இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு

நான் கனிவும் தாழ்மையும் உடையவன்

சீராக் 3:19-21,30-31
எபிரேயர் 12:18-19,22-24
லூக்கா 14:1,7-14

பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு இறைவசகங்கள் வாழ்க்கைக்கு தேவையான ஓர் ஆழமான உண்மையை உணர்த்துகின்றது. நமது வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் தாழ்ச்சி என்னும் ஞானக் கொடையால் நம்மை அணிசெய்ய வேண்டும் என்று. சீராக் நூல் வழியாக இறைவன் இன்று கூறும் அறிவுரை, அனைத்தையும் பணிவோடு செய் - பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நடக்க வேண்டும். இறைவனுக்கு ஏற்றவர்களாய் பணிவோடும் தாழ்மையோடும் நேர்மையோடும் அன்போடும் வாழும் போது அவர் நம்க்கு கைமாறு அளிப்பார் என்பது உறுதி. தாழ்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள்தான் இறைமகன் இயேசு கிறிஸ்துவும்; அவருடைய அன்புத் தாய் அன்னை மரியாவும். இறைமகன் இயேசு கடவுள் வடிவில் விளங்கியவர் இறைவனுக்கு இணையாய் இருந்தவர் ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று நமக்கு மீட்பு அளித்தவர். இறைமகன் பிறந்த இடம் தீவனத் தொட்டி. இறைமகன் தேடிச் சென்ற மக்கள் பாவிகள் ஏழைகள் நோயுற்றவர்கள் சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர் மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து பணி செய்தவர். இறுதி பாஸ்கா திருவிருந்தின் போது இயேசு பந்தியிலிருந்து எழுந்து சீடர்களின் காலடிகளைக் கழுவியவர். தன்னைக் காட;டிக் கொடுத்தவரை நண்பா என்று அழைத்தவர். தன்னை தெரியாது என்று மூன்று முறை மறுதலித்த பேதுருவை மன்னித்து திருச்சபையின் தலைவராக ஏற்படுத்தியவர். பாவம் ஒன்றும் செய்யாமல் மனித குலத்திற்காக சிலுவை மரணத்தை ஏற்று நிலை வாழ்வை அளித்த பாசம் நிறைந்த இறைமகன் அவர். குற்றம் எதுவும் புரியாமல் பிலாத்து தலைமைக்குருக்கள் யூதர்களின் காவலர்கள் ஆயிரத்தலைவர்கள் அனைவரும் செய்த கொடுமைகள் அவர்மேல் சுமத்திய குற்றங்களை அனைத்தையும் அமைதியுடன் தாங்கி கொண்டவர். ஒழிக ஒழிக என்றும் சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று கத்திய மக்களையும் மன்னிக்கும்படி இறைவேனிடம் தந்தையே அவர்களை மன்னியும் என்று அவர்களுக்காக மன்றாடியவர். இறைமகன் இயேசுவில் எத்துனை பணிவு. நமது அன்பு நிறைந்த இறைமகன் இயேசு கிறிஸ்து தாழ்ச்சி என்னும் ஞானக் கொடைகளை தனது வாழ்வில் செயலாக்கியவர். ஆகவே தான் அவர் நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் என்று கூறுகின்றார். இயேசுவின் எதாவது ஒரு குணங்களை பின் பற்றுவோம்.

அன்னை மரியாள் இறைவனின் அருளைப் பெற்றவர். இறைவன் அவரோடு உள்ளார் என்று வானதூதர் தனது வாழ்த்துரையில் கூறுகின்றார். இறைவனின் திட்டத்தை ஏற்று நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்று இறைவனுக்கு தன்னையே முழுமையாக கொடுக்கின்றார். ஆவியானவர் முழுமையாக அவரை நிழலிட்ட போதும் இறைவனின் வல்லமை இறங்கிய போதும் அவர் அமைதியாக இருக்கவில்லை இறைவனின் பணியை செய்ய யூதேயா மலைநாட்டிற்கு விரைந்து சென்று எலிசெபெத்திற்கு பணிவிடை செய்கின்றார். அவருடைய புகழ்ச்சிப்பாடலில் இவ்வாறு கூறுகின்றார் "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். அன்னை மரியாள் தன்னையே இறைவன்முன் தாழ்மையுடன் அர்ப்பணித்ததால் மீட்ப்பரின் தாயாகவும் இறைவனின் தாயாகவும் நமக்கு தாயாகவும் விளங்குகின்றார். தனது அன்பு மகன்மீது குற்றங்கள் சுமத்திய போதும் மரணதண்டனை அளித்தபோதும். இறைவாக்கினர் சிமியோன் உமது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் என்று மொழிந்து போதும் அவர் மொளனம் ஏற்று இறைவன்முன்பு எப்போதும் அடிமையாக விளங்கினார். தனது அன்பு மகனுக்கு தீர்ப;பிட்டவர்களை அவர் ஒருபோதும் குறைகூறவில்லை. இயேசுவைப்போல் அனைத்தையும் தாங்கிக் கண்டார்.

இறைமகன் இயேசுவும் அவருடைய அன்புத்தாயும் நமக்கு அவர்;களுடைய வாழ்வில் தாழ்ச்சி என்னும் கொடையை எப்படி நமது வாழ்வில் செயலாக்க வேண்டும் என்ற பாதையைக் காட்டியவர்கள். இன்று நான் எவ்வாறு பயணிக்கின்றேன்? எனது வாழ்க்கையில் புகழையும் மதிப்பையும் தேடுகின்றேனா? எனது குடும்பத்தில் சமுதாயத்தில் குழுமத்தில் பிறருக்கு மதிப்பு கொடுத்தும் அவர்களை ஏற்றும் விட்டுகொடுத்தும் வாழ்கின்றேனா? நான் கூறும் வார்த்தைகள் பிறருக்கு ஆறுதலாகவும் அவர்களுடைய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் பாலமாகவும் உள்ளதா என்று சிந்திப்போம். இறைவன் முன் நாம் அனைவரும் சமமானவர்கள். இறைவன் நல்லோர் மேலும் தீயோர் மேலும் ஒரே நேரத்தில் மழைபொழியச் செய்பவர். எனவே இன்று இறைவன்முன்பு வரிதண்டுபவரைப் போலும் வறுமையில்வாடிய ஏழைக் கைம்பெண் இரண்டு காசுகளை காணிக்கையாக கொடுத்தது போல் இறைவன் முன்பும் பிறர் முன்பும் தாழ்மையோடு வாழ்வதற்கு முயற்சிப்போம். இரக்கத்தின் இறைவனின் குணங்களையும் வடிவத்தையும் சுமந்து வாழும் நாம் அவரைப் போல் தாழ்ச்சியோடும் இரக்கத்தோடும் வாழ்வதற்கு ஆவியானவரின் வரமும் இறைவனும் ஆசீரும் வேண்டி அவருடன் பயணிப்போம். அவமானங்களின் வழியேதான் தாழ்ச்சியைக் கற்றுக்கொள்கிறோம். அன்னை தெரேசா