விருந்து இயேசுவை மட்டுமே மையமாக கொண்டதாகும். நாம் ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடுவது அவர்மத்தியில் நம்மை பிரசன்னமாக்கவும் நம் ஒன்றிப்பில் அவர் பிரசன்னத்தை கண்டு பற்றிக்கொள்ளவுமே ஆகும். இங்கு எந்த ஒரு குழுவும் எந்த ஒரு நபரும் குருவானவரோ மையமல்ல தொடர்ந்து பலியாகி பிரசன்னமாகும் இயேசுவே மையம் முக்கியம் என்பதே உண்மை.

இயேசு இலவசமாக நமக்கு விட்டுசென்ற ஒருஉயரிய கொடையே நற்கருணை ஆகும். இதில் அவர் தொடர்ந்து நம்மைதேடிவந்து நம்மில் பிரசன்னமாகி தம்மை உடைத்து தம்மை பகிர்ந்து கொடுத்து நம்மை ஒன்றிருக்திருக்கவைக்கிறார். திருப்பீடத்தை நற்கருணை பலியை மட்டுமே நாம் நோக்கவேண்டும் அவரையோ தொடரவேண்டும். இதுவே நமக்கு கொடுக்கும் அழைப்பும் ஆகும். மாறாக நம் கண்களும் எண்ணங்களும் எந்த ஒரு அலங்கார பொருள்கள் மீதோ குழுக்கள் அல்லது நபர்கள் மீதோ இருக்ககூடாது காரணம் இவைகள் எல்லாம் நம்வழிபாட்டிற்கு துணைபுரியவே இருக்கின்றன. நம் செவிகள் திருப்பலியின் பல்வேறு செபஙகளை இறைவார்த்தைகளுக்கு கவனித்து செவிமடுத்தாலும் நம்கண்கள என்றும் செம்மறியாம் இயேசுவையே நோக்கவேண்டும்.

ஏன் நற்கருணை ஆண்டவரை உற்று நோக்கவேண்டும்? ஏன் உலகின் பாவம் போக்கும் செம்மறி என்ற செபத்தை நற்கருணை உட்கொள்ளுமுன் செபிக்கவேண்டும்? இன்றை நற்செய்தியாளர் யோவான் நம்ஒவ்வொருடைய அழைப்பும் செம்மறி அவரை நோக்குவதும் அவரைத் தொடர்வதுமே என்று எடுத்துக்கூறி உற்சாகப்படுத்துகின்றார். இதன்வழியாக நாம் இறைவனின் பிரிய பிள்ளைகளாக அனைத்து உரிமைகளைப்பெற்று இயேசுகிறிஸ்துவின் சகோதர சகோதிரியர்கள் என்ற குடும்பஉறவில் இணைக்கப்படுகின்றோம்.

நற்செய்தியாளர் இந்த அழைப்பை நமக்கு எடுத்துக்கூறி விளக்க திருமுழுக்கு யோவானின் படிப்பினையை நம்முன் வைக்கிறார். திருமுழுக்கு யோவான் தன்னை நம்பிவந்த அனைத்து மக்களையும் மற்றும் பல்வேறு கேள்விகளோடு வந்திருந்த அனைத்து யூதமக்களையும் மேலும் திருமுழுக்கு யோவானின் பணியினை விரும்பி திருமுழுக்குப்பெற்று அவரின் தீவிர சீடர்களாக பின்பற்றியவர்களையும் பார்த்து தன்கரங்களை இயேசுவின்பக்கம் சுட்டிக்காட்டி அவர்கள் எண்ணங்கள் பார்வைகள் மற்றும் வாழ்வை திசைதிருப்பி அவரே நீங்கள் நோக்கவேண்டிய பின்தொடர்ந்து நடக்கவேண்டிய செம்மறி. உங்களின் உலகின் செம்மறி அவரே பின் தொடருங்கள் என்ற உறுதியான அழைப்புவிடுக்கிறார். தன் சீடர்களை இனிமேல் என்னை அல்ல என் பணியில்லை அவரே நிமிர்நது நோக்க பின்பற்ற பணியாற்ற வேண்டிய உங்கள் செம்மறி உங்கள் மத்தியில் தேடிவந்திருக்கிறார் என்கிறார். ஏன் இயேசுவை செம்மறியாக படம்பிடித்து அழைக்கின்றார் என்பதற்கு அன்று நிலவிய செம்மறியின் புரிதல்களை பழக்கங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இறைவனின் செம்மறி என்பது மக்கள் பயன்படுத்திய பரிச்சயமான சொல்லாகும். விவிலியத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இறுதி நூலாகிய திருவெளிப்பாட்டில் மட்டும் 29முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. யூதமக்கள் ஜந்துவிதமான செம்மறி அர்த்தங்களை அறிந்திருந்ததால் திருமுழுக்குயோவான் அவர்களை இயேசுவின் பக்கம் திசைதிருப்ப இவரே உண்மையான செம்மறி எனவிளக்குகிறார்.

கழுவாயாகும் செம்மறி: லேவி16:20-22 யோம் கிபூர் என்ற சிறப்பு திருவிழா கழுவாயின் நிகழ்வாக கொண்டாடப்பட்டது. செம்மறி ஆடானது கோயிலுக்குள் கொண்டுவரப்படும் தலைமைக்குரு தன்தரங்களை செம்மறியின் தலைப்பக்கம் வைத்து மக்களின் பாவங்களை அறிக்கையிட்டு அவைகளை அதன்மேல் சுமத்தி பாவத்திற்கு கழுவாயாக அது பாலைநிலத்திற்கு தனிமையான பகுதிக்கு சென்று அங்குவிடப்படும். அனைவரின் பாவங்களை சுமந்திருக்கும் அச்செம்மறி ஆடானது வனவிலங்குகளுக்கு இரையாகும்.

தினமும் கழுவாயாகும் செம்மறி: வி.ப29:39-42 எண்28:1-8 இது தினமும் நடைபெறும் கழுவாய் பலியைக்குறிக்கிறது. இது தினமும் காலையும் மாலையும் எருசலேம் ஆலயத்தில் குருக்களால் மக்களுக்காக நிறைவேற்றப்பட்ட பலியாகும். இரவில் செய்யப்பட்ட குற்றங்கள் பாவங்களுக்காக காலைப்பலியும் நாளில் புரியப்பட்ட குற்றங்கள் பாவங்ளுக்கு மாலைப்பலியும் நிறைவேற்றப்பட்டன.

பாஸ்கா செம்மறி: வி.ப12:11….இது வரலாற்று நிகழ்வான இஸ்ராயேல் மக்களின் விடுதலைநிகழ்வை குறிக்கின்ற செம்மறி பலியாகும். எகிப்திய தலைமகன்கள் கொள்ளப்பட்டன. ஆனால் கொல்லப்பட்ட செம்மறியின் இரத்தம் இஸ்ராயேல் வீட்டாரின் வாசல்கதவுகளில் தெளிக்கப்பட்டதால் வானதூதர் கடந்துசென்று அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு கடந்துசெல்ல காரணமாயிற்று. இதையே ஒவ்வொரு வருடமும் கடத்தல் விழாவாக பாஸ்கா செம்மறிவிழாவாக நினைவு கூறப்பட்டது.

இறைவாக்கினர்களின் செம்மறி: இறைவாக்கினர்கள் ஏசாயா மற்றும் ஏரேமியா மக்கள் மீட்பை காண்பார்கள் அனுபவிப்பார்கள் இது செம்மறியின் துன்பம் இரத்தம் சிந்தப்பட்ட இறப்பினால் கிடைக்கப்பெறும் என் இயேசுவை செம்மறியாக முன்குறிப்பிட்டு சொலவதே எரே11:19 “வெட்டுவதற்கு கொண்டுசெல்லபப்படும் சாந்தமான செம்மறிபோல” ஏசா53:7 “அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோல”.

வெற்றியாளர்களின் செம்மறி: சிறந்துவிளங்கி பெயர்பெற்ற தலைவர்களான சாமுவேல் – தாவீது –கொம்புகளை தாங்கிய செம்மறி என அடைமொழியால் அழைக்கப்பட்டனர். மக்கேபேயுவின் புரட்சி மற்றும் போரின் போது வெற்றியைவெளிக்காட்ட கொம்புகளுடைய செம்மறியின் படம் யூதக்கொடியிலி சித்திரிக்கபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்சொல்லப்பட்ட பலிகள் குருக்களர் நிறைவேற்றப்பட்டது விலங்குள் கொள்ளப்பட்டு பாவத்தின் கழுவாயாக பலியாக்கப்பட்டன இதன் இரத்தம் தூயகத்திலும் மக்கள் மேலும் தெளிக்கப்பட்டன. இது பாவமன்னிப்பை பெற்றுதரும் செயலாக சடங்காக தொடர்ந்து நடைபெற்றன. ஆனால் அங்கு மனதிருத்தல் இல்லை மனஉணர்வும் இல்லை. குருக்கள் தரகர்கள் வியாபரிகளுடன் இணைந்து குறைபாடுள்ள விலங்குகளை விற்று பலியிட்டு பலி ஒருவெறும் சடங்காக ஒரு அர்த்தமற்ற செயலாக நடந்தேறியது. மக்களும் குருக்களுக்கேற்ப குருட்டுதனமான பலியில் ஈடுபட்டு வாழ்வில் மாற்றமில்லா தருணத்தில் பலிபயன்படுத்தப்பட்டபொழுது திருமுழுக்கு யோவான் குருக்கள் குடும்பத்தில் உதித்தவர். இயேசுவை சுட்டிகாட்டி இவரே இனி உண்மையான செம்மறி நீங்கள் உற்றுநோக்கவேண்டியது பின்தொடரவேண்டியது செம்மறி இயேசுவே அவரே எருசலேம் அவரே மீட்பு என அழைப்புவிடுக்கிறார். தன்சீடர்களுக்கு சுற்றியிருந்தவர்களுக்கு.

இயேசு எவ்வாறு உண்மையான செம்மறி?
இஸ்ராயேல் ப.ஏ- எருசலேம்- மன்னிப்பின் – குணப்பெறுதலின் – போதனைகிடைக்கும் இடம் விலங்குகள் கொல்லப்பட்டன விலங்குகள் மக்களின் பாவங்களை சுமந்தன இரத்தம் தெளிக்கப்பட்டன சதை பகிரப்பட்டன

இயேசு – மன்னிப்புபெற – குணம்பெற மற்றும் போதனையை கேட்க இயேசுவிடம் வந்தனர். இயேசு மனித்தத்தின் பாவங்களை சுமந்தார் ஏற்றுக்கொண்டார் தன் உடல் சிதைப்பட்டு பாடுபட்டு இரத்தம் சிந்திய மரணத்தினால்.

நற்கருணை –ஆலயம்-திருப்பீடம் இன்று மன்னிப்பின் – குணம் பெறும் – போதனை பெறும் பிரசன்னம் ஆகும். இயேசு பிரசன்னமாகிறார் செம்மறியின் உடல் உண்ணப்படுகிறது இரத்தம் பருகப்படுகிறது.

செம்மறியாம் இயேசுவை நோக்க அவரை தொடர நற்கருணையை நாடிவருவோம். முழுமையாக நம்மை ஈடுபடுத்தி பங்கேற்போம் அவருடைய உடலை ஏற்று இரத்தத்தை பருகும்பொழுது சொல்லும் ஆமென் அர்த்தமுள்ளதாக அமையட்டும். நம் உடல் மன வலிகளை துயரங்களை போரட்டங்களை தன்மேல் சுமந்து நமக்கு மன்னிப்பையும் – குணத்தையும் –போதனையையும் தரும் அவரை நோக்குவோம் அவைரையே பின் தொடர்வோம் –ஆமென்.