இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









கன்னிமரியாள் இறைவனின் தாய்

ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக

எண்ணிக்கை 6:22-27
கலாத்தியர் 4:4-7
லூக்கா 2:16-21

ஆண்டின் முதல் நாளில் திருஅவை கன்னிமரியாள் இறைவனின் தாய் என்ற திருநாளைக் கொண்டாடுகின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்டை ஓட்டு இடம் என்று கூறப்படும் கொல்கொதா என்ற மலையில் இறைமகன் இயேசு நம் அனைவருக்கும் அன்னைமரியாவை நமது தாயாக கொடையாக கொடுத்தார். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையம் கண்டு தம் தாயிடம் "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம். "இவரே உம் தாய் " என்றார். (யோவான்:19:26-27) அன்று முதல் இன்றுவரை மனுக்குலம் முழுவதற்கும் அன்னைமரியாள் அன்புத் தாயாக விளங்குகின்றார். எண்ணிக்கை நூலில் இறைவன் மோசேயிடம் ஆசிகூற முறையை சற்று சிந்திப்போம் "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவீராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! "ஆம் ஆண்டவரின் ஆசீரை அன்னை மரியா முழுவதுமாக பெற்றவர். கலிலேயாவிலுள்ள நசரேத்து என்னும் ஊரில் கபிரியேல் வானதூதரால் வாழ்த்திய வார்த்தைகளும் எண்ணிக்கை ஆகமத்தில் இறைவன் மோசேயிடம் கூறிய ஆசிமுறைகளும் நமது அன்றாட வாழ்க்கைக்கு ஓர் எடுத்து காட்டு. அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும் " என்று ஆசி கூறுகின்றார். அன்னை மரியாள் இறைவனின் அருளால் நிறைந்த போது அவர் அமைதியாக இருக்கவில்லை மாறாக அவர் தனது உறவினர் எலிசபெத்தை சந்திக்க யூதேய மலை நாட்டிற்கு சென்று அந்த மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்கின்றார். எலிசபெத்து மரியாவின் வாழ்த்தைக் கேட்டபொழுது அவரும் உளமார அன்னை மரியாவை இவ்வாறு வாழ்த்துகின்றார். "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என்று வாழ்த்துகின்றார். (லூக்கா:1:42) இவ்வாறுதான் நாமும் நமது அனுதின வாழ்க்கை வட்டாரத்தில் ஒருவர் மற்றவருடன் அஐள் நிறைந்த இறைஆசி மொழிகளைப் பகிர்ந்து கொள்ள இறைவன் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்மை அழைக்கின்றார்.

ஆண்டின் முதல்நாளில் காலடிவைத்துள்ள நாம் அனைவரும் இறைவனின் அருளால் நிறைந்து புது வாழ்வைக் தந்தமைக்கு நன்றி கூறுவோம். நாம் அனைவரும் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதால் இறைவன் தம் மகனின் ஆவியை நம் அனைவரின் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார். எனவே வார்த்தையான இறைவன் நம்மிடம் எப்பொழுதும் குடிகொண்டுள்ளார். ஆகையால்தான் நாம் உரிமையோடு அவரை அப்பா தந்தையே என்று அழைக்கின்றோம். அவருடைய ஆசீரும் அருளும் நம்மில் நிறையும்போது நமது உள்ளம் மகிழ்ச்சியால் நிறையும் என்பது உண்மை. இன்று நமது உள்ளத்தில் இறைவனின் அருளினை பெற வேண்டும் என்ற உண்மையான வாஞ்சை நமக்கு இருந்தால், உறுதியாக அவருடைய ஆசிரை எவ்வாறு அன்று அன்னை மரியாள் பெற்றதுபோல் நாமும் இன்று பெறுவோம் என்பது நிச்சயம். ஏனென்றால் உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருப்பேன் என்று சொல்லிய வாக்குமாறா இறைவன் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். இடையர்கள் அன்னை மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டபின்பு அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே சென்றார்கள் என்று நற்செய்தியில் காண்கின்றோம். இறைமகன் பிறப்பைக் கொண்டாடி மகிழ்ந்தோம் ஆனால் உண்மையாக இறைமகன் நம்மில் பிறந்துள்ளாரா? என்று நம்மை நாமே ஆய்வு செய்வோம். இறைவன் நம்மில் முழுமையாக குடிகொண்டால்தான் நாம் பிறருக்கு ஆசி மொழிகள் கூறமுடியும். தற்பொழுது புது ஆண்டிணை தொடங்கியுள்ளோம் எப்படிபட்ட தீர்மாணங்களை எடுத்துள்ளோம். இறைவன் மோசேயின் வழியாக ஆரோனிடமும் அவர் புதல்வரிடமும் சொல்லிய அறிவுறைகளை பின்பற்றுவோமா? நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு ஆசீர் வழங்கும் மக்களாக மாறுவோம். நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மற்றவருக்கு இறைவன் இலவசமாக வழங்கும் ஆசீரை கொடையாக கொடுக்க கடமை கொண்டுள்ளோம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! என்னும் ஆசி மொழிகளை பிறருக்கு வழங்கி உற்சாகப் படுத்துவோம். பல வேளைகளில் இப்படி பிறரை வாழ்த்துவது மிகக் கடினமாக இருக்கும் ஆனால் ஆவியானவராகிய இறைவன் நம்மில் கடந்து சென்று அவருடைய அருளால் நிறையும் போது இயலாதது ஒன்றுமில்லை. புதிய வழிமுறைகளை பின்பற்றுவோம். எனவே இறைவனுக்கு என்றும் விருப்பம் இல்லாத குணங்கள், செயல்கள் எதாவது நம்மில் முடங்கிக் கிடந்தால் அவற்றைக் வேரோடு களைந்துவிட்டு, ஒளியின் கதிர்களை நம்மில் ஒளிரட்டும். புதிய ஆண்டில் இறைவனின் அருள் நிறைந்த கொடைகளையும், வாழ்வு தரும் விழுமியங்களை உள்ளத்தில் ஏற்று சுடர்விடும் விளக்காக விளங்க முயற்சி எடுப்போம். அருள் நிறைந்த அன்னை மரியாளின் துணையை நாடுவோம் . அவருடைய அன்பு மகன் காட்டும் பதையில் நடந்து இறைஅருள் நிறைந்த மகனாக மகளாக வாழ்வோம். இறைவா கடந்த ஆண்டில் நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி.

ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை 'என்றார். பின்னர் மரியா, " நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். " என்றார். லூக்கா:1:37-38