ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்

எசா62:1-5
1கொரி12:4-11
யோவா2:1-11

இன்றைய முதல் வாசகம் மிகுந்த நம்பிக்கை தருவதாய் உள்ளது. எருசலேம் நகரம் மற்றும் ஆலயம் இஸ்ரேயல் மக்களின் அடையாளமாக இருந்தது. ஆனால் கி. மு 587 இல் அவை அழிக்கப்பட்டன. மீண்டும் ஒன்று சேர்க்கப்படும். மீள எழுவீர்கள் என ஏசாயா நம்பிக்கை ஊட்டுகிறார். கை விடப்படவர் எனும் பெயரை அவளில் மகிழ்ச்சி அடைகிறேன் என் மாற்றுகிறேன் என ஏசாயா குறிப்பிடுகிறார்.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் தூய ஆவியானவரின் அருள் கொடைகளை அருமையாக எடுத்துச் சொல்கிறார். மக்கள் ஒரே மாதிரி அல்லாமல் பல வழிகளில் திறமைகளை பெறுகிறார்கள். தூய ஆவியார் அருள் கொடைகளை பகிர்ந்து தருவது போல் மக்களும் தம் திறமைகளை அயலவர் பால் பகிர்ந்து பலன் தர வேண்டும். தூய ஆவியே யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கிறார். மற்றவருக்கு தரப் பட்டதை பார்த்து பொறாமைப் படாமல் எமக்குத் தந்ததைக் கொண்டு உலகிற்கு வளம் சேர்த்து இறைவனுக்கு உகந்தவர்களாக உழைக்க வேண்டும். விருந்தினரை வரவேற்க இல்லத்தை அலங்கரிப்போம். அதுபோல தூய ஆவியை பெற்றிட உள்ளத்தை தயார் படுத்துவோம். எமக்கு உண்டாகும் சோதனைகளை வெல்ல தூய ஆவியானவரின் அருள் கொடைகள் மிகவும் அவசியமானவை.

இன்றைய நற்செய்தி இயேசு பொது வாழ்வில் செய்த முதல் புதுமையை அழகாக சித்தரிக்கிறது. அன்னை மரியாளுக்கு திருச்சபை ஏன் முக்கிய இடம் தருகிறது என்பது இங்கே தெளிவாகிறது. நேரம் வரவில்லை என்றவர் இறுதியில் அன்னையின் அன்பு வேண்டுதலை நிறை வேற்றுகிறார். முதல் வரிசையில் வழங்கப் பட்டதை விடத் தரமானது பின் வழங்கப்படுகிறது. யாரும் யாருக்கும் பெரியவர் அல்ல எல்லோரும் சமத்துவ மக்களே எனும் கருத்தும் தெளிவாக்கப் படுகிறது. இறை இரக்கம் எல்லை இல்லாத அன்பின் ஊற்றாகும். தன்னுடைய கட்டளையை மீறிய மாந்தரை இறைவன் கை விடவில்லை. தன் ஒரே மைந்தனை அனுப்பி மீட்பு அளித்தார். இயேசு தம் வாழ்வில் நோயாளர், மாற்றுத் திறனாளிகள், பாவிகள் எனப் பல தரப்பட்ட மக்களுக்கு மன்னித்து மறு வாழ்வு தந்தார். இறை இரக்க ஆண்டிலே உளமார இறைவனைத் தொழுது இதயத்தால் இறைஞ்சுவோம்