இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலத்தின் இருபத்திநான்காம் ஞாயிறு

சிலுவை: ஒரு தோழமையின் இணைப்பு…!

எண்21:4-9; பிலி2:6-11; யோவா3:13-17



கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே இளைய உள்ளங்களே சிறார்களே இணையதள நண்பர்களே. திருச்சிலுவை மகிமையின் திருவிழாவை இவ்வருடம் ஞாயிறு தினத்தில் கொண்டாடுவதில் நாம் பெருமைப்படவேண்டும். நாம் திருச்சிலுவைக்கு மதிப்பும் வணக்கமும் அரவணைப்பும் கொடுப்பதன்வழியாக இறைவனை நம் அன்றாட வாழ்க்கை எதார்த்தங்களில் சந்தித்து ,அவரளாடுள்ள தோழமைஇணைப்பை கொண்டாடவேண்டும். கிறிஸ்துவத்தை ஒவ்வொரு கிறிஸ்தவனை அடையாளம் கண்டுகொள்ளும் அடையாளமாக சிலுவை என்றும் இயங்கட்டும். நாம் கொண்டாடும் இன்றைய திருப்பலி நாம் உற்றுநோக்கும் சிலுவை ஒரு தோழமையின் இணைப்பு என்ற இயேசுவின் பங்கெடுப்பை நம்மில் என்றும் வெளிப்படுத்தட்டும்.

சிலுவையை நாம் நம்புகிறேன் ஆனால் நான் விரும்பவில்லை…….
சிலுவையை நான் தொலைவிலிருந்தே காணவிரும்புகிறேன்……
சிலுவை என் அருகில் வேண்டாம் அது ஒரு கலக்கத்தை தருகுிறது…….இத்தகைய பதில்கள் சிலுவையின் வரலாற்று உண்மையை நாம் தெளிவாகபுரிந்துகொள்ளவில்லை நாம் சிலுவை வாழ்வை முழுமையாக வாழவில்லை சிலுவைக்கு நிறைவாக சாட்சிபகரவில்லை என்பதை தெளிவாக்குகிறது. இதற்கு காரணம் இன்னும் சிலுவையை நாம் ஒரு முன்புசார்பு எண்ணத்தோடு காணுவதாலும் அச்சிலுவையில் அவமானத்தோடு துன்பங்களோடு இறக்கின்ற இயேசுவை மட்டுமே காணுவதாலே எனலாம். திருச்சிலுவை மகிமையின் மாட்சியின் திருவிழா என ஒருவெற்றியின் மீட்பின் விடுதலையின் புதுவாழ்வின் கருவியாக அடையாளமாக காண நமக்கு அழைப்புவிடுக்கிறது.

நம்மை சுற்றிலும் எங்கும் வன்முறை கொலைகள் போர்கள் இவைகளுக்கு மத்தியிலே எவ்வாறு சிலுவை வெற்றியை நினைவுபடுத்தமுடியும். உடைமைகளை வீடுகளைவிட்டு வெளியேறுங்கள் அல்லது எங்கள் மதத்திற்கு மாறுங்கள் இல்லையென்றால் சாகத்தாயராகுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று கொடூராமாக வெளியேற்றப்படும் கிறிஸ்தவர்கள் இன்று ஈராக்கில் அவதிப்படும்பொழுது இரண்டு பத்திரிகையாளர்களின் தலைவெட்டப்பட்டதை நாம் காண்கின்றபொழுது பல அருட் பணியாளர்கள் அருட்சகோதிரிகள் கடத்தப்பட்டிருக்கும் பொழுது எவ்வாறு சிலுவையை ஒரு விடுதலையின் கருவியாக அடையாளமாக உற்றுநோக்க முடியும்?

நாம் பெரியவெள்ளி அன்று திருச்சிலுவைக்கு வணக்கம் தெரிவிப்பதன்மூலம் இயேசுவின் பாடுகளை சிலுவைமரணத்தை நினைவுடுத்தி நம் துயரங்களையும் அவரோடு இணைத்துக்கொள்கிறோம். ஆனால் இன்றைய திருவிழா அச்சிலுவை ஒருமகிமையின் வெற்றியின் கருவி என நாம் கொண்டாடுகிறோம். காரணம் இன்றைய நாள் இத்திருச்சிலுவை மீண்டும் அதிசய அற்புதவிதாக கண்டெடுக்கப்பட்டதையும் இதன்வழியாக நம் வாழ்வு உயர்த்தப்பட்டதையும் மேலும் இதன்வழியாக இறைஇயேசுவுக்கு நம்மிலுள்ள தோழமை இணைப்பையும் நினைவுபடுத்தவே இத்திருவிழா நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய முதல் வாசகம் எண்ணிக்கை புத்தகத்தலிருந்து நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இஸ்ராயேல் மக்களின் தொடர்பயணத்தையும் அத்தொடர்பயணம் அவர்களில் பல்வேறு இழப்புகளையும் வெறுப்புகளையும் தோல்விகளையும் மட்டுமே அதிகமாக கொணர்ந்தது இந்த கசப்பான அனுபவங்களினால் அவர்கள் பொறுமைஇழந்து இறைவனுக்கு எதிராக பேசுகின்றனர். இதனால் அவர்கள் தீபாம்புகளால் தாக்கப்பட இறைவனிடம் உயிருக்காக ஏங்கி வேண்டி உம்மை எங்கள் வாழ்வில் காண தவறிவிட்டோம் எனகதற மோசே வழியாக வெண்கலபாம்பை ஏற்படுத்தி அதை உற்றுநோக்கும்பொழுது உயிர்பிழைப்பீர்கள் என்பது உண்மையாகிறது. இது இஸ்ராயேல் மக்கள் தங்களோடு பயணம் செய்த இறைவனை காண மறந்தபொழுது அவர்கள் வழிபட்ட பொய்கடவுள்களையும் அவர்களின் நம்பிக்கையற்றதனத்தையும் உணரச்செய்து அவர்கள் எண்ணம் என்றும் இறைவனைநோக்கியே இருந்தால் அவர்களோடு நீ என் உரிமைமக்கள் என்ற யாவேஇறைவனின் பயணத்தை மாட்சியை வெற்றியை அவர்களுக்குபெற்றுதரும் என நமக்கும் உணர்த்துகிறது.

திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகவரிகளில் “தம்மையே வெறுமையாக்கி அடியைமயின் வடிவம் ஏற்று மனிதருக்கு ஒப்பானார்.” என்பது வெறும் நிபந்தனையில்லா அனபால் மட்டுமே இயேசு தோழமைஉணர்வோடு தோள்கொடுத்து நம் அனைத்து போராட்ட வலிகளும் இனணந்திருப்பதை எடுத்துசொல்கிறார். சிலுவையை உற்றுநோக்கி நம்வாழ்வோடு நம்மை அரவணைத்த இயேசுவின் சிலுவை மரத்தை அரவணைக்க அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தியில் “தம்மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்” என்ற யோவானின் இறைவார்த்தைகள் இறைத்தந்தையின் முழுமையான அன்பினால் நம் மனிதநிலையில் இறைஇயேசுவின் முழுமையான பங்கெடுப்பை ஈடுபாட்டை ஒற்றுமையான ஒன்றிப்பை எடுத்துரைக்கிறார்.

இறைவார்த்தைகள் மட்டுமல்லை சிலுவை வரலாறும் இயேசுவின் தோழமை இணைப்பை வெளிக்கொணர்கிறது. திருத்தூதர்கள் இயேசுவை நிக்கோதேமுவின் நிலத்தில் அடக்கம் செய்தபிறகு கல்வாரியில் இருந்த மூன்று சிலுவைகளையும் அருகாமையில் எங்கோ புதைத்தனர் எனவும் அது நான்காம் நூற்றாண்டுவரை மறக்கப்பட்டிருந்தது எனவும் சொல்லப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் ஆண்டுகொண்டிருந்த புறஇனத்து அரசன் கான்ஸ்டன்டைன் உரோமை பதவிக்கு மாக்ஸ்னடைஸ் என்ற எதிரி அரசனை போரில் எதிர்கொள்ள தயங்கியபொழுது கிறிஸ்தவ உள்ளங்கள் கான்ஸ்டன்டைனை இயேசு இறைவனிடம் வேண்டி போரிடசொன்னபொழுது அதன்படி போரிட “இதன் அடையாளத்தினால் நீ வெற்றியடைவாய் என்ற வார்த்தைகளுடன் பிரகாசிக்குமு; சிலுவையை மேகத்தில் கண்டதாகவும்” அதன் மூலம் வெற்றிஅடைந்து 312-ல் அரசனாக பதவிஏற்று திருமுழுக்குபெற்று கிறிஸ்தவனாக மாறி கிறிஸ்தவத்தை வெளிப்படையான அரசமதமாக ஆட்சிமதமாக அறிவித்தான்.

உரோமை அரச நிகழழ்வுகளில் போர்வீரர்களின் ஆயுதகருவிகளில் சிலுவை அடையாளம் உருவாக்க தோன்ற ஆணையிட்டான். இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியில் 327-ல் செப்டம்பர் 13ம்தேதி கான்ஸ்டன்டைன் அன்னை ஹெலனாவின் ஆர்வத்தில் இயேசு சுமந்த திருச்சிலுயையை கண்டெடுத்ததை அதையே இன்றை திருவிழா நாள் நினைவுபடுத்துகிறது என்பதை வரலாறு நமக்கு எடுத்துச்சொல்கிறது..கண்டெடுக்கப்பட்ட மூன்று சிலுவைகளிலிருந்து தீராத நோயிலிருந்த ஒருவர் ஒரு சிலுவையை தொட்டு பூரணகுணம்பெற்றதைினால் அது திருச்சிலுவையாக உயர்தப்பட்டு இயேசுவின் மோழமையின் இணைப்பை அன்றும் இன்றும் என்றும் நமக்கு நினைவுபடுத்த இத்திருவிழா மகிமையின் வெற்றியின் விழாவாக வரலாற்று உண்மையை எடுத்துச்சொல்லும; விழாவாக நிறைவாக கொண்டாடப்படவேண்டும். நம்பிள்ளைகளுக்கும் இந்த உண்மை வரலாற்றை எடுத்துச்சொல்லி திருச்சிலுவையின் சக்தியை உடனிருத்தி இயேசுவின் தோழமை உணர்வை நம்பிள்ளைகள் எந்நாளும் நம்பி அனுபவிக்க பயிற்றுவிப்போம்.

இறையியலார்கள் சிலுவையே கிறிஸ்தவ படிப்பினை மற்றும் இறையியலின் மையமும் தொடக்கமும் ஆகும் என வலியுறுத்தி எழுதுகின்றனர். நம் பக்கம் இருக்க முடிவுசெய்த இறைஇயேசுவின் உடனிருப்பு அவர் திருச்சிலுவை அனைத்துவழிகளில் தனித்து வேதனையுறும் இத்துயர மனங்களோடு தோழமையாகட்டும்.

கடந்த ஆறுவருடங்களுக்குமுன் நான் சகோதரர்களுக்கு பயிற்சியில் பொறுப்பாகயிருந்த சமயத்தில் பின்வரும் நிகழ்வு நடந்தது. ஒருநாள் ஒரு70 வயது மதிப்பான பெரியவர் எங்கள் இல்லம் உள்ளே வந்து இங்கு கோயிலுள்ளதா நான் சிறிதுநேரம் அமைதியாக செபிக்கவிரும்புகிறேன் என்றுவினவினார். இங்கு சிறுபோயில்தான் எனவழிநடத்தினேன். 20 நிமிடங்கள் கழித்து வெளியேவந்தவர் ஒரு சிறிய சிலுவைகிடைக்குமா என்றார். நான் யாருக்கு உங்களுக்காக யாருக்காவது கொடுக்கவா என்றேன்.அவரோ தான் இந்துமதத்தை சார்ந்தவன் என்றும் அதுவும் பிராமணகுலத்தை சேர்ந்தவன் நான் ஒரு நல்ல அரசபதவியில் இருந்தேன் இப்பொழுது ஓய்வுபெற்றுவிட்டேன். தனிப்பட்ட குடும்ப நிலஉரிமை என்ற பல்வேறு பிரச்சனைகள் எனவும் தன்பிள்ளைகள் தன்னை வேண்டாம் என தனித்துவிட்டதாகவும் கேன்சரினால் தன்மனைவி என்னை விட்டு தனிமையில் இருக்கவிரும்புவதாகவும் எனச்சொல்லி தான் வெறுப்போடு மனஅழுத்ததோடு தற்கொலை எண்ணத்தோடு இருந்ததாகவும் நான் கிறிஸ்தவ பள்ளிகளில் படித்ததாகவும் அப்பொழுதிலிருந்தே சிலுவையை விரும்பி ஆர்வத்தோடு உற்றுநோக்கி பார்த்திருப்பதாகவும் இப்பொழுது சிலுவைகிடைத்தால் இயேசு அதன்மூலம் என்னோடு என்துயரங்களில் பங்கெடுக்கின்ற ஒருதோழமை உணர்வைபெறுவேன் அதுசக்தியை தரும் என்றுபெற்றுசெனறார்;

ஒரு இந்துமதசகோதரரின் பெரியவரின் ஆழமான நம்பிக்கை நம்மையும் திருச்சிலுவையின் தோழமைஇனணப்பை நமக்கு என்றும் நினைவுபடுத்தட்டும். நாமும் உடைந்த ஏழ்மையான தனித்திருக்கும் வலியிலிருக்கும் விழுந்திருக்கும் உள்ளங்களுக்கு திருச்சிலுவை இயேசுவின் தோழமை உடனிருப்பு இணைப்பை பெற்றுதருவோம் – ஆமென்.