இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









உயிர்ப்புக்காலம் மூன்றாம் ஞாயிறு

“என்னைப் பின் தொடர்”<

தி.பணி 5:27-32.40:41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19

உணவருந்த வாருங்கள்
உலகில் உள்ள கலாச்சாரத்திலும் மேலானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. உணவு உடலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியமானாக அமைய உணவு முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தகைய முக்கியமான விருந்தில் பங்கெடுக்க இந்த பாஸ்கா காலம் நம்மை அழைக்கிறது. சிறப்பாக உயிர்த்தெழுந்த இயேசு உணவருந்த வாருங்கள் என சீடர்களை மட்டும் பார்த்து அழைக்கவில்லை. நம் ஒவ்வொருவரையும் பார்த்து அழைக்கிறார். உணவு என்பது நட்பை மற்றும் உறவை வளர்க்க உதவும் ஒரு வழிப்பாதை. இந்த வழிப்பாதையை பயன்படுத்த அனைவருக்கும் வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறது. அதாவது ஒருவர் மற்றவரை அன்பு செய்ய மற்றவர் மீண்டும் பதிலன்பு காட்ட இது உறவின் பாலமாக விளங்கிறது. இங்கு இயேசு சீடர்களை பார்த்து கூறும் உணவு மனிதனின் அன்றாட உண்வை குறிப்பதல்ல, மாறாக உணர்வுப் பகிர்வும், அழைப்பின் ஏற்பும் உருவகமாக கொடுக்கப்படுகிறது. இத்தகைய இயல்புயடைய உணவருந்துதலில் பங்கு ஏற்கும் போது, உறவுக்குக் கைகொடுத்து, அவரின் உயர் பண்பையும், நேசத்தையும் மீண்டும் உணர்ந்து கொண்டு மற்றவருக்கு ஒளிர்விட அழைப்பு கொடுக்கப்படுகிறது.
“ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!”
ஒரு அம்மா வீட்டில் இருந்து கதவை திறந்து கொண்டு வந்தார்கள்.வெளியே மூன்று பெரியவர்கள் வெள்ளை நிற தாடியுடன் நின்றிருந்தனர்.உங்களுக்கு உணவு வேண்டுமா உள்ளே வாருங்கள் என்று அந்த அம்மா அழைத்தார்கள். நாங்கள் உங்கள் வீட்டிற்கு உணவருந்த வர வில்லை என்று அந்த பெரியவர் சொன்னார்.அவர் பெயர் ’வெற்றி’ ,இவர் ’செல்வம்’ நான் ’அன்பு’. எங்கள் மூவரில் ஒருவர் தான் உங்கள் வீட்டிற்கு வர முடியும்.யார் வர வேண்டும் என்பதை உங்கள் குடும்பத்தாருடன் கேட்டுவிட்டு வந்து சொல்லுங்கள் என்றார். அந்த அம்மாவும் கணவரிடம் சென்று நடந்த விவரத்தை சொன்னார். அவள் கணவர் ’செல்வத்தை’ கூப்பிடுவோம் அப்போதுதான் நமது வீடு முழுவதும் ’செல்வம்’ கொட்டி கிடக்கும் என்றார்.நாம் சந்தோஷமாக செலவு செய்யலாம் என்றார். மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு ’வெற்றியை’ கூப்பிடுவோம் என்றாள்.இதை எல்லாம் கவணித்து கொண்டு இருந்த அவர்கள் மகள் இல்லையம்மா ’அன்பை’ கூப்பிடுவோம் என்றாள்.அப்போதுதான் நமது இல்லம் நமது மனம் முழுவதும் ’அன்பால்’ நிறைந்திருக்கும் என்றாள். மூவரும் இதற்கு சம்மதிக்கவே அந்த அம்மா வெளியே சென்று எங்கள் வீட்டிற்கு ’அன்பு’ வரவேண்டும் என்றாள்.’அன்பு’ வீட்டிற்குள் நுழைந்தார்,பின்னாடியே ’வெற்றியும்’, ’செல்வமும்’ சென்றனர். ஒருவர் தானே வருவீர்கள் என்று சொன்னிர்கள் என்று அந்த அம்மா கேட்டார். நீங்கள் ’வெற்றி’ கேட்டு இருந்தால் அவர் மட்டும் வந்து இருப்பார். நீங்கள் ’செல்வம்’ கேட்டு இருந்தால் நான் மட்டும் வந்து இருப்பேன். ஆனால் நீங்கள் ’அன்பு’ வேண்டும் என்று கேட்டதால் நாங்களும் வந்துவிட்டோம்.’ அன்பு’ எங்கு எல்லாம் இருக்கிறதோ அங்கு எல்லாம் நாங்களும் இருப்போம் என்று பெரியவர் சொன்னார்.
ஆம் ஆண்டவரை முழுமையாக அறிதல் மூலம் நமது அன்புமும் நட்பும் விரிவடைகிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு என்னிடம் அன்பு இருக்கிறதா என்று பேதுருவிடம் கேட்கும் போது, பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். நம்மால் பேதுரு போன்று ஆழமாக ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! என்று உறுதியாக கூறக் கூடிய அளவிற்கு நம்மையே முழுமையாக இறைவன் கரங்களில் ஓப்புக்கொடுக்க கூடிய வகையில் திறந்த மனதுடையவர்களாக இருக்கின்றோமா?
உயிர்ப்புக்காலம் இறைமகனை உறுதியோடும், நம்பிக்கையோடும், மீண்டும் உறவை புதுப்பிக்கும் காலமாக திருச்சபை நமக்கு கொடுத்திருக்கிறது, ஆகவே சீடர்கள் எவ்வாறு உயிர்ப்பின் ஆண்டவரைக் கண்டார்களோ அதே விசுவாசத்தை நாமும் பெறமுயல்வோம். ஆமென்