இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








கிறிஸ்து பிறப்பு காலம்

குடும்பம்…….. ஆசீரும்… ஆணிவேரும்!

சீராக்3:2-6 12-14 கொலோ3:12-21, லூக்2:41-52



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே நம் பிறப்பு ஒரு குடும்பத்திலே..நம் வளர்ப்பும் குடும்பத்திலே…நம் விசுவாசமும் குடும்பத்திலே. ஆக குடும்பம் தான் நமக்கு ஆரம்பம் அடிப்படை மற்றும் ஆணிவேர் எனலாம். இறைப்பீடத்தை நோக்கி ஒவ்வொரு ஞாயிறும் அழைக்கப்படும் பொழுதெல்லாம் நாம் நற்கருணையின் குடும்பங்களாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றோம். நற்கருணையின் அப்பம் உடைபடுதலும் பகிர்தலும் நம் குடும்ப உறவுகளில் தொடர அர்ப்பணித்து செபித்து இணைவோம்.

குடும்பங்களை மையப்படுத்தியே அனைத்து திரைப்படங்களும் சின்னத்திரை தொடர்களும் நாள்தோறும் அமைகின்றன. இவைகள் குடும்ப உறவுகளில் உள்ள குறைகளை பிரிவினைகளை சில வகைகளில் மிக உயர்த்தி காண்பிக்கின்றன. கூட்டுக்குடும்பங்களை பல தனிப்பட்ட குடும்பங்களிலிருந்து வேறுபடுத்திகாண்பிக்கின்றன. நம்மை சுற்றியிருக்கின்ற ஆளும் மீடியாக்கள் தனித்து வாழலாம் இனிமையாய் வாழலாம் என சுத்தமில்லா சுதந்திரத்தை வலியுறுத்துகின்றன.. எனக்கு திருமணத்தில் பிடிப்பில்லை விருப்பமில்லை என சொல்லும் இளையோர் நம் மத்தியில் அதிகமாகிக்கொண்டிருக்கின்றனர். நானும் என் சகோதரி விழுந்த குழியிலேயே தெரிந்தே விழுந்து அழியவேண்டுமா? என்றதொரு முன்சார்பு எண்ணங்களோடு கசப்பான உணர்வுகளடங்கிய உறவுகளாக இல்லறத்தை குடும்பத்தை பார்க்கசெய்கின்றன. இன்றைய திருகுடும்பத் திருவிழா நம் ஒவ்வொருவருடைய குடும்பங்களும் ஆசீர் நிரம்பியவை ஆணீ வேரானவை மேலும் ஒரு குட்டித்திருச்சபையாகும் என இந்த நாள் நமக்கு உணர்த்துகின்றன.

முதல் வாசகத்தின் ஆசீரியர் பென் சீரா சட்டங்களை பயிற்றுவித்த ஆசீரியர் எனலாம். தன் அறிவுரை நூலை உற்சாக வார்த்தைகளில் கி.பி 2ம் நூற்றாண்டில் எழுதுகிறார். அவரும் தந்தையாக கணவராக குடும்பத்தின் பெரியவராக அனுபவப்பட்டிருப்பார். தன் நூலின் இப்பகுதியை அன்றைய கிரேக்க - ஹெலனிச கலாச்சாரம் மற்றும் தத்துவ போதனை கொள்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு நிரந்தமில்லாத தன்மை – சுயமான வாழ்வு – அறிவே உயர்ந்த சக்தி இவைகளை தமதாக்கி யாவே இறைவனை மறந்திருந்தவர்களுக்கு பென் சீரா தனது எழுத்துக்களில் குடும்பம்தான் இறைவனின் கொடையையும் ஆசீர்களையும் இறைவனின் கட்டளை கடமைகளைகளின் வழியாக நமக்கு பெற்றுத்தருகின்றன என்பதை உணர அச்சமூகத்திற்கு எச்சரித்து வெளிப்படுத்துகிறார்.

தந்தையையும் தாயையும் மதித்திருப்பாயாக என்ற கட்டளைகளை விளக்கி சொல்லி தன்பெற்றோர்களை மதித்து உடனிருப்பவர்கள் செல்வங்களை நிறையப்பெறுவர் –நீண்ட ஆயுளைப்பெறுவர். மேலும் மன்னிப்பை பெற்று ஏற்றுக்கொள்ளப்படுவர் என பெற்றவர்கள் மற்றும் பெரியவர்ளுக்கு நேரம் கொடுத்து மதித்து நடப்பவர்கள் அவர்களின் ஆணிவேராகிய குடும்பத்தை எந்நாளும் எத்தருணத்திலும் உயர்த்திப்பிடிப்பவர்கள் ஆவர்.

ஆயர் டெஸ்மண;ட் டுடூ அவர்கள் சொன்னது “உங்கள் குடும்பத்தை நீங்களாகவே தேர்ந்தெடுக்கவில்லை மாறாக இறைவன் தெரிந்தெடுத்து கொடுத்த ஒரு கொடையும் ஆசீருமாகும். அதுபோல நாமும் மற்றவர்களுக்கு கொடையாகிறோம் என்றார். என் குடும்பத்தை ஒரு கொடையாக ஏற்றுக்கொள்கின்றேனா? என் பெற்றோர்கள் எனக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்கள். என அன்றாடம் உணர்கின்றேனா?

நற்செய்தியில் லூக்கா பொறுப்புள்ள தந்தையாக கணவராக தூய்மைபடுத்தும் சடங்கிற்கு மரியாவையும் குழந்தையையும் அழைத்து வந்ததாக எழுதுகிறார். மரியா யூதச்சடங்காகிய குழச்தையைப்பெற்றடுத்த பிறகு தாயாக இச்சடங்கில் பங்கெடுக்கின்றார். யூத தலை((முதல்) குழந்தையை இறைவனுக்கு கோயிலில் காணிகையாக ஒப்புக்கொடுத்து மாடப்புறாக்களை காணிக்கையாக்கி குழந்தையை மீண்டும் பெற்றுக்கொள்வர். மேலும் அங்கிருந்த அன்னா மற்றும் சிமியோனின் ஆசீர் நிறைவை தருவதாக அமைகிறமது. இது நிகழ்கால மற்றும் எதிர்கால ஆசீரை முன்வைக்கிறது.

இன்றைய சவால்களுக்கு மத்தியில் குடும்பங்களை ஆசீர்களாக கருதுவோம் குடும்பத்தின் பெரியவர்களை சந்திப்போம் அவர்களுக்கு நேரம் கொடுப்போம். அவர்கள் கூறும் கதைகளை நமதாக்கிகொள்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் சொன்னதுபோல பெரியவர்களை மதித்து அவர்களுக்கு உறுதுணையாயிருந்து அவர்களிடமிருந்து கற்போம். பெரியவர்களை மதிக்காத குடும்பம் தங்கள் நினைவுகளை சிறிது சிறிதாக இழக்கிறார்கள். மேலும் அவர்களின் எதிர்காலம் ஒரு கேள்விகுறியாகவும் அமையும் என்கிறார். சமீபத்திய குடும்பத்தை மையப்படுத்திய ஆயர் பேரவையின் இறுதியில் வெளியிடப்பட்ட பரிந்துரைகள்:

o கிறிஸ்தவ குடும்பங்களுக்கு நன்றிகூறி உற்சாகப்படுத்துதல்
o இறைவார்த்தை மற்றும் திருச்சபை தலைமைப்படிப்பினையை மையமாககொண்ட கிறிஸ்தவகுடும்பங்களாக உருவாக்குதல்
o கடினமான பிரச்சனைகளை குறிப்பிட்ட ழ்நிலைகளில் அடுத்தவருடம் படித்தறிதல்
o களப்பணி அணுகுமுறை உணர்வை தொடர்ந்து கடைபிடித்தல்;
தொடர்ந்து நிகழப்போகும் பேரவையின் நல்செயல்பாட்டிற்காகவும் திருச்சபையை விட்டு விலகியிருக்கின்ற குடும்பங்களுக்கு வாய்ப்புகளை தரும் பேரவையாக அமைய தொடர்ந்து செபித்து ஆதரவு தருவோம். நம் குடும்பங்களில் ஒன்றாக செபிப்பதை – உணவு அருந்துவதை – பகிர்ந்துகொள்ளுதல்களை பயிற்சிசெய்வோம். பிரிந்திருக்கும் குடும்பங்களை பீடத்திற்கு கொண்டுவருவோம். பெற்றோர்களின் புரிதலின்மையினால் தனிமைஉணர்வில் போராடும் பிள்ளைகளை கொணர்ந்து அர்ப்பணிப்போம் இறைவன் அவர்களின் எண்ணங்களை தொட்டுஎழுப்பி குடும்ப உறவின் உள்ளங்களின் உயரியமதிப்பை புனிததுவத்தை திருக்குடும்பம் வழியாக உணர்த்துவாராக-ஆமென்.