இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 14ம் ஞாயிறு

அமைதியின் அறுவடை

எசாயா 66:10-14
கலாத்தியர் 6:14-18
லூக்கா 10:1-12,17-20

அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. (லூக்10:2)
அறுவடை என்பது நிலம், உழைப்பு, உழுதல், நீர்பாய்ச்சுதல், பயிரிடுதல், களையெடுத்தல், அறுவடை என பல பகுதிகளை கொண்ட அமைப்புத்தான் அறுவடை. இதனை கிறிஸ்தவ வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்தல் என்பது இன்றைய காலக் கட்டத்தில் சவால்கள் நிறைந்த ஒர் சிறப்பு அழைப்பு எனலாம். திருச்சபையில் பணிகள் அதிகம், அதே போல் பணிகளில் வேலைவாய்ப்பு இல்லாத சந்தர்ப்பமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் தேவையான வேலைகளையும்,பணிகளையும் கடவுள் வைத்திருக்கின்றார். அந்த வேலை அவர் நமக்கு கற்றுத்தந்த அன்பு, ஆறுதல் வார்த்தைகள், இரக்கத்தின் இதயம், அன்பு, அரவணைப்பு,கனிவு, அக்கறை, தியாகம், மன்னிப்பு, இவற்றை மருத்துவப்பணியாக செய்திட அழைக்கிறார். இந்த மருத்துவ பணியிலே இலவசமாக பெற்றதை இலவசமாக வழங்கிட இறையாட்சிப்பணி பணிக்கிறது. நிலமாகிய நாம் 30,60,100 மடங்குகளாக பலன்தர நமது மருத்துவ உழைப்பு எல்லா இருதயத்தையும் சுத்திகரிக்கும் கருவியாக திகழலாம் என புனித லூக்காஸ் கூறுகிறார்.
பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். (லூக்10:4)
தங்களது நம்பிக்கையை, விசுவாசத்தை முழுவதுமாக எடுத்துச்செல்ல பணிக்கிறார். இங்கு நற்செய்திப்பணியை அறிவிக்க மனதில் அடிப்படையாக இருக்க வேண்டிய திடமான ஆணிவேரை கொண்டு செல்ல சீடர்களுக்கு பணிக்கிறார். நமக்கும் நமது திருச்சபை மற்றும் பெற்றோர்கள் கற்றுத்தந்த நம்பிக்கையையும், விசுவாசத்தையும் புதுப்பித்துக்கொண்டே செல்லவும் அறுவடை மிகுதியாக பெறும் வரை நமது வேலைகள் தொடர்ந்து கொண்டே இருக்க புனித லூக்காஸ் அழைக்கிறார். இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைக்க நம்மிடம் இருக்கும் கருவிகளாகிய சேவைகள், திறமைகள், நேரம் என்னும் அன்பளிப்புக்கள் மூலம் மற்றவருக்கு வழங்கிடவும், நம்பிக்கை, மற்றும் விசுவாசம் இவற்றை ஆழமாக உணர்ந்திட உறுதியோடு தொடர்ந்து உழைப்போம். இதன் வழி எளிதாக நற்செய்திப்பணியை நிறைவாக்கலாம்.
அமைதி உண்டாகுக. (லூக்10:5)
அமைதி உண்டாகுக என எல்லா நேரத்திலும் எல்லா சூழ்நிலைகளிலும் பயன்படுத்தக் கூடிய வாழ்த்தின் வார்த்தை. நற்செய்தியை அறிவிக்கவும், பிறரன்பின் சாட்சியாக விளங்கிய நம் முன்னோர்களின் சாட்சிய வாழ்வு அமைதியை அடித்தளமாக கொண்டு இயங்கியது. துப்பாக்கி முனையில் நிறுத்திய போதிலும், பலமதங்களின் துணையாளர்கள் மூலம் சித்ரவதையை அனுபவக்கும் போதும் அமைதியை விரும்பியவர்களும் நம் நடுவில் இன்னும் வாழ்ந்து கொண்டு அமைதிக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அமைதியைப் பெறுவதற்கும், கொடுப்பதற்கும் எத்தகைய தடைகள் உள்ளன. இதில் பழிக்குப்பழி என்று அமைதியை சீர்குலைக்கும் காரணிகள் குறைந்திட நம் கிறிஸ்தவ வாழ்வில் காணப்படும் செபம் என்னும் கருவி ஆயுதமாக செயல்பட தொடர் செபத்தில் இறைவனுடைய அமைதியை வேண்டுவோம். ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இறைவனது தயவு அதிகமாக செயல்பட்டிட நமது ஆன்மீக வழிபாடுகள் மூலம் இல்லத்திலும், நமது உள்ளத்திற்கும், நாட்டிற்கும் அமைதி உண்டாகும் படி செபத்தில் ஆழப்படுவோம். ஆமென்.