இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே,யேர்மனி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









தவக்காலத்தின் முதல் ஞாயிறு

சோதனையே திறவுகோல்

தொடக்க நூல 9: 8-15
1 பேதுரு 3: 18-22
மாற்கு 1: 12-15

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசுவின் மனிதத்தன்மையைத் எடுத்துரைக்கிறது. அவரின் சோதனையையும், வேதனையையும் திருச்சபை நம் கண்முன் வைக்கின்றது. இயேசு தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு பாலைவன அனுபவம் பெற அழைத்துச்செல்லப்படுகிறார். வாழ்வில் கிடைக்கின்ற அனுபவங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கின்றன. அவை முதிர்ச்சி, வளர்ச்சி, தளர்ச்சி, பயிற்சி என பலவிதத்தில் எடுத்துக்கொள்ளலாம். மனிதருக்குள் புதைந்திருக்கும் சக்தியை அறிந்துக் கொள்ள உதவும் திறவுகோல் தான் சோதனை.

• இப்படிப்பட்ட சோதனைக்கு அடையாளத்தின் சின்னமாக பாலைநிலத்தை புனித மாற்கு நம் கண்முன் வைக்கிறார். பாலைநிலம் என்றதும் நாம் நினைப்பது மணல், தனிமை, வறண்ட பகுதி, வெறுமை, மிகுதியான வெயில், இரவில் குளிர் நிறைந்து காணப்படும் ஒரு பகுதி. ஆனால் இந்த இடத்தில் இருந்துத்தான் உறவு பிறக்கிறது. இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ஆழப்படுத்தப்படுகிறது. (எசா 40:3)

இறைமகன் இயேசு சோதிக்கப்படுகிறார், அதில் வெற்றி காண்கிறார், நம்மையும் கடந்து வர அழைக்கிறார்.
திருவிவிலியத்தில் சோதனைக்கு உட்பட்டவர்களில் சிலர்:
ஆதாம் ஏவாள் (தொ 3:16)
காயின் ஆபேல் (தொ 4:1-16)
ஆபிரகாம் (தொ 22:1)
யோபு (யோபு 1:1-12)
பேதுரு (மத் 26: 69-75)
யூதாஸ் (மத் 27:3-10)

சோதனை வேளையில் நமது நம்பிக்கையை, விசுவாசத்தை உறுதிப்படுத்த வேண்டுவோம்.
• இயேசு வெற்றிக்கொண்டார் என்பதற்கு மாற்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் செய்தி வானதூதர்கள் இறைமகன் இயேசுவிற்கு பணிவிடை செய்தார்கள் என வாசிக்க கேட்கிறோம். மாற்1:13
• மத் 6:13 செபத்தின் வழி சோதனைகளை வெல்ல முடியும் என அன்று சீடர்களுக்கு கற்றுக்கொடுத்து திடப்படுத்தினார். அந்த இறைமகன் இயேசு நம்மையும் செபத்தின் வழி அனைத்து சோதனைகளையும், வேதனைகளையும், கசப்பான அனுபவங்களையும் மறந்து மீண்டும் புதுவாழ்வு பெற முடியும் என நம்மை அழைக்கிறார்.

கடவுளுடைய மகனாகிய இயேசுவே சோதனைக்கு உட்பட்டார் எனில் மனிதர்களாகிய நாம் சோதனையை, வேதனையை வாழ்வில் சந்திப்பது என்பது இயற்கையின் நியமனங்கள். மேலே சுட்டிக் காண்பிக்கப்பட்டவர்களில் கூட வெற்றி, தோல்விகளை சந்தித்தவர்களைப் பார்க்கிறோம். ஆம் எதார்த்தங்களை இறைவன் துணையோடும், விசுவாச கண்ணோட்டத்தோடும் வழிசென்ற ஆபிரகாம், யோபு, பேதுருவை நம் சோதனை வேளையில் கண்முன் கொள்வோம். சோதனைகளை எளிதில் கடந்து வரமுடியும் என இறைநம்பிக்கை கொள்வோம்.

நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் சோதனையும், வேதனையும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன. இந்த வார செபங்கள், ஒறுத்தல்கள் சோதிக்கப்படும் போது நாம் இறைவன் மீது கொண்டுள்ள விசுவாசத்தில் ஆழப்பட அமைவனவாக இருக்கட்டும். செபம் வழி வெற்றியை இவ்வுலகிற்கு பறைசாற்றும் மனிதர்களாக வாழ இறைவன் துணை நாடுவோம். மன்றாடுவோம். ஆமென்.