வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.
(யோவான் 14:6)பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்


ஆயித்தியமலை சதாசகாய அன்னை திருத்தல திருவிழா

ஆயித்தியமலை சதாசகாய அன்னை திருத்தல திருவிழா கூட்டுத்திருப்பலி திருமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி கிங்சிலி ரொபர்ட் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது [2017-02-26 21:15:35]


REV. FR. JOE FERNANDO & REV. FR. GABRIEL NANAYAKKARA OMI called to Eternal Rest in the Lord.

REV. FR. JOE FERNANDO & REV. FR. GABRIEL NANAYAKKARA OMI called to Eternal Rest in the Lord. Rev. Fr. Joe Fernando and Rev. Fr. Gabriel Nanayakkara OMI were called Eternal Rest in the Lord The mortal remains will lie at SEDEC and will be ttransferred to the Chapel of the Archbishop's House on 24th Feb and then to the Sea Stree St. Sebastian's Church for the fuberal and burial. Funeral will be held on Saturday 25th Feb at 3.00 pm at Sea Street Churchm Negombo. The mortal remain of Rev. Fr. Gabriel Nanayakkara OMI will lie at Fatima Church, Maradana and the funeral will be held on Saturday 25th Feb. at 3.30 pm at Fatima Church and thereafter the burial at at General cemetery, Borella. [2017-02-26 21:14:09]


மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய ‘தூய லூர்து அன்னை ஆலயம்’ திறந்து வைப்பு

மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட ‘தூய லூர்து அன்னை ஆலயம்’ அபிசேகம் செய்யப்பட்டு இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூய லூர்து அன்னை ஆலயத்தின் திருவிழா இன்றைய தினம் (சனிக்கிழமை) மாலை கொண்டாடப்படுகின்ற நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட குறித்த ஆலயம் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்ஸிலி சுவாம் பிள்ளை ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வணக்கத்துக்குரிய ஆயர் கிங்ஸிலி சுவாம் பிள்ளை ஆண்டகையின் தலைமையில் ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுத்தனர். இதன் போது ஓய்வு பெற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்கூரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டார். -மேலும் ஆலய திறப்பு விழாவிற்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெணாண்டோ பிள்ளை பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் உற்பட மன்னார் மறைமாவட்டம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த ஆலய திறப்பு விழா மற்றும் திருவிழா திருப்பலியில் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [2017-02-19 08:41:38]


கருக்கலைப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, இலங்கை ஆயர்கள் கோரிக்கை

பிப்.17,2017. கருக்கலைப்பை சட்டப்படி அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு, கத்தோலிக்க அரசியல்வாதிகள் உட்பட, அனைத்துக் கத்தோலிக்கரும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு, இலங்கை ஆயர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. கருக்கலைப்பு சட்டத்திலுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு, இலங்கை அரசு அண்மை மாதங்களாக முயற்சித்து வருவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை ஆயர் பேரவை, நாட்டின் அனைத்துக் கத்தோலிக்கருக்கும் இவ்வாறு, அழைப்பு விடுத்துள்ளது. 2016ம் ஆண்டின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில், இதேபோன்று அரசு முயற்சித்ததை முன்னிட்டு, அவ்வாண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, இலங்கை ஆயர்கள், தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, நீதித்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியதையும், ஆயர்களின் தற்போதைய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதற்குப் பதிலளித்த நீதித்துறை அமைச்சகம், இத்தகைய நடவடிக்கை குறித்து அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை எனவும், இந்த விவகாரத்தில் அரசு ஆர்வமாக இல்லையெனவும் கூறியதையும், ஆயர்களின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இலங்கையில், ஒவ்வோர் ஆண்டும், ஏறக்குறைய நான்கு இலட்சம் பெண்கள் கருத்தரிக்கின்றனர், இவர்களில் ஏறக்குறைய 15 ஆயிரம் பெண்கள், சட்டத்திற்குப் புறம்பே கருக்கலைப்பு செய்கின்றனர், இவர்களில் பத்துப் பேர் வீதம் ஒவ்வோர் ஆண்டும் இறக்கின்றனர் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி [2017-02-18 11:50:58]


திருக்கிண்ணம் வழங்கும் திருச்சடங்கு - Ministry of Accolyte

மன்னார் மறை மாவட்ட முத்தரிப்புத்துறை புனித செங்கோல் மாதா பங்கை சேர்ந்தவரும், பிரான்சிஸ்கன் துறவற சபைத் துறவியான அருட்சகோ. றீகன் லோகு ofm அவர்கள், குருத்துவ பயிற்சியின் இரண்டாம் நிலையில் வழங்கப்படும் திருக்கிண்ணத்தை (Ministry of Accolyte ) பெற்றுக்கொண்டார். அருட் சகோதரரின் பணி சிறக்க செபித்து வாழ்த்தி நிற்கின்றோம். [2017-02-18 11:41:41]


மன்னார் கீரி கர்த்தர் ஆலயத்தின் கட்டடப்பணிகளுக்காக நிதி வழங்கிவைப்பு 3 days ago

வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து மன்னார் கீரி கர்த்தர் ஆலத்தின் கட்டடப்பணிகளுக்காக நிதியினை வைத்துள்ளார். குறித்த நிதி காசோலையாக ஆலய நிர்வாக சபையிடம் இன்று கையளிக்கப்பட்டது. இதன்போது, கீரி மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி கதிரைகளையும் சங்க பிரதிநிதிகளிடம் கையளித்தார். மேலும், எழுத்தூர் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு ஒரு தொகுதி சமையல் பாத்திரங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன் வைபவ ரீதியாக வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. [2017-02-16 22:23:15]


இலங்கை மண்ணில் மறைபணியாற்றிய அருட்பணி எட்வேட் சேவியர் SDB இறைபதம் அடைந்தார்

பல ஆண்டுகாலமாக பலெர்மோ சாந்த கியாறா ஆலயத்தில் எமது புலம்பெயர் தமிழர்களின் ஆன்மீகவளர்ச்சிக்காக உழைத்தவரும், திருச்சி சலேசிய மாகாணத்தை சேர்ந்த அருட்பணி. எட்வேட் சேவியர் ச.ச அடிகளார் 13/02/ 2017இன்று இலங்கை கொட்டதெனியாவ சலேசிய இல்லத்தில் காலமானார், அருட்தந்தையின் ஆன்மா சாந்தி அடைய உங்கள் செபங்களில் வேண்டிக்கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம். அருட்தந்தையின் ஆன்மசாந்திக்காக இலங்கை சலேசிய மாகாண முதல்வர் இல்லத்தில் (துங்கல்பிட்டியவில்) 14/02/2017 பிற்பகல் 5.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு அடிகளாரின் பூதவுடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு 15/02/ 2017 பிற்பகல் 3.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருச்சி அம்சம் சலேசிய இல்லத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படும். இவர் பிரிவால் துயருறும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் [2017-02-13 22:29:11]


பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா நிறைவு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரிய உப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் திருப்பலி பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றுவந்தன. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை ஆலயத்தில் திருப்பலி பூஜைகள் நடைபெற்று திருச்சொரூப பவனி நடைபெற்றது.இந்த திருச்சொரூப பவனியில் ஆயிரக்கானவர்கள் கலந்துகொண்டனர். இன்று காலை ஆலயத்தின் பங்குத்தந்தை டெக்ஸ்டர் கிறே தலையில் திருவிழாவின் இறுதி விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது. இந்த விசேட திருப்பலியை மட்டக்களப்பு அம்பாளை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை நடாத்தினார். திருப்பலி பூஜையின் போது பக்தர்களுக்கு ஆயரினால் ஆசிகள் வழங்கப்பட்டதுடன் விசேட தேவ இசை நிகழ்வும் நடாத்தப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து சொரூபம் ஆலய முன்றிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல சமையற்காரர் தாசனினால் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. [2017-02-12 20:52:10]


வரலாற்று சிறப்பு மிக்க மாந்தை மாதா ஆலய திறப்பு விழா....

வரலாற்று சிறப்பு மிக்க மாந்தை மாதா ஆலயம் 1670ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின் போது தகர்க்கப்பட்டு கத்தோலிக்க மக்கள் மாதாவின் சுருபத்தை எடுத்துக்கொண்டு சென்று மரப்பொந்தொன்றினுள் மறைத்து வைத்தார்கள்.
தற்போது மாந்தை மாதா ஆலயம் மன்னார் மறைமாவட்டத்தின் முயற்சியினாலும், குருக்களின் பங்களிப்புடனும், இறைமக்களின் வேண்டுதல் மற்றும் , பங்களிப்போடும், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் ஈடுபாட்டுடனும், இன்னும் குறிப்பாக புலம் பெயர் கத்தோலிக்க மக்களின் உதவியுடனும் மிகவும் சிறப்பான முறையில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது என்பதனை இறைமக்களுக்கு அறியத்தருவதோடு
மாசி மாதம் (இந்த மாதம்) 15,16ம் (புதன், வியாழன்) திகதிகளில் மாலை 5:30மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள்திருப்பலி இடம் பெறும். 17.02.2017(வெள்ளிக்கிழமை) மாலை 5:30 மணிக்கு திருச்செபமாலையுடன் நற்கருனை வழிபாடும் இடம்பெற்று 18.02.2017 சனிக்கிழமை மாலை 4:30மணிக்கு திருச்செபமாலையுடன் திருவிழா திருப்பலியும் அதனை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கின்சிலி சுவாமிபிள்ளை அவர்களினால் ஆலயம் அபிசேகம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.
எனவே மாந்தை மாதாவின் ஆசீரையும், திறப்பு விழாவிற்குமாக பங்கு தந்தையர்கள், பங்கு மக்கள், அன்னையின் பக்தர்கள் அனைவரையும் புனித நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்டம் அழைத்து நிற்கின்றது. மேலதிக தொடர்புகளுக்கு அருட்தந்தை- ‎+94712842493 [2017-02-10 12:46:29]


திருகோணமலை மறைமாவட்டத்தைச் சேர்ந்த குருக்களுக்கான மாதாந்த தியானம்

திருகோணமலை மறைமாவட்டத்தைச் சேர்ந்த குருக்களுக்கான மாதாந்த தியானம் குச்சவெளி செபமாலை மாதா ஆலயத்தில் மறைமாவட்ட ஆயர். பேரருட்திரு. நோயல் இம்மானுவேல் ஆண்டகை தலைமையில் 07 /02 / 2017 அன்று நடைபெற்றது. அதன் பின் குடும்ப நலப்பணி பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. இதன்போது குச்சவெளி செபமாலை மாதா ஆலய புதிய பங்குபணிமனை மறைமாவட்ட ஆயரினால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது [2017-02-10 12:45:10]


பக்க இலக்கங்களை அழுத்தி எல்லா செய்திகளையும் பார்வையிடவும்