இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு

தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது

சாலமோனின் ஞானம் 9:13-18
பிலமோன் 9:10,12-17
லூக்கா14:25-33

இன்று பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு. இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தில் தன்னுடன் பயணம் செய்த பெருந்திரளான மக்களை திரும்பிப் பார்த்து கூறியதைப்பற்றி சிந்திப்போம். அவரைப் பின்பற்றி அவருடைய சீடராக விரும்புகிறவர்கள் மேற்கொள்ள வேண்டிய, உண்மையான பலன் தரக்கூடிய விதிமுறைகளை முன் வைக்கின்றார். தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள், ஆகியேரையும், தம்முடைய உயிரையும் மேலாகக் கருதினால் அவருடைய சீடராக இருக்க முடியாது என்றும். அன்றாட வாழ்வில் ஏதிர் கொள்ளும் சவால்களை ஏற்றுக் கொள்ளாமல், தன் உயிரையே கொடுக்க தயங்குபவர்கள் என்னுடைய சீடராக இருக்க முடியாது என்று தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். இறைவனின் அழைப்பு துறவர வாழ்வுக்கு மட்டும் அல்ல மாறாக, குடும்ப வாழ்வும், தனி வாழ்வும் ஆகும். வேறுபட்ட அழைப்பு ஆனால் தன் பணிக்காக அழைக்கும் இறைவன் ஒருவர்தான். திருத்தூதர் லூக்கா எழுதிய நற்செய்தியில் "குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்தவராய் இருந்தார் என்று கூறுகின்றார். மேலும் இயேசு ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார். இறைமகன் இயேசு தனது முப்பதாவது வயதில் தனது இறைபணியைத் தொடங்கினார். இறைவனின் பணியைத் தொடங்கும் முன்பு இறைவனின் ஆவியினால் நிறையப் பெறுகின்றார். அவருடைய இறைப்பணி வாழ்வில் மேற்கொண்ட சவால்கள், துன்பங்கள், அவமானங்கள், அனைத்தையும் தன்னுடைய வானகத் தந்தையின் உடனிருப்பினால் அவரால் ஏற்கவும் அவற்றிலிருந்து வெற்றி கொள்ள முடிந்தது. இறைவனின் திருவுளத்தை தன்னுடைய செப உறவால் அறிந்து அவற்றை தன்னுடைய பணிவாழ்வில் செயலாக்கினார். ஏழை எளிவர்க்கு, பாவிகளுக்கு, சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பேய்பிடித்தவர்களுக்கு நல்வாழ்வு வழங்கினார். ஓய்வு நாளில் குணமாகியதற்கும், பாவங்களை மன்னித்த போதும், இறந்தவரை உயிர்பித்த போதும் யூதர்கள், பரிசேயர்கள். மறைநூல்அறிஞர்கள், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், அனைவரும் இயேசு செய்த நன்மைகளைக் கண்டு புகழாமல் அவர்மேல் குற்றம் சுமத்தினார்கள். அவரை சிலுவையில் அறைந்தார்கள். இறைவன் கொடுத்த அழைப்பை ஏற்று, அவர் காட்டிய இலச்சியப் பாதையில் பயணம் செய்து இறைவனுக்கும் மனிதனுக்கும் உகந்தவராய் வாழ்ந்து, சிலுவை மரணத்தின் வழியாக நமக்கு நிலை வாழ்வை வழங்கியவர். நேற்றும் இன்றும் என்றும் நம்மோடு வாழ்ந்து வருபவர். அவரைப் போல் வாழத்தான் மீண்டும் மீண்டும் நமக்கு அவருடைய வார்த்தையின் வழியாகவும் நற்கருணை வழியாகவும் அழைப்பு விடுக்கின்றார். இறைத்தந்தையின் ஆழமான செபஉறவில் அவருடைய திருவுளத்தை அறிந்து அவருடைய அன்பு மகனாக பணியாற்றினார். அவரைப் போல் ஞானத்திலும், ஆவியானவரின் அருளால் நிறைய செபிப்போம்.

இறைமகன் இயேசுவின் அன்பு சீடர்களும், மறைசாட்சிகள், புனிதர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்வை இறையாட்சிப் பணிக்காகவும், நற்செய்தி பணிக்காகவும் தன்னை அளித்த போது அவர்கள் மேற்கொண்ட சாவால்கள் துன்பங்கள் அவமானங்கள் ஏராளம் ஆனால் அவர்கள் பினவாங்க வில்லை மாறாக இறைவன் காட்டிய இலக்கை கண்முன்பாக வைத்து அதைநோக்கிப் பயணித்து அனைத்திலும் வெற்றி பெற்று இறைவனுக்கும், மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. இறைவனுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இறைமகன் இயேசு எவ்வாறு இறைதந்தையின் திருவுள்ளத்திற்கு முதலிடம் கொடுத்து, செப உறவில் அதனை அறிந்து அவற்றை செயல்படுத்தி இறைவனுக்கும் மனிதருக்கும் மிகப் பிரியமானவரானார். அவரையே நமது வாழ்வின் குருவாகவும் ஆன்மீக நண்பனாகவும் ஏற்றுக் கொள்வோம். இன்று நாம் எத்தனையோ உடமைகளை உறவுகளை இறைவனுக்காக கைவிட வேண்டும் ஆனால் பலமுறை அவற்றை கைவிட முடியாமல் தவிக்கின்றோம். இன்று உலகம் காட்டும் மாயக் கவர்ச்சிகளுக்கு அடிமையாகி வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். மனித உள்ளங்கள் பதவி, பணம், தொழில், நட்பு, உறவுகள், மது, போதைப் பொருட்களுக்கும், ஆடம்பர வாழ்வுக்கும் அடிமையாகி அவற்றிகு முதலிடம் கொடுத்து மகிழ்ச்சியான இன்பமான வாழ்வை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றோம். இறைவனை முழுமையாக நேசிக்கவும் பின்பற்றவும் விரும்பினால் இவைகளை உதறித்தள்ள வேண்டும். நம்முடைய அனுதின வாழ்க்கைக்கு இவைகள் தேவைதான் ஆனால் உலகப் பொருட்கள் நம்மை அழிவின் பாதைக்கு வழிகாட்டினால் அவற்றை தவிர்க்க இறைவனின் ஞானமும், தூய ஆவியானவரின் அருள் பொழிவும் வழிநடத்தலும் மிக அவசியமானது. இயேசுவின் அழைப்பை ஏற்று அவர் பாதையில் பயணித்தவர்தான் அன்னை தெரசா, எழ்மையை வாழ்வாக்கி ஏழையர்களுக்கு இறைவனின் அன்பை கொடுத்தவர். இயேசுவைப் போல் எளியவரை தேடிச் சென்று பணியாற்றி, இறைஞானத்திலும் இறைஅன்பிலும் வளர்ந்து, இறைவனுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து, இன்று புனிதரில் ஒருவராக விளங்குகின்றார். இன்று இறைவனின் பணிசெய்ய வேளை ஆட்கள் அதிகம்தேவை எனவே உலக சுகங்களை விட்டு விட்டு வாழ்வுக்கு வழி காட்டும் நல்ல ஆயனின் பாதையில் பயணித்து பணி செய்ய இளம் உள்ளங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று சிறப்பாக இறைவனிடம் மன்றாடுவோம்.