இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








திருவருகைக்காலம்; - மூன்றாம் ஞாயிறு

மகிழ்ச்சியின் குரலாவோம்…..

ஏசா 61:1-2, 10-11, 1தெச5:16-24, யோவா1:6-8 19-28



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே நாம் அனைவரும் ஒவ்வொரு வாரத்தையும் இறைபிரசன்னதில் மகிழ்ச்சியை நம்மில்புதுப்பிக்கும் நற்கருணை கொண்டாட்டத்தோடு துவங்குவதற்கு வாய்ப்பும் இறைவரம் பெற்றவர்களாகிறோம். நம்மை ஒன்றாக ஒன்றிக்க அழைக்கும் மேலும் நம்மை ஒற்றுமையோடு வாழவைக்கும் நற்கருணைகொண்டாட்டம் ஒரு மகிழ்ச்சியின் விருந்து. இதில் முழுமையாக பங்கெடுக்கும் நாமும் பல்வேறு இருளால் மூடப்பட்டிருக்கும் பலருடைய வாழ்வில் மகிழ்ச்சியை காண அனுபவிக்க பகிர அழைக்கப்படுகிறோம். காரணம் திருப்பலி நம்மை மகிழ்ச்சியின் பகிர்வின் வாழ்வுக்கு நம்மை அனுப்புகிறது. மகிழ்ச்சி ஒரு தருணமோ ஒரு உணர்வோ ஒருநாள் கிறிஸ்துமஸோ அல்ல. மாறாக இது ஒரு அனுபவம் எந்நாளும் நம்மிடம் தங்கும். இறைஇயேசுவை நற்கருணையில் அணுகி அனுபவித்து இங்கு அவர் தரும் முடிவில்லா மகிழ்ச்சியின் பயணம் தொடரட்டும்.

மகிழ்ச்சி – சந்தோசம் – ஆனந்தம் என்பது நம்மிடம் ஒருநாள் இருப்பதா? பலநாள் நாம் தக்க வைத்துக்கொள்வதா? அல்லது எந்நாளும் நம் சொந்தமாகுமா? என்ற கேள்விகளுக்கு பல்வேறு பதில்களை இளையோர் கருத்தமர்வில் பகிர்ந்துகொண்டார்கள் அவைகளில் இதோ சில:

மகிழ்ச்சி என்பது சில தருணங்கள் மணிநேரங்கள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன இந்த உணர்வை நம்மில் கட்டிவைக்கமுடியாது காரணம் எனக்கு பிடித்த நடிகரின் படம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது அதை மூன்று மணிநேரம் பார்த்தபிறகு மகிழ்ச்சி என்னை விட்டு அகலுகிறது. கிரிக்கெட்டின் ஒருநாள்போட்டியோ எங்கள் கேர்ல் அல்லது பாய் பிரண்ட்ஸ்களுடன் இருக்கின்ற சில மணிநேரங்கள்தான் மகிழ்ச்சி பிறகு சோகம் தான்…..

ஆனந்தம் என்பது ஒரு கொண்டாட்டத்தில் நிரம்பியிருக்கிறது ஆனால் அந்த கொண்டாட்டம் முடிந்தவுடன் திண்டாட்டம் தான். வீட்டுதிருமணத்திற்கு பலவாரங்கள் தயாரிப்பு புதுவீடு நிகழ்வு குழந்தைபிறப்பு இவைகள் எல்லாம் சில வாரங்கள் ஆனந்த உணர்வை நமக்கு தந்து உழைக்க ஈடுபட வைக்கின்றன. ஆனால் அனைத்தும் நடந்தேறியபிறகு நாம் சந்திப்பது வெறும் திண்டாட்டமே….

சந்தோசம் உலகம் சிலருக்கு மட்டுமே பாமரர்களுக்கு அல்ல. காரணம் குறையில்லா பணம் – நிரம்பிய சொத்து – அதிகாரம் செலுத்த உயர்ந்த பதவி – பொதுவாழ்வில் செல்வாக்கு இவர்களுக்கு தான் சந்தோசம் சொந்தம். நம்மிடமெல்லாம் சந்தோசம் தங்காது இது சில மாதங்களோ ஒருநாளோ சில மணி நேரங்களோ தான்தவழும். நோயிலேயே – வறுமையிலேயே – வெறுமையிலேயே – தனிமையிலேயே – மனஅழத்தத்திலேயே வாழ்வோருக்கு யார் மன மகிழ்ச்சியை பெற்றுதர முடியும்?....

இந்த எதார்த்த உணர்வு பூர்வமான கலந்துரையாடல் கருத்துகளுக்கு கேள்விகளுக்கு சிந்திக்க துணயாக கருத்தமர்வை வழிநடத்தியவர் சொன்னார். உங்கள் கருத்துகளை நான் மதிக்கின்றேன் உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது காரணம் கிறிஸ்துபிறப்பு அர்த்தமுள்ளதென்றால் அது நமக்குச்சொல்வது மகிழ்ச்சி சந்தோசம் ஆனந்தம் ஒரு உணர்வோடு நின்றுவிடககூடாது ஒருநிகழ்வோடு ஒரு உறவோடு முடிந்துவிடக்கூடாது மாறாக இது ஒரு முடிவு அனுபவம்.. மகிழ்ச்சி அனுபவத்தில் நான் இருக்க அதை பிறரில் தங்கவைக்க நான் முடிவு எடுக்கவேண்டும். வாழ்வின் கவலைகள் கண்ணீர்களை கடந்த மகிழ்ச்சி அனுபத்திற்கு அழைக்கும் இறைவாசகத்தின் சிந்தனைகளை தியானிப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களின் பார்வையும் சிந்தனையும் கவனிப்பாரற்று இடிந்துகிடக்கும் எருசலேம் நகரின் மீதும் இறைவன் உறையும் இடமாக பலிசெலுத்தி அவரோடு இணைந்திருந்த எருசலேம் ஆலயத்தின் அழிவுகளையும் பிரிந்து பரந்து கேட்பாரற்று கிடந்த நிலையின் மீதுமேயிருந்தது. இவர்களின் சோகத்திற்கு காரணம் 60-7-0 ஆண்டுகளில் பாபிலோனிய அடிமைதனத்தில் தங்கள் முன்னோர்களின் எருசலேமில் யாவே இறைவனுக்கும் அவர்களுக்குமிருந்த இறைநெருக்க அனுபவத்தை தாங்கள் இழந்ததுமட்டுமன்றி இடைவெளி அதிகமாகிவிட்டதால் கவலையால் சோகத்தால் இனிமேல் எதுவும் நல்லது நடக்காது என்ற மனஅழுத்த எண்ணத்தோடு இருந்தபொழுது இறைவனால் அனுப்பபட்ட ஏசாயா உள்ளமும் வாழ்வும் நொறுங்குண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சியை சொந்தமாக்கவே என்னை அனுப்பினார் என்றுரைத்து. இந்த மகிழ்ச்சி அருள் தரும் ஆண்டின் மகிழ்ச்சியைப்போலவே அமையும் என்று வெளிப்படுத்துகிறார்.

அருள்தரும் ஆண்டில் எது எவ்வாறு மகிழ்ச்சியை பெற்றுதரும்? எது வாழ்வின் சுமையாக மனக்கனமாகயிருந்து சோகத்திற்கு காரணமாயிருக்கிறதோ அந்தகடன் அனைத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். உறவுகள் மற்றும் பல கசப்பான உறவுபரிமாற்றங்களிடையே மன்னிப்பு சமாதானம் நிலவும். இங்கு மகிழ்ச்சியின் அருள் உங்களில் தங்கும் இறைவன் உங்களை நிறைவாக மன்னித்து உங்கள் முன்னோர்கள் போல் அவருக்கு நெருக்கமாகசொந்தமாக்குகிறார். புது மணமக்களின் ஆடைகளை உங்களுக்கு அணிவிக்கின்ற அனுபவமாகவும் புதுவிளைச்சலைக்காணுகின்ற அனுபவமாகவும் அமையும் என்று ஏசாயா இறைவாக்கினர் மகிழ்ச்சியை அவர்களில் புதுப்பிக்கும் மகிழ்ச்சியின் குரலாக திகழ்கிறார். முடிவு எடுங்கள் தொடர்ந்து நடங்கள் யாவேயின் மகிழ்ச்சி எருசலேமிலும் உங்களிலும் தங்கும் என உற்சாகமும் உத்வேகமும் தருகிறார்.

யோவான் தன் வார்த்தைகளில் திருமுழுக்கு யோவானின் பாதையில் நமக்கு எவ்வாறு மகிழ்ச்சியின் குரலாக வாழவேண்டும் என எடுத்துச்சொல்கிறார். திருமுழுக்கு யோவான் நான் எலியாவோ – இறைவாக்கினரோ – மெசியாவோ அல்ல மாறாக ஒருமகிழ்ச்சியின் குரல் என்று சொல்லி அந்த மகிழ்ச்சிக்கு தேவையானது எடுக்கவேண்டியமுடிவு பழைய பாதைகள் உணர்வுகளை கடந்த திருமுழுக்கில் மகிழ்ச்சியின் வாழ்வை பற்றிகொள்ள அழைப்புவிடுக்கிறார். திருமுழுக்குயோவானின் சீடர்கள் அவரின் பாதையில் செயல்பட்டவர்கள் பல வருடம் தொடர்ந்தார்கள் என்றுசொல்லப்படுகிறது. பாலைவன வறண்ட இடங்களில் எளிமையான தோற்றத்தோடு தியாக வாழ்க்கையோடு அனைவரையும் கவர்ந்து ஈர்த்து அழைத்தது மகிழ்ச்சியை இயேசுவில் இயேசுவின் திருமுழுக்கில் மீட்பில் அவர்மத்தியில் அனுபவிக்கவே.

விவிலித்தில் பல இடங்களில் மகிழ்சியோடிரு. ஆர்ப்பரித்து அகமகிழ்ந்திடு என இறைவனின் உறைவிடத்தில் மகிழ்ச்சியை சொந்தமாக்கி வாழந்திட முடிவெடுஎன அழைப்பு விடப்படுகின்றது. மீட்பின் வரலாற்று மகிழ்ச்சியை மனிதப்பகிர்வில் சொல்லிக்கொடுக்கவந்த இயேசுவின் பிறப்பு பெருவிழா நம்மையும் பல கவலைகளில் மகிழ்ச்சியை மறைத்திருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியின் குரலாக அமைய அழைத்துச்செல்லட்டும்.

நீதிமொழிகள்17:22 சொல்கிறது “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” சிரிப்பு இன்று ஒரு தெரபியாகியிருக்கிறது. மனதார வாய்நிறைய சிரித்தால் நோயும் கவலையும் வலியும் குறைந்து மறையும் காரணம் நாம் அவர்மத்தியிலிருக்க மகிழ்ச்சியே நமக்கு சொந்தம். இரவே வாழ்வு… சாமக்காவலே தொழில் என்ற இடையர்களுக்கு சொல்லப்பட்ட மகிழ்ச்சி உங்களிடையே பற்றிக்கொள்ளுங்கள் என்பது நமக்கும் நம் சுற்றியிருப்பவர்களுக்கும் சொந்தமாக மகிழ்ச்சியின் குரலாவோம்-ஆமென்.