இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு

அன்று… வார்த்தை பேசியது… உறவுஉயிரானது!
இன்று…கருவிகள் பேசுகிறது…உறவு டைம்பாஸ்!

ஏசா 55:10-11; உரோ8:18-23; மத் 13:1-23



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சசோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே உங்கள் அனைவரையும் நற்கருணை பீடத்திற்கு ஒரே சமூகமாக பங்கெடுக்க அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். ஒவ்வொரு ஞாயிறும் நாம் தவறாமல் இறைசந்திதானத்தில் இணைந்துவருவது இறைவனுக்கும் நமக்குமிடையே அமைந்துள்ள உடன்படிக்கை உறவை புதுப்பிக்கவும் மற்றும் நம் சமூகஉறவுகளை மதித்து சமத்துவவாழ்வு வாழவுமே ஆகும். இறைவார்த்தைகள் வழியாக நம்மை சந்திக்கவரும் இறைவனை நாம் மனம் திறந்து கண்விழித்து ஏற்போம் அவரின் உயிருள்ள வார்த்தைகள் நமக்கும் நம் சமூக வாழ்வுக்கும் உயிரோட்டமாக அமையட்டும்.

அவர் தொடர்புகொள்ளும் எல்லையில் இல்லை ஒலிக்கு பிறகு உங்கள் செய்தியை பதிவு செய்யவும். வாட்ஸ்அப் - மெசஞ்சர் - ஸ்கைப் - வாய்ப் என்ற பல்வேறு கருவிகள் பேசுகிறது நம்மோடு நமக்காக வார்த்தைகள் குறுகிப்போனது வார்த்கைகள் படங்களாக குறீயிடுகளாக பரிமாறப்படுகின்றன. உறவுகள் உண்மையில்லாமல் தடுமாற்றத்தில் இருக்கின்றன. காரணம் பேசுவதற்கு நேரமில்லை. எத்தனை பேரிடம் பேசுவது? பேசுவதால் என்ன பயன்? எதுவும் உண்மையில்லையாதது எல்லாம் டைம்பாஸ் தான் என்ற எண்ணம் இளைய உள்ளங்களிடம் அதிகமாக நிலவிவருகிறது. இதே எண்ணம் தான் பேசாத இறைவனாக தொலைவில் நிற்க வைக்கிறது. உண்மை உறவை கண்டுகொள்ள இன்றைய வழிபாடு அழைக்கிறது.

பிறந்த குழந்தை எப்பொழுது தவழும் எப்பொழுது நிற்கும் எப்பொழுது நடக்கும் எப்பொழுது பல் முளைக்கும் அதையும் கடந்து எப்பொழுது தன் முதல் எழுத்தை- வார்த்தையை பேசும்? ஏப்பொழுது அம்மா என்ன முதல் வார்த்தையை உச்சரித்து வெளிப்படுத்தும் என்பதை நாம் ஆவலோடு எதிர்ப்பார்க்கின்றோம். குழந்தையின் பாசம் தெரிந்தும் அது பேசும் பொழுது அங்கு உறவு உயிர்பெறுகிறது வாழ்வு உயிரோட்டமாகிறது. வாழ்க்கை துணையாக வரப்போகும் அல்லது விரும்பி துiணாக தெரிந்தெடுக்கும் உறவு பேசும் முதல் வார்த்தைக்காக எவ்வளவு ஆதங்கம் எத்தகைய ஆவலான எதிர்ப்பார்ப்பு காரணம் பேசும் அவ்வார்த்தையில் உறவு உயிர்பெறுகிறது வாழ்வு உயிரோட்டமாகிறது. ஏன் இறக்கும் தருவாயில் படுக்கையில் இருக்கும் பெரியவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பது அவர்கள் பேசும் கடைசிவார்த்தைக்காகதானே..அவர்கள் பேசும் பொழுது அங்கு உறவு உயிர்பெறுகிறது வாழ்வு உயிரோட்டமாகிறது. எங்கு பேச்சு இல்லையோ அங்கு உறவு அமைதியாகிறது முற்றுப்புள்ளியாகிறது.

இறைவன் தொடர்ந்து மக்களுக்கு தன்னை தன்வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். படைத்த அனைத்தையும் உருவாக்கிய தங்களை சிறப்பாக தெரிந்தெடுத்து அழைத்த இறைவனை காணமுடியவில்லை தங்கள் கண்களால் காணஇயலாத இறைவனை காதால் மனதால் அவர் பேச்சை வார்த்தையை கேட்க விரும்பினர் காத்திருந்தனர். இநைவன் பேச்சு தொடர்ந்தது. தலைவர்கள் - அரசர்கள் - இறைவாக்கினர்கள் - நீதிபதிகள் வாயிலாக பேசி அவர் வார்த்தையால் அவர் அன்பு நிபந்தனையில்லாதது அவர் உடன்படிக்கையின் வாக்குறுதி முடிவில்லாதது என உறுதிபடுத்தி அவர்களோடு வார்த்தையாக பயணம்செய்தார் அவர்கள் உறவு உயிர்பெற்றது வாழ்வு உயிரோட்டமானது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா இறைவனின் ஆறுதலின் வார்த்தைகளை வெளிக்கொணர்கிறார். ஏசாயா கி.மு 6ம்நூற்றாண்டில் தன்சகோதரங்களான பாபிலோனிய அடிமைத்தனத்தலிருந்து விடுதலையாகி யூதேயா திரும்பும் தருணத்தில் மக்களின் எண்ணங்கள் இறைவன் எங்களோடு பேசுவதை நிறுத்திவிட்டார் யாவே இறைவன் அமைதியாகிவிட்டார் எங்கள் உறவுகளுக்கு உடன்படிக்கைகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டார் எனவே தான் நாங்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டோம் ஏன் திரும்ப செல்லவேண்டும் என்ற எண்ணங்களோடு மனக்கலங்களோடு இருந்த தருணத்தில் ஏசாயா இறைவனின் வார்த்தைகளை அவர்களிடம் இவ்வாறு பேசுகிறார். யாவே இறைவன் அவர் வார்த்தைகள் உயிரோட்டமுள்ளவை என்றும் உண்மையானவை ஆற்றல் நிறைந்தவை அவர் வார்த்தையே அவர் பிரசன்னமாகும். அவர் உங்களோடு தொடர்ந்துபயணம் செய்கிறார் நீங்கள் தான் உயிருள்ள அவர் வார்த்தையை உங்கள் மத்தியில் கண்டுகொள்ளவதில்லை என்று எடுத்துரைத்து அவர்களை திரும்பச்செல்லுங்கள்…..உங்கள் நாட்டுக்கு இறைவன் அளித்த நிலத்திற்கு திரும்பிசெல்லுங்கள்…. யாவே இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்… அவர் உடன்படிக்கை;கு திரும்பச்செல்லுங்கள்….உங்கள் விசுவாசத்திற்கு திரும்பிச் செல்லுங்கள் என்று அழைப்புவிடுத்து இறைவனின் பேச்சை வார்த்தைகளை மழைத்துளிக்கும் பனித்துளிக்கும் ஒப்பிட்டு அவைகள் எவ்வாறு காய்ந்துபோன நிலத்தை ஈரப்படுத்தி நனையவைத்து விதைகளுக்கு உயிரளித்து அங்கு தளிர் உயிராக உதயமாவதைப்;போல இறைவனின் வார்த்தை என்றும் உயிருள்ளது ஆற்றல் நிறைந்தது அதற்குரிய நோக்கத்தை அடைய என்ற செயலாக்கம் கொண்டது யாரும் எந்நிலையிலும் இறைவனின் வார்த்தைக்கு பேச்சுக்கு தடையாக அதை நிறுத்தவோ முடியாது என உறுதியாக எடுத்துரைக்கிறார்.

மத்தேயு இன்றைய நற்செய்தியை யூதேயா கிறிஸ்தவ மக்களுக்கு அவர்கள் சகயூத மக்களால் மற்றும் உரோமை அரசுகளால் எதிர்க்கப்பட்டு தாக்கப்பட்டதருணத்தில் திருத்தூதர்களின் அனுபவத்தை ஆற்றல்நிரம்பிய வார்த்தைகளாக எடுத்துச்சொல்கிறார். யாரும் உங்களை நிறுத்த தடுக்கு எதிர்க்க இயலாது காரணம் இறைவார்த்தையை யாரும் தடுக்க இறைவார்த்தையை யாரும் முடிவுக்குகொணரமுடியாது அது முடிவில்லாதது. அவர் பேச்சை கேளுங்கள் அவர் வார்த்யை பற்றிக்கொள்ளுங்கள் அவ்வார்த்தையைப்போல எந்நாளும் நிமிர்ந்து நிற்ப்பீர்க்ள் என சவாலோடு அழைக்கிறார். இயேசு பரிசேயர்கள் மறைவல்லுநர்கள் குருக்களால் எதிர்க்கப்படுவதைப்பார்த்து செபக்கூடத்தில் போதிக்ககூடாது எனநிறுத்தப்பட்டதை அறிந்து இயேசுவின் பேச்சு நிறுத்தப்பட்டு விட்டது அது முடிவு பெற்றது என்று உற்சாகம் குறைந்தவர்களாக தளர்ச்சிஅடைந்தவர்களாக தோன்றிபொழுது இயேசு அன்றைய பாலஸ்தீன சுற்றுசூழல் அனுபவத்தை அவர்கள் முன்வைத்து அங்குள்ள நிலத்து விதைகள் நிலம் எவ்வாறு இருந்தாலும் உயிருள்ள விதைகளாக விதைக்கப்பட்டு நிலத்தின் ஏற்றுக்கொள்ளும் தன்மைகேற்ப பலன் தருவதைப்போல அப்பலனை அவ்விதைகளின்உயிரை தடுக்கமுடியாது இதுபோல யாரும் அவரின் வார்த்தையை தடுக்கவோ எதிர்ப்பினால் நிறுத்தவோமுடியாது என இறைவார்த்தையை பற்றிக்கொள்ள திருத்தூதர்களை உற்சாகப்படுத்துகிறார்.

கிரேக்க மற்றும் எபிரேய மொழிகளில் வார்த்தை என்பதற்கு உயிர் அல்லது உயிர்அணு என்பதன் பொருளாகும். இறைவார்த்தை :” எரே20:9 இதயத்தில்’ எரிந்துகொண்டிருப்பதைப்போல ஏசா40:8 எந்நாளும் நிலைத்துநிற்கும் 49:2 கூரிய வாளைப்போன்றது எபி4:12 இருபுறமும் கூறிய வாளைப்போன்றது எரே23:29 எரியும் நெருப்பை போன்றது தி.பா119:105 பாதத்திற்கு விளக்கும் பாதைக்கு வெளிச்சமும் போன்றது” இவைகள் உயிரோட்டமுள்ள இறைவார்த்தைக்கு சாட்சிபகர்கின்றன.

சிறிய ஊரில் வாழும் எலிசபெத் தான் உயிர்வாழ மாற்று இதயம் பொருத்தபடவேண்டும் எனஅறிந்தநாளிலிருந்து தன் பிள்ளைகளில் கடைசிமகனை அழைத்துவந்து மருத்துமனைக்கு அருகில் உள்ள நகர்புறத்தில் இல்லம் எடுத்து தங்கினாள் அடுத்து அருகாமையில் உள்ள கத்தோலிக்க ஆலயம் சென்று அங்குள்ள விவிலிய இறைவார்த்தைகுழுவில் இணைந்து வாரந்தேர்றும் இறைவார்த்தையை குழுவாக பகிர்ந்து படிப்பதில் ஆர்வம் காட்டினாள் பத்து மாதங்கள் கழித்து மருத்தமனையிலிருந்து பொருத்தமான இதயம்கிடைத்துள்ளது வாருங்கள் என்றுசெய்திக்குப்பிறகு காலை 3மணி; மாற்று அறுவைசிகிச்சைக்குமுன் தன் இறைவார்த்தைகுழுவின் உள்ளங்கள் ஒன்றுசேர்ந்து செபம் செய்து அனுப்பிவைத்தனர். சிகிச்சைப்பெற்று இல்லம் திரும்பும்முன் எது உங்களுக்கு நம்பிக்கையை காத்திருக்கும் தருணத்தில் சக்தியைதந்தது என்ற கேள்விக்கு எலிசபெத் சொன்னது நான் பற்றிக்கொண்ட இறைவார்த்தை என்னுள்ளும் எனக்கும் உயிராக இயங்கியது நம்பிக்கையை ஆற்றலை தக்கவைத்தது என்றார். நாமும் உயிரோட்டமுள்ள இறைவார்த்தையோடு ஒள்றாவோம்.

நான் குடும்பத்தோடு இறைவார்த்தைக்கு நேரம் கொடுக்கின்றேனா?
பேசும் இறைவனின் குரலாக பிறருக்கு செயல்படுகின்றேனா?
பிறரோடு நான் எவ்வாறு தொடர்புகொள்கிறேன் உயிருள்ள வார்த்தையிலா அல்லது டைம்பாஸ் மொழிகளிலா?
செயல்பட ….சிந்திப்போம்….உயிர்பெறுவோம் அவர் வார்த்தையால்-ஆமென்.