இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 24ஆம் ஞாயிறு

தேடலும், ஊதாரித்தனமும்

விடுதலை பயணநூல் 32:7-11.13-14
1திமொத்தேயு1:12-17
லூக்கா15:1-32

இன்றைய நற்செய்தியில் உவமைகளின் வாயிலாக தேடலையும், ஊதாரித்தனத்தையும் நம் கண்முன் வைத்து, பகுத்தறிய வாய்ப்புக்கள் கொடுக்கிறார்.
தேடல்
தேடல் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நீண்டு கொண்டே இருக்கிறது. தேடல் இல்லாத மனிதன் யாருமே இல்லை. தேடல் என்பது ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு வித்தியாசப்படுகிறது.
இன்றைய நற்செய்தி மூன்று விதமான தேடலை எடுத்துக்காட்டுகிறது.
1. ஆர்வம் - உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? லூக்15:4
பலவினமான குழந்தை மீது தாய்க்கு அக்கறை அதிகம், படிப்பில் பின் தங்கிய மாணவன் மீது ஆசிரியருக்கு அக்கறை அதிகம், இவ்வாறாக மனிதர்கள் இயல்பிலேயே நற்குணங்களை கொண்டு ஆர்வத்துடன் செயல்படுபவன், ஆனால் அவற்றை வெளிக்கொணர தனிப்பட்ட ஆர்வமும், தேடலும் நம்மில் உதவியாக இருக்கிறதா?
2. கவனம் - பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள், ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? லூக்15:8
காணாமற் போய்விட்டது என தனது கவனகுறைவை ஒரு காரணமாக கொள்ளாமல் இன்றைய நற்செய்தியில் அந்த பெண் கவனமாக தேடுகிறார் என கூறப்படுகிறது. ஆம் என்னில் இருக்கும் பண்புகளை கொண்டு இறைவனுக்கு நன்றிகூறி அதை முழுமையாக பயன்படுத்த கவனத்தை கொடுக்கின்றேனா?
ஊதாரித்தனம்
ஊதாரித்தனம் பலரிடமும் பல வகையிலும் இருக்கிறது. தனிநபர் ஆகட்டும், நிறுவனங்கள் ஆகட்டும், இல்லை நாடுகள் ஆகட்டும்… அனைத்து இடங்களிலும் இது இருக்கிறது. அத்தியாவசியமான தேவைகளை அடைய நினைப்பது ஆசை. அவசியமோ, இல்லையோ, கண்ணில் பட்டதை எல்லாம் வாங்கி அனுபவிப்பது ஊதாரித்தனம். வருமானம் குறைவாக இருக்கும் ஒருவருக்கு அவரால் சமாளிக்கக்கூடிய அளவில் விலை குறைவாக உள்ள இரு சக்கர வாகனமே போதும். சும்மா பந்தா காட்டுவதற்காக பல்ஸர் மாதிரியான விலை உயர்ந்த வண்டியை கடனில் வாங்குவதுதான் ஊதாரித்தனம். இந்த குணம் இடம், நபர், காலத்தைப் பொறுத்து மாறுபடுவதால் நம்மால் யாரையும் ஊதாரி என்று எளிதில் சொல்லிவிட முடிவதில்லை. அப்படியே சொன்னாலும், அதை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் ஒப்புக் கொண்டுவிடுவதில்லை.
இளையவர் /அகக்கண்
சொத்து - வசதி
பங்கு - பிரிவினை
எல்லாவற்றையும் திரட்டிக்கொள்ளல் - சுயநலம்
நெடும் பயணம் – உல்லாசம்
எனது அககண்கள் எதனால் மூடப்பட்டுள்ளது?
தந்தை/அகக்கண்
அமைதி - பயம்
தண்டித்துதிருத்தாமை - நன்மை எடுத்துக் கூறாமை
அனைத்தையும் கொடுத்தல் - ஏன் எதற்கு என கேட்காமை
எனது அககண்கள் மூடப்பட்டுள்ளது?
மூத்த மகன்/அகக்கண்
அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன் - பொறாமை
கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை - தற்பெருமை
என்றுமே நீர் தந்ததில்லை - மற்றவர் மீது பழிபோடுதல்
எனது அககண்கள் எதனால் மூடப்பட்டுள்ளது?
இளையவர் /புறக்கண்
தன்னாய்வு
தன்னம்பிக்கை
தந்தை/ புறக்கண்
நம்பிக்கை
இரக்கம்
மன்னிப்பு
அன்பு
பகிர்தல்
மகிழ்ச்சி
மூத்த மகன்/ புறக்கண்
?????????????????????
???????????????????
இறைவனுடைய மகன், மகள் எனப்படத் தகுதியுற்றவன் அல்லது தகுதியற்றவன் என நேர்மையோடு நம்மால் சுயமதிப்பீடு செய்ய இயலுமா?
இறைவனுடைய துணையும், கருணையும் நம்மில் தொடர்ந்து செயல்பட செபிப்போம். ஆமென்.