இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு

விண்ணகவாழ்வு

சீராக் 3:17-18.20.28-29
எபிரேயர் 12:18-19.22-24
லூக்கா 14:1.7-14

விரும்பித் தேர்ந்தெடுத்தல் முதன்மையான இடம்
மனிதர்கள் தன் வாழ்வில் உயர்வு, புகழ், பட்டம், ஒழுக்கம், அன்பு, கல்வி, நேர்மை, கருணை, மன்னிப்பு, சகிப்புத்தன்மை ...மேலும் பலவற்றை விரும்பித் தேர்ந்தெடுக்க தனது முயற்சியை பயன்படுத்துகிறான். அதே நேரத்தில் முதன்மை இடத்தை தேடி பலரும் ஓடுகிறோம். அதே இடத்திலே தன்னை முடக்கி கொள்பவர்களை இறைவன் சற்று திருப்பிப்பார்த்து வாழ்க்கை பாதையை நல்வழிப்படுத்த வழிவகுக்கிறார்.
தாழ்ச்சி மிக்கவர்களாக இருந்தால் விண்ணக வீட்டை எளிதில் அடையலாம் எனவும் கூறுகிறார். தாழ்ச்சியை மிகவும் எளிதாக அடைந்துவிட முடியாது. தாழ்ச்சி என்கின்ற நோக்கம் எங்கும் நிறைந்து காணப்படுகின்ற மிகவும் கடினமான நோக்கமாக உள்ளது. அதை அடைவதற்கான வழிகளில் எதிர்படுகின்ற எதுவாக இருப்பினும் அவற்றை சுகமாக அடைந்துவிட முடியாது. <பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் இலக்கு என்பது அவரவர் கையில் இருப்பதில்லை. அது ஏற்க்கனவே நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வழியில் செல்லாமல் வேறு வேறு வழிகளை தேர்ந்தெடுக்க முயற்ச்சிகளை மேற்கொள்ளும் மனிதன் தோல்விகளை அல்லது நிறைவற்ற வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறான்."வாழும் வரை போராடு" என்பது வாழ்வின் அடிப்படை; போராட்டம் என்பது பிறந்த குழந்தை முதல் அடுத்த நிமிடம் இறந்து போகும் மனிதன் வரையில் தவிர்க்க இயலாத ஒன்று. ஒவ்வொரு போராட்டமும் வெவ்வேறான பாடங்களை புகட்டும். வித்தியாசமான அனுபவங்களை கொடுத்துவிட்டு செல்லும் போராட்டங்கள் இல்லையென்றால் வாழ்க்கை என்பதற்கு பொருள் இல்லாமல் போகும். பொருள் அல்லது அனுபவமற்ற வாழ்க்கை வீண், ஒவ்வொரு அனுபவத்தின் மூலம் கற்ப்பிக்கப்படுகின்ற அறிவுரைக்கு பின்னர் அவற்றைப்பற்றிய தெளிவு என்பது வரவழைக்கப்படும். இவை அனைத்தையுமே உதாசீனப்படுத்தும் பலரது வாழ்க்கை மீண்டும் மீண்டும் சிக்கல்களை அதிகரித்து கொள்ள வழி செய்துவிடுகிறது. தன்னை போல பூமியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உயிரும் பல்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்வது அவசியம். அதன் மூலம் ஒவ்வொரு ஜீவனையும் மதிக்கும் மனநிலை உருவாகும். எதையும் அழிக்கவோ அதிகாரம் செலுத்தவோ நமக்கு அதிகாரம் கிடையாது என்பதை அறிந்துகொள்ள முடியும். மரம் முதல் மண் வரையில் எதையும் அழிக்கும் அதிகாரம் ஒருவருக்கும் கொடுக்கப்படவில்லை. தனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து முடிக்க பணம், உயர்வு, புகழ், பட்டம், என்கின்ற மனிதனால் உண்டாக்கப்பட்ட சொர்கத்தை மட்டுமே இலக்காக வைத்து தொடரும் வாழ்க்கை எவ்வாறு நிறைவான வாழ்க்கையாக இருக்க முடியும். நிறைவு என்பது உலகத்திற்கு சொந்தமான பணம், பொருள், இன்பம் என்பனவற்றில் இருக்க வாய்ப்பு இல்லை, ஏனெனில், அவ்வாறான சுகத்தை தேடி அடைந்து நிறைவடைந்தவர் வாழ்ந்த சரித்திரம் கிடையாது.
இறைமகன் இயேசு இவ்வாறாக கூறுகிறார். நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” < என்று கூறினார். முதன்மையான இடம் என்பது பணம், புகழ், பட்டம், பொருள், இன்பம் என்பனவற்றில் இல்லை, மாறாக தாழ்ச்சி, பணிவு, அடக்கம், போன்ற நல்ல குணங்களில், அடங்கியுள்ளது. <இறைவன் நம் அனைவருக்கும் பல குணங்களையும், திறமைகளையும், வரங்களையும் கொடுத்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் இறைவனுடைய கொடைகளை நம்முடைய ஈடுபாடு என்னும் நற்செயல்கள் வழி பயன்படுத்தி விண்ணக வாழ்வை இவ்வுலகில் வாழ முனைபோம். ஆமென்.