இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








திருக்காட்சி பெருவிழா

என் விண்மீன்……. என் பயணம்… என் மாற்றுப்பாதை!!!

ஏசா60:1-6 எபே3:2-3 5-6, மத்2:1-12.



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே திருகாட்சி பெருவிழாவின் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இத்திருவிழாவின் வரலாறு நமக்குச்சொல்வது .இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவது நான் அனைவருக்காகவும் இருக்கின்றேன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே. குழந்தை இயேசுவை நாம் கண்டு ஏற்று ஆராதிக்க நாமும் ஞானிகளைப்போல பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் நம் மத்தியில் தொடர்ந்து பலவகைகளில் பிறந்துகொண்டேயிருக்கிறார். நான் என் அன்றாட மற்றும் ஆன்மிக பயணத்தில் நான் எவ்வாறு பயணித்து இறைவனை தேடுகிறேன்? அன்று ஞானிகள் விண்மீன்களை பின்பற்றினர். நாம் இன்று ஜிபிஎஸ்ஸை பின்பற்றுகிறேன். நம் ஜிபிஎஸ் குழந்தை இயேசுவை நமக்கு அடையாளம் காட்டட்டும். இன்றைய திருவிருந்து நம்பயணத்தை புதுப்பிக்க புதுவடிவம் கொடுக்க அழைத்துச்செல்லட்டும்.

காலையில் எழுந்தவுடன் இன்றைய என் ராசி என்ன சொல்லுகிறது என அன்றாட ராசிபலனை என்விண்மீனாக கொண்டு பயணம் செய்கின்றேனா?

மதுராந்தகம் பக்கமா அல்லது திருவள்ளுர் பக்கமா எங்க நிலம் வாங்கலாம் என ஜோசியரை பார்த்து கேட்கிறபொழுது ஜோசியம் என் பயணத்தில் நான் பின்பற்றும் விண்மீனாகிறது..

யாரும் நிரந்தரமா இந்தவீட்ல குடியிருப்பது கிடையாது காரணம் வாஸ்து சரியில்லை வாசல்படியை இடித்து மாற்றி கட்டனும் என நம்பிசெயல்படும்பொழுது வாஸ்துபார்ப்பது நான் பின்தொடரும் விண்மீனாகிறது….

இந்த நடிகர் தான் நமக்கு எல்லாம் அவர் படத்தை முதல் காட்சியாகவும் மற்றும் ஜந்து தடவையாவது பார்க்கவேண்டும் என்பது நடிகர் ஒருவரை விண்மீனாக பின்தொடர்வதை குறிக்கிறது……..

இந்த பழக்கம் இல்லாம நான் நான் தூங்கமுடியாது என எந்த போதைபழக்கத்திற்கு அதிகநேரம் செலவிடும் பொழுது அதுவே நான் பின்பற்றும் விண்மீனாகிறது…

படிப்பதைவிட கனவுலகில் யாரைகவரலாம் என்று அதிக நேரம் செலவிடுவது நான் பின்பற்றும் விண்மீனாகிறது…..

என் பயணம் என் பயணம் எதை நோக்கி அமைகிறது? நான் பின்தொடரும் விண்மீன் என்ன? என்ற கேள்வியை எழுப்பி சுய ஆய்வுசெய்ய இன்றைய திருவிழாவின் இறைவார்த்தைகள் நம்மை அழைக்கிறது. இறைவனை வெளிப்படுத்தும் காட்சிபடுத்தும் இத்திருவிழாவில் நம் பயணங்களுக்கு புதுவடிவம் கொடுக்க முயற்சிசெய்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர் கி.மு 538-ல் இஸ்ராயேல் மக்களுக்கு மாற்று பாதையில் புதியதொரு பயணத்திற்கு உற்சாகப்படுத்தி அழைப்பதை படிக்கிறோம். இஸ்ராயேல் மக்கள் நாடோடிகளாக தொடர்ந்து ஒவ்வொரு இடமாக பயணம் செய்துகொண்டிருந்தவர்கள் ஆவர். பயணம் அவர்களுக்கு பழக்கமானது பரிச்சயமானது பயணத்திற்கு சலைத்தவர்கள் அல்ல. ஆனால் 70 வருட பாபிலோனிய அடிமைதனத்திற்குபிறகு அவர்கள் வெறும் இருளையும் – அழிவுகளையும் – சோகங்களையும் – கண்ணீர்களையுமே கண்டார்கள். .இங்கே ஏசாயா இறைவாக்கினர் மாற்றுபாதையில் பயணியுங்கள் புதிய எருசலேமாக இருளை அழித்து ஒளியை உங்கள் மீதுவீசச்செய்வார் உங்கள் பயணம் புதுவடிவம் பெறட்டும் என உற்சாகப்படுத்தி உணர்த்துகிறார். இது எதிர்கால ஞானிகளின் எருசலேமிலிருந்து பெத்லேகேமை நோக்கிய பயணத்தை முன்நிறுத்துகிறது.

மத்தேயு நற்செய்தியாளரின் வரிகள் நம்மிடையே பலபின்வரும் கேள்விகளை எழுப்புகின்றன: ஏன் ஞானிகள் தொலைதூர கீழ்த்திசையிலிருந்து இயேசுவை பார்க்கவந்தார்கள்? மொத்தம் மூன்று ஞானிகளா அல்லது அதிகம் பேரா? அவர்கள் கொணர்ந்த காணிக்கை பொருட்களின் அடையாள அர்த்தம் என்ன?

1)இயேசு மனிதமாக மீட்பராக முடிவில்லா அரசராக பிறந்திருப்பது எல்லோருக்காகவும் என்பதைக்குறிக்கவே தொலை தூரத்திலிருந்து ஞானிகளின் வருகைஅமைகிறது. இவர் யூதர்களுக்கு மடடுமல்ல மாறாக புறஇனத்தவர்களுக்கும் சொந்தமாவார் என்பதாகும். திருக்காட்சி என்பது கிரேக்க மொழியில் புறஇனத்தவர் உட்பட அனைவருக்கும் வெளிப்படுத்தினார் மற்றும் காண்பித்தார் என்பதாகும்.

2) ஞானிகள் இயற்கையை கணித்து படித்து விளக்கும் தரும் கலையில் கைதேர்ந்தவர்களாவர். அவர்கள் பாரசீக பகுதியிலிருந்து பயணதித்து வந்திருக்கலாம். தங்கள் படிப்பின் வழியாக இயேசு அரசரின் பிறப்பை நம்பி தங்கள் செலவாக்குகளோடு பரிசுகள் எடுத்து வந்து வணங்கவந்திருக்கலாம்.

3) மத்தேயு ஞானிகளின் பெயர்களை தராவிட்டாலும் பாராம்பரியமாக அவர்களின் பெயர்கள் கஸ்பார் – மெல்கியோர்- பல்தசார் எனசொல்லப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அவர்கள் எ:டுத்து வந்த பொன் இயேசுவின் அரசத்தன்மையையும் – சாம்பிராணி தூபம் குருத்துவ நிலையையும் மற்றும் வெள்ளைப்போளம் அவருடைய இறப்பை முன்சொல்லி அதற்குரிய சடங்குகளை நம்முன்வைக்கிறது.

இவைகள் அனைத்திலும் இத்திருகாட்சி திருவிழாவில் நான் சிந்திக்க அழைப்பது அவர்கள் சென்ற அவர்களை வழிநடத்திய விண்மீனின் மாற்றுப்பாதையை நாமும் பின்பற்றவேண்டுமென்பதே. ஞானிகள் தொலைதூரப்பயணத்தில் எடுத்துக்கொண்டது மூன்று மாதங்கள் ஆகும் அத்தருணங்களில் அவர்களும் பல மாற்றுப்பாதைகளை தெரிந்தெடுத்திருப்பார்கள். அவர்கள் ஏரோது அரண்மனையிலிருக்கும்பொழுது விண்மீன் மறைகிறது இருள்கவ்விக்கொள்கிறது. பின் அவர்கள் விண்மீனை கண்டு பின்பற்றி மாற்று பாதையில் சென்று சந்தித்து வணங்கி ஆராதிக்கின்றனர். இந்த மாற்று பாதை வெறும் வெளிப்படையான பயணமட்டுமல்ல மாறாக அவர்களின் ஜோதிட பயணத்திலிருந்து படிப்புகளிலிருந்து புற இனவழிபாடுகளிலிருந்து மீட்பரை இயேசுவை குழந்தையாக ஏற்றுக்கொள்ளும் ஒரு மாற்றுப்பயணம் ஆகும்.

நம்பயணம் ஒரே பழகிப்போன பாதையில் ஒரே வீண்மீனை கண்டவாறு அமைந்திருக்கிறதா? புதிய பயணத்தை மாற்றுப்பாதையைில் நான் பயணிக்கத்தயரா? ஹென்றி வேன்டையுகின் நான்காவது ஞானி திரைப்படம் நமது சிந்தனையோடு இணைந்ததாகும். அர்த்பன் என்பவனே அந்த நான்காவது ஞரனி. அவன் விலையுயர்ந்த மாணிக்ககற்கள் மற்றும் முத்து இவைகளை பிறந்த அரசக்குழந்தைக்கு கொடுக்க எடுத்துச்செல்கிறான். அவன் மற்ற மூன்று ஞானிகளை நேரத்தோடு சந்திக்க இயலாது தவறவிடுகிறான். ஏனென்றால் அவன் தெரிந்துகொள்ளும் மாற்றுப்பாதையே ஆகும் அது இறக்கின்ற மனிதனை சந்தித்து உதவிசெய்கிறான். ஒரு சிறுபிள்ளையை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். பாலைநிலத்தை கடக்க தன் குதிரையைவிற்று ஒட்டகத்தை பயணத்திற்கு பயன்படுத்துகிறான். துன்புறும் பசியிலிருக்கும் உரிமைமறுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு புதுவாழ்வை புதிய பயணத்தை காண்பிக்கின்றான். இவ்வாறு முப்பத்தி மூன்று வருடங்கள் கழித்து எருசலேமை அடையும்பொழுது அங்கே ஒருஇளம்பெண்ணை அடிமைவிற்பனையிலிருந்து காப்பாற்ற கடைசியாகயிருந்த மாணிக்ககற்களை மானியமாக கொடுத்து அவளுக்கு விடுதலை பெற்றுதருகின்றான். இத்தருணத்தில் தான் பொய்சாட்சியத்துக்குள்ளாகி சிலுவைப்பயணத்திலிருக்கும் இயேசுவைக்காண்கின்றான். நான் தாமதமாகிவிட்டேனா? பாதை தவறவிட்டுவிட்டேனா? விண்மீனை பின்பற்றவில்லையா? என்ற கேள்விகுழப்பத்தோடு தடுமாறுகையில் அவனுக்குச்சொல்லப்பட்டது “சின்னஞ்சிறிய சகோதரர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” என்பதாகும்.மத்25:40.

நான் தெரிந்தெடுக்கவேண்டிய மாற்றுப்பாதை எது?
எந்த வீண்மீனை பின்தொடர்ந்து என்பயணம் அமையவேண்டும்?
குழந்தை இயேசு நம்மை சுற்றியிருக்கிறார்… ….தனிமையிலிருப்போரை நோக்கி – துயருவோரைநோக்கி – அழிவைநோக்கிசெல்லும் இளைஞனைநோக்கி – வழிதெரியா சிறாரை நோக்கி நம் மாற்றுபாதை நம் பயணத்திற்கு புதிய வடிவம் கொடுக்கட்டும் –ஆமென்.