இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் 20ஆம் ஞாயிறு

அறிந்துணரும் உணர்வு

நீதிமொழிகள் 9:1-6
எபேசியர் 5:15-20
யோவான் 6:51-58

ஞானத்தின் கொடைகளினால் தம் மக்களை நிறைக்கும் ஆவியானவர் இடைவிடாது நிறைஉண்மையை நோக்கி மனித குலத்தை வழி நடத்துகின்றார். ஆம் ஞானம் என்பது அறிந்துணரும் உணர்வு என ஒரு கருத்தை கூறலாம். இறைவன் நமக்கு கொடுத்துள்ள நிறை உண்மையை நோக்கி செல்ல வலியுறுத்தப்படுகிறோம். அதன் நிறை உண்மையை அறிய நமக்கு அறிந்துணரும் உணர்வு தேவைப்படுகிறது.
இன்றைய உலகில் எதை எடுத்தாலும் கலப்படம். மனிதர்களில் கூட தீயோர்கள் மத்தியில் நல்லவர்கள்......சூழ்நிலைகளில் கூட நெருக்கடியின் மத்தியில் அமைதி......வாழ்க்கையில் கூட துன்பங்கள் மத்தியில் மகிழ்ச்சி என சுழற்றுக்கொண்டே இருக்கிறது. இவற்றில் தெளிவு காண ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். (எபே 15-5)என புனித பவுலடியார் கூறுகிறார். ஞானமுள்ளவர்களால் மட்டுமே ஆண்டவருடைய திருவுளம் யாது என புரிந்து கொள்ள இயலும். திருவுளம் என்பது மறைபொருள். அதனை புரிந்துக்கொள்வது எளிதல்ல, இயேசு அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் விதமாக கதைகள், உவமைகள், எடுத்துக்காட்டுகள் என எளிய வழிமுறையை கையாளுகிறார். அவ்வாறு கையாளும் போது சமுதாயத்தின் அறியாமை, வேதனை, கலக்கம், கலவரம், மதம், சாதி, பணம், பதவி, ஆக்கிரமிப்பு, பதுக்கல் என குழப்பத்தின் மத்தியில் தெளிவினை காண, நிறை உண்மையை நோக்கி செல்ல அழைக்கிறார். இதற்கு நேரிய மனத்தோடும், நன்மை செய்வதில் விருப்பத்தோடும், உண்மை கோட்பாடுகளோடும், வீரத்தோடும் வாழ்ந்தாலே கடவுளது திருவுளம் இரகசியமாக இருந்தாலும் புரிந்துக்கொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டு, அன்னை மரியாள், ஆபிரகாம், மோசே, ......... வாழ்க்கையில் எல்லா சிக்கல்களில் இருந்தும் விடுதலை பெற தொடர் நம்பிக்கை, தொடர் விசுவாசம் நம்மில் செயலாற்ற வேண்டும்.
கிறிஸ்தவ விசுவாசத்தில் எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் என்பது திருவிருந்து. இந்த திருவிருந்து என்றும் அழியா உணவாக விளங்குகிறது. இது இயேசுவின் அன்பையும், பராமரிப்பையும், பகிர்தலையும் அடையாளமாகக் கொண்டது. இந்த அடையாளம் நாம் பகிரும் அன்பில், சக்தியில், மகிழ்ச்சியில், அமைதியில், உதவியில், பரிவில் தான் அடங்கியுள்ளது.
நாம் இனம் கண்டு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வகையான பசி எனலாம். பசி என்றதும் வயிற்று பசியை மட்டும் நம் வாழ்வில் பொருள் கொள்கிறோம். ஆனால் கடவுளுக்கேற்ற செயல்களை செய்யும் போது அந்த பசியை போக்குகிறோம். அவற்றை திருவிருந்தில் இருந்து பெறுகிறோம். அவற்றை பகிர்ந்துக் கொள்ளும் போது புதுபொலிவு பெறும் விதமாக வாழ்வு பெறுகிறோம், வாழ்வு கொடுக்கிறோம். ஆமென்.