இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் இருபத்திஎட்டாம் ஞாயிறு-

விருப்பமே ஆடையாகட்டும்..…. விருந்துக்கு!!

ஏசா25:6-10 பிலிப்4:12-14 19-20 மத் 22:1-14



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. மீண்டும் இறைபிரசன்னத்தில் நம் வாழ்வை நமது விசுவாசத்தை மற்றும் திருச்சபையின் சகோதர உறவுகள் என்ற அழைப்பை புதுப்பித்துக்கொள்ள ஒன்றாக கூடிவந்திருக்கிறோம். நாம் குடும்பமாக ஒரே சமூகமாக மேலும் இறையவனின் பிள்ளைகளாக ஒவ்வொரு முறையும் நற்கருணைபீடத்தை நோக்கிவந்து இயேசுவின் பிறப்பு இறப்பு மற்றும் உயிர்ப்பை கொண்டாடுகிறோம். அங்கே நம் ஒன்றிப்பிலே பகிர்விலே இறைவார்தையிலே நற்கருணையிலே நாம் இறைஇயேசு பிரசன்னத்தோடு சங்கமிக்கிறோம். இந்த நாளிலே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஆயர்பேரவையின் உறுப்பினர்கள் அனைவரையும் தூய ஆவியானவர் வழிநடத்தி குடும்பங்களுக்கு புதியதொருசெயலாக்கம் தர செபத்தில் நினைவுகூர்ந்து வேண்டுவோம்.

விருந்திற்கும் திருவிருந்திற்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி கேட்டபொழுது இளையஉள்ளங்களுக்கான பயிற்சிவகுப்பிலே வந்த பதில்கள்: விருந்துக்கு எந்த வீட்டுக்கு மண்டபதுக்குபோனாலும் மொய் எழுதாம தப்பிக்கமுடியாது. ஆனால் திருவிருந்தில் இறைவனுக்கு மொய் எழதாமல் தப்பிக்க பலவகை உள்ளன..என்று

மற்றொண்டு… விருந்துகளிலே ஒரு பக்கம் விருந்து போய்க்கொண்டேயிருக்கும் மறுபக்கம் பேச்சுகள் வாழ்த்துகள் நடந்து கொண்டிருக்கும்.. திருவிருந்திலோ ப்பதார் மறையுரையை கேட்டபிறகு தான் நற்கருணை பெறமுடியும் என்றார்கள்.

நம் கொண்டாட்டங்கள் திருவிழாக்கள் திருமணமோ எதுவாகயிருந்தாலும் நம் கவனம் விருப்பம் ஈடுபாடு அனைத்தும் உணவை நோக்கியோ அமைந்திருக்கிறது. உணவு அவசியம் முக்கியம் தான் ஆனால் அவ்வுணவை விருந்தினை நாம் நம்உறவிலிருந்து தனித்து பார்க்கமுடியாது. உறவில்லா உணவும் உணவில்லா உறவும் அர்த்தமற்றது நிறைவற்றது. இன்றைய இறைவார்த்தைகள் திருவிருந்து அந்த உறவின்இணைப்பை உணர்ந்து கொண்டாட அழைக்கிறது என்பதை நம்முன் எடுத்துரைக்கிறது.

இனறைய முதல் வாசகத்தில் ஏசாயா இறைவாக்கினர் இறைவன் மக்களுக்கு தயாரித்திருக்கும் உணவை பற்றி எடுத்துச்சொல்லி அதை நோக்கி அவர்கள்கவனம் இருக்கஅழைப்பு விடுக்கிறார். தங்கள் மூதாதையர்கள் பெற்றோர்கள் பலவித அடிமைதனவாழ்விலிருந்து மீண்டாலும் தொடர்ந்து சந்தித்த பல்வேறு துயரங்கள் அவர்களிடம் உற்சாக ஆர்வத்தைவிட சோர்வையையே ஏற்படுத்தியது. இத்தருணத்தில் ஏசாயா அவர்களை நோக்கி இறைவன் அவர் உறையும் அந்த மலையிலே உங்களுக்கு விருந்தொன்றை எற்பாடு செய்திருக்கிறார். அவரால் உங்களுக்கு தெரிந்தெடுக்கப்பட்டது சீயோன் மலையாகும். அங்கு சுவையான உணவும் பழமும் திராட்சை இரசமும் விருந்தாக படைப்பார் அவரன்பை தெரிந்தெடுத்த இஸ்ராயேல் மக்களுக்கு மட்டுமல்ல மாறாக அனைவருக்கும் இந்த விருந்தை உரிமையாக்குவார். இறைவன் முழுமையாக நிறைவாக பிரசன்னமாகயிருந்து அவர்களோடு ஒன்றாக இணைவார் என்ற உண்மையை எடுத்துச்சொல்லி அழைப்புவிடுக்கிறார்.

மத்தேயு நற்செய்தியாளர் தொடர்ந்து இவ்வாரமும் உவமையை நம்முன்வைக்கிறார். இன்று இது விருந்து உவமையாகும். அரசன் தன்மகனின் திருமணத்திற்கு அழைப்புவிடுக்கும் விருந்து நிகழ்வை நம்முன்சொல்லி இரண்டாம் அழைப்பின் பொழுது வந்திருந்தவர்களில் திருமணஆடையின்றி இருந்தவரை அனுப்பும்விதம் என்று சொல்லும் பொழுது நம்மில் பலகேள்விகள் எழலாம். மத்தேயு யாருக்கு எப்பொழுது இதை எழுதுகிறார்? அவர்களுக்கும் நமக்கும் இவ்வுவமை சொல்லும் கருத்து செய்தி என்ன என பார்ப்போம்.

யூதர்கள் தங்கள் பழக்கவழக்கங்களில் விருந்துகளை விழாக்களை பலநாட்களாக பலபடிகளாக கொண்டாடினார்கள். இது குடும்பங்களாக வந்து பங்கெடுக்கும் விழாக்களாக அமைந்தது. அங்கு விருந்து முதல் மற்றும் மையஇடம் பெற்றது. திருமண நிகழ்வை முதல்படியாக தன்வீட்டு திருமணம் நடக்கவிருக்கிறது என்ற பொது அழைப்பு விடுவார்கள் எப்பபொழுது என்று எங்கு என்று குறிப்பிட்டு முதல் அழைப்பில் சொல்லமாட்டார்கள். இரண்டாம் அழைப்பில் நாளை தேதியை இடத்தை குறிப்பிட்டு சொல்வார்கள். உவமையில் வரும் அரசனின் அழைப்பும் அவ்வாறே அமைந்திருக்கிறது.

மத்தேயு தன்நற்செய்தியை குறிப்பாக இப்பகுதியை கி;பி71-ல் எருசலேம் தகர்க்ப்பட்டு அழிக்ப்பட்டதிற்கு பின் எழுதுகிறார். இத்தருணத்தில் மக்கள் தங்களின் தங்கள் முன்னோரின் வரலாற்றை இறைவெளிப்பாட்டை பேசும் எருசலேம் அழிக்பபட்டவுடன் மனம் உடைந்து சோர்வடைந்து சோகத்துடன் இருக்கின்றனர். அவர்கள் கனவு நினைவுகள் வரலாறு அடையாளங்கள் முகவரிகள் முடிந்துவிட்டாதா என்ற கேள்வியோடு இருக்கிறார்கள். இறைவன் உறைவிடம் என்று காலம் காலமாக விழா கொண்டாடி பலிசெலுத்தி இறைவனோடு இணைத்த புனிதஇடம் போய்விட்டதே என்ற கலக்கத்தில் மத்தேயு நற்கருணை விருந்தை சுட்டிக்காட்டி அவர்களை புதிய இணைப்பிற்கு புதிய எழுச்சிக்கு புதிய வாழ்விற்கு புதிய பயணத்திற்கு அழைக்கிறார்.

மத்தேயு இவ்வுவமை வழியாக இயேசுவின் உயிர்ப்பிற்குபிறகு கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு வாரஇறுதியும் கொண்டாடிய நற்கருணை விருந்திலே கவனத்தை செலுத்தசொல்கிறார். நீங்கள் பலிசெலுத்தி யாவேஇறைவனோடு இணைந்தது எருசலேம் ஆனால் அது வெறும் ஒருஅடையாளப்பலியே ஆனால் இங்கு கொண்டாடப்படும் திருவிருந்திலே இயேசு இறைவன் பிரசன்னமாகிறார். மக்கள் ஒன்றிப்பிலே பகிர்விலே இறைவார்த்தையிலே அவர் பிரசன்னமாகி நம்மை சந்தித்து நம்மோடு ஒன்றித்து ஒன்றாகிறார். அனைத்துமாகிறார். என்றார்.

திருமண ஆடையைப்பற்றி சொல்லும்பொழுது அது ஒருவரின் முகவரியாகும் ஒருவர் வெறும் உணவிற்காக வந்திருந்தால் அவரிடம் அந்த திருமண ஆடையிருக்காது காரணம் அவர் பங்கெடுக்க வரவில்லை தனக்காக தன்வயிரை நிரப்பமட்டுமே வந்திருந்தார்கள். ஆனால் திருமண ஆடையென்ற முகவரியிருக்கும்பொழுது அங்கே பங்கேற்பு ஈடுபாடு உறவோடு இணைந்து கொண்டாடக்கூடிய உணர்வுயிருக்கும். நாம் வெறும் நற்கருணை பெற்றுகொள்ள வந்து நம் சுய விருப்பத்தை கடமையை நிறைவேற்றிகொள்கிறோமா? அல்லது திருவிருந்து ஒரு ஒன்றினணப்புக்கொண்டாட்டம் என உணர்ந்து இயேசுவோடு மற்றும் குழுமுியிருக்கும்அனைவரோடும் குடும்பமாக சென்று கொண்டாடி ஒன்றினணகிறோமா?

அன்பிய திருவிருந்தாகயிருந்தாலும் அன்றாட திருவிருந்தாகயிருந்தாலும் திருவிழா திருவிழாவாகயிருந்தாருலும் விருப்பம் என்ற ஆடையோடு ஒன்றிணைவோம்

இறைஇயேசுவோடு இறைமக்களோடு நம் மனதை நம் வாழ்வை நிரப்புவோம் ஆசீர்களால்..
குடும்பம் குடும்பமாய் இறைசமூகமாய் தமிழ் தோழமைகளாய்
கொண்டுவருவோம் நம் வேற்றுமைகளை சுமைகளை
கண்டுகொள்வோம் நம் சகோதரஒன்றிப்பை
கொண்டாடி மகிழ்வோம் இதுவே இயேசுவின் இறப்பு உயிர்ப்பு கொண்டாட்டம்….-ஆமென்