இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு

திருச்சபையின் ஆணிவேர்

யோசுவா 24:1-2.15-17.18
எபேசியர் 5:21-32
யோவான் 6:60-69

திருச்சபையில் வாழ்கின்ற நாம் நமது தலைவரை முன்மாதிரிகையாக கொண்டு வாழ இன்றைய வாரம் அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சபையில் ஒரு உறுப்பினராக இருக்கிறோம். உறுப்பினர்க்ளாகிய நாம் இவ்வுலகிற்கு இயேசுவை பிரதிப்பலிக்கும் நபர்களாக திகழ வேண்டும். கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்துவிடுவது என்பது எளிதான ஒன்றாக இருப்பது கிடையாது. இயேசு கூறிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள், போதனைகளை புரிந்து கொள்வது மிகவும் எளிதானதாக உள்ளது. ஆனால் அதை ஏற்றுக்கொள்வது கடினம். இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம் (யோ6:60) ஆகவே தான் பல சீடர்கள் இயேசுவை விட்டு பிரிந்து சென்றனர். இயேசுவின் வாழ்வும், வார்த்தையும் நடைமுறை வாழ்வோடு இணைந்து காணப்பட்டது. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. (யோ 6:68) இயேசுவின் போதனைகள் புதிய கலாச்சாரத்தை இலட்சியத்தை, புரட்சியை விதைக்கும் இறையரசு பணியாகவே இருந்தது. நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். (யோ 10:11) வார்த்தையை வாழ்வாக்கிய இயேசு நாம் நிலைவாழ்வு பெறவே தன்னையே முழுமையாக கொடுத்தார். இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ளவை, குணமளிப்பது, ஆறுதலளிப்பது, மாற்றம் கொணர்வது, மன்னிப்பு வழங்குவது, எக்காலத்திற்கும் வாழ்க்கையோடு பொருந்துவது, அறிவுரை கொடுப்பது, நன்மை வழங்குவது, மற்றும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் கொண்டது. இதைதான் அன்று பேதுரு தனது அறிக்கையாக வெளிக்கொணர்கிறார்.“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்”. (யோ 6:68-69)
1. மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார். (இச 8:3)
2. என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு. (திரு 119:105)
3. தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. (யோ 1:1)
4. கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். (பிலி 2:14)
5. கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. (எபி4:12)
இன்றைய காலத்தில் நமது சமுதாயத்தில் உலா வரும் வார்த்தைகள் வெறும் பேச்சுக்களாகவே மட்டுமே இருக்கிறது. அது மக்களின் நலன்களை கருதாமல் சுயநலமானதாகவே உள்ளது. உதாரணமாக அரசியல், மற்றும் தலைவர்கள் மக்களை நல்வழிப்படுத்த கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்துகின்றனர். இதில் தனது வார்த்தையால் மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கின்றனர், ஆனால் அந்த வார்த்தைகளில் உண்மை என்ற பெயரில் போலி பேச்சுக்கள், மாற்றம் என்ற பெயரில் மறுதலிப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வகையில் உலகத்தில் கோடி கணக்கான மக்கள் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், கொலை, கொள்ளை, மனித நேயம் குறைப்பாடு, என்ற காரணிகள் பெருகிகொண்டே செல்கிறது.
வரலாற்றில் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த முற்காலத்திற்கும் வழிகாட்டியாகவும், தலைவராகவும் விளங்குபவர் நம் இயேசு. இன்றும் என்றும் இறைவார்த்தை வழியாக நம்மோடு பக்கபலமாக இருந்து புத்துணர்வூட்டி, வழிநடத்துகிறர். இந்த இறைவார்த்தையை வாசிக்க பழக்கப்படுத்திக் கொள்வோம்.
காலங்களை புரிந்துக்கொள்ளவும், உணர்ந்துக்கொள்ளவும், அறிந்துக்கொள்ளவும் இறைவார்த்தை நல்லுதவி செய்து ஊக்கமுட்டுகின்றன. இதை வாழ்வில் செயல் படுத்திட முனைவோம்.
சவால்களை ஏற்றுக் கொண்டு இயேசுவின் வார்த்தைகள், போதனைகள் மற்றும் படிப்பினைகளை முழுமையாக தயக்கம் கொள்ளாமல் கடைப்பிடித்து ஏற்றுக்கொள்வோம். இன்றைய வாரம் திருச்சபையில் இருந்து விலகி சென்றவர்களுக்காகவும், திருச்சபையில் தயக்க நிலையில் இருப்பவர்களுக்காகவும் செபிப்போம்.
பேதுரு துணிவுடன் அறிக்கையிட்டதை நாம் கடைப்பிடிப்போம். யாரிடம் செல்வோம், நிலைவாழ்வு தரும் வார்த்தைகள் உம்முடம் தானே உள்ளன என்பதற்கு சான்று பகர்வோம்.
கிறிஸ்தவ வாழ்விற்கு வலிமையாகவும், நம்பிக்கை கொடுப்பதாகவும் மேலும் அக்காலம் தொடங்கி இக்காலம் வரை புனித பேதுரு நமக்காக வாக்குறுதியளிக்கிறார். எவ்வாறெனில் நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம். (யோ 6:69) கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பது தன்னை வெறுமையாக்கி, கடவுளிடன் திட்டத்தை முழுமனதுடன் நிறைவேற்றுவது. திருச்சபையில் உருவாகி இருக்கின்ற பல துறவற சபைகள் இதனை கண்முன் கொண்டு பல தனிவரங்களுடன் இறையாட்சி மலர உழைக்கின்றனர். தனது முழு அர்ப்பணத்தை வாழ்ந்து காட்டிய சீடர்கள், இறைவாக்கினர்கள், மறைசாட்சிகள் மற்றும் புனிதர்கள் தடுமாற்றம் இல்லாத அர்ப்பணவாழ்வை தொடங்கினாலும் உண்மையை ஏற்றுக்கொள்ளவும் அதன் படி தனது வாழ்வை நடத்தி செல்வதிலும் தடுமாற்றம் அடைகின்றனர். இயேசுவை பொறுத்தமட்டில் வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. (யோ 6:63) என்கிறார். இயேசுவின் ஆணித்தரமான வார்த்தைகள் தத்தளித்துக் கொண்டிருந்த சீடர்களுக்கு புதிய வாழ்வை, நம்பிக்கையை, துணிவை, புதிய ஆற்றலை கொடுத்தது.
இந்த துறவற ஆண்டில் திருச்சபைக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்த ஒவ்வொரு உறுப்பினருக்காகவும் அவர்களின் செபவாழ்வு, குழுமவாழ்வு, பணிவாழ்வு மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாகும் சூழ்நிலைகள், தடுமாற்றம் கொள்ளும் இருண்ட நேரத்திற்காகவும் செபிப்போம். இயேசுவின் அர்ப்பணத்திற்குத் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கின்றனர். இவர்கள் வாழ்வு கிறிஸ்த்தவ அர்ப்பண வாழ்வின் ஆணிவேராக ஊன்றப்பட செபிப்போம்.