இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலம் 1 ஆம் ஞாயிறு

சோதனைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்

இணைச்சட்ட நூல் 26:4-10
உரோமையர் 10:8-13
லூக்கா 4:1-13

இறைமகன் இயேசு இங்கு மனித தன்மையில் விளங்குவதை புனித லூக்காஸ் நமக்கு பறைசாற்றுகிறார்.
“தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.“
பலவிதமான அனுபவங்களை பெற்றுக் கொள்ள நம்மை இயக்க நிலையில் வைக்கிறோம். இந்த இயக்க நிலை புதிய சூழலுக்குள் சென்று அனுபவம் பெற வாய்ப்பு கொடுக்கிறது. இது நாம் வாழும் சமுதாயம், நம்மை சுற்றியிருக்கும் பெற்றோர், குடும்பம், ஆசிரியர்கள், நண்பர்கள் என பலவகைகளில் இருந்து ஒரு தனிப்பட்ட மனிதனை வந்தடையும் காரணங்கள் என கருதலாம்.
அதே போன்று இறைமகன் இயேசு பாலைநில அனுபவம் பெற அழைக்கப்பட்டார் என்பதை புனித லூக்காஸ் சுட்டி காட்டுகிறார். பாலை நில அனுபவம் என்ற உடன் வறட்சியான அனுபவம் என்பதை நாம் நினைக்கிறோம். ஆனால் பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் புடமிட்டு தூய்மையாக்கப்பட்டனர். பராமரிக்கும் தந்தையாக இறைவன் இருக்கிறார் என்பதை அறிந்த இடம் பாலைவனம். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் நினைவு சின்னமாக விளங்குவதும் இந்த பாலைவனம். பாலைவன அனுபவம் ஒரு மனிதனை பக்குவமடையச்செய்கிறது. இந்த அனுபத்தை அனுபவிக்க பல மனிதற்கள் பாலைவனத்தை நோக்கி செல்கிறார்கள். நாமும் இந்த அனுபத்தை பெற்று இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துவோம்.
“‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்“
மனிதராக உருவெடுத்த இயேசுவிற்கும் சோதனை எழுந்தது என்பதை இன்றைய நற்செய்தி எடுத்தியம்புகிறது. எனது பலவீனத்தில் தான் பலம் பெறுகிறேன் என புனித பவுல் கூறுகிறார். பலவீனமே ஒருவரை பலசாலியாக்கும் என்கிறது தமிழ் பழமொழி. சோதனை என்ற வார்த்தையை கேட்ட உடன் நம் எண்ணத்தில் உணர்வுகளில் எழுவது துன்பம், துயரம், குழப்பம், ஏன், எதற்கு என்ற சிந்தனை மட்டுமே. ஆனால் அதற்குள் மறைந்திருக்கும் ஆற்றல் சோதனையில் இருந்து வெற்றி பெரும் போது மட்டுமே புரியும். நமக்குள் புதைந்திருக்கும் திறமைகள், சுய ஆற்றலையும், நமக்கும், இவ்வுலகுக்கும் எடுத்துரைக்கும் சாதனைதான் சோதனைகள். சோதனை என்பது மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ நம்மில் தோன்றலாம். மன ரீதியாக பார்த்தோமேயானால், எதிர்பார்த்தது நமக்கு கிடைக்காத போது ஏற்படுகிறது. அன்புக்காக, அரவணைப்புக்காக, இரக்கத்திற்காக, ஆதரவுக்காக, மன்னிப்புக்காக, நட்புக்காக, உரிமைக்காக என பலவற்றில் இருந்து நிறைவை எதிர்ப்பார்த்து கிடைக்காத போது சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறோம். மனநிலை பாதிக்கும் போது உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறோம்.
ஆனால் மனிதரான இறைமகன் இயேசு கூறுவது, தந்தையாகிய கடவுள் என்னில் நம்பிக்கை கொண்டார், நானும் அவரில் நம்பிக்கை கொண்டேன், அதற்கு பரிசாக சோதனைகளை வெல்லும் ஆற்றல் கிடைத்தது. அதே போல் சீடர்களுக்கும் நான் கற்றுக் கொடுத்து, சோதனைகளிலிருந்து எங்களைக் காத்தருளும். ஆம் இவ்வுலகம் சோதனைகள் நிறைந்த உலகம். ஆனால் அதற்கு செபம், இறைநம்பிக்கை என்னும் சிறந்த கருவிகள் மூலம் வெற்றி கொள்ளலாம் என இறைமகன் இயேசு நமக்கு கற்றுக் கொடுக்கிறார். தொடங்கியுள்ள தவக்காலம் செபத்தில், இறைநம்பிக்கையில் ஆழப்பட நம்மையே தயாரிப்போம். ஆமென்.