இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 25 ஆம் ஞாயிறு

தலைமைத்துவம்

சாலமோனின் ஞானம் 2:17-20
யாக்கோபு 3:16 4:3
மாற்கு 9:30-37

இறைமகன் இயேசு கொடுக்கும் தலைமைத்துவம்
“ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்”
கடந்த வார நற்செய்தியிலும், இன்றைய நற்செய்தியில் இயேசு தன் பாடுகளை பற்றி சீடர்களிடம் அறிவிக்கின்றார். ஆனால் அவர்களிடையே போட்டி மனப்பான்மை மேலோங்குகிறது. இயேசுவிற்கு பின் யார் தலைவராவது?
அன்பிற்கு பொருள் கொடுக்கும் யோவானா
வயதில் மூத்த அந்திரேயாவா
அனுபவத்தில் உயர்ந்த பேதுருவா
ஆசையில் மயங்கிய யூதாசா
ஆளுமையில் சிறந்த மத்தேயுவா
அறியாமையில் திகழ்ந்த பிலிப்புவா
ஆண்டவரின் உறவினர் என்ற உரிமையில் யாக்கோபா
வினாக்களை எழுப்பும் ததேயுவா
தீவிரவாதி என்ற சீமோனா
தடுமாற்றம் கொண்ட தோமாவா
அர்ப்பண வழியில் செல்லும் பர்த்தலமேயுவா
பதவி ஆசையில் இருக்கும் தம் சீடர்களை பார்த்து கூறினார்:
சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.
சிறுபிள்ளை போல் அன்பு, கபடற்றதன்மை, எதார்த்தம், கொண்டவர்களாகவும், ஒரு தலைவருக்குள்ள வாழ்வை வாழ்ந்து காட்டும் (இறைமகன் இயேசு) எனது மனநிலையை பெற்று வாழுங்கள் என வாழ்ந்து காண்பிக்கிறார். நம்மையும் பார்த்து பணிக்கிறார். ஆகவே நாம் தலைமைக்கு போட்டி போடாமல் தொண்டு செய்திட முனைவோம். ஆமென்.