இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








கிறிஸ்து பிறப்பு பெருவிழா

மாபரனின் முகமே……. மானிடத்தின் முகவரி!

ஏசா2:1-6, தீத்2:11-14, லூக்2:1-14.



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே தன் பிறப்பால் தரணிக்கு முடிவில்லா மற்றற்ற மகிழ்ச்சியை தாரைவார்த்த பாலன் இயேசுவின் பிறப்பின் விழா வாழ்த்துக்களோடு திருவிழா திருவிருந்திற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். நம் குடும்பத்தின் சமூகத்தின் திருச்சபையின் பாருலகின் அமைதிக்கு அனைத்து நலன்களுக்கு அவர் அருகாமை அவர் ஒன்றிப்பு அவர் தந்த முகவரி என்றும் துணையாக இணையாக அனைத்துமாக அமைய வரம் வேண்டி இணைந்து கொண்டாடுவோம். இனிதாய் பகிர்வோம் அவர் பிறப்பின் மகிழ்ச்சியை. இறையவன் நம்மோடு.

குடிலில் அருகாமையில் பிள்ளைகளோடு நின்றுகொண்டிருந்த பெற்றோர்கள் பலவாறு விளக்கிகொண்டிருக்க எனக்கொரு சந்தேகம் என ஜான் வினவ என்ன என்றவுடன் கிறிஸதுவின் பிறப்பபை நாம் இன்றுகொண்டாடுகிறோம் இந்த குடிலிலே பிறக்கின்ற இயேசு வருடம் முழுவதும் எங்கு இருப்பார். என 6வயது ஜான் கேட்க…யாரிடமும் பதிலில்லை.

8வயது ஜேம்ஸ் கேட்டான் நாமும் தான் ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறோம் ஆனால் இயேசு ஏன் குழந்தையாகயிருக்கிறார் என்னைப்போல வளரவே மாட்டாரா என்றான்? தாய்க்கு பதில் தெரியவில்லை? உங்களுக்கு பதில் தெரியுமா?

இயேசுவின் பிறப்பு அவரது குடிலில் வருடந்தோறும் கொண்டாடப்படகாரணம் நம்முகவரி அந்த எளிமையான மாட்டுத்தொழுவம் நம்முகவரி இரவுக்காவல் காக்கும் அந்த இடையர்கள்.இந்த அடிப்படையான முகவரியை தரவே நம் மனித முகத்தை தேடி விரும்பி பற்றிக்கொண்டார் மாபரன் இயேசு. அவர் முகமானார் நம் முகவரிக்ககாக.

முகம் உணர்வை உறவை உயிரை வெளிப்படுத்துகிறது. உன் முகம் பார்த்து எத்தனை நாளாகிறது. உன்னைக்கண்டு பேசவேண்டும் எனச்சொல்லும்பொழுது அது உண்மையான உறவின் வெளிப்பாடு. முகம் கவலையை மகிழ்ச்சியை சோகத்தை ஆனந்தத்தை அருளை பக்தியை பசியை வறுமையை தோல்வியை இழப்பை வெற்றியை என மனத்தின் ஆழத்து அனுபவங்களை வெளிக்கொணர்கிறது. இம்முகம் ஒருவரின் அடையாளம் முகவரி. இன்றைய விஞ்ஞான தொழில் நுட்ப உலகில் மானிடன் முகத்தை சிதைத்து தொலைத்து இருப்பதால் நமக்காக முகமானானார் மாபரன் இயேசு.

சார் எதிலும் எங்கும் ஒரிஜினல் கிடைக்காது தேடாதிங்க வீண் காரணம் மிக்ஸிங்க்கு தான் இன்றைக்கு மதிப்பு அதிகம் அதுதான் வியாபாரமே என்று சொல்லுவது நம்மத்தியில் இருக்கும் கலப்படமாக முகத்தை எடுத்துச்சொல்கிறது. உணவிலிருந்து அரசியலிலிருந்து பேச்சிலிருந்து உறவு வரை கலப்படம். எல்லாக் கடவுளையும் வழிபடுகிறேன் எல்லா உறவுகளும் சரிதான் என்ற கலப்பட எண்ணம் நாம் போட்டுக்கொள்கின்ற முகத்திரையாகும் நான் எந்நத ஊரா இருந்தா உங்களுக்கென்ன என தன் தாய்மொழியை தாய் மண்ணை திரித்து மாற்றி குழப்பி சொல்வது கலப்படமான முகத்தை வெளிப்படுத்துகிறது. சில தருணங்களில் என் உண்மை முகத்தை இழந்து நான் அணிந்திருக்கும் கலப்பட்மான முகங்கள் என்ன?

உன் பெற்றோரை ஏன் ஓபன் டே அன்று அழைத்துவர முடியாது என்றபொழுது மாணவன் சொன்னது என் தந்தையை மாதத்திற்கு ஒருமுறைதான் நான் பார்க்கின்றேன் என் தாயை இரண்டு வாரத்திற்கு ஒருமுறைதான் பார்க்கின்றேன் தந்தைக்கு வெளிநாடுகள் செல்லவேண்டிய பிஸினஸ் தாய்க்கோ பல மாநிலங்களில் நடைபெறும் கூட்டங்கள். இது காணமாற்போன முகத்தை குறிக்கிறது. எனக்கு வீடியோ கேம் இருந்தா போதும். பேஸ் புக் நண்பர்களிடமே அதிகம் நேரம் செலவழிக்கிறேன் 2000நண்பர்கள் சேர்தாகவேண்டும். என் வீடியோவுக்கு யூடியுப்பில் 1000 லைக்ஸ் கிடைச்சாச்சி என பல கருவிகளில் தன்முகத்தை தொலைத்திருக்கின்றார்கள் இன்றைய உறவுகள் சிறப்பாக இளைய உள்ளங்கள். இந்த முகத்திரை தன் சொந்த பிரிய உறவுகள் நேரம் கொடுக்க மறுப்பதால் மறந்ததால் எந்த முகஉறவையும் நேரில் அருகாமையில் பார்க்கவிரும்பாது தொலைந்து காணாமற்போன முகங்களாக பலவித தொழில்நுட்ப கருவிகளை தங்கள் முகத்திரையாக்கிகொண்டார்கள். என் முகத்தை நான் தொலைத்து பற்றிக்கொண்ட முகத்திரைகள் என்ன? என் பிள்ளைகள் காணாமற்போன முகங்களை தனதாக்கிகொள்ள நான் காரணமாகயிருந்திருக்கின்றேனா? எவ்வாறு நான் அவர்களை அணுகுகிறேன்?

கற்பழிப்பு சம்பவம் இல்லாத வாரங்கள் இல்லை எந்த மாநிலமும் விதிவிலக்கு இல்லை. பள்ளிகள் – கல்லூரிகள் என பாதுகாப்பில்லா இடங்களாக மாறிக்கொண்டிருப்பது கனமான முகத்தைபற்றி முகத்திரையாக பயன்படுத்துபவர்களை குறிக்கிறது. ஈவு இரக்கம்இன்றி வன்முறையாக சித்திரவைதைப்படுத்தி ஒருகனமான முகத்தோடுசெயல்படுவது தன் பாதிப்பிற்கு ஈடுகட்ட ஒருவர் தெரிந்துக்கொள்ளும் வன்முறைநிறைந்த கனமான பாதையே கனமான முகத்திரை எனலாம். மதமாற்ற வன்முறை – பிரிவினையை ஏற்படுத்த வன்முறை – அமைதியை குலைக்க வன்முறை என்ற இத்தகைய கனமான முகத்திரைகள் நம்மத்தியில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. நம்மால் முடிந்தவரை இம்முகத்திரையை கிழித்து மாபரன் பற்றிய முகத்திற்கு முகவரியாவோம். சிறுபிள்ளைகள் – வாலிப உள்ளங்கள் கரங்களில் கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்தியிருப்பது அல்லது போதைப்பொருள்களை உடையாகிக்கொண்டிருப்பது இக்கனமான முகத்திரைகளை அகற்ற நமக்குள்ள பொறுப்பை நினைவுப்படுத்துகின்றன.

அன்றும் இத்தகைய கனமான….கலப்படமான…காணாமற்போன முகங்கள் முகத்திரைகளாகயிருந்தன அவர்களுடைய முகத்திரைகளை கிழித்து மானிடத்தின் முகத்தை பாதுகாக்க மானிட முகமானார் இறைவன் நமக்கு முகவரியை அடையாளத்தை உரிமையை பற்றை சொந்தத்தை உணர்த்த கொடுத்ததே இது கிறிஸ்துபிறப்பு விழாவாகும்

. முதல் வாசகத்தில் காரிருளில் இருந்த மக்கள் பேரொளியை காண்பார்கள் என்பது பிரிந்திருந்த யூதா மற்றும் இஸ்ராயேல் நாடுகளால் பல்வேறு ஆதிக்கத்தினால் அடிமைத்தனம்- நாடுகடத்துதல்- எருசலேம் அழிவு மீண்டும வருமா? தாவீது போன்ற அரசன் கிடைக்கமாட்டாரா அல்லது மோசே போன்ற எங்கள் முன்னோருக்குஉடன்முகமாயிருந்து தலைவர் வரமாட்டாரா? என்ற பல்வேறு கவலைகளில் வருத்தங்களில் கலப்படமான முகத்திரையை பற்றியிருந்தவர்களுக்கு ஏசாயா இறைவாக்கினர் வருவார் பேரொளியாய் மெசியா எங்கோ நெருப்பிலோ வானிலே மேகத்திலோ மலையிலோ அல்ல மாறாக மானிட பாலகனாய் முகமாய் உங்கள் மத்தியில் வருவார் உங்களுக்குரிய முகவரியை தருவார் என எடுத்துரைத்து உற்சாகப்படுத்தி முகத்தரைகளை களைந்து பயணிக்க அழைக்கிறார். வியத்தகு ஆலோசகர் – என்றுமுள்ள தந்தை என்பவைகள் அவர் எவ்வளவு அருகாமையிலிருந்து வளர்ச்சிக்கு உயர்வுக்ளு ஆசீருக்கு முகமாய் அனைத்துமாய் இருப்பார் என்பதை வெளிப்படுத்துகின்றன.

லூக்கா நற்செய்தியில் ஒவ்வொரு யூதரும் தன் மகனாய் மெசியாபிறப்பார்என பாகுபாடு எண்ணத்தோடு பல மனிதங்களை பிரித்துப்பார்த்து தனித்துவைத்து பல்வேறு ஏற்பாடோடு எதிர்பார்க்கையில் அவர் அரசராக அல்ல ஆட்சி செய்ய அல்ல அதிகாரம் காட்ட அல்ல ஆன்மிகசாயலாக அல்ல மாறாக ஒதுக்குப்புறமான ஒரங்கட்டப்பட்ட புறக்கணிக்கப்பட்ட பெத்லேகமில் நாசேரத்துவில் யாரும் கண்ணுக்கும் படாத மாட்டுத்தொழுவத்தில் முகமானார் என எடுத்துக்கூறுகிறார். பெத்லேகம் என்பது அப்ப வீடு அல்லது உணவு இடம் எனப்படும். மாட்டுத் தொழுவ தீவனத்தொட்டி எனப்படுவது ஆடு மாடுகளுக்குரிய உணவுஇடம் ஆக இடையர்களே ஆடுமாடுகளுக்குரிய உணவு இடத்திலே உங்களுக்கு உணவாக உயிராக உறவாக முகமாக உங்கள் மத்தியில் தோன்றியிருக்கிறார் மாபரன் என வெளிப்படுத்துகிறார். பொதிந்த துணியில் கிடத்தியிருப்பார்கள் என்பது சில சமயம் அது நீண்ட துணியாக குழந்தையை சுற்றி போர்த்திவைக்க பயன்படுத்தியது மானிடத்தை முழுவதுமாக மீட்க மானிடமுகமாக தன் பொதிந்ததுணியில் நம்மையும் சுற்றி போர்த்திகொண்டார் என்பதாகும். அவர்தந்த முகத்தை முகவரியை நம்மில் புதுப்பித்துக்கொள்வோம்.

1914-ல் முதல் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் பெல்ஜிய நாட்டு எல்லையில் டச்சுஆங்கிலேயே படைகள் பிரான்சோடு இணைந்து மறுபுறம் உள்ள ஜெர்மாகிய படைகளோடு தீராது போரிட்ட சமயமது அவர்களிடம் இருந்து முகத்திரைகள் கனமான எதிரியை அழிக்கவேண்டும் என்ற முகத்திரைகளே….மற்றும் போரிலும் வீரத்திலும் அதிகாரத்திலும் தங்களை இழந்திருந்து கலப்படமான மற்றும் காணாமற்போன முகங்களோடு போரில் இறப்புகள் அதிகமாகிக்கொண்டிருக்க அது டிசம்பர் மாதம் 25ம்தேதி அருகாமையிலிரு;க அன்றைய திருத்தந்தை 15ம்பெனடிக்ட்டின் அமைதிவேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் அதிசயம் நிசழ்ந்தது 1914-ல் டிசம்பர் 24ம்தேதி இரவு ஜெர்மானிய படைகள் மரங்களை அலங்கரித்தனர் சிறிது நேரம் கழித்து மெழுகுவர்த்திகள் ஏற்றினர். தொடர்ந்து போர்வீரர்கள் கிறிஸ்துபிறப்பு பாடல்கள் பாடினர் இதைக்கேட்டு மறுபுறத்தில் உள்ள ஆங்கிலேயே பிரெஞ்சு படைகளும் பாடத்துவங்கினர். எந்த எல்லைக்காக போரிட்டார்களோ அந்த யாருக்கும் சொந்தமில்லா எல்லையை நோக்கி அவர்கள் கால்கள் நகர்ந்தன கரங்களிலிருந்த போர்கருவிகள் தரையைத்தொட்டன. ஆங்காங்கே இறந்திருந்த போர்வீரர்கள அனைவரும் இணைந்து கலந்து அடக்கம் செய்தனர். மதுபானங்களை சிகரெட்டுகளை பறிமாறிக்கொண்டனர். தங்கள் குடும்ப புகைப்படத்தை பர்சுகளிலிருந்து எடுத்து பேசிப்பழகி நினைவுகளை வெளிப்படுத்திக்கொண்டனர் கட்டித்தழுவி தங்கள் ஞாபகமாக சிறுபொருள்களை உடையின் பட்டன்களை மாற்றிக்கொண்டனர். நள்ளிரவு அவர்களின் உண்மை முகத்தை வெளிக்கொணர்ந்தது வெறியை எதிர்ப்பை உறவாக உண்மையாக முகவரியாக மாந்றியது மாபரன் பாலனின் பிறப்பின் இரவு. நம் முகத்திரைகளை கிழித்து அவர் தந்த முகவரியை இவ்விரவிரலே புதுப்பித்துக்கொள்வோம் அவர்முகமாக நம்மருகில் நம்மோடு நம்மில் இருப்பதை உணர்வோம் எந்நாளும் முகத்திரைகளை எதிர்ப்போம்-ஆமென்.