இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.Gnani Raj Lazar
(குடந்தை ஞானி)
நம்வாழ்வு வார இதழின் முன்னாள் இணையாசிரியர்.
விளக்கின் வெளிச்சம் மறையுரை நுாலின் ஆசிரியர்.
Mylapore, Chennai, India
SE St,Cyriak, Malsch, Freiburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)








பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு

மன்னிப்பின் மாண்பு

சீஞா 27:30-28-7
உரோ 14:7-9
மத் 18:21-35

1995 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி. மத்திய பிரதேசம் உதய் நகர் என்ற ஊரிலிருந்து ஒரு பேருந்து இந்தூர் நோக்கி புறப்பட்டது. அதில் நாற்பது பேர் அமர்ந்திருந்தனர்: அவர்களுள் ஒருவராக அருட்சகோதரி ராணி மரியாவும் அமர்ந்திருந்தார். விடுமுறைக்காக எர்ணாகுளம் செல்ல திட்டமிட்டு சென்று கொண்டிருந்தார்.

சிஸ்டர் ராணிமரியா அந்தப் பகுதியில் இருக்கிற ஏழை பழங்குடி மக்களுக்காக உழைத்துவந்தார்: அவர்கள் விதைகள், விவசாய இடுபொருட்கள் வாங்க வங்கிகள் மூலம் உதவி செய்தார். அரசின் திட்டங்கள் அவர்களைச் சென்றடைய உதவிச் செய்தார். இது அப்பகுதியில் கோலேச்சி வந்த கந்துவட்டிக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.அதனால் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய புள்ளியொருவர் அடியாட்களை ஏவிவிட்டிருந்தார். அந்த ஆட்களும் இந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தனர். இந்தூரைப் பேருந்து அடைந்தப் பிறகு இரயிலேறி எர்ணாகுளத்திற்குச் செல்வது பயணத் திட்டம்.

இப்பேருந்து காட்டுப் பகுதியை அடைந்த சமயம் அருகில் இருந்த கூலிப்படைகள் சிஸ்டர் ராணி மரியாவைத் தாக்க ஆரம்பித்தார்கள். கத்தியால் குத்திக் கொன்றதும் பேருந்தை நிறுத்தச் சொல்லி, அவருடைய உடலை வெளியே தூக்கியெறிந்தவிட்டு அவர்களும் இறங்கி தப்பியோடினர். அவருடைய உடம்பில் ஐம்பது இடங்களில் கத்திக்குத்து காணப்பட்டது. பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தூர் புனித பிரான்சிஸ் கதீட்ரலில் அடக்கத்திருப்பலி நடைபெற்றது.

போலிசார் தீவிர விசாரணைக்குப் பிறகு எய்தவனைப் பற்றி கவலைப்படாமல் சமந்தர் சிங் என்பவரைக் கைது செய்தனர். நீதிமன்றமும் சமந்தர்சிங்குக்கு ஆயுள்தண்டனை வழங்கியது. சிறையில் மிகவும் கஷ்டப்பட்டார்: ஆனால் இவருக்கு வெறியூட்டிய அந்த இந்து சமயத் தலைவரோ, மிகவும் ஜாலியாக இருந்தார். ஒரு கட்டத்தில் போலிசார் சமந்தர்சிங்கை கைது செய்வதற்கு முன்பாக கொல்ல திட்டமிட்டிருந்தார். எனவே இதனைச் சற்றும் எதிர்பாராத சிங், சிறையிலிருந்து எப்படியாவது தப்பிச் சென்று அவனைக் கொன்றுவிட வேண்டும் தீர்மானித்தார்.

ஆனால், 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரக்ஷ பந்தன் என்ற விழா வட இந்தியாவில் கொண்டாடப்பட்டது. ராக்கி கட்டி சகோதரத்துவத்தை எண்பிக்கிற விழா. தன்னைச் சகோதரனாக ஏற்றுக்கொண்டு ராக்கி கட்ட ஒரு பெண் வந்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட சமந்தர் சிங் ஆச்சரியப்பட்டார். ஆம்! சிஸ்டர் ராணிமரியாவின் தங்கை அருட்சகோதரி செல்மி பால், தன் அக்காளை அவர் கொன்றிருந்தாலும் அவரை மன்னித்து சகோதரனாக ஏற்று ராக்கி கட்டினார். அதோட நில்லாம, அவங்க குடும்பத்தினரும், இந்தூர் ஆயர் ஜார்ஜ் அனத்தில், சிஸ்டரோடு கிளாரிஸ்ட் சபை மாநிலத் தலைவி என எல்லோரும் சேர்ந்து சமந்தர் சிங்கை மன்னித்துவிட்டதாகச் சொல்லி, அவரை விடுதலைச் செய்ய மத்திய பிரதேச ஆளுநருக்கு கருணை மனு அளித்தனர். மத்திய பிரதேச ஆளுநரைச் சந்தித்து அதற்கான ஆணையை விரைவுப்படுத்தினர். ‘கிறிஸ்தவர்களாகிய உங்களால் மட்டும்தான் இவ்வாறு மன்னிப்பை அளிக்க முடியும்’ என்று நன்றி பாராட்டினார். பதினொரு வருடத்திற்கு பிறகு அதாவது 2006 அம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் நாள் விடுதலையானார். சிஸ்டருடைய குடும்பத்தினர் தன்னை ஓர்; அங்கத்தினராக ஏற்றுக்கொண்டதால் மனம்மாறினார். நோயுற்ற படுத்த படுக்கையாக இருந்த சிஸ்டர் ராணி மரியாவின் தந்தையைச் சந்தித்து மன்னிப்புப் பெற விரும்பினார். சென்ற பிறகு, தன் பெயரை பவுல் என மாற்றி திருமுழுக்குப் பெற்றார். 2008 ஆம் ஆண்டு கேரளா சென்று சிஸ்டருடைய தந்தையைச் சந்தித்து ஆசி பெற்றார். இவருக்கு பேருதவியாக அருள்திரு சுவாமி சதானந்து ஊஆஐ இருந்தார்.

மன்னிப்பை சுவைத்து அனுபவித்தவர்கள் மட்டுமே மன்னிப்பை வழங்க இயலும் (ழடெல வாழளந றாழ hயஎந நஒpநசநைnஉநன கழசபiஎநநௌள ழடெல உயn பiஎந கழசபiஎநநௌள) என்கிறார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட். அதற்கேற்ப தன்னைக் கொலை செய்யத தூண்டியவனைச் சந்தித்து மன்னிப்பு கேட்கவும், மன்னிப்பு கொடுக்கவும் விரும்புகிறார். தான் சிறைக்குச் சென்ற பின் அவருடைய மனைவி அவரைவிட்டு விலகிச் சென்றுவிட்டார். அவரைத் தேடி அவரோடு ஒப்புரவாகி குடும்ப வாழ்க்கை நடத்த விரும்புகிறார்.

அன்பின் உச்சம் மன்னிப்பு

மன்னிப்பு அது அன்பின் மகத்தான வடிவம். அன்பின் உச்சம் தான் மன்னிப்பு. ஆண்டவர் இயேசு ‘மன்னியுங்கள்’ என்று போதித்தவர் மட்டுமன்று: அதனை தன் வாழ்வில் அதுவும் மரண வேளையில், துன்பத்தின் உச்சத்தில் தன்னைச் சிலுவைச் சாவுக்கு கையளித்தவர்களை மனதார மன்னித்தார்: அவரை அடியொற்றி பின்பற்றி முதல் மறைசாட்சியான ஸ்தேவான் அவரும் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களை மனதார மன்னித்தார். மன்னிப்பு – அது அன்பின் உச்சம். ஸ்தேவான் தொடங்கி, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், இன்றைய ராணி மரியா என்று இந்தக் கணப்பொழுதுவரை கிறிஸ்துவம் அன்பை – மன்னிப்பை வாழ்ந்து வருகிறது.

மற்ற சமயங்களிலிருந்து கிறிஸ்தவத்தை வேறுபடுத்திக் காட்டுவது இந்த மன்னிப்பு தான்: அதுவும் எதிரிகளையும் அன்பு செய்யுங்கள் என்ற இயேசுவின் போதனை தான் கிறிஸ்தவத்தின் மேன்மைக்கு அடையாளமாக அமைகிறது.

‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு’ என்கிறார் திருவள்ளுவர்.

பகவத்கீதையும்கூட அழகாக பதினாறாம் அத்தியாயத்தில் தொடக்கத்தில் தெய்வக் குணங்களில் ‘ஷமா’ (ஷமித்தல்-மன்னித்தல்) என்பதை முன்வைக்கிறது. இஸ்லாம் என்ற அந்த வார்த்தைக்கு அர்த்தமே ‘சாந்தி’ ‘அமைதி’ என்பதுதான். ஆனால் இன்று உலக நாடுகள் ஒன்று மற்றொன்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது: மூன்றாம் உலகப் போருக்கு உலகம் தயராகிக் கொண்டிருக்கிறது. ருnவைநன யேவழைளெ (ஐக்கிய நாடுகள் சபை) என்பது இன்று னுiஎனைநன யேவழைளெ ஆக சிதைந்து கிடக்கிறது. அணி சேரா நாடுகள், நேட்டோ நாடுகள் என்று தேசங்கள் முண்டாசு கட்டுகின்றன. நாட்டின் எல்லைக் கோடுகள் தொல்லைக் கோடுகளாகி விட்டன. இன்று வயல்களுக்கு மட்டும் வரப்புகளை வைத்த காலம் போய்.. இன்று வீடுகளுக்கும்கூட கதவுகளுடன் கூடிய காம்பௌண்டு சுவர்களை வைத்து உறவுகளைத் துண்டாட துணிந்து விட்டது துரதிர்ஷ்டம். திண்ணை வைத்த வீடுகள் அபூர்வம். ஏன் வீடுகளுக்குள்ளும்கூட விரிசல் தோன்றியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே, மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே காரசாரமான விவாதங்களும் விவகாரங்களும் தலைத்தூக்குகிறது. மன்னிப்பு என்பது கசப்பான காரியமாகிவிட்டது. பெருந்தன்மையாக விட்டுக்கொடுப்பதும், பாராட்டி ஊக்கமூட்டுவதும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

மன்னிப்பின் மாண்பு

மன்னிக்கிறவர் மாண்புடையவராகிறார். இன்னா செய்தாரை ஒறுத்தலும் பொறுத்தலும் அவரை நாணச் செய்வதைவிட உங்களை மேலானவராக்குகிறது. எனவேதான் மன்னிக்கிறவர் மாண்புடைவராகிறார். பெருந்தன்மையாக மன்னிக்கிறபோது பெருமையும் புகழும் உங்களைத் தானாகவே வந்தடைகிறது. பொறுத்தவர் பூமி ஆள்வார் என்ற வள்ளுவர் வாழ்த்தியிருக்கிறார் அன்றோ?

அதே சமயம் மன்னிப்பதால் நாம் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை என்பதையும் மறந்துவிடலாகாது. ஏனெனில் நாம் ஒன்றும் புனிதர்களில்லை. ஒரு பாவமும் செய்யாதவர்கள் முதலில் கல்லெறியட்டும் என்று இயேசு முதலில் சொல்லெறிந்த போது, கைகளில் இருந்த கற்கள் அவர்களின் கால்களையே பதம்பார்த்தன. ஏனெனில் அங்கு அடுத்தவரை குற்றஞ்சாட்டிய ஒவ்வொருவருமே குற்றவாளிகளாக இருந்தார்கள். விபச்சாரப் பெண்ணைத் தீர்ப்பிட கைகளில் கற்களைச் சுமந்தவர்கள், இறைவன் அவர்களைத் தீர்ப்பிடும்போது ‘ஐயகோ!மனங்களில் பாறைகளைச் சுமந்திருக்கிறோமே’ என்பதை உணர்ந்து கற்களைக் கீழே போட்டார்கள். நாம் மன்னிக்கிற போது பெரிதாக ஒன்றயையும் சாதித்தவிடவில்லை: ஏனெனில் நம் குற்றங்களை இறைவன் மன்னிக்கிறார்: எனவே மற்றவர் குற்றங்களையும் மன்னிக்க வேண்டும். இது நமக்கான கடமையாகும். கடமையைச் செய்வதுதான் சரி. ஆண்டவர் இயேசுவும் இந்த கடமையை உணர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பதற்காகவே, அவர் கற்றுக்கொடுத்த ஒரே செபத்தில் ‘எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்’ என்று என்று அனுதினமும் கற்றுத்தருகிறார். நாம் பொறுத்தால்தான், நாம் மன்னித்தால் இறைவனும் நம்மை மன்னிக்கிறார் என்று நிபந்தனையுடன் கூடிய காப்பீடாக இந்த செபம் அமைகிறது. மன்னிப்பு பெற மன்னியுங்கள். நீங்கள் மகாத்மாக்களாவீர்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையன்றோ?!

ஆண்டவர் இயேசுவுக்கு கணக்குத் தெரியமாலில்லை. ஏழு முறை மட்டுமா ? என்று பேதுரு கேட்கிற போது ஆண்டவர் ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ பதிலிறுக்க வேண்டும். ஆனால் ஏழு முறை மட்டுமல்ல: எழுபது தடவை ஏழு முறை .. என்று சொல்கிறார். இதனைப் பெருக்கி, கூட்டி, வகுத்து விளக்குதல் முறையன்று: இதற்குப்பொருள் ‘எண்ணிறந்த முறை’ என்றுதான். கணக்கு வழக்கு இல்லாமல் மன்னிக்க வேண்டும். பத்தாயிரம் தாலந்து பெற்றவன் தன்னிடம் ஒரு தாலந்து பெற்றவனை மன்னிக்காத போது எவ்வுளவு கீழ்த்தரமானவனாக இருக்கிறான் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இந்தச் சின்னப்புத்திதான் அவனுக்குத் தண்டணைத் தீர்;ப்பை வாங்கித் தருகிறது. எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் அளக்கப்படும் என்று ஆண்டவர் அளந்து சொன்னதன் அடையாளம் இதுதான். மன்னிக்கிற மனப்பான்மைதான் நம்மைத் தெய்வச் சாயல் உள்ளவர்களாக மெருகேற்றுகிறது. தங்கத்திற்கு அழகு அதில் சேர்க்கப்படும் செப்பில்தான் என்றால் மனிதருக்கு அழகு அவருக்குள்ள மன்னிக்கிற பண்பால்தான். ஹால்மார்க் முத்திரைப் போன்று மனிதாபிமான முத்திரைக் குத்தப்படுகிறது.

அடுத்தவரின் காலில் விழுந்து அழுது புலம்பியவன், தன் காலில் விழுந்து அழுது புலம்புவனின் அழு குரலை அலட்சியப்படுத்துவது ஆணவத்தின் காரணமாகத்தான். இறைவன் மிகப் பெரியவன்: அவன் முன்பு நமது நிலையை எண்ணி நாண வேண்டும். எனவே இங்கு செய்கிற மன்னிப்பு என்கிற ‘ஆயுள் காப்பீட்டுத் தவணைத் தொகை’, நமது மரணத்திற்குப் பிறகு ‘ஆத்ம காப்பீடாக’ முதிர்ச்சி அடைகிறது என்பதை மறந்திடலாகாது. அடுத்தவரின் காயங்களுக்கு மருந்திடுகிறபோது நமது காயங்கள் குணமாகிறது என்றால் அது மன்னிப்பில்தான். மன்னிப்பில் ஆணவம் களையப்படுகிறது: மன்னிப்பில் அன்பு வழிந்தோடுகிறது. காயின் ஆபேலை மன்னித்திருந்தால்.. அங்கு இரத்தம் சிந்தியிருக்க வேண்டியதில்லை: ஆண்டவரின் சாபத்திற்கு உள்ளாகியிருக்க வேண்டியதில்லை. உலகின் சிந்தப்பட்ட முதல் இரத்தம் மன்னிப்பின்மையால் என்கிற போது அது இன்று வரை நெருடலாகவே அமைகிறது. ஊதாரி மகன் உவமையில் கூட தந்தை மன்னிக்கிறார்: ஆனால் அண்ணன், தன் தம்பியை இன்னும் மன்னிக்கவில்லை. அப்படியெனில் அவன்தான் ஊதாரி மைந்தனாக இருக்கிறான் என்று பொருள். இரக்கம் பெறுகிறவன் இரக்கம் காட்ட வேண்டும். மன்னிக்கிறபோது நாம் மாண்புக்குரியவர்களாகிறோம்.

மன்னிப்பு என்பது அன்பின் உச்சம்! எனவேதான் ஆண்டவர் தன் வாழ்வில் இறுதி மணித்துளியில் அதனைச் செயல்படுத்துகிறார். ஆண்டவர் தன்னைக் கொன்றவர்கள் மீது காட்டிய மன்னிப்புதான் தொடக்கத் திருச்சபையின் பணியை எளிதாக்கியது. சிலுவையில் அறைந்தவர்களின் இதயங்கள் இவருடைய மன்னிப்பு என்ற ஈட்டியால் குத்தி திறக்கப்பட்டன. தன்னைக் கொன்றவர்களையே மன்னித்தார் எனில்.. அவர்தான் ‘தெய்வ மகன்’ என்பதை அவர்களால் ஏற்றுக்கொண்டு விசுவசிக்க முடிந்தது. நற்கருணையோடு இயேசு ஏற்படுத்திய இன்னொரு திருவருட்சாதனம்தான் இந்த பாவமன்னிப்பு. எவருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்..என்ற வாக்குறுதியை இயேசுவே..கல்வாரியில் செய்து காட்டினார்: அவரே அங்கு செய்வினை: அவரே செயப்பாட்டு வினை. மன்னிப்பவரும் அவர்தான்: மன்னித்தவரும் அவர்தான். நாமும் மன்னிப்போம்! மன்னிப்புப்பெறுவோம்!