இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசு மலரட்டும்

எசே 34:11,12,15-17 1
கொரி 15~ 20-26,28
மத் 25~ 31-46

‘வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும்போது ஒரே விளக்குடன் எப்போதும் பயணத்தைத் தொடர்ந்தால் ஒரு பெரிய சூறாவளி வந்து சுடரை அணைத்து, நம்மை பேரிருளில் தள்ளிவிடும். மாறாக, அந்த ஒரு விளக்கிலிருந்து பல நூறு தீபங்களை ஏற்றிவிட்டால் முதல் விளக்கு அணைந்தாலும் இருள் சூழாது. ஏனென்றால்.. அணைந்த அந்த முதல் விளக்கையும் எரிந்து கொண்டிருக்கும் ஏதாவது ஒரு விளக்கின் சுடரைக் கொண்டு மறுபடியும் ஏற்றிவிடலாம் அல்லவா?’ - சமூக சேவகர் அண்ணா ஹசாரே

ஆண்டின் பொதுக்காலம் இறுதி ஞாயிறான இன்று திருச்சபை ஆண்டவர் இயேசுவை ‘அகில உலக அரசராக’ கருதி, கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கிறது. இது ஒரு வித்தியாசமான விழா! விடுதியில் இடமில்லாததால் மாடடை குடிலில், மார்கழிப் பனியில் பிறந்தவருக்கு, மகுட விழா! கந்தலாடைச் சுற்றப்பட்டவருக்கு அரண்மனை விழா! ‘தலை சாய்ப்பதற்கே இடமில்லை’ என்று நாடோடியாய் ‘பணிக்காலத்தில்’ திரிந்தவருக்கு .. இந்த அரச விழா! அடிமைகளுக்கு கொடுக்கப்பட்ட கொடிய சிலுவை மரணத்தை தழுவிக்கொண்ட இயேசுவுக்கு.. இந்த அரச விழா! பணிபுரிய வந்தவருக்கு பட்டம் சூட்டப்பட்ட பதவி விழா! அதிகாரமே வேண்டாம் என்றவருக்கு இந்த சிம்மாசன விழா! துன்புறும் ஊழியருக்கு .. முள்முடி சூடியவருக்கு மகுடத்தின் விழா! தனக்;கென்று கல்லறைகூட இல்லாதவருக்கு ஆட்சியுரிமையின் விழா!

ஏன் இந்த கொண்டாட்டம்?
வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று இந்த விழாவைக் கொண்டாடும் வரலாற்றை தெரிந்துகொண்டால் இதனை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாட முடியும். திருச்சபை வரலாற்றின் தொடக்கத்தில், ஆண்டவர் விண்ணேற்றமடைந்து தம் தந்தையின் வலப்புறம் வீற்றிருக்கும் அந்நாளில்தான், தந்தை தன் மகனுக்கு மாட்சிமையளித்த தினம் என்று கருதி, ‘கிறிஸ்து அரசர் பெருவிழா’ அந்நாளில் கொண்டாடியது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாத்;தீகமும், சர்வாதிகாரமும் உலகமெங்கும் குறிப்பாக, ஐரோப்பாவில் தலைதூக்கின: கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள், கிறிஸ்துவின் அதிகாரத்தை, திருச்சபையின் அதிகாரத்தை சந்தேகித்து, கிறிஸ்துவின் உடனிருப்பை உதாசீனப்படுத்தினர். ஐரோப்பாவில் ஹிட்லர், முசோலினி, ருசோ, எலிசபெத்ராணி.. ஆகியோரின் சர்வாதிகாரம் மேலோங்கியது. இந்நிலையில், கிறிஸ்துவின் அதிகாரத்தை வலியுறுத்துகிற விதத்திலும், திருச்சபையின் மேலாண்மையை நிறுவுகிறவிதத்திலும், திருத்தந்தை பதினொறாம் பயஸ், டிசம்பர் 11, 1925 அன்று ‘கிறிஸ்து அரசர் விழாவை அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று கொண்டாடப்பட வேண்டும்’என்று குவாஸ் பிரைமாஸ் (ஞரயள Pசiஅயள) என்ற சுற்றுமடல் வழியாக அகில உலக திருச்சபையைப் பணித்தார். பின்பு 2-ம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு 1969–ல் திருத்தந்தை ஆறாம் பவுல் இதனை திருத்தியமைத்து ஒவ்வொரு ஆண்டும் வழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறன்று கொண்டாட ஆணையிட்டார்.

இவ்விழாவைக் கொண்டாடுவதன்மூலம், உலக நாடுகள் திருச்சபையின் சுதந்திரத்தையும், சிறப்பு அதிகாரத்;தையும் மதித்து நடந்திடும் என்றும்,(ஞீ 32), உலகநாடுகளும், அதன் தலைவர்களும் கிறிஸ்துவுக்குரிய முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள் என்றும் (ஞீ 31), கிறிஸ்துவே நமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஆண்டு நடத்திட விசுவாசிகள் இப்பெருவிழாக் கொண்டாட்டாத்தின் மூலம் ஆக்கமும் ஊக்கமும் பெறுவார்கள்( ஞீ 33) என்றும் திருத்தந்தை பதினொறாம் பயஸ்; எதிர்பார்த்தார். அவரது எண்ணம் தற்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இவ்விழா நமக்கு விடுக்கிற அழைப்பு என்ன? ஆயன்-மந்தை, அரசன்-குடிகள், திருச்சபை–விசுவாசிகள் இவர்களுக்கிடையேயான உறவு நிலை அன்பின் அடிப்படையில் அமைந்து, கிறிஸ்து ராஜ்ஜியம் உருவாக வேண்டும் என்பதுதான் இன்றைய சிந்தனைப் பொருளாக அமைகின்றன.

அன்பின் அரசர்
‘அரசன் எவ்வழி, அவ்வழி குடிகள்’ என்பது நாமறிந்த ஒன்று. நம்முடைய கிறிஸ்து அரசர் முற்றிலும் வித்தியாசமானவர்: அதிகாரம் என்பது பதவியிலல்ல, பணியில் தான் இருக்கிறது என்பதை உணர்த்துபவர்: தண்டணைத் தீர்ப்பு அளிப்பவர் அல்ல: மாறாக மீட்க வல்லவர் (யோவா 12~47). மற்றவர்களை அடக்கி ஆள்பவர் அல்ல மாறாக அன்புச் செய்பவர். வாரிசினை உருவாக்கியவர் அல்ல: தொண்டுள்ளம் கொண்ட சீடர்களை உருவாக்கியவர்: படைகளைக் கொண்டிருந்தவரல்ல: மாறாக குடிகளோடு-மக்களோடு இரண்டற கலந்தவர்: குறிப்பிட்ட ஒரு சிலரை மற்றும் திருப்திபடுத்த கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டவர் அல்ல: மாறாக கொள்கைகளுக்காக சிலுவை மரணத்தையே முற்றிலும் தழுவியவர்.. இவர் வித்தியாசமான அரசர். ‘சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்கிற ஆண்டவர், நாம் ஒவ்வொருவரும் அவராக இருக்கிறோம் என்பதை பகிரங்கப்படுத்துகிறார்: மறு கிறிஸ்துவாக இருக்கிற நாம் அனைவருமே அதற்கேற்ப செயல்பட வேண்டும்: அவரில் இருக்கிற அத்தனை குணங்களும் நம்மில் உருவாகிற போது, குறிப்பாக ‘அன்பு மனம்’ உருவாகிறபோது, இவ்விழா கொண்டாடப்படுவதற்கான நோக்கம் எட்டப்படும் என்பதை இன்றைய இறiவார்த்தை வலியுறுத்துகிறது. உங்களில் தலைவனாக (அரசனாக) இருக்கவிரும்புகிறவர் முதலில் தொண்டராக இருக்கட்டும் என்றவரன்றோ இயேசு பிரான்!

ஆயனின் அன்பு
முதல்வாசகம் ஆயனின் அன்பை அப்படியே படம் பிடித்துக்காட்டுகிறது: இறைவாக்கினர் எசேக்கியேல் ‘நல்ல ஆயனைப்’ பற்றி விளக்குகிறார். நல்ல ஆயன் மந்தையைத் தேடிச் செல்கிறார்: சிதறண்டு ஆடுகளைக் கூட்டிச் சேர்க்கிறார்: வயிறார மேய்க்கிறார்: இளைப்பாறச் செய்கிறார்: காயமடைந்தவைகளுக்கு கரிசனையோடு கட்டுப் போடுகிறார்: நலிந்தவற்றை-நோஞ்சானை- திடப்படுத்துகிறார்: கொழுத்தவற்றை வலிமையுள்ளதை கொன்றொழிக்கிறார்: .. மேற்கண்ட ஆயனின் செயல்பாடுகளில்.. விஞ்சி நிற்பது அன்புதான்! அன்பைத் தவிர வேறொன்றுமில்லை: ‘நீதியுடன் கூடிய அன்புதான்’ இங்கே மேலோங்கி நிற்கிறது: நலிந்தோரைப் போற்றி, வலியோரை சிதைத்து சமத்துவ சமுதாயம் கட்டமைக்கப்படுகிறது. அங்கே அன்புதான் ஆட்சி செய்கிறது: மேலோங்கி நிற்கிறது.

அண்ணா ஹசோரே ! 1938 ஜூன் 15 இல் ஒர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ‘ராளேகண் சித்தி’ என்ற குக்கிராமத்தை உலகறியச் செய்த மாபெரும் சமூகச் சேவகர்! ஒர்; ஏழை வியபாரியிடம், மாமுல் கேட்ட ஒரு போலிசாரை பொறுத்துக்கொள்ள முடியாமல்..அவனது லத்தியைப் பிடுங்கி, அடித்துதைத்து இளைஞனாக இருந்தபோதே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்! 1962 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்த சீன பாகிஸ்தான் போரின்போது நமது இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லையில் உயிரைப் பணயம்வைத்து சேவைச் செய்தவர்! 25 வயதில், என் வாழ்வில் இலட்சியம் என்ன? என்ற கேள்வியைக் கேட்டு,ஒருகட்டத்தில் தற்கொலை எண்ணத்தால் சீரழிக்கப்பட்டு, ‘சேவையின் மூலமாகவே இறைவனை வழிபட முடியும்’ என்பதை உணர்ந்து, ‘ஊரெங்கும் ஊரணிகள் கட்டு: தெருவெங்கும் தருக்கள் பல நடு’ (ஞானேஸ்வரி நூல்) என்ற இலட்சியத்துடன் தன் வாழ்வையே இந்த சமூதாயத்திற்க்கு அர்ப்பணித்தவர்! மற்றவர்களுக்கு சேவைச் செய்வதே என் வாழ்வின் இலட்சியம் என்பதை வாழ்ந்து காட்டியவர்! ராணுவத்திலிருந்து ஓய்வுப் பெற்ற பிறகு, ராளேகண் சித்தியை உலகத்திலேயே முன்மாதிரியான கிராமமாக மாற்றினார்: அங்கே ஜாதிப்பிரிவினைகளை ஒழித்தார்: சமபந்தி, சமூக கூட்டுத் திருமணங்கள் நடத்துகிறார்: ஒரேமதம்- அதுதான் அன்பு மதம் என்ற நிலையை உருவாக்கினார்: ஊழலுக்கு எதிராக இன்றும் போராடுகிறார்: நிலத்தடி நிர்வளத்தைப் பெருக்கியுள்ளார்: இயற்கை விவசாயத்தை வளர்த்துள்ளார்: மது-புகையிலைப்பொருட்களை ஒழித்துள்ளார்: பல்வேறு கவர்னர்கள்.. மாநில முதல்வர்கள்.. பிரதமர்கள் .. உலக நாடுகளின் பிரதிநிதிகள் என எல்லோருமே இந்த ஊருக்கு வருகைத் தந்துள்ளனர்: அவரை பெரிதும் மதிக்கின்றனர்: 1975 இல் தொடங்கிய இவரது சமூகப்பணிக்கு இன்று பலன் கிடைத்திருக்கிறது.

ராளேகண் சித்தி – ஒர் இறையாட்சி பூமியாக மிளிர்கிறது! ‘எவரோ’ என்பதைவிட ‘இயேசுவே’ என்று அணுகிடு அவர் சொன்ன மேற்கொள்தான் மறையுரையின் தொடக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது! ஒரு விளக்கு அல்ல: ஓராயிரம் விளக்குகளை எரிய செய்வொம்! வாருங்கள் தொண்டுள்ளத்தால் இந்த சமுதாயத்தில் அன்புத்தீயைப் பற்றியெரிய செய்ய புறப்படுவோம்! ‘சின்னஞ்சிறிய சகோதர சகோதரிகளுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்பது கிறிஸ்தவர் எல்லோர் மனங்களிலும் எதிரொலிக்க வேண்டும்: ஒவ்வொரு ஊரிலும் சிறந்த தொண்டுள்ளம் கொண்ட, சமுதாய ஈடேற்றத்திற்காக அர்ப்பண உணர்வுடன் உழைக்கக்கூடிய கிறிஸ்தவ தலைவர்கள் உருவாக வேண்டும்: அப்போதுதான் இவ்விழாவைக் கொண்டாடுவதில் பொருளிருக்கும்.

‘எப்பொழுது’ என்பதைவிட ‘இப்போது’ என்று செயல்படு
‘எப்பொழுது’ என்பதைவிட ‘இப்பொழுது’ என்ற மனப்பான்மை நமக்கு வேண்டும்: வலப்பக்கத்தில் உள்ளோரும் இடப்பக்கத்தில் உள்ளோரும் கேட்கிற ஒரே கேள்வி ‘ ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோh, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ, இருக்கக்கண்டு, உமக்குத் தொண்டு செய்தோம்? அல்லது தொண்டு செய்யாதிருந்தோம்? என்பதுதான். இருவருமே, ‘எப்பொழுது’ என்றுதான் கேட்கின்றனர். ‘இப்போதுதான்’ என்று அவர்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதும் செயல்பட்டிருந்தால்.. அவர்கள் ‘எப்பொழுது’ என்ற கேள்வியை முன்வைக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. கடந்துவிட்ட நிமிடம், தவறவிட்ட வாய்ப்பு, வாய் தவறிய சொல் இம்மூன்றும் திரும்ப கிடைக்காது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு கணத்திலும், தேவையிலிருக்கும் ஒவ்வொரு மனிதரிலும் இயேசுவின் சாயலைக் கண்டு, நாம் செயல்பட்டால் இயேசு ராஜ்ஜியம் இவ்வுலகில் மலர்ந்தே தீரும். ஒவ்வொரு ஊரிலும் ஒரு சமுகச் சேவகர், மக்கள் தலைவர் உருவாகி மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

அன்னை தெரசாவைக் கண்டு இந்து அமைப்புகளே நடுநடுங்கின: இவர் அன்பால் இந்தியாவை கிறிஸ்துமயமாக்கிவிடுவாரோ என்று அஞ்சின: ஆகையால் ‘அன்பை’ நாம் ஆயுதமாக கையிலெடுக்கும்போது இவ்வுலக சர்வாதிகார, பாசிச அரசுகள் எல்லாம் சிதைந்த சுக்குநூறாகிடும் என்பது வரலாறு உணர்த்தும் பாடம். சோவியத் யூனியன் சிதைந்ததை நாமறிவோம். வரலாறு திரும்புகிறது: கிறிஸ்து ராஜ்யம் உருவாகிறது. எனவே ‘எல்லாம் இயேசுவுக்கே’ என்ற மனநிலையோடு, ‘இப்போது’ என்ற உணர்வோடு ‘அன்பை’ முதன்மைப்படுத்தி, அகிலத்தை ஆண்டவருக்குரியதாக மாற்றுவோம்! கிறிஸ்து அரசர் வாழ்க! இறையாட்சி மலர்க!