ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? (லூக்கா 13: 23)
பாகம் ஒன்று

„மீட்பு“ இந்த வார்த்தை கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. கிறிஸ்தவ சபையை சேர்ந்த பல்வேறு குழுக்கள் „மீட்பு“ என்ற வார்த்தை பயன்படுத்தி கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தங்கள் விசுவாசத்திற்குள் ஈர்ப்பது உலகம் முழுவதும் அன்றாடம் நடக்கின்ற ஒரு நிகழ்வு.

ஆண்டவரே மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா? என்ற லூக்கா(13:23) நற்செய்தியின் கேள்விக்கு யகோவா சபையினர் என்ன பதில் தருகிறனர் என்று பார்த்தால். 1,44,000 பேர் மட்டும் தான். மேலும் விளக்கத்திற்கு ( http://en.wikipedia.org/wiki/Jehovah's_Witnesses_beliefs) (நன்றி விக்கிபீடியா இணையத்தளம்). இது அவர்களின் விசுவாச அறிக்கை என்று சொல்கின்றனர். மீட்பு பெறபோகிறவர் எண்ணிக்கை மிக குறைவு. எனவே அந்த குழுவில் நாம் சேர முழுக்கு ஞானஸ்நானம் பெறுங்கள் என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களை தங்களது குழுவில் சேர்த்துவருகின்றனர். கத்தோலிக்க சிந்தனை இதற்கு என்ன பதில் தருகிறது என்று பார்ப்போம். யேசுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் பதில் நம்மை மிகவும் சிந்திக்க வைக்கிறது. எத்தனை பேர் மீட்கப்பட போகிறார்கள் என்று குறிப்பிடவேயில்லை. காரணம்? யோவான் நற்செய்தி 10:10ல் யேசு குறிப்பிடுகிறார்: „நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.“ அதுமட்டுமல்ல யோவான்(10:16)ல் „இக்கொட்டிலை சேராத வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன: நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.“ யேசு கொண்டு வந்த மீட்பு சாதி, மத, இன மற்றும் மொழி போன்ற எல்லைகளை கடந்தது. விண்ணகத்தில் இடமில்லை என்ற கவலை வேண்டாம் யகோவா சபையினரே. கத்தோலிக்க சபையில் நிறைய இடமுண்டு.

கத்தோலிக்க சிந்தனை:
திருமுழுக்கின் வழியாக யேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பில் பங்கு கொண்ட நாம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளோம். மீட்பு நமக்கு பரிசாக தரப்பட்டுள்ளது. திருமுழுக்கில் தொடங்கி நமது மீட்புப் பயணம், நமது வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து, நிறைவடைகிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மீட்புக்கு அந்நியப் பட்டவர்கள் என்ற சிந்தனை முற்றிலும் தவறானது. ஓவ்வொரு நாளும் மீட்பின் இறுதி இலக்கை நோக்கி நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் உண்மை. நம்மை நாளும் அணுகி குழப்பி வரும் மற்ற கிறிஸ்தவ குழுக்களுக்கு நமது மீட்பின் மேன்மையை எடுத்துரைக்க மறக்க வேண்டாம். அன்புமிக்கவர்களே. இவ்வாறு நாம் நமது மீட்புக்கு சான்று பகரும் போது, நாம் கிறிஸ்துவின் சாட்சிகள் என்ற மேன்மை நிலையை அடைகிறோம்.
[2013-08-30 22:16:13]


எழுத்துருவாக்கம்:

Pater.John Sowri Charles ocd
Karmeliten Kloster
Würzburg
Germany.