இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் முப்பத்தி ஒன்றாம் ஞாயிறு

ஒரு தொடர் பயணம்!!!

ஞா.நூ3:1-96
உரோ6:3-9
யோவா6:37-40



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. நம்மிடமிருந்து இறையவனிடம் இணைந்த நம் அன்புஉள்ளங்களோடு நினைவுகளில் ஒன்றிக்க இன்றைய நற்கருணைவிருந்து துணையாகயிருக்கட்டும். இறைவனோடு ஒன்றித்து உறவாட அழைக்கும் நற்கருணைவிருந்து உயர்வான செபநிலைஆகும். இறைஇயேசுவின் பாடுகள் இறப்பு உயிர்ப்பின் நினைவுகளே நற்கருணை கொண்டாட்டம். எனவே இப்பீடத்திலே இறந்த நம் அன்புஉள்ளங்களை நன்றியோடு நினைவுகளில் கொணர்ந்து கொண்டாடி அவர்கள் தொடர்பயணத்திற்கு நாம் செபங்களால் துணையாயிருப்போம்.

ஏன் இறந்தோர் நினைவுநாள் அல்லது அனைத்து ஆன்மாக்கள் திருநாள் அல்லது கல்லறை திருநாள் என கொண்டாடுகிறோம்? 30-ம் நாள் அல்லது 40-ம் நாள் நினைவுதிருப்பலிகள் என நாம் அர்ப்பணித்து நினைவுகூர்ந்து செபிக்கிறோம்? அவர்கள் நினைவாக உணவுவிருந்து அளித்து அவர்கள் பயன்படுத்திய சிறப்ப பொருட்களை பாதுகாத்து ஏன் நினைவு கூறுகிறோம்?இத்தகைய பல்வேறு கேள்விகளோடு நம் சிந்தனைகளுக்குச் செல்வோம். இறப்பில் நம் வாழ்வில் முடிவடைவது கிடையாது…இறைவனோடு நெருக்கமாக தொடர்கிறது. நினைவுகள் ஒருவர் இறந்தவுடன் நிறைவடைவது கிடையாது மாறாக தொடர்கிறது. உயிருள்ள நம் நினைவுகளும் தொடரும் இறந்தஉள்ளங்களின் பயணங்களும் இனணவதே செபம் திருப்பலி அர்ப்பணிப்பு எனலாம்.

அனைத்து புனிதர் நாள் சிந்தனையைப்பறற்றி பேசிக்கொண்டிருந்தபொழுது ஒருவர் திடீரென்று இயேசுவே ஒரே ஒரு புனிதர் தான்விண்ணகத்தில் இருக்கிறார் எனஉறுதிசெய்திருக்கிறார் மற்றவர்கள் அனைவரும் புனிதர்கள் என்பது திருச்சபையின் நம்பிக்கையே என்றார். அனைவரும் ஆச்சரியத்தோடு இயேசு உறுதிசெய்தது யார்? என்றபொழுது வந்தபதில் நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்ற பேறுபெற்ற நல்ல கள்வனே என்றார். புனிதர்களின் சமூக ஒன்றிப்பை நம்புகிறேன் என்ற நம் அறிக்கை இவர்கள் இறைவனை நோக்கிய தொடர் பயணத்தில் இருக்கின்றனர் நாமும் அவர்கள் பயணத்தில் இணைவோம் அதுவரை நினைவுகளால் ஒன்றிப்போம் என்பதே இந்த நினைவுநாளாகும்.

மூளைச்சாவினால் தன் கணவனின் இறுதி தருவாயில் உறுப்புகள் தானத்திற்கு தன்னை அணுகியபொழுது அப்பெண் என்னை அழைத்து திருச்சபையின் படிப்பினை என்ன என்றார்கள்? உடல் உறுப்புகள் மற்றொருஉயிரைவாழவைக்க நன்மைதனத்துக்கா கொடுக்கப்படுவது தானம் அது ஒருதெய்வீக தியாகம் உறுப்புகளை விற்பதிலிருந்து இதுவேறுபட்டது வரவேற்கதக்கது பலரும் பின்பற்றுகின்றனர் என நான் சொல்லவுடன். அப்பெண்மணி மறுகேள்விகேட்டது: எப்பொழுது எவ்வாறு ஆன்மா விண்ணகம் அடையும்? நான் ஒரு நிமிடம் திகைத்து பின் அவர்களிடம் இயேசு நல்ல கள்வனிடம் என்ன சொன்னார்? இன்றே என்னோடுயிரப்பாய் .ஆக ஆன்மாவிற்கு இறப்பில்லை பயணம் இறைவனோடுதொடர்கிறது என்றேன். அறிஞர் சாக்ரடீஸ் “ஆன்மா ஒருஇடத்திலிருந்து மறுஇடத்திற்கு இடம்பெயர்வதே இறப்பு” என்கிறார். இன்றைய முதல் வாசக இறைவார்த்தைகள் “நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது” என்பது நம்பிரிய உறவுகள் இறைவனிடம் இணைந்திருக்கிறார்கள் என்ற ஒரு உறுதியையும் ஆறுதலையும் நமக்கு கொடுக்கிறது. புனித பவுலடிகளாரின் வார்த்தைகளில் “நம் நிரந்தரவீடு வானகமே” என்ற முடிவில்லா பயணத்திற்கு நம்மைஅழைக்கிறார். இன்றைய இரண்டாம் வாகசவரிகளில் “அவர் இறந்ததுபோலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில் அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்.” இது நம்பிரிய உறவுகள் மறையவில்லை இறைவனோடு முழுமையான வாழ்வை அனுபவிக்கிறார்கள் என்ற நம்பிக்கையைத்தருகிறது. நற்செய்தியில் யோவான் இயேசுவின் “இறுதிநாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்வேன்” என்பது அவரில் அவரோடு அவர் வழியாக மண்ணகத்திலிருந்து விண்ணகத்தில் வாழ்வுதொடர்கிறது என்பது தெளிவாகிறது.

விவிலிய வரலாறு ஒருவரின் இறப்பிற்குப்பிறகு தூய்மைச்சடங்காக பாவபரிகாரபலிகள் செலுத்தப்பட்டன என்று எடுத்துரைக்கிறது. ஆனால் இறந்தவர்களுக்காக செபிக்கும் வழக்கம் முதல் கிறிஸ்தவர்களின் சமூகத்திலிருந்தது தெளிவாகிறது. இறந்தவர்கள் சிறப்பாக கிறிஸ்துவுக்காக துன்புறுத்தப்பட்டு இறந்தவர்களின் பெயர்கள் தொடர்ந்து அவர்களின் ஒன்றிப்பில் நினைவுகூறப்பட்டது. மற்றவர்களுக்கு சாட்சிபகர்வாக இறைவனில் அவர்கள் வாழ்வு நற்கருணை ஒன்றிப்பின்பொழுது கொண்டாடப்பட்டது. துவக்க திருச்சபை தந்தையர்களில் ஒருவராகிய டெர்டுலியன் (கி.பி160-240) தன் எழுத்துகளில் இறந்தோரின் ஒருவருட நினைவு திருப்பலியைப்பற்றி எடுத்துரைத்து கைம்பெண்களை தங்கள் கணவர்களுக்காக செபிக்க அழைப்பது இறந்தவர்களை நினைவுகூறும் பயிற்சிக்கு ஒருவரலாறு உண்டு அதற்கு சிறப்பு உண்டு மேலும் இது முக்கியத்துவமானதொன்று என்று விளங்குகிறது. பதினெட்டு ஆண்டுகளாய் தன்மகனுக்காக செபித்து அவரின் மனமாற்றத்தை திருமுழுக்கை கண்ட மோனிக்கா தான் இறக்கும் தருவாயில் “நான் இறந்தபிறகு என்னை உன்விருப்பதிற்கு எங்குவேண்டுமானாலும் புதையுங்கள் ஆனால் மறக்காமல் என்னைஇறைபீடத்தில் நினைவுகூர்ந்து செபியுங்கள்” என்று சொன்னதை புனித அகுஸ்தீனார் தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

நினைவுகள் எவ்வாறு நற்கருணைபலியில் செபங்களாகும்? இறந்த நம்பாசமிகு உறவுகளை நினைவுகளால் செபங்களால் நாம் எவ்வாறு தொடர்புகொள்ள அவர்களோடு ஒன்றிக்க இயலும்? நற்கருணை நம்இறைவன் இயேசுவின் மீட்பின் செயலின் நினைவு நிஜமாக நம்முன் வருகிறது. காரணம் நினைவுகள் என்றும் மறைவதோ மடிவதோ முடிவதோ கிடையாது நற்கருணை நினைவுபிரசன்னம். நம் பெற்றோர் கணவன மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நட்புகள் நம்மைவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவர்களின் நீங்கா நினைவுகள் என்றும் நம்மைவிட்டு விலகுவது கிடையாது. அந்த நினைவுகளை அவர்களைப்பற்றிய நினைவுகளை இறைபீடத்திற்கு நாம் எடுத்துவரும்பொழுது நாம் மீண்டும் அவர்களோடு எண்ணங்களில் நன்றியுனர்வோடு வாழ்ந்து இறைவனில் கொண்டாடுவோம். அப்பொழுது இறைவனின் நினைவுகளில் எண்ணங்களில் நம் செபத்தில் ஒன்றாகிறோம்.

அருட்தந்தை பேட்டி தன் உயிலில் பின்வரும் வார்த்தைகளை குறிப்பிடுகிறார். “தயவுசெய்து என்னைப்பற்றி பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக அந்நேரத்தில் எனக்காக செபியுங்கள்” ‘என்பதாகும்.ஆசீர்பெற்ற அன்னைதெரேசா அவர்கள் தன்வார்த்தைகளில் “இறப்பு என்பது இறைவன் இல்லதிற்கு செல்வதாகும்” எனகுறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வருடத்தில் நம்மிடமிருந்து பிரிந்த அல்லது நம்மை அதிகமாக பாதித்த இறந்த ஒருவரை நம் கண்முன்கொண்டுவருவோம். நம் எண்ணங்களில் இருத்துவோம் அவர்களை இறைவன் துணையாக இணையாக விண்ணரசுக்கு அழைத்துச்செல்வதாக கற்பனையோடு காண்போம். நினைவுகளால் நாமும் அவர்கள் மத்தியில் நம்மை நிறுத்தி செபித்துமகிழ்வோம். இறக்கப் பயப்படுபவர்கள்……இன்னும் வாழத்துவங்கவில்லை ஆமென்.