இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு

திறக்கப்படு

எசாயா 35:4-7
யாக்கோபு 2:1-5
மாற்கு 7:31-37

அன்றைய யூத சமுதாயத்தில் இருந்த பூட்டு:
1. பெற்றோர்கள் அல்லது அவர்களின் முதாதையர்கள் செய்த பாவத்தின் தண்டனை தீர்ப்புதான் இந்த உடல்நலக்கோளாறு என்று கூறப்பட்டது. (யோ9:12)
2. காது கேளாமை, வாய் பேசாமை, அல்லது ஊனமுற்றவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டு சாபத்திற்கு உள்ளானவர்கள் என கருதப்பட்ட காலம்.
அப்படிப்பட்ட சமுதாய மூடநம்பிக்கைக்கும், குறைவான புரிதலுக்கும், தப்பறையான கொள்கைகளுக்கும், நெறிமுறைகளுக்கும், ஒழுங்குகளுக்கும் இறைமகன் இயேசு புதிய திறவுகோலாக திகழ்கிறார்.
திறக்கப்படு
அன்பின் குரல் பேசுவதைத் தனது இதயத்தில் கேட்கவும், இறைவனோடும் மற்றவரோடும் தொடர்பு கொள்வதற்கு அடிப்படையாக விளங்கும் மனதை, எண்ணத்தை, ஒரு தனிப்பட்ட மனிதனை, சமுகத்தை, நாட்டை, உலகத்தை சீர்தூக்கி பார்க்க அழைக்கும் கோட்பாடுத்தான் “திறக்கப்படு”. இந்த மொழியைப் பேசுவதற்கு கற்றுக்கொள்ள இயேசு மனிதனானார். இதனாலே திருமுழுக்கு அருட்சாதனச் சடங்கில் 'எப்பத்தா' என்ற அடையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அருட்சாதனத்தின் மூலம் மனிதர் தூய ஆவியை சுவாசித்து பேசுவதற்குத் தொடங்குகிறார். திறக்கப்படுதல் என்பது எவராவது திறந்துவிடுவார்கள் என காத்திருத்தலை குறிப்பது அல்ல. மாறாக தனிப்பட்ட விதத்தில் செயல்பட அழைப்பு.
ஆம் கடந்த வார இறைவாசகங்கள் முழுவதையும் திருப்பி பார்த்தால் அனைத்தும் குணமாக்குதலை மையமாக கொண்டு அமைந்தது. குணப்படுத்துதல் என்பதை அனைவரும் மற்றவருக்கு கொடுக்க இயலும். எவ்வாறெனில் அன்பு, சமாதானம், ஒற்றுமை வழி பகிர்ந்திட முடியும். பூட்டுகள் நிறைந்து காணப்படும் உலகிலில் இறைமகன் இயேசு திறவுகோலாக விளங்குகிறார். இந்த திறவுகோலின் வழி உள்ளே செல்ல அனைவருக்கும் வாய்ப்புக்கள் கொடுக்கப்படுகிறது. அதை திறம்பட செயல்படுத்திய மனிதர்கள் தான் புனிதர்களாக திகழ்கின்றனர்.
புனித பவுல் வாழ்க்கையில் குரலை கேட்டல் என்னும் திறவுகோல்
புனித பேதுரு வெகுளிதனம், கபடற்றத்தன்மை என்னும் திறவுகோல்
புனித பிரான்சிஸ் ஏழ்மை என்னும் திறவுகோல்
புனித அகுஸ்தினார் தன்னை அறிதல் என்னும் திறவுகோல்
புனித அன்னை தெரேசா அன்பு என்னும் திறவுகோல்
புனித மார்ட்டின் பகிர்தல் என்னும் திறவுகோல்
புனித மகதலா மரியா துணிவு என்னும் திறவுகோல்
புனித மரிய கொர்ற்றி இளமை அர்ப்பணிப்பு என்னும் திறவுகோல்
புனித தோமா நம்பிக்கை என்னும் திறவுகோல்
திருத்தந்தை பிரான்சிஸ் கூறும் இரக்கம் என்னும் திறவுகோலை ஆயுதமாக பயன்படுத்துவோம்.
இவர்கள் அனைவரும் தனது அன்றாட நிகழ்வுகளில் திறவுகோலை கையாண்டு குணப்படுத்துதலை பகிர்ந்தார்கள். கடவுள் அவர்களுக்கென்று திறந்து வைக்கப்பட்ட திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
நாமும் அன்றாட வாழ்வில் காணப்படும் சூழ்நிலைகளுக்கு நமது நற்செயல்கள் வழி, தூய ஆவியின் கனிகள் வழி, இயேசுவின் மதிப்பீடுகள் வழி அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பரிவு......வாழும் போது, மேலும் அவ்வாறு வாழ முயற்சிக்கும் போது நம்மில் குணமாக்குதல் நிகழ்வு நடைபெறுகிறது. அதை செயலாற்றி விண்ணக வாயிலை இம்மண்ணுலகில் திறந்திட இயேசுவை முன் கொண்டு செயல்பட முனைவோம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஆமென்.