இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிறு-

அன்பான உடனிருப்பே……. ஆணடவனின் அரவணைப்பு!!!

வி.ப22:20-26 1தெச1:5-10 மத் 22:34-40



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. நம் சமூக நற்கருணைகொண்டாட்டம் நம் ஒன்றிப்பை உறுதிபடுத்தி மற்றவர்களுக்கு ஒருசாட்சியமாகிறது. இதுவே முதல் கிறிஸ்தவ சமூகத்தின் அனுபவமாகவும் வாழ்வாகவும் அமைந்திருந்தது. நற்கருணை கொண்டாட்டத்தின் சக்திவாய்ந்த வெளிப்பாடும் அதன் பலனும் நம்மில் நம் அன்றாட வாழ்வில் நிரம்பியிருக்க நற்கருணை பகிர்வை நம் சமூகத்தில் சமத்துவ உணர்வோடு வெளிக்கொணர வேண்டும்.. துயரத்தில் தேவையில் இருப்போரை துணையின்றி தோழமையின்றி தவிப்போரை நற்கருணைஇயேசுவில் கண்டு தொடாந்து நேரிலும் சந்தித்து அன்பின்உடனிருப்பே ஆண்டவன் அரவணைப்பு என செயலால் செய்தியாவோம்.

ஏன் மறுவாழ்வு மையங்களும் மனிதநேய காப்பகங்களும் மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன? என்று சிந்தித்தால் சுதந்தரமாக செயல்படுவதற்காக என்பதைவிட உடன் இருந்து கவனிக்க யாருமில்லை என்பதே பதிலாகும் காரணமாகும். இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்து வாழ்வீர்களா? என்ற கேள்விதானே திருமணவாக்குறுதியில் கேட்கப்படுகிறது.

இயேசுவின் 12 திருத்தூதர்களில் கொல்லப்படாமல் முதிர்ந்த வயதில் இயற்கை மரணம் அடைந்தவர் அன்புச்சீடர் யோவான் ஆவார். இன்றைய துருக்கியாகிய அன்றைய எபேசுநகரில் இறுதிநாட்களில் வாழ்ந்தவர். வயதானதால் நினைவு சக்தி பேச்சு திறன் குறைவுபட்டு பார்வையும் மங்கியிருந்த நிலை. ஆனால் இயேசுவின் அன்புச்சீடர் சிலுவையின் நிழலில் மரியன்னைக்கு துணையாக இருந்தவர் என்பதால் முதல்கிறிஸ்தவர்கள் யோவானிடத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். வாரந்தோறும் நிகழும் ஞாயிறு நற்கருணை கொண்டாட்டத்தில் யேவானை சுமந்துவந்து கூடியிருப்வர் அனைவர் மத்தியிலும் அமரவைப்பர். அவர் என்ன மெதுவாக பேசுவார் என அறிந்திருந்தாலும் அனைவர் பார்வையும் அவர் மேலே இருந்தது. யோவானோ தளர்ந்துபோகும்வரை திரும்ப திரும்ப சொன்ன அந்த ஜந்து வார்த்தைகள் “என் பிள்ளைகளே ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்” என்பதே ஆகும். இயேசுவோடு இறுதிவரை உடன் இருந்து இந்த உடனிருப்பே அன்பு என்ற அவரின் செயல்பாட்டை நமதாக்கிக்கொள்வோமா?

இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கும் அயலானின் அர்த்தம் பழைய ஏற்பாட்டு நூலிலிருந்து முற்றிலும் வேறுபாடானது. இஸ்ராயேல் மக்களின் அர்த்தத்தை ஆழப்படுத்த கொடுக்கப்பட்ட பத்துகட்டளைகளை பரிசேயர்கள் தங்கள் வசதிக்காக 613 சட்டங்களாக அதிகப்படியான சுமைகளாக்கினர். தங்கள் இனத்தில் சமூகத்தில் உள்ள ஒருவரை அடுத்து இருக்கும் அயலானாக எண்ணினர். மற்றவர்களை குறிப்பாக கைம்பெண்கள் சிறார்கள் தீராதநோயிலிருப்போர் அந்நியர்களாக ஓதக்கப்பட்டவர்களாக கருதினர். இயேசு இதை முற்றிலும் மாற்றி உன் அயலான் உன் சமூகத்தில உனக்கு அடுத்து இருப்பவர் அல்ல மாறாக உனக்கு அடுத்து தேவையிலிருப்போரே அயலான் அவனோடு நீங்கள் உடனிருக்கவேண்டும் என அழைக்கிறார்.

பரிசேயர்கள் இறைவனோடு உறவாடி தங்கள் அன்பை வெளிக்காட்டுவதற்காக தினமும் மும்முறை செபித்தனர். ஆனால் தங்கள் முன் துயரப்படும் கடினப்படும் மனிதத்தை மறுத்து புறக்கணித்தனர். இயேசு தந்தையோடும் தேடிவரும் அனைத்து மக்களோடும் உடனிருந்து செபித்தார் செயலாற்றினார் ஒன்றித்தார். பத்து கட்டளைகளை 613 கட்டளை பாரங்களாக்கிய பரிசேய சமூகத்துக்கு பதில் கொடுக்கும் வகையில் இயேசு இதோ இரு கட்டளையாக இறைஅன்பும் பிறர் அன்பும் பிரிக்க இயலாத ஒன்றாகும் என்கிறார்.

எப்படிப்பட்ட உடனிருப்பே அன்பாகும் என்பது முதல் வாசகத்தில் விடுதலைப்பயண நூலிலிருந்து நமக்கு சொல்லப்படுகிறது. இஸ்ராயேல் மக்களுக்கு உடனிருப்பே அன்பு அதை நீங்கள் என்றும் மறக்ககூடாது. 400 வருடங்களாக உங்கள்முன்னோர் அடிமைகளாக புறக்கணிக்கப்பப்டவர்களாக இருந்தபொழுது யாவே இறைவன் உங்கள் உடன் இருந்து உங்களை வழிநடத்தினார். நீங்களும் பிறரின் துயரத்தில் உடனிருந்து கூக்குரலிட்டால் நான் செவிமடுப்பேன் என்கிறார் உடனிருப்புஎன்பது பரிவு கொள்வது அதாவது பிறரின் தடுமாற்றங்களில் போராட்டங்களில் அவர்களாவது என்பதாகும்.

“எப்படி இவர்கள் எடுத்துக்காட்டாக ஒருவர் மற்றவரை அன்புசெய்து வாழ்கிறார்கள் அவர்களிலே ஒருவகையான தெய்வீகம் தெரிகிறது” .என்ற பேச்சே முதல் கிறிஸ்தவர்களின் .வாழ்வை சுட்டிக்காண்பித்தது. நம் அணுகுமுறை என்ன?. நம் செயல்பாடு என்ன? யார் என் மத்தியில் தேவையிலிருப்பவர்?

ஆசீர் பெற்ற அன்னை தெரேஸா அவர்கள் பல அதிகாரபூர்வ கூட்டங்களுக்குச்சென்று பங்கெடுக்கும்பொழுது இறுதியில் அன்னையிடம் அனைவரும் உங்களுடைய முகவரியை அடையாள அட்டையை பெறவிரும்புகிறோம் என்றவுடன் அன்னை அவர்கள் தரும் அடையாள அட்டையில் முகவரியோ தொடர்புஎண்களோ ஈமெயில் தொடர்பு ஒன்றும் இருக்காது மாறாக அதிலிருந்ததெல்லாம்:

அமைதயின் பலன் செபம்
செபத்தின் பலன் விசுவாசம் விசுவாசத்தின் பலன் அன்பு
அன்பின் பலன் பணிவிடைபுரிவதே
இறைவனின; ஆசீர் உங்களோடு
அன்னை தெரேசா-
உடனிருக்கும் உறவுகளாக இயேசுவின் அன்பர்களாகாவோம்-ஆமென்.