இவ் மறையுரையை வழங்குபவர்

Rev.Fr.John Sowri Charles SEBASTIAN ocd
Karmeliten Kloster, Würzburg, Germany



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)






உயிர்ப்பு ஞாயிறு    

உயிர்ப்பு கடவுளின் பரிசா?


திப 10‘34அ,37-43
கொலோ 3‘1-4
யோவா 20‘1-9


உண்மையான உழைப்பிற்கும், தியாகத்திற்கும் என்றும் அழிவில்லை என்பதை வார்த்தையாலும் வாழ்வாலும் சாதித்து காட்டிய யேசுவின் உயிர்ப்பு விழாவை கொண்ட ஒன்று கூடியிருக்கும் என தருமை சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் யேசுவின் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

மனிதர்களை விட பொருட்களின் மீது அதிக ஆர்வம், பொருட்களோடு அதிக நேரம் செலவிடும் மனநிலை பெருகி வரும் நம் மத்தியில்;, உழைக்காமல் உயர்வு அடையும் வழிகளை தேடி அலையும் மனிதர்கள் எண்ணிக்கை பெருகிவரும் இன்றைய நவீன யுகத்தில் உண்மை உழைப்புக்கும், தியாகத்திற்கும் காலம் கடந்தாலும் உயர்வு வந்தே தீரும் என்பதை கடவுளே நமக்கு உணர்த்திடும் மாபெரும் விழா தான் யேசுவின் உயிர்ப்பு விழா.

யேசுவை கொன்று விட்டால் எல்லாம் ஒழிந்து விடும் என்று நினைத்த யூதர்களுக்கும், உரோமையர்களுக்கும் இறை சக்தியின் ஆற்றலை வெளிக் கொணர்ந்த நாள் தான் யேசுவின் உயிர்ப்பு. இன்று நாமும் குடும்ப வாழ்வில், சமூக வாழ்வில் பல பிரச்சனைகளை கண்டு மனதளர்ந்து இனி மாற்றம் வராது என்று முடிவெடுத்து விடுகின்றோம், திறமைகளை புதைத்து வைக்கிறோம், முயற்சிகளை கைவிட்டுவிடுகிறோம், பொறுமை இழக்கிறோம் இன்றைய நாள் நமக்கு புது தெம்பை கொடுக்கிறது.

யேசுவின் உயிர்ப்பை இன்று நாம் எப்படி புரிந்து கொள்வது. நம் இல்லங்களில் நடக்கும் சாதாரண நிகழ்வு: நமது பிள்ளைகள் நமது சொற்படி நடந்து கொண்டு நமது விருப்பங்களை நேர்மையான வழியில் தனது உழைப்பால் தியாகத்தால் நிறைவு செய்யும் போது நாமும் பதிலுக்கு அவர்களது விருப்பங்களை நிறைவு செய்வது வழக்கம். அவர்களுக்கு பிரியமானதை என்ன தடைகள் வந்தாலும் நிறைவுசெய்கின்றோம். அதற்கென்று நாம் வரையரைகளை நாம் அமைப்பதில்லை. நமது விருப்பங்களை நிறைவு செய்ய அவர்கள் பல சிரமங்களை சந்தித்தாலும் மனமுடைந்தாலும், அவர்கள் முயற்சியை கைவிட்டு ஒதுங்கி போக நேர்ந்தாலும் நாம் அவர்களை உற்சாகபடுத்தி அவர்களை முன்னேறிச் செல்;ல உதவுகிறோம். காரணம் நமது பிள்ளைகள் வாழ்வு என்றால் என்ன என்பதை சோம்பேறித்தணத்தில் அல்ல மாறாக உழைப்பில், வியர்வை சிந்தும் போது மட்டும் தான் கற்றுகொள்கிறார்கள் என்ற மனநிறைவு. எந்த பெற்றோரும் நேர்மையற்ற வழியில் தன் பிள்ளை இந்த உலகையே வென்றாலும் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஆம் அது போலவே தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்ய தனது வாழ்வு, பணி அதன் பலனாக கிடைத்த பாடுகள், இறப்பால் சாதித்து காட்டிய தன் மகன் யேசுவுக்கு இறைவன் தந்த விலை மதிப்பில்லாத அன்பு பரிசு தான் உயிர்ப்பு. இந்த அன்பு பரிசை யேசு தனக்கு மட்டும் வைத்துக்கொள்ளாமல் நாமும் உயிர்ப்பில் பங்கு பெற தந்த அறிய வாய்ப்பு தான் கல்வாரிப் பலி.

பத்து மாதம் தாயின் வயிற்றில் வளர்ந்த குழந்தை தாயின் கருவை விட்டு வெளிவரும் போது அழுகையோடு தான் வெளிவருகிறது. காரணம் என்ன? தாயின் வயிற்றில் எல்லாமே கிடைத்தது. அந்த சொகுசான வாழ்வு பறி போக போகிறதே என்ற கவலை, இனி என்ன நடக்குமோ, ஒருவேளை இறந்து போய்விடுவோமோ என்ற பயம். அழுதுகொண்டே வெளிவருகிறது. வெளியே வந்த பின்பு தான் சுயமாக காற்றை சுவாசிக்க கற்றுக் கொள்கிறது, புதிய உறவுகளை பார்க்கிறது, பரந்து விரிந்த இந்த உலகில் வாழத் துடிக்கிறது. உயிர்ப்பும் அது போலத்தான். இந்த உலக வாழ்வை கடந்து ஒரு புதிய வாழ்வுக்காண அழைப்பு. தாயின் கருவில் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்த குழந்தை போல உலக வாழ்வின் துன்பங்களில் பயந்து கிடந்த நமக்கு யேசுவின் உயிர்ப்பு புதிய நிறை வாழ்வை கடவுள் நமக்கு பரிசாக தந்துள்ளார். பரிசு கிடைக்க நாம் செய்ய வேண்டியது கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற நமது உழைப்பு மற்றும் தியாகத்தால் நமது குடும்பத்தின் வளர்ச்சிக்காக, வேலை செய்யும் இடங்களில், சமூகத்தில் நமது கடமைகளை விடா முயற்சியோடு தொடர்வோம், காலம் கடந்தாலும் கடவுளின் பரிசு நிச்சயம் நமக்கு உண்டு. ஆமென்